வதைச்சிறை
அஹ்மத் ராயிஃப்
நுழைவாயில்
கலீல் அஹ்மத் ஹாமிதி
இஃக்வானுல் முஸ்லிமூன்களின் வாழ்வு முழுக்க சோதனைகள் சித்திரவதைகளின் தொகுப்பாகவே இருக்கின் றது. அவர்கள் சந்தித்த அளவு கஷ்டங்களையும் துன்பங்களை யும் நம் காலத்தில் வேறு அமைப்புகள் ஏதேனும் சந்திந்திருக் குமா என்பது சந்தேகம்தான். எத்தகைய சோதனையிலும் அவர்கள் துவண்டு போகவில்லை என்பதோடு புடம் போட்ட பொன்னாக மாறிக் கொண்டே இருந்தார்கள் என்பதை நினைத்து நினைத்து சந்தோஷப்படக் கூடிய விஷயம். மூன்று மீப்பெரும் சோதனைக் கட்டங்களை இஃக்வான்கள் சந்தித்துள்ளனர்.
1948இல் முதல் சோதனைக் காலம் தொடங்கியது. ஷாஹ் ஃபாரூக் ஆட்சிக்காலம் அது. மன்னராட்சி, நிலவுடைமை, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் என்னும் முப்பெரும் சக்திகள் எதி ரணியில் இருந்தன. நாட்டை விட்டு பிரிட்டிஷார் öளியேற வேண்டும்; நாட்டை இஸ்லாமிய அமைப்பு என்று இயக்க நிறுவனர் இமாம் ஹஸனுல் பன்னா விடுத்த அறைகூவல்தான் சோதனை வாசலைத் திறந்தது என்றாலும் 1948 மே மாதத்தில் ஃபலஸ்தீனத்தில் இஸ்ரேல் என்னும் நாடு உருவாக்கப்பட்டது தான் தலையாயக் காரணம். ஹஸனுல் பன்னாவின் ஆணைக் கிணங்க இஃக்வான்கள் குழுக்கள் குழுக்களாக ஃபலஸ்தீனத் திற்கு போராடக் கிளம்பினார்கள். அவர்களுடைய ஈமானிய கொந்தளிப்பும், ஜிஹாதிய உத்வேகமும் யூதர் படைகளைச் சிதறி ஓட வைத்தன. இஃக்வான்களின் தலைவருள் ஒருவரான உஸ்தாத் காமில் ஷரீஃப் எழுதியுள்ள ‘ஃபலஸ்தீனப் போரில் இஃக்வான்கள்’ (Al Ikhwanul Muslimoon Fi Harbi Palastine)) எனும் நூலில் அதன் விவரணைகளைக் காணலாம்.
யூத ஆக்கிரமிப்பாளர்கள் வேறோடு அழிந்து போயிருப் பார்கள். ஆனால், மேலை ஏகாதிபத்தியமும் எகிப்து நாட்டு மன்னராட்சியும் ஜிஹாதிய இயக்கத்தைத் தடை செய்து இஃக் வானுல் முஸ்லிமூன் இயக்கத்தை சட்ட விரோத இயக்கமாக அறிவித்தன. போர்க் களத்திலிருந்து இஃக்வான்கள் திரும்பி வரவழைக்கப்பட்டு சிறைச் சாலைகளுக்கு அனுப்பப்பட் டார்கள்.
1949ஆம் ஆண்டு பிப்ரவரி 16ஆம் நாள் வழிகாட்டி முர்ஷிதுல் ஆம் ஹஸனுல் பன்னா ஒரு சதித் திட்டத்தின் பின்னணியில் சுடப்பட்டு ஷஹீதாக்கப்பட்டார். கேள்விப்படு வோரின் ரோமங்கள் சிலிர்க்கும் அளவுக்கு சிறைச்சாலைகளில் இஃக்வான்கள் துன்புறுத்தப்பட்டார்கள். அவர்களுடைய ஈமானிய வலிமையையும் கொள்கை உறுதியையும் நிலை குலையா சப்ரையும் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டால் ‘ஹாக் தஸிப் சிறைச்சாலை’ (Mu-taqil Haaktasib) என்னும் நூலைப் பார்வை யிடுங்கள். எகிப்து நாட்டு பத்திரிகையாளரும் ‘அஷ்ஷூரா’ இதழின் ஆசிரியருமான முஹம்மது அலி அழ்ழாஹிருடைய நூல் அது. இஃக்வான்களின் ஆதரவாளராக இருந்த காரணத்தி னால் நூலாசிரியரும் சிறையில் தள்ளப்பட்டார். சிறையில் இஃக் வான்கள் அனுபவித்த கொடுமைகளை அவர் நேரில் கண்டார்.
1953 ஜூலை 23ஆம் தேதி ஃபாரூக் உடைய மன்னராட் சிக்கு முடிவு கட்டிவிட்டு எகிப்திய ராணுவம் ஜெனரல் நஜீப் தலை மையில் ஆட்சியைக் கைப்பற்றியபோது இக்கொடுமைகள் முடிவுக்கு வந்தன.
இஃக்வான்களின் இரண்டாவது சோதனைக்காலம் 1954 இல் தொடங்கியது. ஃபாரூக்குடைய மன்னராட்சியை வீழ்த்திய தில் இஃக்வான்களுக்கும் பங்கு உண்டு என்பது மட்டுமல்ல, அந்தத் திட்டத்தை வடிவமைத்தவர்களும் தொடக்கத்தில் இருந்து முற்றுப் புள்ளி வரை தீவிரமாகச் செயல்பட்டவர்களும் அபாயகரமான பல அருஞ்செயல்களை மேற்கொண்டவர்களும் இஃக்வான்கள்தாம். அப்துன் நாசருடைய முதல் அமைச்சரவை யில் கல்வித் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்த கமாலுத் தீன் ஹுசைன் தன்னுடைய ‘மௌனிகள் பேசுகிறார்கள்’ (As-samitoona Tatakallamoon) நூலில் இதைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
‘நானும் அப்துன் நாசரும் இஃக்வான்களின் ரகசிய அமைப் பின் பொறுப்பாளராக இருந்த அப்துர் ரஹ்மான் சிந்தியின் வீட்டில் குர்ஆனின் மீதும் பிஸ்டலின் மீதும் கையை வைத்து ‘ஃபாரூக்கின் ஆட்சியை ஒழித்துக் கட்டி இஸ்லாமிய ஆட்சியை நிறுவுவோம்’ என்று சத்தியம் செய்தோம்.’ என்று அவர் அந் நூலில் குறிப்பிடுகிறார்.
புரட்சிக்குப் பிறகு ராணுவம் தன்னுடைய பணிக்கே திரும்பிவிட வேண்டும்; நாட்டின் ஆட்சி ஜனநாயக அமைப்பி லான அரசு ஒன்றிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பது நஜீபும் இஃக்வான்களும் செய்துகொண்ட ஒப்பந்தம். இஃக் வான்களின் வழிகாட்டுதலின்படி அரசாங்கம் ஒன்று நாட்டை ஆள்வதில் ஜமால் அப்துன் நாசருக்கும் இன்னும் சில ராணுவத் தளபதிகளுக்கும் எள்ளளவும் உடன் பாடில்லை. மேலை நாடுகளின் ஒத்துழைப்போடு பயங்கரமான சதித் திட்டம் ஒன்றைத் தீட்டினார்கள். ஜமால் அப்துன் நாசரைக் கொலை செய்ய இஃக்வான்கள் முயற்சிப்பதாகக் கடும் குற்றச்சாட்டு ஒன்றை சுமத்தினார்கள். திடுதிப்பென்று இஃக்வானுல் முஸ்லி மூன் இயக்கத்தை சட்ட விரோத இயக்கமாக அறிவித்தார்கள். தலைவர்கள் கைதானார்கள். நிமிட நேரத்தில் ஆயிரக்கணக்கான இயக்க உறுப்பினர்கள் உள்ளே தள்ளப்பட்டார்கள்.
1954 நவம்பர் ஏழாம் தேதி இராணுவ நீதிமன்றம் ஒரு சாதாரண விசாரணை ஒன்றை நடத்திவிட்டு இயக்க வழிகாட்டி களான புகழ் பெற்ற நீதிபதி அப்துல் காதிர் அவ்தா, ஈடு இணை யற்ற மார்க்க மேதை முஹம்மது அன்ஸர் அலி, யூஸுஃப் தல்அத், இப்ராஹீம் தய்யிப், ஹிந்தாபி துதைர், மஹ்மூத் அப்துல் லதீஃப் போன்றோரை தூக்கு மேடைக்கு அனுப்பியது. ஸயீத் ரமழான், முஸ்தஃபா ஆலம், அஷ்மாதி அஹ்மத் ஸுலை மான், காமில் ஷரீஃப் போன்றோருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இறைநாட்டத்தால் அப்போது இவர்கள் அனைவரும் நாட்டுக்கு வெளியே இருந்தார்கள்.
வெஞ்சிறைகளில் அடைக்கப்பட்ட இஃக்வான்கள் சொல் லொணா வதைகளுக்கும் வேதனைகளுக்கும் ஆளானார்கள். அவர்கள் அடைபட்டிருந்த ஒரு சிறையில் வேறேதோ வழக் கொன்றின் கீழ் கிறிஸ்துவர் ஒருவர் கைதாகியிருந்தார். ரூக்ஸ் மஅகரூன் என்பது அவருடைய பெயர். அவர் ஒரு நூலை எழுதினார். ‘சத்தியமாக, கண்டதைக் கூறுவேன்’ (Aqsamtu An Arvee) என்னும் அந்த நூலைப் படித்தால் கண்கள் குளமாகிவிடும்.
‘தர்ரா’விலிருந்த சிறைச்சாலையில் 1957 ஜுன் ஒன்றாம் தேதியன்று இஃக்வான்களின் மீது சிறைக்காவலர்கள் கண்மூடித் தனமான துப்பாக்கிச் சூட்டை நடத்தினார்கள். நின்ற இடத்தி லேயே 23 மனித உயிர்கள் மண்ணோடு மண்ணாயின. ‘தர்ரா’ பகுதியிலுள்ள மலைப் பாதைகளை உடைக்க வேண்டியது கைதிகளின் வேலை. 24 மாதங்களாகக் கல்லுடைப்புப் பணியில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து அப்பணியைப் புரிய வேண்டிய தில்லை என்று சிறை நிர்வாகம் அறிவித்தது. இஃக்வான்களில் பலபேர் 24 மாதங்களுக்கும் மேலாக இப்பணியிலிருந்து விடு தலை பெறும் எண்ணத்தோடு அவர்களும் விண்ணப்பித்தார் கள். இஃக்வான்கள் இவ்வாறு விண்ணப்பித்தது ஆள்வோருக்குப் பிடிக்கவில்லை. கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மறுக்கிறார்கள் என்று குற்றம் சுமத்தி ஷூட்டிங் ஆர்டர் போடப்பட்டது. எக் குற்றமும் செய்யாத நிராயுதபாணிகளான சிறைக் கைதிகள் 23 பேர் பலியானார்கள். ஸாமி ஜவ்ஹர் எழுதியுள்ள ‘பிணங்கள் பேசுகின்றன’ (Al-Moutha Yatakallamoon) நூலில் இதைக் காணலாம்.
இந்த இரண்டாவது சோதனைக் காலத்தில் அமெரிக்கா வின் கூடாரமாக எகிப்து மாறிப் போயிருந்தது. The Games of Nations நூலில் ‘ஜமால் அப்துன் நாசர் உண்மையில் அமெரிக்காவின் ஸ்டாம்பாக மாறிவிட்டிருந்தார்’ என அதன் ஆசிரியர் கூப் லேண்ட் குறிப்பிடுகிறார்.
1964 ஆம் ஆண்டு மத்தியில் தவிர்க்க முடியாத சில காரணங்களால் சையத் குதுபையும் இன்னும் சில தோழர் களையும் ஜமால் அப்துன் நாசர் விடுதலை செய்தார். வேறொரு புதிய அபாயத்துக்கான வாசலாக இவ்விடுதலை அமைந்தது. வாஷிங்க்டனை விட்டு விட்டு மாஸ்கோவை தன்னுடைய ‘கிப்லா’வாக அப்னுன் நாசர் மாற்றிக் கொண்ட காலம் இது! எகிப்து அடியோடு ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற நிபந்தனை யின் பேரில் எகிப்து கம்யூனிஸ்ட் கட்சி நாசருக்கு தன் ஆதரவை வழங்கியிருந்தது. சையத் குதுப் விடுதலையானது கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு மிகப்பெரும் தலைவலியாக இருந்தது.
1965 ஆகஸ்ட் 27ல் சோவியத் ரஷ்யாவுக்கு ஜமால் அப்துன் நாசர் சூறாவளி சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டார். மாஸ்கோவில் அரபு மாணவர்களிடையே உரையாற்றுகையில் எகிப்து நாட்டில் தனக்கெதிராக சதிச் செயல்களில் இஃக்வானுல் முஸ்லிமூன் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சாட்டினார். சுற்றுப் பயணத்திலிருந்து அப்துன் நாசர் நாடு திரும்பியதும் கைதுப் படலம் தொடங்கியது. இம்முறை இஃக்வான்களோடு அவர் களுடைய உற்றார் உறவினர்கள் கைது செய்யப்படலாயினர். முன்பு கைது செய்யப்பட்டிருந்தபோது அவர்களுடைய குடும் பங்களுக்கும் குழந்தைகளுக்கும் உதவி ஒத்தாசை புரிந்தோரும் விட்டு வைக்கப்படவில்லை. இயக்கம் சாராத ஆனால் இஸ்லா மியச் சிந்தனை கொண்டோரும் கைது செய்யப் பட்டனர். அவர் களிடமிருந்து பொய்யான வாக்குமூலங்களைப் பெறுவதற்காக எண்ணிப்பார்க்க முடியாத கொடுமைகள் புரியப் பட்டன.
கடைசியில் 1966 ஆகஸ்ட் 29ஆம் தேதி ஒரு படு பயங்கர இரவில் சையது குதுபும் அவரோடு அப்துல் ஃபத்தாஹ் இஸ்மா யீல், முஹம்மது யூஸுஃப் ஹவாஷ் ஆகியோரும் தூக்கிலிடப் பட்டனர். தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லப்படாதவர்கள் வெஞ்சிறை வாசத்தில் வதைபட்டனர். சிறையில் வாழ்வதை விட சாவு அவர்களுக்குச் சிறப்பானதாகத் தோன்றியது. சிறையி லிருந்த காலமெல்லாம் அவர்களுடைய கண்களுக்கு முன்னால் சாவு நிழலாடிக் கொண்டே இருந்தது.
1970இல் ஜமால் அப்துன் நாசர் இறுதி மூச்சை விட்டபோது கைதிகளின் வாழ்வில் சற்றே முன்னேற்றம் தென்பட்டது. 1971 மே 15ஆம் தேதி அலி ஸப்ரி, ஸாமி ஷர்ஃப் போன்ற கொடுங் கோலர்களிடமிருந்து எகிப்தை அன்வர் ஸாதாத் மீட்டார். உளவுத் துறையினரின் ஆட்சியை ஒழித்தார். இஃக்வான்கள் விடுதலையாகத் தொடங்கினர். எகிப்து நீதிமன்றங்களும் சற்றே உயிர்பெற்றன. அரசால் விடுதலை செய்யப்படாதோர் நீதி மன்றங்களின் வாயிலாக விடுதலை பெற்றனர்.
நாசர் செத்துப் போய் விட்டார். இஃக்வான்கள் வாழ்ந்து கொண்டுள்ளனர். அக்கறுப்பு நாட்களைப் பற்றி பிற்காலத்தில் பல்வேறு நூல்கள் எழுதப்பட்டன. 19 ஆண்டுகாலம் எகிப்தை ஆண்ட நவீன ஃபிர்அவ்ன் ‘நானே எல்லாம்; என்னையன்றி ஏதுமில்லை’ என்று எப்படியெல்லாம் கொட்டம் அடித்தான் என்பதைப் பற்றி அந்நூல்கள் பேசுகின்றன.
‘அத்தஅவா’, ‘அல்இஃக்திஸாம்’ போன்ற இதழ்களில் இருண்ட காலம் தொடர்பான நீண்ட தொடர் கட்டுரைகள் பல வெளிவந்துள்ளன. அவற்றில் சகோதரர் அஹ்மத் ராயிஃப் உடைய ‘இருண்ட கதவு’ (Al-Biwabathus Sauda) என்னும் தொடர் கட்டுரையை வெளியிட்டுள்ளோம்.
அஹ்மத் ராயிஃப் என்னும் தனிமனிதனுடைய வேதனை களைப் பற்றி இந்நூல் பேசவில்லை. நூற்றுக்கணக்கான இஃக் வான்களைப் பற்றிப் பேசுகின்றது. அவர்களில் ஒருவராகத்தான் அஹ்மத் ராயிஃப் நிற்கிறார். அஹ்மத் ராயிஃப் தலைவரல்ல; ஓர் இஸ்லாமிய இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு பாடு பட்ட சாதாரண மனிதர்.
இஃக்வானுல் முஸ்லிமூன் என்பது ஒரு தூய இஸ்லாமிய இயக்கம் என்பதையும் இஸ்லாமிய இயக்கச் சகோதரர்கள் வெறும் வாய்ச்சொல் வீரர்கள் அல்லர், அரும்பெரும் பண்பு களுக்கும் உடைமையாளர்களாக விளங்கினார்கள் என்பதை மக்களுக்கு உணர்த்தவே இந்நூலை நாம் வெளியிடுகிறோம்.
இவ்வலைத்தளத்தில் நாம் அதனை பகுதி பகுதியாக வெளியிட உள்ளோம்.
இன்ஷா அல்லாஹ்
மறுமொழியொன்றை இடுங்கள்