வரலாற்று புத்தகங்களில் காணப்படும் நபி (ஸல்) பற்றிய ஆதாரமற்ற அறிவிப்புகள்

முஹம்மது இக்பால் உமரி

திட்டமாக முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது நேசம் கொள்வது ஈமானின் ஒரு பகுதி என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.  தாய் தந்தையரை விட, மனைவி, மக்கள் உலகில் உள்ள அனைத்துப் பொருட்களைக் காட்டிலும் அவர்களை அதிகம் நேசிக்காதவரை ஒருவன் முழுமை முஃமினாக முடியாது.  அதே நேரத்தில் “தம் அந்தஸ்தை விட அதிகம் புகழக் கூடாது” என அவர்கள் மிகக் கடுமையாகவே எச்சரித்தும் உள்ளார்கள்.  எவர் வேண்டுமென்றே ‘என் விஷயத்தில் பொய்யைக் கட்டி விடுகிறாரோ அவர் நரகில் தன் இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்’  (புகாரி, முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் பெயரால் குறிப்பாக அவர்களுடைய பிறப்பு நபித்துவ விஷயங்களில் ஏராளமான கட்டுக்கதைகள் உலா வருகின்றன.  அல்லாமா ஸிலைமான் நத்வா (ரஹ்) கூறுகிறார்கள் –

இந்தக் கட்டுக்கதைகள் தோன்றியதற்கு மிக முக்கியக் காரணம் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்பதற்காக மீலாது விழாக் கூட்டங்கள் மற்றும் பயான் பேசக் கூடியவர்களால் ஏற்பட்டதாகும்.  இத்தகையவர்கள் பொதுவாக கல்வியறிவு இல்லாதவர்களாக உள்ளனர்.  கூட்டத்தார்களை உணர்ச்சி வசப்படுத்துவதற்கும் அவர்களிடையே அழகான கலகலப்பை ஏற்படுத்துவதற்கும் இவை (கட்டுக்கதைகள்) தேவைப்பட்டன.  இதில் ஓரளவு பேணுதலாக இருந்தவர்கள் (ஹதிஸ்களாக அல்லாமல்) சின்னச் சின்ன சூபி கதைகளாக, கவிதை தொகுப்புகளாக எழுதினார்கள்.  இதைச் செவியேற்றவர்கள் இதற்கு ரிவாயத்துகள் (நபி (ஸல்) அவர்களிடம் இருந்து அறிவிக்கப்பட்டவைகள்) எனும் அந்தஸ்தை கொடுத்து விட்டார்கள்.  அல்லது இதுவே பிறகு ரிவாயத்துல் எனும் இடத்தை பிடித்துக் கொண்டன.  இதில் கொஞ்சமும் பயம் இல்லாதவர்களோ ஒரு ஸனதையும் (அறிவிப்பாளர் தொடரை) இணைத்து ஹதிஸ் எனும் அந்தஸ்தை கொடுத்து விட்டார்கள்.ஹாபிஸ் ஸீயூத்தி அவர்கள் அல்லாமா இப்னுல் ஜவ்சியின் இட்டுக்கட்டப்பட்டவைகள் எனும் நூலை மேற்கோள் காட்டி எழுதுகிறார்கள்.

பொய்யான ஹதிஸ்களைச் சொல்பவர்களில் பயான் பேசித் திரிபவர்களும் உள்ளனர்.  எல்லோரையும் விட பெரிய கேடு இவர்களிடம் இருந்தே வருகிறது.  ஏனென்றால் இவர்கள் இப்படிப்பட்ட ஹதிஸ்களை விரும்புகிறார்கள்.

“எல்லோரும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகும்.  வசிய வைக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.”  ஸஹிஹான ஹதிஸ்களில் இப்படிப்பட்ட விஷயங்கள் இல்லை.  இது தவிர ஸஹிஹான ஹதிஸ்களை இவர்கள் நினைவு கொள்வது கடினம்.  இத்துடன் இவர்கள் மார்க்கத்தை கடைப்பிடிப்பதும் இல்லை.  இவர்களுடைய சபைகளிலே அறியாதவர்களின் கூட்டமே மிகுதியாக இருக்கும்.  எனவே சிறப்புகள், மகிமைகள், தண்டனை மற்றும் கூலி, சொர்க்கம் மற்றும் நரகம், மீலாது (பிறப்பு) பற்றிய சம்பவங்கள் மற்றும் அற்புதங்கள் பற்றி சுயமாக புனையப்பட்ட ஏடுகள் உருவாயின.  இவை பெரும்பாலும் மூடர்களால் தொகுக்கப்பட்டு சரி செய்யப்பட்டதாகும்.

அல்லாமா ஷிப்லி (ரஹ்) அவர்கள் தம்முடைய ‘சீரத்துன்நபவி’யில் எழுதுகிறார்கள்.

சீரத் – நபி (ஸல்) அவர்கள் வரலாறு பற்றி ஏராளமான நூல்கள் உள்ளன.  ஆனால் எல்லாவற்றுடைய முடிவும் பின்வரும் இந்த நான்கு புத்தகங்களிடமே சென்றடைகிறது.

(1)  திப்ரி  (2)  இப்னு ஸஃது  (3)  வாகிதி  (4)  இப்னு இஸ்ஹாக்

இதில் வாகிதி முற்றிலும் நிராகரிக்கத் தக்கவன் ஆவான்.

        வாகிதி சுயமாக ஹதிஸ்களை புனையக் கூடியவனாக இருந்தான் என முஹத்திஸீன்கள்                           அனைவரும் ஏகோபித்துக் கூறுகிறார்கள்.

        இப்னு ஸஃதில் பாதிக்கு மேல் வாகிதியைக் கொண்ட பெறப்பட்டதாக உள்ளது.                             ஆகவே வாகிதி விஷயத்தில் என்ன நிலையோ அதே தான் இப்னு ஸஃது நிலையிலும்                                உள்ளது.

        இப்னு இஸ்ஹாக்கில் பலவீனமான அறிவிப்புகள் வந்தாலும் இமாம் புகாரி அவர்கள்                                தம் ஜிஸ்உல் கிராஅத் – எனும் நூலில் இவருடைய ஸனதை கொண்டு ரிவாயத்தை                                     பதிவு செய்து இருக்கிறார்கள்.

சற்று சிந்தியுங்கள்

நபி (ஸல்) அவர்களுக்கு அவர்கள் பிறந்த நாளில் விழா எடுப்பவர்களே,

நபி (ஸல்) வாழ்க்கையில் நபித்துவ்த்திற்கு முன்னால் நாற்பது முறை இந்த பிறந்த நாள் வந்திருக்கிறது.  நபித்துவக் காலத்திலிருந்து இறப்பு வரை இருபத்தி மூன்று முறை, அபுபக்கர் சித்திக் அவர்கள் கிலாபத்தில் இருமுறை உமர் (ரலி) கிலாபத் காலத்தில் பத்து, பதினொரு முறை, உஸ்மான் துன்னுரைன் கிலாபத்தில் பன்னிரண்டு முறை, அலி (ரலி) கிலாபத்தில் ஐந்து முறை முஆவியா (ரலி) கிலாபத்தில் இருபது முறை கடைசி சஹாபியான ஆமிர் பின் – வாஸிலா அல்லைஸி (ரலி) அவர்களின் இறப்பு வரை இந்த மீலாது (பிறப்பு) நாள் ‘163’ முறை வந்துள்ளது.  அவர்கள் நம்மைப்போல் இது போன்று தங்கள் முஹப்பத்தை பிரியத்தை தெரிவிக்கவில்லை.  என்னஸ  அவர்களுக்கு நபி (ஸல்) மீது முஹப்பத் இருந்ததில்லையா?  பிறகு இந்த மீலாது நாள் தாபீயீன்கள் காலமான ஹிஜ்ரி 110லிருந்து ஹிஜ்ரி 180 வரை பிறகு தபஉ  தாபீயீன்கள் காலமான ஹிஜ்ரி 180 – லிருந்து ஹிஜ்ரி 220 வரை வந்து உள்ளது.  பிறகு நான்கு இமாம்களில் இமாம் அபுஹனிபா தங்கள் எழுபது வருட வாழ்க்கையில் இமாம் ஷாபியி (ரஹ்) தங்கள் 54 வருட வாழ்க்கையில் இமாம் மாலிக் (ரஹ்) தங்கள் ‘99’ வருட வாழ்க்கையில் இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்கள் உடைய இறப்பு வரை ‘294’ முறை வந்துள்ளது.  இதே போல் முஹத்திஸீன்கள் காலத்தில், பிறகு ஷேக் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களுடைய ‘91’ வருட காலத்தில் வந்துள்ளது.  ஆனால் இவர்கள், எல்லாம் விழா எடுக்கவில்லை.  சஹாபாக்களிலிருந்து முஹத்தீஸீன்கள் காலம் வரை இவர்களில் எவரும் மகிழ்ச்சியை தெரிவிக்க, நிகழ்ச்சி ஏற்பாடு செய்யவோ, விழா எடுக்கவோ இல்லையென்றால் நமக்கு தெள்ளத் தெளிவாக தெரிகிறது.  இது ஒரு நன்மையான காரியமாக அல்லது வணக்க வழிபாடு சம்பந்தப்பட்டதாக இருந்திருந்தால் அவர்கள் அவசியம் செய்திருப்பார்கள்.  அவர்கள் செய்யவில்லையெனில் இது எந்தளவிற்கு சரியாகும்?

——-

மிகவும் பிரபலமான ஆனால் இட்டுக்கட்டப்பட்ட சில அறிவிப்புகள்

நபி (ஸல்) கூறியதாக அவர்கள் மீது இட்டுக்கட்டப்பட்ட ஹதிஸ் – ‘அல்லாஹ் முதன் முதலாக என் ஒளியை – (நூரை) படைத்தான்’

ஸய்யத் சுலைமான் நத்வி கூறுகிறார்கள் – ‘இந்த அறிவிப்பை நான் ஹதிஸ்களின் ஏடுகளிலே அறியவில்லை’

முஸ்னத் அப்துர் ரஜ்ஜாக்கை மேற்கோள் காட்டி கூறப்படுவதாவது,

நபி (ஸல்) கூறினார்கள் – ஓ, ஜாபிரே அல்லாஹ் முதன்முதலாக உன் நபியின் ஒளியை படைத்தான்.  பிறகு  அந்த ஒளி நான்கு பகுதிகளாகியது.  அதிலிருந்து தான் லௌஹே மஹ்பூல் (எனும் பலகை) மற்றும் எழுதுகோல், அர்ஷ் மற்றும் நாற்காலி, வானம் மற்றும் பூமி, ஜின் மற்றும் மனிதனைப் படைத்தான்.

நாசிருத்தீன் அல்பானி அவர்கள் கூறுகிறார்கள் – பெரும் முயற்சிக்குப் பின்னும் என்னால் இதன் ஸனதை அறிய முடியவில்லை.  ஆனால், இதற்கு மாற்றமாக ஸஹிஹ்ஹதிஸ் உள்ளது.  அல்லாஹ் முதன் முதலாக எழுதுகோலை படைத்தான்.  (திர்மிதி, அபூதாவூத்)

நபி (ஸல்) அவர்கள் வருகைப் பற்றி முன்சென்ற நபிமார்களின் வேதங்களில் முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.  இது குர்ஆனிலும் ஆதாரப்பூர்வமான ஹதிஸிலும் வந்துள்ளது.  யூதர்கள் மற்றும் கிறித்தவர்கள் இதனால் ஒரு நபியின் வருகைக்காக காத்திருந்தார்கள்.  ஆனால் கதை விடுபவர்களுக் இந்த ஸஹிஹான விஷயங்கள் திருப்தி அளிக்கவில்லை.  நபி (ஸல்) அவர்கள் வருகைப் பற்றிய முன்னறிவிப்புகளில் தங்கள் கைவரிசையை காட்டினார்கள்.  யூதர்களுக்கு கிழமை, தேதி, வருடம், இடம் என எல்லாமே தெரிந்திருந்தது.  ஆகவே, நபி (ஸல்) பிறப்பதற்கு முன்னமே யூத அறிஞர்கள் இது பற்றி சொல்லிக் கொண்டிருந்தார்கள்.  இன்னும் கிறித்தவர்களோ இது பற்றி அ முதல் ஃ வரை அறிந்திருந்தார்கள்.  நபி (ஸல்) பிறப்புக்காலம் நெருங்கிய போது குறிகாரர்கள் சின்ன சேதிகள் மூலமாக, ஜின்கள் கவிதைகள் வாயிலாக, ‘நபி (ஸல்) அவர்கள் அந்தஸ்து பற்றி ஒரு கவிதைத் தொகுப்பு இயற்றப்பட்டது.  பாரசீக அரசவைக்காரர்கள் மற்றும் குறைஷித் தலைவர்கள்  நபி (ஸல்) அவர்களை கனவில் கண்டார்கள்.  கற்களில் நபி (ஸல்) பெயரின் வடிவம் மக்களுக்கு தெரிய ஆரம்பித்தது.  குரைஷ் குலத்தில் அதிக வாரிசுதாரர்களை கொண்ட கஅப்பின் லுஅய் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையிலும் தன் கோத்திரத்தாருக்கு நபி (ஸல்) அவர்கள் வருகைப் பற்றி நற்செய்தி கூறிக் கொண்டிருந்தான்.  மக்காவில் இருந்த மக்கள் அறிஞர்கள் மற்றும் குருமார்களின் வாய்களிலிருந்து நபி (ஸல்) அவர்களின் ‘முஹம்மத்’ எனும் பெயரைக் கேட்டு தம் குழந்தையாக இருக்கட்டுமே என நினைத்து தங்கள் குழந்தைகளுக்கு அப்பெயரைச் சூட்டிக் கொண்டிருந்தார்கள்.  நபி (ஸல்) அவர்களின் ஹிஜ்ரத் – இடம் மதினாவாக இருக்கும் என மதினாவைச் சேர்ந்த யூதர்களிடம் பரவி இருந்தது, இதனோலே அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்காக காத்துக் கொண்டிருந்தார்கள்.  நபி (ஸல்) பிறந்த போது கதை விடுபவர்களின் கதைகளுக்கேற்ப இஸ்ரா மாளிகையின் பதினான்கு மாடங்கள் விழுந்து விட்டன, கஆபாவின் சிலைகள் குப்புற விழுந்து விட்டன.  திப்ரு கடல் வற்றி விட்டது, பாரசீகத்தைச் சேர்ந்த நெருப்பு வணங்கிகள் வணங்கி வந்த ஆயிரம் ஆண்டுகள் அணையாத நெருப்புக் குண்டம் அணைந்து விட்டது.  ஒரு ஒளி பிரகாசித்தது; இதில் சிரியாவின் மாளிகை வெளிப்பட்டது.  (சீரத்துன் நபவி)

நபி (ஸல்) அவர்கள் பிறப்பிற்கு முன்பு மற்றும் பின்பு இது போன்ற கட்டுக்கதைகள் உலா வருகின்றன.  இவைகள் எல்லாமே ஹதிஸின் கருத்துரீதியாகவும், அறிவிப்பாளர் தொடர்ரீதியாகவும் மிகவும் பலகீனமானவை யாரும் இதனாலே முஹத்தீஸீன்கள் இதனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

தகியுத்தீன் அமீனி (ரஹ்) “ஹதீஸ் – உடைய செய்தியின் படித்தரங்கள்” எனும் நூலில் குறிப்பிடுகிறார்கள்.  “நபி (ஸல்) பிறந்த போது எவருடைய கருத்தையும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அளவிற்கு எந்த ஒரு ஸஹாபியும் உடன் இருந்தது  இல்லை.  ஒன்று நபி (ஸல்) பிறப்புப் பற்றி வரும் இது போன்ற அறிவிப்புகள் பிரபலமாக இருந்திருக்க வேண்டும்.  அல்லது நபி (ஸல்) அவர்களே இது பற்றி விளக்கியிருக்க வேண்டும்.  இச்சம்பவங்கள் அறிவிப்புகளின் படி உண்மையிலேயே பிரபலமாக இருந்திருக்குமானால் நபி (ஸல்) அவர்களுக்கு தூதை எத்தி வைப்பதில், இந்தளவிற்கு இடையூறுகள் ஏற்பட்டு இருக்காது.  இந்தச் சம்பவங்களின் பிரபல்யத்தால் உடனடியாக ஒவ்வொருவரும் ஈமான் கொண்டு இருப்பார்கள்.  ஒரு வேளை நபி (ஸல்) அவர்களே இதுபற்றி விளக்கி இருந்தால் இவ்வளவு முக்கியமான சம்பவங்களின் குறிப்புகள் ஆதாரப்பூர்வமான ஹதிஸ்களின் ஏடுகளில் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும்.  நுபுவத்திற்கான இவ்வளவு பெரிய ஆதாரங்களை, முஹத்தீஸின்கள் எப்படி அலட்சியம் செய்திருப்பார்கள்.”

கட்டுக்கதைகளில் வருகிறது.

ஆதம் (அலை) அல்லாஹ்விடம் கேட்கிறார்கள்.  முஹம்மத் கொண்டு என் பாவங்களை மன்னிக்க வேண்டுகிறேன்.  முஹம்மதை எவ்வாறு அறிந்தீர் என அல்லாஹ் கேட்டான்.  ஆதம் (அலை) கூறினார்கள்.  எப்பொழுது நீ என்னை தன் கரத்தினால் படைத்தாயோ இன்னும் என்னுள் உன் ருஹை ஊதிய போது நான் தலையை தூக்கினேன்.(உயர்த்தினேன்)  அர்ஷில் இதை எழுதியிருக்க கண்டேன்.  ‘லாயிலாஹ இல்லல்லாஹி’  நீ தன் பெயருடன் மிகவும் பிரியத்திற்குரிய ஒரு படைப்பின் பெயரை இணைத்துள்ளாய் என்று அறிந்து கொண்டேன்.  இறைவன் சொன்னான் – நீர் உண்மையைச் சொன்னீர்.  ஆதமேஸ  முஹம்மத் இல்லையென்றால் நான் உம்மை படைத்திருக்க மாட்டேன்.

இதே போல் இன்னும் சில அறிவிப்புகள் 

(1)  நீர் இல்லையென்றால் வானங்களை நான் படைத்து இருக்க மாட்டேன்.

(2)  ஆதம் (அவர்கள் படைப்பு) நீருக்கும் மண்ணிற்கும் இடைப்பட்ட நிலையில் இருந்த போது நான் நபியாக இருந்தேன்.  (பதாவா இப்னு தையிய்யா)

இப்னு தைமிய்யா அவர்கள் கூறுகிறார்கள் –

இந்த ஹதிஸிற்கு எந்த அடிப்படையும் இல்லை.  எந்த ஒரு அறிஞரும் இவ்வார்த்தைப் போன்று அறிவிக்கவில்லை.

முல்லா அலிகாரி (ரஹ்) அவர்கள் ஙமிகப்பெரிய இட்டுக்கட்டப்பட்டவைகள்ங எனும் நூலில் இந்த ஹதிஸை குறிப்பிடுகிறார்கள்.

=  எவர் ஒரே வருடத்தில் என்னை(யை)யும் என் தந்தை இப்ராஹிம் (அலை) அவர்களையும் ஜியாரத் செய்கிறாரோ சுவனம் நுழைவார்.

இப்னு தைமிய்யா அவர்கள் இதனை இட்டுக்கட்டப்பட்டவை என்று கூறுகிறார்கள்.  இமாம் நவவி அவர்களும் ‘ஷரஹ் முஹத்தப்’ எனும் நூலில் பொய்யான ஹதிஸ் என்று எழுதியுள்ளார்கள்.

அல்லாமா ஷவ்கானி (ரஹ்) அவர்கள் எனும் நூலில் பின்வரும் ஹதிஸை இட்டுக்கட்டப்பட்டது என்று கூறுகிறார்கள்.

=  ரசூல் (ஸல்) கூறினார்கள்.

நான் எனது தாயாரின் கப்ரு அருகே சென்றேன்.  எனது தாயாரை உயிர்ப்பிக்குமாறு அல்லாஹ்விடம் கேட்டபோது அல்லாஹ் அவரை உயிர்ப்பித்தான்.  பிறகு அவர்கள் என்மீது ஈமான் கொண்டார்கள்.  இதன் பிறகு அல்லாஹ் அவர்களை திரும்ப அழைத்துக் கொண்டான்.

இந்த ஹதிஸின் அறிவிப்பாளர்களில் சிலர் யாரென்றே அறியப்படாதவர்கள்.  இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான “முஹம்மத் பின் ஜய்யாது நக்காஷ்” மாபெரும் பொய்யனும் ஹதிஸ்களை சுயமாக இட்டுக்கட்டுபவனும் ஆவான்.

கதீப் பக்தாதி அவர்கள் ‘தாரிக்குல் பக்தாத்’ எனும் நூலில் குறிப்பிடுகிறார்கள்.

= ரசுல் (ஸல்) கூறினார்கள்.

நான்கு விஷயங்களில் நான் மற்ற மக்களை விட மேன்மைப்படுத்தப்பட்டு உள்ளேன்.

(1)  வாரி வழங்குவதில்  (2)  வீரத்தில்  (3)  அதிகமாக (உடல்) உறவு கொள்வதில்  (4)  கடுமையாக பிடிப்பதில்

இது பொய்யான ஹதிஸ் ஆகும் என்று அல்பானி அவர்கள் கூறியுள்ளார்கள்.

பொய்யான ஹதிஸ்களில் ஒன்று.

ஜுப்ரயில் (அலை) அவர்கள் என்னிடம் ஒரு பானையை கொண்டு வந்தார்கள்.  நான் அதிலிருந்து சாப்பிட்டேன்.  இதனால் எனக்கு நாற்பது ஆண்களின் உடலுறவு சக்தி கொடுக்கப்பட்டது.

அல்பானி அவர்கள் இதை பொய்யான ஹதிஸ் எனக் கூறுகிறார்கள்.

அல்லாமா இப்னுல் கய்யூம் (ரஹ்) அவர்கள் பொய்யான ஹதிஸ்களைப் பற்றி எழுதும் போது இந்த ஹதிஸ் – ஐ குறிப்பிடுகிறார்கள்.

= எவர் தன் பிள்ளைக்கு பரக்கத்திற்காக ‘முஹம்மத்’ எனப் பெயரிட்டாரோ அவரும், அவருடைய பிள்ளையும் சுவனத்தில் நுழைவார்கள்.  அல்லாமா ஸய்யத் ஸிலைமான் நத்வா அவர்கள் “சீரத்துந்நபவி” எனும் நூலில் நபி (ஸல்) அவர்கள் அற்புதங்கள் பற்றி வரும் ஆதாரமற்ற அறிவிப்புகள், பிரபலமான அத்தாட்சிகள் மற்றும் அற்புதங்களை அறிவிக்கும் அறிவிப்பாளர்கள் வரிசை பற்றி ஆராய்ந்து இறுதியாக சுருக்கமாக எழுதுகிறார்கள்.

(1)  Þ நபி (ஸல்) அவர்கள் அற்புதத்தால் ஆமீனா (நபியின் தாயார்) அல்லது எந்த ஒரு மைய்யித்தும் உயிர் பெற்று எழுந்ததாக வரும் எல்லா அறிவுப்புகளும் பொய்யானவை மற்றும் இட்டுக்கட்டப்பட்டவைகள் ஆகும்.

(2)  கழுதை, ஒட்டகம், ஆடு, மான், அசுத்தம் (நஜாஸத்) ஓநாய், சிங்கம் முதலிய விலங்குகள் மனிதர்களைப் போல் பேசியதாகவோ, அல்லது கலிமா சொன்னதாகவோ வரும் எல்லா அறிவுப்புகளும் ஸஹிஹானவைகள் கிடையாது.

(3)  நபி (ஸல்) அவர்களுக்காக வானத்திலிருந்து உணவுகள் (படைக்கப்பட்டு) வந்ததாகவோ அல்லது சுவனத்திலிருந்து பழங்கள் வந்ததாகவோ வரும் எல்லா அறிவுப்புகளும் இட்டுக்கட்டப்பட்டவை மற்றும் மிகவும் பலகீனமானவைகளாகும்.

(4)  ஹழ்ரத் இல்யாஸ், ஹழ்ரத் கிள்ரு இவர்களை சந்தித்ததாகவோ அல்லது ஸலாம் சொன்னதாகவோ வரும் அனைத்து அறிவுப்புகளும் ஸஹீஹானவைகளுக்கு அப்பாற்பட்டவையாகும்.

(5)  நபி (ஸல்) அவர்களுக்கு ஙநிழல்ங இருந்தது.  இல்லை என்பது மக்களிடம் பிரபலமான விஷயம் இது ஆதாரப்பூர்வமானது அல்ல.

(6)  இயற்கைத் தேவையை கழித்து விட்டு வருவார்கள்.  அங்கே எந்த ஒரு அசுத்தமும் இருக்காது.  (பூமி அப்படியே விழுங்கி விடும்) என்று வரும் எல்லா அறிவுப்புகளும் முழுக்க முழுக்க இட்டுக் கட்டப்பட்டவைகள்.

(7)  பயான் பேசித் திரிபவர்களிடம் மிகவும் பிரபலமான செய்தி.  அபுஜஹ்ல் – உடைய வேண்டலுக்கேற்ப அவன் கையில் இருந்த சிறு கற்கள் நபி (ஸல்) அவர்களின் அற்புதத்தால் கலிமா சொல்லக் கூடியவனாகி விட்டன.  ஆனால் இதுவும் ஆதாரப்பூர்வமானது அல்ல.

(8)  ஓர் அறிவிப்பில் வருவதாவது ரசுல் (ஸல்) ஒரு முறை அலி (ரலி) உடைய தொடையில் தலை வைத்து உறங்கிக் கொண்டு இருந்தார்கள்.  சூரியன் மறைந்து கொண்டிருந்தது.  அஸர் தொழுகையின் நேரம் முடிவடைந்து கொண்டிருந்தது.  அலி (ரலி) மரியாதை நிமித்தமாக நபியவர்களை எழுப்பவில்லை.  சூரியன் மறைந்து விட்ட போது நபியவர்கள் எதார்த்தமாக (திடிர்) விழித்தார்கள்.  நீங்கள் தொழுது விட்டீர்களாக என அலி (ரலி) இடம் கேட்டார்கள்.  இல்லை – என்று அலி (ரலி) பதிலளித்தார்கள்.  நபி (ஸல்) துஆ செய்தார்கள்.  உடனே சூரியன் திரும்பி வந்தது.   Þ இந்த அறிவிப்பும் ஆதாரப்பூர்வமானவை அல்ல.

(9)  ஓர் அறிவிப்பு வருகிறது.  நபி (ஸல்) அவர்களின் திருமுகம் இரவில் பிரகாசிக்கக் கூடிய அளவிற்கு ஒளி மிகுந்ததாக இருந்தது.  ஒரு முறை இரவில் ஆயிஷா (ரலி) அவர்களின் கையிலிருந்து ஊசி (கீழே) விழுந்து விட்டது.  தேடிய பிறகும் கிடைக்கவில்லை.  யதார்த்தமாக நபி (ஸல்) வருகை புரிந்தார்கள்.  திருமுகத்தின் பிரகாசத்தால் ஊசி மின்னியது; கிடைத்தும் விட்டது.  இது சுத்த பொய் ஆகும்.

பின்வரும் சம்பவம் பற்றி வரும் அனைத்து ரிவாயத்துகளும் ஆதாரப்பூர்வமானவை அல்ல.

நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்த சமயத்தில் (வழியில்) ‘ஸவீர்’ எனும் குகையில் தஞ்சம் அடைந்தார்கள்.  இறைக்கட்டளையின் படி உடனடியாக குகையின் நுழைவாயில் ‘பபுல்‘ மரம் முளைத்து விட்டது.  மேலும் ஒரு புறா ஜோடி அங்கு வந்து முட்டையிட்டது.  முஷ்ரீகீன்களுக்கு குகையில் நபியவர்கள் உள்ளார்கள் என சந்தேகம் எழாமல் இருச்ச அங்கே ஒரு சிலந்தி, வலை பின்னியது.

ஷேக் அலி இப்ராஹிம் ஹஷீஷ் அவர்கள் கூறுகிறார்கள்.  குகையில் சிலந்தி வலை பின்னியதாகவோ, புறாக்கள் முட்டையிட்டதாகவோ வரும் எந்த ஹதிஸீம் சரியானவை அல்ல.  மேலும் எழுதுகிறார்கள்.  அல்லாஹ் கூறுகிறான் –

(9 ˜ 40)

Þ “நீங்கள் பார்க்காத படைகளைக் கொண்டு அவரை பலப்படுத்தினான்.”

யாராலும் பார்க்க முடியாத படைகளைக் கொண்டு நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் மறைமுகமாக உதவினான் என இவ்வசனம் தெள்ளத் தெளிவாக விளக்குகிறது.  சிலந்தி, புறா, மரம் எல்லாமே பார்க்கப்படக் கூடிய பொருட்கள்.

நபி (ஸல்) அவர்களுடைய வரலாறு விஷயத்தில் மிகவும் பலகீனமான அறிவிப்புகள் மற்றும் இட்டுக்கட்டப்பட்டவைகளின் ஒரு பெரும் குவியலே உள்ளது.  இவை நமது சமூகத்தில் மிகப் பெரும் தீய விளைவையே ஏற்படுத்தின.  இதனால் சமுதாயத்திற்கு கேடு ஏற்படுத்தக் கூடிய ஒரு கூட்டமே உருவாகியது.

முல்லா அலிகாரி அவர்கள் தங்களுடைய ‘இட்டுக்கட்டப்பட்டவைகள்’ எனும் நூலில் குறிப்பிடுகிறார்கள்.

Þ பக்தாத்தில் மக்களுக்கு பயான் செய்யக் கூடிய ஒருவர் ‘பனி இஸ்ராயில்’ உடைய

“விரைவில் உம்முடைய இறைவன் உம்மை ‘மஹமுத்‘ எனும் (மிக்க புகழ் பெற்ற) இடத்தில் எழுப்புவான்”

-எனும் வசனத்திற்கு அதிசயமான வியாக்கானத்தை கண்டெடுத்தார்.  “ரசூல் (ஸல்) அல்லாஹி தஆலா உடன் அர்ஷீன் மீது வெளியாகுவார்கள்.”

இதை அறிந்த முஹம்மத் பின் ஜாரீர் திப்ரி அவர்கள் வெகுண்டெழுந்தார்கள்.  தங்கள் வீட்டுக் கதவில்

= “தன் அர்ஷீன் மீது ஒத்த இருக்கை இல்லாதவனும் தனக்கு எந்த துணைவனும் இல்லாதவனாகிய அவன் மிகத் தூய்மையானவன்” என்று எழுதினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் அல்லாஹி தஆலாவுடன் அர்ஷீன் மீது வெளியாகுவார்கள் என்று கேட்டிருந்த பக்தாத் மக்கள் அதற்கு மாற்றமாக திப்ரி உடைய வீட்டில் இவ்வாசகத்தை கண்டவுடன் கோபங் கொண்டு அவர் வீட்டின் மீது கற்களை எறிய ஆரம்பித்து விட்டார்கள்.  அதன் கதவையும் உடைத்து விட்டார்கள்.

இது தான் இன்று வரை நடந்து கொண்டு இருக்கிறது.  தங்களுடைய குராபத்துகளுக்கு எதிராக எந்த ஒரு விஷயத்தையும் அவர்கள் விரும்புவதில்லை.  அவர்களுடைய குராபத்துகளுக்கு எதிராக கொஞ்சம் எழுதினாலோ, பேசினாலோ அவர்களால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை.  பலவீனமான அறிவிப்புகள் மற்றும் இட்டுக்கட்டப்பட்டவைகள் இந்த உம்மதிற்கு மிகப் பெரும் கேட்டை ஏற்படுத்தி உள்ளன.  நம்முடைய வயிற்று பிழைப்புகள் உணர்வார்களாக!

 

பராஅத் இரவு – சில சிந்தனைகள்

ஷஃபான் மாதம் பதினைந்தாம் இரவு பாமரர்கள், ஆலிம்கள் என நம் அனைவராலும் மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நாளில் நம் வீடுகளிலும் பள்ளி வாசல்களிலும் நன்மை என்ற பெயரில் பல சடங்குகளும் நடைபெற்று வருகின்றன.

முன்னோர்கள் சிலரால் வழிவழியாக பின்பற்றப்பட்டு வருகின்றது என்பதைத் தவிர குர்ஆனிலோ ஸஹீஹான ஹதீஸ்களிலோ இதற்கு ஆதாரமுண்டா என்று மார்க்கம் கற்றவர்கள்கூட ஆராயவில்லை.

‘பராஅத் இரவு’ ‘ஷபே பராஅத்’ என பல பெயர்களில் கொண்டாடப்பட்டு வரும் இந்த இரவு, நமது மக்களால் மாண்புமிக்க இரவுகளில் ஒன்றாகக் கருதப்பட்டுவருகின்றது. ‘லைலத்துல் கத்ரு’ ‘லைலத்துல் ஜும்ஆ’ போன்ற இரவுகளுக்கு ஆதாரங்கள் உள்ளன. ஆனால் ‘லைலத்துல் பராஅத்’ என்னும் சொல் குர்ஆனிலோ, நபிமொழிகளிலோ இடம் பெறவில்லை. இந்த இரவைக் கொண்டாட வேண்டுமென்றோ இபாதத்துகளில் ஈடுபட வேண்டுமென்றோ குர்ஆன், நபிமொழிகளில் எந்தவித ஆதாரமும் இல்லை.

பராஅத் இரவு

பராஅத் இரவு குர்ஆன் அருளப்பட்ட இரவு என்றும் ‘நிச்சயமாக நாம் பாக்கியம் மிக்க இரவில் இந்த குர்ஆனை அருளினோம்’ (44:03) என்று வரும் குர்ஆன் வசனம் இந்த பராஅத் இரவையே குறிக்கின்றது என்றும் மக்கள் நம்புகிறார்கள். ஆனால், இது தவறாகும். ‘திருக்குர்ஆன் ரமழான் மாதத்தில் அருளப்பட்டது’ என்று திருக்குர்ஆன் 2:185ம் வசனத்தில் திடடவட்டமாகக் கூறுகின்றது.

ஆக, பாக்கியம் மிக்க இரவு ரமழான் மாதத்தில் தான் இருக்கின்றது.  அது ரமழானின் எந்த இரவு என்பதை நாம் தேடிப்பார்க்கும் போது ‘லைலத்துல் கத்ர் இரவில்’ நாம் திருக்குர்ஆனை அருளினோம் (97:01)என்று அல்லாஹ் மற்றொரு வசனத்தில் கூறுகிறான். எனவே, ‘பாக்கியம் மிக்க இரவு’ என்பதும் ‘லைலத்துல் கத்ர் இரவு’என்பதும் ரமழான் மாதத்தில் வருகின்ற ஒரே இரவு தான் என்பது தெளிவாகின்றது.

குர்ஆன் இரண்டு இரவுகளில் அருளப்பட்டது. முதல் இரவில் பாதுகாக்கப்பட்ட ஏட்டிலிருந்து முதல் வானத்திற்கு அருளப்பட்டது. அங்கிருந்து சிறிது சிறிதாக நபி(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது மற்றொரு இரவு எனக் கூறுகின்றனர். இதுவும் ஏற்கத்தக்கதல்ல.

பராஅத் நோன்பு

ரமழானை வரவேற்கும் விதத்தில் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஷஃபான் மாதத் தொடக்கத்தில் இருந்தே  நோன்பு நோற்றுள்ளார்கள். மற்ற மாதங்களை விட அதிகமாக ஷஃபானில்தான் நோன்பு வைத்துள்ளார்கள். 15 நாட்களும் நோன்பு வைத்துள்ளார்கள். மற்றபடி, ஷஃபானின் பதினைந்தாவது இரவு வந்தால் நோன்பு வையுங்கள் என அண்ணலார் கூறியதாக உள்ள ஹதீஸ்கள் அனைத்தும் பலவீன மானவை. ஷஃபான் 15க்குப் பிறகு நோன்பே வைக்கக்கூடாது என்றே ஹதீஸ்கள் தடை செய்கின்றன.

ஷஃபான் மாதத்தின் பாதியை அடைந்து விட்டால் நோன்பு வைக்காதீர்கள்! (அறி விப்பவர்: அபூஹுரைரா (ரழி) நூல்கள்: அஹ்மத், அபூ தாவூது, நஸயீ, திர்மிதி, இப்னு மாஜா). வழமையாக நோன்பு வைப்போர் மட்டும் வைத்துக்கொள்ளலாம்.

சிறப்பு வணக்கங்கள் – மூன்று யாஸீன்கள்

இந்த இரவில் மஃரிபு தொழுகைக்குப்பின் ‘மூன்று சூயாசீன்’ ஓதி துன்பம் துயரங்கள் நீங்கி பாவங்கள் மன்னிக்கப்படவும் (1) நீண்ட ஆயுளைப் பெறவும் (2) நிலையான செல்வத்தைப் பெறவும் (3) துஆச்செய்வது வழக்கத்தில் இருந்து வருகின்றது. இந்த இரவில்தான் ‘தக்தீர்’ என்னும் விதி நிர்ணயிக்கப்படுகின்றது என்னும் நம்பிக்கைதான் மூன்று யாசீன் ஓதி துஆசெய்யும் வழக்கத்திற்கு காரணமாகும்.

கப்று ஸியாரத்

இவ்வளவு நாட்களும் நினைவு படுத்த முடியாது போனதற்காக இறந்த போன பெற் றோர்கள்,உறவினர்கள், அவ்லியாக்கள் சமாதிகளுக்குச் சென்று விசேச ஸியா ரத்,பரார்த்தனைகள் நடை பெறும்.

சிறப்புத் தொழுகைகள்

இஷா தொழுகைக்கு முன் இரண்டிரண்டு ரக்அதகளாக நான்கு ரக்அத்கள் தொழ வேண்டும்.ஒவ்வொரு ரக்அத்திலும் சூரா பாத்திஹாவுக்குப்பின் குல்ஹுவல்லாஹ் சூராவை 25 முறைகள் ஓதவேண்டும்.

இஷா தொழுகைக்குப்பின் இரண்டிரண்டு ரக்அத்களாக 12 ரக்அத்கள் தொழ வேண்டும்.ஒவ்வொரு ரக்அத்திலும் சூரா பாத்திஹாவுக்குப்பின் குல்ஹுவல்லாஹ் சூராவை 5 முறைகள் ஓதவேண்டும்.

‘அலியே! ஷஃபானின் 15-வது இரவில் நூறு ரக்அத்துகள் தொழுவதை மறந்து விடாதே! அவற்றில் குல்ஹுவல்லாஹ் நூறு தடவைகள் ஓதுவதை மறந்து விடாதே!’ போன்ற பல இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் உள்ளன என இப்னுல் கையூம் (ரஹ்) அவர்கள் தமது நக்லுல் மன்கூள் நூலில் குறிப்படுகிறார்கள்.

தஸ்பீஹ் தொழுகை. முன்னூறு தஸ்பீஹ்கள் ஓதித் தொழும் இந்தத் தொழுகைக்கும் ஆதாரபூர்வமான எந்த ஹதீஸும் கிடையாது.

இவற்றையெல்லாம் தெடர்ந்து நடத்திவிட்டு இறுதியாக நோன்பையும் நோற்பார்கள்.

நன்மைகள் தானே

தொழுவது யாசீன் ஓதுவது துஆ செய்வது போன்றவை நன்மைகள்தானே, அவற்றைச் செய்வது மார்க்கத்திற்கு முரணானது என்று சொல்வது எப்படி? என நம்மில் பெரும் பான்மையினர் பலரும் நினைக்கலாம்.

‘எவர் நம்மால் கட்டளையிடப்படாத அமல்களை செய்கிறாரோ, அவை அல்லாஹ் விடத்தில் மறுக்கப் பட்டவையாகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

ஷஃபான் மாதம் பதினைந்தாம் இரவில் இன்றைக்கு ஏற்படுத்தப் பட்டிருக்கும் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவது உண்மையிலேயே மார்க்கமாக இருந்திருப்பின் நிச்சயமாக நபி (ஸல்) அவர்கள் நமக்கு காட்டித் தந்திருப்பார்கள். அவ்வாறு அவர்களால் காட்டித்தரப்படாத ஒரு வழிமுறையை முஸ்லிம்கள் எவ்வித ஆதாரமுமின்றி விஷேச இரவு என்று கருதிக் கொண்டு செய்துவரக் கூடாது. இறைவன் ஏற்றுக் கொள்ள மாட்டான். குற்றமாகவும் ஆகிவிடும்.

ஹதீஸ்களின் நிலை

(1) ஸிஹாஹ் ஸித்தாவில் ஒன்றாகிய திர்மிதியில் ‘அல்லாஹ் பராஅத் இரவில் முதல் வானத்தில் இறங்கி அடியார்களுடைய பாவங்களை கலபு கோத்திரத்தாரின் ஆடு களுக்கு இருக்கும் அடர்ந்த ரோமங்களின் அளவு மன்னிக்கிறான் என்று நபி அவர்கள் கூறியதாக அன்னை ஆயிஷா (ரழி) அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸை அறிவிக்கின்ற திர்மிதீ இமாம் அவர்களே, இமாம் புகாரி (ரஹ்) அவர் கள் இது பலவீனமானது எனக்கூறியதாக குறிப்பிட்டுள்ளார்கள்.

(2) இப்னு மாஜாவில் ‘ஷஃபானில் பதினைந்தாம் இரவில் பகல் பொழுதில் நோன்பு வையுங்கள். இரவில் நின்று வணங்குங்கள்’ என நபி அவர்கள் கூறியதாக அலி (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இப்னு மாஜாவில் இடம்பெற்றுள்ள இந்த ஹதீஸும் சரி யானது அல்ல.

(3) ஐந்து இரவுகளில் கேட்கப்படும் பிரார்த்தனை மறுக்கப்படுவதில்லை. ரஜப் மாதத்தின் முதலாம் இரவு, ஷஃபான் மாதத்தின் பதினைந்தாம் இரவு, ஜும்ஆவின் இரவு, இரு பெருநாட்களின் இரவு என்று நபி அவர்கள் கூறினார்கள். இதனையும் முஹத்தி ஸீன்கள் ஏற்கவில்லை. இதேபோல் மற்ற ஹதீஸ்களையும் நிராகரிக்கிறார்கள்.

நன்மையான நோன்புகள்

வாரந்தோறும் திங்கள், வியாழன் நாட்கள், மாதந்தோறும் பிறை 13,14,15 நாட்கள், ஆஷூரா நாள், ஷவ்வால் ஆறு நோன்புகள் என பல நாட்கள் நோன்பு வைக்க சிறந்த நாட்கள் என்றும் அவற்றுக்கு எண்ணிலடங்கா நன்மைகள் கிடைக்கும் என்றும்  அண்ண லார் சொல்லியுள்ளார்கள். ஆனால், இந்நாட்களில் நோன்பு வைப்பதைப் பற்றி நினைத் துக்கூடப் பார்ப்பதில்லை. அதேசமயம், அண்ணலார் காட்டித்தராத ஷஃபான் 15 நோன் புக்கு பயங்கர முக்கியத்துவம் கொடுக்கிறோம். கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண் டும்.

பராஅத் இரவு வணக்கத்தை மத்ஹப் ஆதரிக்கிறதா?

ரஜப் மாதத்தில் முதல் ஜும்ஆ இரவில் மஃரிபுக்கும் இஷாவிற்கும் இடையில் 12 ரக்அத் கொண்ட தொழுகையும், ஷஅபான் மாதத்தில் நடுப்பகுதி பதினைந்தாவது இரவில் தொழும் நூறு ரக்அத்கள் கொண்ட தொழுகையும் இழிவாக்கப்பட்ட அனாச்சாரங்களாகும். இதை செய்யக் கூடியவர் பாவியாவார். இதை (தொழுகையை) தடுப்பது பொறுப்பாளர்கள் மீது கட்டாயமாகும் — இச்செய்தி ஷாஃபி மத்ஹபின் இஆனதுல் தாலிபீன் என்ற புத்தகத்தில் முதல் பாகத்தில் 27ம் பக்கத்தில் இருக்கின்றது. இதே போன்ற கண்டனம் ஷாஃபி மத்ஹபின் பத்ஹுல் முயீனில் முதல் பாகத்தில் 27ம் பக்கத்தில் பதிவாகியுள்ளது.

பராஅத் இரவன்று பள்ளிவாசல்களிலும் வீதிகளிலும் கடை வீதிகளிலும் மின் விளக்குகளை வைப்பது (பித்அத்) அனாச்சாரமாகும் என்று ஹனஃபி மத்ஹபின் பஹ்ருர் ராஹிக் என்ற புத்தகத்தில் 5ஆம் பாகத்தில் 232ஆம் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

இறைவனும் இறைத்தூதரும் சொல்லிக்காண்பித்தபடி இஸ்லாமிய நன்னெறியைப் பின்பற்றி வாழ்கின்ற நற்பேற்றை உங்களுக்கும் எங்களுக்கும் வல்ல அல்லாஹ் அளிக்க வேண்டும் என்னும் பிரார்த்தனையோடு …

 

நூற்பட்டியல்

சையத் அப்துர் ரஹ்மான் உமரி அவர்களின்

 

நூற்பட்டியல்

 

மொழிபெயர்ப்பு நூற்கள்

1.         இஸ்லாமிய ஆட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும் – சையத் அபுல் அஃலா மௌதூதி

2.         நோன்பு ஏன்? எவ்வாறு? – மௌதூதி, அமீன் அஹ்ஸன் இஸ்லாஹி

3.         உள்ளிழுக்கும் புதைகுழிகள் – சத்ருத்தீன் இஸ்லாஹி

4.         முறிந்த சிலுவை – ரியாஸ் பீட்டர்

5.         வாழ்க்கைக் குறிக்கோளும் வருமானமும் – அஸ்அத் கீலானி

6.         இஸ்லாம் அடிப்படைக் கோட்பாடுகள் – இல்யாஸ் நத்வி

7.         வான்மறை குர்ஆன் ஓர் அறிமுகம் –

8.         அழைப்பாளனின் பண்புகள் – அஷ்ரஃப் அலீ தானவி

9.         ரமழானை வரவேற்போம் – குர்ரம் முராத்

10.       தக்வா – அமீன் அஹ்ஸன் இஸ்லாஹி

11.       நிஃபாக் / நயவஞ்சகம் – சத்ருத்தீன் இஸ்லாஹி

12.       ஜிஹாத் ஓர் இஸ்லாமியப் பார்வை – இஸ்ரார் அஹ்மத்

13.       ஜிஹாதுல் இஸ்லாம் – கலீல் ஹாமிதி

14.       வதைச்சிறை – அஹ்மத் ராயிஃப்

15.       அல்ஃபாத்திஹா – அமீன் அஹ்ஸன் இஸ்லாஹி

16.       இறைத்தூதர் கால அரசியல் அமைப்பு – சையத் ஸுலைமான் நத்வி

17.       இஸ்லாமில் ஜிஹாதின் நிலை – மௌலானா மௌதூதி

18.       ஓரிறைவனை விட்டு வேறிறைவனை வணங்குதல்

19.       தக்வா/ இறையச்சம் – தாவூது அக்பர் இஸ்லாஹி

20.       அவமதிப்பும் உயிர்ப்பறிப்பும் – அபுல்கலாம் ஆஸாத்

21.       இறைவனை நெருங்க எளியவழி – குர்ரம் முராத்

22.       மரணத்திற்குப் பின் – ஹமீதுத்தீன் ஃபராஹி

23.       தர்கா, வழிபாடா, வழிகேடா? – அஷ்ரஃப் அலீ தானவி

24.       தாகூத்தை விட்டும் தூரவிலகு – சத்ருத்தீன் இஸ்லாஹி

25.       துஆக்களின் அற்புத பலன்கள் – இல்யாஸ் நத்வி

26.       நபிகளாரின் வாழ்வினிலே – இல்யாஸ் நத்வி

27.       இயக்கமும் இனிய உறவும் – குர்ரம் முராத்

28.       நபிமொழிகளின் தோழமையில் – குர்ரம் முராத்

29.       குற்றங்குறைகளை மன்னித்துவிடுக – குர்ரம் முராத்

30.       அழகிய நற்பண்புகள் – குர்ரம் முராத்

31.       சீறா ஆல்பத்தில் இருந்து சில சித்திரங்கள் – குர்ரம் முராத்

32.       எதை நோக்கி அழைக்கிறோம் – மௌலானா மௌதூதி

33.       ஸலாத்தும் ஸலாமும் – மௌலானா மௌதூதி

34.       யூதர்களின் சூழ்ச்சிவலை – மௌலானா மௌதூதி

35.       ரமழான் வருங்காலத்தின் வெளிச்சம் – குர்ரம் முராத்

36.       திக்ருல்லாஹ் – குர்ரம் முராத்

37.       கருத்துவேறுபாடுகளும் காரணங்களும் – ஷாஹ் வலியுல்லாஹ் திஹ்லவி

38.       இஸ்லாம் வழங்கும் பெண்ணுரிமைகள் – ஜாகிர் நாயக்

39.       விஞ்ஞான ஒளியில் குர்ஆனும் பைபிளும் – ஜாகிர் நாயக்

40.       உமர் கத்தாப் ரழியல்லாஹு அன்ஹு – ஷிப்லி நுஃமானி

41.       இறைநம்பிக்கை – சத்ருத்தீன் இஸ்லாஹி

42.       தொழுகையும் குர்பானியும் – ஹமீதுத்தீன் ஃபராஹி

43.       இஸ்லாமும் கூட்டுவாழ்வும் – சத்ருத்தீன் இஸ்லாஹி

44.       மறுமை நம்பிக்கை – சத்ருத்தீன் இஸ்லாஹி

இயற்றிய நூற்கள்

1.         குர்பானியின் சிறப்புகளும் சட்டங்களும்

2.         தொழுகை, ஏன் எவ்வாறு?

3.         அஹ்ஸாப் /அகழ்ப்போர்

4.         இசைக்குத் தடையா?

5.         இமாம் ஹஸனுல் பன்னா

6.         தஸ்கியா/உளத்தூய்மை (பாகம் ஒன்று)

7.         தஸ்கியா/உளத்தூய்மை (பாகம் இரண்டு)

8.         இஸ்லாமிய பெண்ணியம்

9.         தொழுகை வளர்நிலையினருக்கான அறிமுக நூல்

10.       தொழுகை முறை

11.       தொழுகையில் தவிர்க்கவேண்டிய தவறுகள்

12.       வளர்ச்சிக்கு வழிகோலும் ஜகாத்

13.       நல்வழிக் கதைகள் பாகம் 1

14.       நல்வழிக் கதைகள் பாகம் 2

15.       மலக்குகளும் வருவார்கள் கேட்க (நல்வழிக் கதைகள் பாகம் 3)

16.       தெரியாமல் கொடு தர்மத்தை (நல்வழிக் கதைகள் பாகம் 4)

17.       அண்ணாந்து பார்க்கவைக்கும் அறிவு (நல்வழிக் கதைகள் பாகம் 5)

18.       குழந்தைகளுக்கு இறைத்தூதர் வரலாறு (ஆதம்)

19.       குழந்தைகளுக்கு இறைத்தூதர் வரலாறு (நூஹ்)

20.       பெயரும் பொருளும்

21.       பெண்மை தொடர்பான ஷரீஆ சட்டங்கள்

22.       இறுதித்தூதரின் முன்னறிவிப்புகள்

23.       ஆள்பாதி – ஆடைபாதி

24.       முதல்மனிதர் ஆதம் அலைஹிஸ்ஸலாம்

25.       நூஹ் அலைஹிஸ்ஸலாம்

26.       இறைத்தோழர் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம்

27.       யூஸுஃப் அலைஹிஸ்ஸலாம்

28.       முஸ்லிமின் மாண்பு

29.       எளிதாய் கற்க இனிய பிரார்த்தனைகள்

30.       தவ்ஹீத் என்றால் என்ன?

31.       குழந்தை வளர்ப்பு என்னும் இஸ்லாமியக் கலை

32.       அமைப்பு வெறியில் அழியும் சமூகம்

33.       ரமழானும் நாமும்

34.       குர்ஆன் அழகும் அணுகுமுறையும்

 

மாற்றப்படவேண்டிய அழைப்பியல்முறை

அல்லாஹ்வின் மார்க்கத்தை பிறரிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்கிற ஆவல் அல்ஹம்து லில்லாஹ் இன்று எல்லோரிடமும் பரவலாக காணப்படுகிறது.  தனி நபர்களாகவும், பல குழுக்களாகவும் நாம் இந்த இஸ்லாமிய அழைப்புப் பணியை செய்து வருகிறோம்.  ஆனால், அன்று சஹாபாக்கள் காலத்தில் இஸ்லாம் பரவியது போல இன்று பரவுவதில்லை.  அன்று மக்களை இஸ்லாம் ஈர்த்தது போல் இன்று ஈர்க்கவில்லை.  இஸ்லாம் ஏனைய மார்க்கங்களைப் போல இடைச் செருகல்களுக்கும், மாற்றத்திற்கும் ஆட்பட்டுவிட்டதா என்றால் அதுவும் இல்லை.  பிறகு இதற்கு காரணம் என்ன?

இஸ்லாம் ஹிஜ்ரி நாற்பதாம் ஆண்டிலேயே அன்றைய நிலப்பரப்பில் மூன்றில் இருபங்கை தன்வயப்படுத்தியது.  கொள்கையிலும், வணக்க வழிபாடுகளிலும் எவ்வித மாறுதல்களுக்கும் உட்படாத அதே இஸ்லாம் தான் இன்றும் இருக்கிறது.  இத்தனைக்கும் அன்றைய காலத்தில், டிவி, ரேடியோ, பத்திரிக்கை, இன்டர்நெட் போன்ற எவ்வித தகவல் தொடர்பு சாதனங்களும் இல்லை.  அப்படியென்றால் வேறெங்கோ எங்கோ கோளாறுஇருக்கிறது.  ஆமாம் நாம் இஸ்லாமை அறிமுகப்படுத்துவதில் தான் கோளாறு செய்கிறோம்.  நாம் எதை இஸ்லாம் என்று மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்துகிறோம்.  எதனை மையப்படுத்தி இஸ்லாமை மக்களிடம் கொண்டு போகிறோம் என்பதை கவனமாக ஆராய வேண்டும்.

இன்று இஸ்லாம் தான் மிகவும் வேகமாக பரவுகிறது.  The Fastest Growing Religion in World என்று கூறி நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம்.  அன்புச் சகோதரர்களே, நாம் உண்மையான இஸ்லாமை சரியான வடிவில் முறையாக மக்களிடம் சொன்னால் இன்னும் இப்படிப்பட்ட வார்த்தைகளையும், வாக்கியங்களையும் கேட்டுக் கொண்டேயிருக்க மாட்டோம்.  ஏன்?  மக்கள் மாக்களிலிருந்து மக்களாகியிருப்பார்கள்.  தஅவாவைக் காட்டிலும் இஸ்லாஹ்வே எஞ்சியிருக்கும்.

உலகில் காணப்படும் சமயங்களோடு பத்தோடு பதினொன்றாக இருக்கட்டும் என்றெண்ணி அல்லாஹ் இஸ்லாமை இறக்கவில்லை.  அனைத்து மார்க்கங்களைக் காட்டிலும் மேலோங்க வேண்டும் என்பதற்காக இறக்கி வைத்தான்.  ஆனால், இன்று உலகில் உள்ள மதங்களில் இஸ்லாமும் ஒன்று என்கிற நிலைமைதான் உள்ளது.

1.  நமது மக்கள்  அறிவியல் கண்டுபிடிப்புகளை ஆதாரமாகக் கொண்டு இதுவே உண்மையான மார்க்கம், அறிவியல் பூர்வமான மார்க்கம் என்று இஸ்லாமை அறிமுகப்படுத்துகிறார்கள்.

2.  யாரேனும் பிரபலங்கள் இஸ்லாமை தழுவினால் அவர்களின் புகழை பெரிதுபடுத்தி இஸ்லாமை சரியான மார்க்கம் என்று சித்தரிக்க முயல்கின்றனர்.

3.  அல்லது பிரபலமானவர்களின் இஸ்லாமைப் பற்றிய அபிப்பிராயங்கள் அவர்களது பேட்டிகள், பாராட்டுகள், கருத்துகளை முன் வைத்து இஸ்லாமை உயர்த்திக் காட்ட முற்படுகின்றனர்.

4.  இஸ்லாமின் அழகான வழிபாடுகளையும் அதன் அழகான வழிமுறைகளையும் விளம்பரப்படுத்தி அதன் வாயிலாக இஸ்லாமை மற்றவர்களுக்கு பிரச்சாரம் செய்கின்றனர்.

மேற்கண்ட இந்த நான்கு வகையான வழிமுறைகளை கையாண்டே இன்று உலகம் முழுவதும் இஸ்லாம் பிரச்சாரம் செய்யப்படுகின்றது.  இது தவிர இன்னும் சிலர் இஸ்லாமின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கும், ஆட்சேபணைகளுக்கும் பதிலளிக்கும் வகையில் இஸ்லாமிய பிரச்சாரம் செய்கிறார்கள்.

குர்ஆன் வசனங்களை இறைவசனங்கள் என்று மெய்ப்பிக்க கடந்த நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட கண்டுபிடிப்புகள் குர்ஆன் வசனங்களோடு ஒத்ததாக அமைந்துள்ளமையை காண்பிக்கின்றனர்.  14 – நூற்றாண்டுகளுக்கு முன்னர் கூறப்பட்டவை இன்று இந்த இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் ஆராய்ச்சி செய்து மெய்ப்பிக்கப்பட்டிருக்கின்றன.  ஆகவே சாதாரணமா ஒரு மனிதர் இதைக் கூறியிருக்க முடியாது.  முக்காலமும் அறிந்த இறைவனே இதை கூறியிருக்க முடியும்.  குர்ஆன் இறைவன் வாக்கேயாகும் என்று நிரூபிக்கிறோம்.  உண்மையில் கடந்த நூற்றான்டில் கண்டுபிடிக்கப்பட்ட பல அறிவியல் உண்மைகள் குர்ஆனில் சொல்லப்பட்டவையே.  ஆனால் இதை வைத்து குர்ஆன் இறைவனின் வேதம், இஸ்லாம்தான் சரியான மார்க்கம் என்று நாம் இஸ்லாமை அறிமுகப்படுத்தக் கூடாது.  அறிவியலில் இன்று வரை பல விஷயங்கள் குர்ஆனிற்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டுள்ளன.  மனித படைப்பை இதற்கு உதாரணமாக கூற முடியும்.  இதனால் குர்ஆனுடைய கருத்துகள் பின்னுக்கு தள்ளப்பட்டு விடும் அபாயம் உள்ளது.  இஸ்லாமில் எத்தனையோ வழிபாடுகள், அறிவுரைகள், அறிவியல்பூர்வமாய் அமைந்துள்ளது  நாம் இதனை அறிவியலின் துணை கொண்டு மக்களிடம் கொண்டு செல்லும் போது அறிவியலை முதன்மைப்படுத்தியும் முக்கியப்படுத்தியும் விடுகிறோம்.  இவ்வாறு நம்மையும் அறியாமல் அறிவியலை புனிதமாக்கி உயர்ந்த அந்தஸ்த்திற்கு கொண்டு சென்று விடுகிறோம்.  இதனால் இஸ்லாமின் ஏதாவது ஒரு வழிகாட்டுதல் விஞ்ஞானத்திற்கு முரணாக இருந்தால் அதைப் புறக்கணிக்கும் அபாய சூழ்நிலை ஏற்பட்டுவிடும்.  அதனை செயல்படுத்த முன்வரும் மனிதன் விஞ்ஞானத்தின் அடிப்படையில் அச்செயல் அமைந்துள்ளதால் அதனை செய்ய முன்வருகிறான்.  அல்லாஹ்வும், அவன் தூதரும் ஏவி இருக்கிறார்கள் என்பதை இரண்டாம் பட்சமாகவே எண்ணுகிறான்.  சரியோ தவறோ, நன்மையோ தீமையோ தலைவன் ஏவியதற்கு அடிபணிவதையே வழிபடுதல் என்கிறோம்.  இங்கே அத்தன்மை ஒளிந்து கொள்வதை பார்க்கிறோம்.  குர்ஆன் அறிவியல் கண்டுபிடிப்புகளின் புதையலோ, விஞ்ஞானத்தின் முன்னறிவிப்போ அதன் வழிகாட்டியோ அல்ல.  அது வாழ்வியல் வழிகாட்டி புத்தகம்.

இன்று கண்டறியப்பட்டுள்ள குர்ஆனோடு ஒத்ததாக அமைந்துள்ள விஞ்ஞான உண்மைகளை நாம் சத்திய மார்க்கத்திற்கு சான்றாக கொள்ளலாம்.  அவற்றை வைத்து இஸ்லாம் அறிவியல் மார்க்கம், இஸ்லாம் விஞ்ஞான பூர்வமான மார்க்கம் என்று இஸ்லாமை அறிமுகப்படுத்துவது சரியாகாது

1.  தும்மினால் நாங்கள் அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் இறைவனுக்கே) என்று சொல்கிறோம்.  ஏன் என்றால் தும்மும் போது எந்நேரமும் சதா இயங்கிக் கொண்டிருக்கும் இதயம் கண நேரம் நின்று விடுகிறது.  பிறகு உடனே அதற்கு உயிர் கொடுத்து இயங்க வைத்த அல்லாஹ்விற்கு நன்றி கூறும் விதமாக நாங்கள் இவ்வாறு கூறுகிறோம்.

2.  தூங்கும் போது வலது பக்கம் ஒருக்களித்து உறங்குமாறு எங்களுக்கு நபிகள் நாயகம்(ஸல்) வழிகாட்டியுள்ளார்கள். இடது பக்கம் இதயம் உள்ளது.  ஆகவே இடது பக்கமாக உறங்கினால் இதயத்தின் செயல்பாடு பாதிக்கும்.  உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சீராகாது.  உடல் நலம் கெடும் வாய்ப்பு உள்ளது என்று இன்றைய அறிவியல் கூறுகின்றது.

அவ்வாறே உறங்கும் முன் முப்பத்திமூன்று தடவை சுப்ஹானல்லாஹ் அதே எண்ணிக்கையில் அல்ஹம்துலில்லாஹ் மற்றும் அல்லாஹு அக்பர் என்று கூறுவது நபி வழி.  இன்றைய அறிவியல் உறங்கும் முன் கண்ணை மூடிக் கொண்டு எவர் நூறு வரை எண்ணி உறங்குகிறாரோ அவருக்கு ஆழ்ந்த உறக்கமும், வேலைப் பளுவின் களைப்பும் மறைந்து விடுகிறது என்று கூறுகின்றது.

3.  சிறுநீர் கழிக்கும் போது உட்கார்ந்து கழித்தால் சிறுநீரகத்திலிருந்து முழுமையான அளவில் சிறுநீர் வேளியேறிவிடுகின்றது என்று அறிவியல் கூறுகின்றது.  அதே போல் மனிதனுக்கு கோபம் வந்தால் அமர்ந்து கொள்ளட்டும்.  அமர்ந்து இருந்தால் படுத்துக் கொள்ளட்டும்.  அவர் ஒழு செய்யட்டும் என்று இஸ்லாம் கூறுகின்றது. இதையே அறிவியலும் தண்ணீர் குடிக்கட்டும், தண்ணீர் அலம்பட்டும் என்று கூறுகின்றது.

இவ்வாறு இஸ்லாமின் எல்லா வழிபாடுகளும் வழிகாட்டுதல்களும் அறிவியலாய் அமைந்துள்ளன என்று நாம் பிரச்சாரம் செய்கிறோம்.  இதை முன்வைத்து நீங்கள் இஸ்லாமிற்கு வந்தீர்களென்றால் உங்கள் வாழ்வு அறிவியல் படி நலமாய் அமையும்.  உங்களுக்கு மருத்துவச் செலவே இருக்காது என்று நாம் இஸ்லாமை அவர்களுக்கு எத்தி வைக்கிறோம்.

ஹிந்து மதத்தின் வழிபாடுகளிலும் எத்தனையோ அறிவியல் உண்மைகள் உள்ளன.  வீட்டு முற்றத்தில் மாட்டுச் சாணி தெளிப்பதால் எத்தனையோ பூச்சிகள், விஷஜந்துக்கள் வீட்டை அண்டாது.  முகத்திற்கு மஞ்சள் பூசுவதால் முகக் கிருமிகள் இறந்து போகின்றன. முகத்திற்கு பொலிவு கிடைக்கின்றது  சூரிய நமஸ்காரம் செய்யும் போது அதிகாலை வெயில் உடல் மேல் படுவதால் வைட்டமின் ‘E’ சக்தி கிடைக்கின்றது.  நெற்றியில் திருநீர் பூசுவதில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருப்பதாக சொல்கிறார்கள்.

இப்படி ஒவ்வொரு சமூகத்தின் கலாச்சாரத்திலும் பழக்க வழக்கங்களிலும் ஏதாவது ஒரு வகையில் அறிவியல் ரீதியான நன்மைகளும், மருத்துவபலன்களும் இருக்கத்தான் செய்கின்றன.  நாம் ’அறிவியல்பூர்வமாய்’ என்று மக்களிடம் இஸ்லாமை கொண்டு சென்றால் ஒவ்வொரு சமூகத்தினருக்கும் தத்தமது பழக்க வழக்கத்தில் இருக்கும் அறிவியலை கண்டு தம் மதத்தையே பெருமையாக கொள்வர்.  இது அவர்களை மேலும் வெளியே வர முடியாதபடி செய்து விடும்.

இவற்றையெல்லாம் நாம் நமது மக்களிடம் சொல்லலாம்.  நம்மை நாமே திருப்திப்படுத்திக் கொள்வதற்காக இவற்றைச் சொல்வதில் தவறில்லை.  பறவை இறைச்சிக்கு உயிரூட்டி இப்ராஹிம் (அலை) அவர்களது ஈமானையும், மிஃராஜ் மூலமாக முஹம்மத் (ஸல்) அவர்களின் ஈமானையும் அல்லாஹ் திருப்தி அடையச் செய்தான்.  அவர்கள் இறைத்தூதர்கள்.  அல்லாஹ்வின் அருளை நேரில் கண்டவர்கள்.  நாம் கொள்கையளவில் இஸ்லாமை அதன் ஏவல்,விளக்கங்களில் நன்மை இருக்கின்றதா? என்று நாம் பார்ப்பதில்லை. நோன்பு வைப்பதால் இன்ன மருத்துவ பலன் இருக்கிறது என்பதால் நோன்பு நோற்பதில்லை.  கேட்டோம், கட்டுப்பட்டோம் என்கிற அடிப்படையிலே நாம் வழிபட்டு கொண்டு இருக்கிறோம்.  இதுதான் உண்மையான ஈமானும் கூட.  அதே வேளையில் உலகியல் அடிப்படையில் சில நன்மைகளும் இருக்கும் போது நமது மனம் திருப்தி அடைகின்றது. செய்யும் காரியத்தில் ஒரு ஆர்வமும், உறுதியும் ஏற்படுகின்றது.  ஆகவே இதை நம் மக்களிடம் சொல்லலாமே தவிர இதை வைத்து பிற மக்களிடம் இஸ்லாமை அறிமுகப்படுத்தலாகாது.

கேரள பிரபல இலக்கியவாதி கமலா சுரைய்யா (மாதவி குட்டி) பிரபல மேற்கத்திய பாப் இசைப் பாடகர் யூசுப் இஸ்லாம் போன்றோரின் இஸ்லாமிய தழுவலை அவர்களின் பிரபலத்தை முன்வைத்து இஸ்லாமை பிறருக்கு பிரச்சாரம் செய்கிறோம்.  இத்தகைய பிரபல மனிதர்கள் இஸ்லாமை தழுவியிருக்கிறார்கள்.  நீங்களும் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்கிறோம்.

சிலர் இஸ்லாமிற்குள் வராவிட்டாலும் இஸ்லாமைப்பற்றி தங்களது நல்ல அபிப்பிராயங்களை வெளியிட்டு இருக்கிறார்கள்.  அதன் கொள்கையைப் பற்றியும், போதனைகளைப் பற்றியும் அது ஏற்படுத்திய சமூக மாற்றத்தைப் பற்றியும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து இருக்கிறார்கள்.

இனஒழிவிற்கு இஸ்லாமே அருமருந்து என்று பெரியார் ஈ.வே. ராமசாமியும் முஹம்மத் இன்று இருந்தால் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்டிருப்பார் என்று ஜார்ஜ் பெர்னாட்ஷா கூறியிருக்கிறார். இது போன்று எத்தனையோ தலைவர்கள் இஸ்லாமை தழுவாவிட்டாலும் இஸ்லாமை போற்றியிருக்கிறார்கள்.

இவர்களது பேட்டிகளையும், அறிக்கைகளையும் முன்வைத்து இஸ்லாமை பிரச்சாரம் செய்வது சரியான செயலாகாது.  இப்படிப்பட்ட பிரபலமானவர்களின் நற்கருத்துக்களை மக்களிடம் சொன்னால் மக்கள் இஸ்லாமை ஆர்வத்தோடு படிப்பார்கள்.  இஸ்லாமினுள் நுழைவார்கள் என்று நம்புகிறோம்.  உண்மையில் சகோதரர்களே! இதனால் அவர்களுக்கு இஸ்லாமின் மீது நன்மதிப்பே ஏற்படுத்துமே தவிர அவர்களை இஸ்லாமிற்குள் நுழைக்கச் செய்யாது.  சாதாரணமான ஒருவருடைய மனதில் “ அவர்கள் (அந்த பிரபலங்கள்) உண்மையானவர்களாக இருந்தால்  இஸ்லாமை தழுவியிருக்கலாமே” என்ற எண்ணம் கண்டிப்பாக தோன்றும்.

அருமைச் சகோதரர்களே!  நாம் இஸ்லாமை இவ்வாறு கொண்டு செல்ல வேண்டிய அவசியமே இல்லை.  இத்தகைய கவர்ச்சி நாயகர்களின் வசீகர பேச்சுக்கள் இஸ்லாமை அறிமுகப்படுத்த தேவையே இல்லை.  இஸ்லாமே கவர்ச்சி மார்க்கம், உண்மையான இஸ்லாமை மக்களிடம் சொன்னாலே மக்கள் சாரை சாரையாக வருவார்கள்.  அதன் கடவுட் கொள்கை ஒன்றே போதும்.

இன்னுஞ் சிலர் இஸ்லாமின் அழகான வழிபாடுகளையும் அதன் அழகான அறிவுரைகளையும் மக்களிடம் எடுத்துக் கூறி அழைப்புப் பணி செய்கிறார்கள்.  தொழுகை, நோன்பு போன்ற வழிபாடுகளின் அழகையும், அதன் செயல் வடிவ வசீகரத்தையும், கல்விக்கு இஸ்லாம் அளித்துள்ள முக்கியத்துவம், தாயை பேணுவதற்கான கட்டளைகள். இன்னும் எத்தனையோ சமூக சீர்திருத்த கருத்துகள், மூடநம்பிக்கை ஒழிப்பு போன்ற  அழகான அறவுரைகளை எடுத்துக் கூறி இஸ்லாமை பிரச்சாரம் செய்கிறார்கள்.  எத்தனையோ பேர் இதைக் கேட்டு இஸ்லாமிற்குள் வருகிறார்கள்.  பிரியாணியை உண்டு, ஒரு சமூகத்தின் உணவே இவ்வளவு ருசியாக இருக்கும் போது அச்சமூகத்தின் கருத்துக்களும் வழிமுறைகளும் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று கருதி இஸ்லாமை ஏற்றுக் கொள்ளும் சாதாரண மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.  இஸ்லாமில் தீண்டாமை இல்லை என்று கருதி இஸ்லாமினுள் வருகிறார்கள்.  இவ்வாறு எவ்வளவோ அழகான நெறிமுறைகள் தாங்கிய மார்க்கமாக இஸ்லாம் இருக்கின்றது.  ஆனால் இதை மட்டும் கருத்தில் கொண்டு இஸ்லாமைத் தழுவியவர்களிடம் அவ்வளவு கொள்கை பிடிப்பு இருக்காது.  நிலைகுலையாமை இருக்காது.   “உலகில் எத்தனையோ நல்ல கருத்துகளை மதங்கள் கூறுகின்றன. அவற்றுள் இஸ்லாமும் ஒன்று. இஸ்லாமும் சிலவற்றை கூறுகின்றது!” என்ற கருத்தோட்டத்தையே இது பலரிடம் ஏற்படுத்தி விடும்.  இந்த நல்ல அறிவுரைகளுக்காக இஸ்லாமை தழுவ வேண்டிய அவசியம் இல்லை என்கிற எண்ண நிலைப்பாட்டை  தோற்றுவித்துவிடும்.

அருமைச் சகோதரர்களே!  உலகில் நல்ல  அறவுரைகளுக்கும், தத்துவங்களுக்கும் பஞ்சமில்லை.  எல்லா சமயங்களிலும் நல்ல அறவுரைகள் இருக்கத்தான் செய்கின்றன.  நாம் நல்ல அறவுரைகளை மையப்படுத்தி இஸ்லாமை கொண்டு சென்றால் மக்கள் அதைப் போற்றத்தான் செய்வார்களே தவிர  இதற்காக ஒரு மதத்தை தழுவி அதில் கட்டுண்டு இருக்க வேண்டிய அவசியமில்லை என்றே பெரும்பாலான மக்கள் கருதுவார்கள்.

இஸ்லாம் ஓர் அழகான வாழ்க்கை நெறியாக உள்ளது.  அது மனிதனின் அனைத்து செயல்பாடுகளுக்கும் வழிகாட்டும் நெறியாக உள்ளது என்று கூறுகிறோம்.  தனிமனித, மற்றும் பொதுவாழ்க்கை என எல்லா விஷயங்களிலும் மனிதன் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு இஸ்லாம் தீர்வளிக்கிறது என்று பிரச்சாரம் செய்கிறோம்.

இது உண்மை என்றாலும் இதை நாம் அழைப்புப்பணியின் பிரச்சார வழிமுறையாக கொள்ளக்கூடாது.  இது ஒரு வகையில் கிறித்தவ மிஷினரிகளின் பிரச்சார வழிமுறையை ஒத்ததாக அமைந்திருக்கின்றது.  அவர்கள் தான் “நீங்கள் இயேசுவை ஏற்றுக் கொண்டீர்களானால் நீங்கள்  இரட்சிக்கப்படுவீர்கள்.  நோய், நொடிகள் குணமாகும்.  கடன் தொல்லைகள் தீரும்.  முடவர்கள் நடப்பார்கள்.  மனநிம்மதி கிடைக்கும்!” என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.

மார்க்கத்தின் கவர்ச்சியே கலிமத்து தய்யிபாதான்.  அந்த “லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்”வை பிரச்சாரம் செய்தாலே நமக்கு போதுமானது.  அதற்கு இருக்கும் வசீகரத் தன்மை வேறு எந்த வாக்கியத்திற்கும் கிடையாது.  இதை ஒன்றை மட்டும் வைத்தே தங்களது 23வருட நபித்துவ வாழ்க்கையில் இறைத்தூதர் (ஸல்) இஸ்லாமிய பிரச்சாரம் செய்தார்கள்.  இஸ்லாமின் ஏனைய எந்த ஒரு அம்சத்தையும் பிரச்சார வழிமுறையாய் அண்ணல் நபி (ஸல்) கையிலெடுக்கவில்லை.  அனைத்து நபிமார்களும், “என் சமூகமே அல்லாஹ்வை வணங்குங்கள்.  அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை” என்றும் “அல்லாஹ்வை வணங்குங்கள் தாகூதை விட்டும் விலகி இருங்கள்!” என்றும்தான் பிரச்சாரம் செய்தார்கள்.

அல்லாஹ்வை விட்டும் வணங்கப்படும் கல், மரம், சிலை, மாடு, கழுதை, உயிருள்ள மனிதன். இறந்து போனவன், சூரியன், ஏனைய நட்சத்திரங்கள் போன்று அனைத்தும் “தாகூத்” எனப்படும்.

உண்மையில் அந்தந்த நபிமார்களின் சமூகத்தில் எல்லாத் தீமைகளும் இருந்தன.  ஆனால் எல்லா நபிமார்களும் கலிமா தய்யிபாவையே போதித்தார்கள்.  அது மட்டுந்தான் எல்லா தீமைகளையும் வேரறுக்கக் கூடியது.

அன்றைய அரபு தீபகற்பத்தில் ஷிர்க்கும் இருந்தது.  ஏனைய அனாச்சாரங்களும் இருந்தன.  விபச்சாரத்தை ஒழிக்கவும் மதுவிலக்கை கொண்டு வரவும் இறைத்தூதர் (ஸல்) ஓர் இயக்கத்தை உருவாக்கவில்லை.  அப்படி தீமைகள் ஒழிப்பு இயக்கம் என ஓர் அமைப்பை ஏற்படுத்தி இருந்தால் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு இருந்த வெறுப்பும் எதிர்ப்பும் அந்தளவிற்கு ஏற்பட்டு இருக்காது.  இணைவைப்பை (ஷிர்க்கை) விமர்சித்ததைத்தான் அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.  ஏனைய அனாச்சாரங்களை ஒழிக்க இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு ஆசை இல்லாமல் இல்லை.  ஒரு வேளை இப்படி செய்திருந்தால் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மீது வெறுப்பும் ஏற்பட்டு இருக்காது.  அதேசமயம் இஸ்லாமும் வளர்ந்திருக்காது.  உண்மையில் இஸ்லாம் எதிர்ப்பிலேயே வளர்ந்திருக்கின்றது.  பொய்க் கடவுளர்களைக் கொண்டு மக்களை நம்ப வைத்து அதை வைத்தே மக்களை தமக்குக் கீழே அடிமைகளாக நடத்திக் கொண்டிருந்தனர்,  அன்றைய தலைவர்கள்.  அவ்வேளையில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மதுவையும் விபச்சாரத்தையும் இன்னபிற தீமைகளையும்  ஒழிப்பதையே முன்னிறுத்தி போராடி இருந்தால் அத்தலைவர்களது எதிர்ப்பிற்கு ஆளாகி இருக்கமாட்டார்கள்.  இது ஏனென்றால் அப்போராட்டம் அவர்களது தலைமைக்கும் பதவிக்கும் இது எவ்விதத்திலும் ஆபத்து ஏற்படுத்தாது.  ஷிர்க்கை எதிர்த்த போது தான் தம் தலைமைக்கே இது வேட்டு வைக்க கூடியதாக உள்ளது என்பதை உணர்ந்து இறைத்தூதர் (ஸல்) அவர்களை எதிர்த்தார்கள், துன்பம் தரலானார்கள், நாடு கடத்தினார்கள், கொலை செய்யவும் முற்பட்டார்கள்.

எந்த கற்சிலைகளை கடவுளர்கள் என்று மக்களை நம்ப வைத்து தமக்கு கட்டுப்படுபவர்களாக ஆக்கி வைத்திருந்தார்களோ அச்சிலைகள் கடவுள்கள் கிடையாது என்னும் போது எப்படி அத்தலைவர்களால் பொறுத்துக் கொள்ள முடியும்.  அவர்களது தலைமையையே  பறிக்கக் கூடியதாக அல்லவா அது இருந்தது?

தலைமையும், அதிகாரமும் கையில் இருக்கும் போது எல்லா சமூக கேடுகளையும் ஒழிக்க அவர்களால் முடியும்.  ஆனால் அது அவர்களுக்கு எவ்விதத்திலும் உதவாது.  சிலைகளை கடவுளர்களாக மக்களை நம்பவைக்கும் போதுதான் அத்தலைவர்களுக்கு பற்பல வழிகளில் செல்வமும் கிடைக்கின்றது செல்வாக்கும் கிடைக்கின்றது.  உலகம் முழுவதும் இதுதான் இன்றும் நடந்து கொண்டு இருக்கிறது.

ஒரு வேளை நபி (ஸல்) ஏகத்துவ கலிமாவை மொழியாமல் மற்ற மற்ற தீமைகளை ஒழிக்க முற்பட்டு இருக்கலாம்.  அது பெரிய ஒரு வெற்றியை தந்திருக்காது.  நபித்துவம் கொடுக்கப்படுவதற்கு முன்னால் இளைஞராக இருந்த போது “ஹில்புல் ஃபுஜுல்” எனும் சமூகநல சீர்திருத்த இயக்கத்தில் இணைந்து போராட்டம் நடத்தியுள்ளார்கள். குலச் சண்டைகள், கோத்திரப்போர்களைத் தடுப்பது, வறியவர்களுக்கு உதவி புரிவது, வழிப்பறியைப் போக்குவது, திருட்டைத் தடுப்பது போன்ற எத்தனையோ நற்பணிகளை அவ்வியக்கம் நடத்திக் கொண்டிருந்தது.

அது போல் ஒரு நற்பணி இயக்கத்தை தோற்றுவித்து அதில் பல மக்களை இணைத்து அதன் மூலமாக இஸ்லாமை எடுத்துச் சொல்லி இருக்கலாம்.  பொதுவாக நல்ல விஷயங்களில் மக்களின் ஒத்துழைப்பு இருக்கும்.  ஆனால் இதில் தலைமைக்கு கட்டுபடுதல் என்று அம்சமே இருக்காது.  ஒரு கட்டுக் கோப்பு இருக்காது.  அர்ப்பணிப்பு இருக்காது. தியாக மனப்பான்மை காணப்படாது.  ஏதாவது ஒரு பிரச்னை, கஷ்டம் என்று வந்து விட்டால் உறுதிப்பாடு இருக்காது.  கழன்று விடுவார்கள். பொது நலன் கருதி ஏதாவது ஒரு சட்டம் இயற்றப்பட்டால் அது தனக்கு நஷ்டம் ஏற்படுத்தும் என்று கருதும் எந்த ஒரு தனிமனிதனும் அதை ஆட்சேபிக்காமல் இருக்க மாட்டான்.  விரும்பினால் அதை விட்டு விலகியும் விடுவான்.

நன்மைகளை செய்கிறோம்.  தீமைகளுக்கு எதிராக போராடுகிறோம் என்று மக்களை ஒன்றிணைத்து பின்னர் படிப்படியாக இஸ்லாமை பிரச்சாரம் செய்யலாமே என்று நாம் நினைக்கலாம்.  இதுவும் சரியான வழிமுறை அன்று!.  ஒரு வேளை ஏதாவது ஈமானிய சோதனை ஏற்பட்டால் அப்படி இஸ்லாமிற்குள் வருபவர்களிடம் ஈமானிய உறுதி – இஸ்திகாமத் – நிலைகுலையாமை தென்படாது.

ஏகத்துவ கலிமாவை சொல்லித்தான் நபி (ஸல்) அவர்கள் இஸ்லாமிய பிரச்சாரம் செய்தார்கள்.  அதன்  ஆழ, அகலத்தை நன்றாக விளங்கிக் கொண்டபின்புதான் குறைஷித் தலைவர்கள் எதிர்த்தார்கள்.

ஒரு முறை அபு ஜஹ்லிடம் அவனைச் சார்ந்த கூட்டத்தாரில் ஒருவன் இப்படி கேட்டான்.  “நீங்கள் ஏன் முஹம்மதை இந்தளவிற்கு எதிர்க்கிறீர்கள்?.  அவர் ஒன்றும் அன்னியர் கிடையாதே.  உங்கள் சித்தப்பா மகன் தானே! அவர் சொல்வதை கேட்பதில் என்ன தவறு இருக்கின்றது?”  அதற்கு அபுஜஹ்ல்  “அவர் சொல்வது உண்மைதான்!.  ஆனால், அவர் தன்னை எப்படி அறிமுகப்படுத்துகிறார் தெரியுமா?  தன்னை ரசூலுல்லாஹ் – அல்லாஹ்வின் தூதர் என்று பிரகடனப்படுத்துகிறார்.  அதற்கு என்ன அர்த்தம் என்று தெரியுமா?  அவர் “நில்” என்றால் நிற்க வேண்டும், ”உட்கார்” என்றால் உட்கார வேண்டும்.  இது என்னால் முடியாது!” என்று கூறினான்.

இது தான் அவர்கள் புரிந்து கொண்ட இஸ்லாம்! அதனால் கடுமையாக எதிர்த்தார்கள்.  எங்கே தம்மை விட்டும் தலைமை போய்விடுமோ என்று அஞ்சினார்கள்.

இஸ்லாமை சொல்லும் போது அடி விழும்.  உதை வாங்க நேரிடும்.  அப்பொழுது தான் நாம் உண்மையான இஸ்லாமைச் சொல்கிறோம் என்று பொருள்!.  அனைத்து நபிமார்களும் இஸ்லாமை சொன்ன போது எதிர்ப்பு இல்லாமல் இருந்தது இல்லை.  இஸ்லாமை சொன்ன போது நபி (ஸல்) அவர்களுக்கும் கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டது.  இது எப்பொழுது ஏற்படும் என்றால் அல்லாஹ்வை விட்டு விட்டு மற்றவைகளை வணங்காதீர்கள் என்று நாம் பகிரங்கமாக பிரச்சாரம் செய்யும் போது தான் ஏற்படும்!.  அப்பொழுது நாம் சிறையிலடைக்கப்படலாம்.  சொல்லணா துன்பங்களுக்கு ஆளாக நேரிடலாம். நமது உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம்.  இஸ்லாமை இப்படித்தான் அறிமுகப்படுத்த வேண்டும்!.  நபிமார்கள் வாழ்க்கையிலிருந்து படிப்பினையாக இதனையே பெறுகிறோம்!!.

இறைத்தூதர் யூசுஃப்  முதன் முதலில் இஸ்லாமிய பிரச்சாரம் எப்படி செய்தார்கள்?  பல தெய்வங்கள் இருப்பது சிறந்தனவா? அல்லது யாவற்றையும் அடக்கி ஆளும் (ஏகன்) அல்லாஹ்வா? என்றுதானே சிறைவாசிகளிடம்  இஸ்லாமை அறிமுகப்படுத்தினார்கள்.

இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களும் எப்படி இஸ்லாமை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார்கள்?.  மலைக்குன்றின் மீத ஏறி அல்லாஹ்வை அஞ்சுங்கள்,  அவனை மட்டும் வணங்குங்கள், வேறு யாரையும் வணங்காதீர்கள்.  மறுமை நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்று தானே சொன்னார்கள்!.

உடனே நபி (ஸல்) உடைய நெருங்கிய உறவினரான சொந்த சித்தப்பாவே நாசமாய் போவாயாக! என்று திட்டியதை நாம் வரலாற்றில் பார்க்கிறோம்.

ஆக நாம் கலிமா லாயிலாஹ இல்லல்லாஹ் வையே மக்களிடம் முதலில் கொண்டு செல்ல வேண்டும்.

அருமைச் சகோதரர்களே! பிறவியிலேயே எல்லா மனிதர்களின் சிந்தனையிலும் ஒருவன் மட்டுமே இறைவனாக இருக்க முடியும் என்கிற கருத்து பொதிந்து வைக்கப்பட்டுள்ளது.  ஒரு வகுப்பிற்கு இரண்டு ஆசிரியர்கள், ஒரு வண்டிக்கு இரண்டு ஓட்டுநர்கள் என்பது  ஒரு சாதாரண மனிதனால் கூட ஏற்றுக் கொள்ள முடியாது.  அப்படி இருக்கும் போது மாபெரும் இந்த உலகில் ஒன்றுக்கும் அதிகமான கடவுளர்கள் இருக்கிறார்கள் என்பதை எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்.  இதை நபி (ஸல்) அவர்கள் ஒரு ஹதிஸில் தெளிவாகவே சொல்லி இருக்கிறார்கள்.

“உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் இயற்கையான (ஒருவன் மட்டுமே இறைவனாக இருக்க முடியும் என்கிற சிந்தனை) மார்க்கத்தில்தான் பிறக்கிறது.  ஆனால் அதன் தந்தையோ  யூதனாகவோ, கிறித்தவனாகவோ  தீயை வழிபடுவனாகவோ வளர்த்து விடுகிறான்”.

அல்லாஹ்வை விட்டு விட்டு மற்றவற்றை வணங்கும் ஒவ்வொரு மனிதனும் தன் உள்ளத்தில் தான் மனசாட்சிக்கு விரோதமாய் நடக்கிறோம் என்பதை உணரவே செய்கிறான்.  ஆனால் அவனால் எதையும் மாற்றிக் கொள்ள முடியவில்லை. தான் சரியான வழியில் தான் இருக்கிறோம் என்கிற ஊசலாட்டத்தை  அவன் உள்ளத்தில் ஷைத்தான் ஏற்படுத்தி விடுகிறான்.  புற உலகை பார்க்கிறான்.  உலகின் பெரும் பாலான மக்கள் இவன் செய்வதையே செய்து கொண்டிருக்கிறார்கள்.  பெரும்பான்மை மக்கள் நம் பக்கம் இருக்கிறார்கள்.  அவ்வளவு மக்கள் தவறான வழியில் இருக்கமாட்டார்கள், என்று எண்ணுகிறான்.  தன் மனதை தேற்றிக் கொண்டு உள்ளத்தின் உறுத்தலுடனேயே, மனசாட்சிக்கு விரோதமாய் தொடர்ந்து ஷிர்க் செய்கிறான்.

அதே போல் அவனுக்கு தன் தாய், தந்தையர், முன்னோர்கள் மீது அளப்பரிய மரியாதை இருக்கின்றது.  இயல்பாகவே ஒவ்வொரு மனிதனிடமும் இத்தன்மை இருக்கின்றது.  இந்நிலையில் தம் முன்னோர்கள் நமக்கு தவறான வழியை காட்டியிருக்க மாட்டார்கள் என்று எண்ணுகிறான்.  தொடர்ந்து அதே ஷிர்க்கை செய்து வருகிறான்.

மனிதனை வழிகெடுக்க ஷைத்தான் பயன்படுத்தும் வழிமுறைகளில் இந்த இரண்டும் முக்கியமானது.  இப்ராஹிம் (அலை) முஹம்மத் (ஸல்) போன்று மிகச் சிலர் தான் முயன்றார்கள்.  மற்றபடி சாதாரண மனிதர்கள் எல்லோரும் இவ்வுலக இன்பத்தை அனுபவிக்க வேண்டுமென்ற ஆசையிலேயே தங்கள் உழைப்பையும், நேரத்தையும் செலவழித்துக் கொண்டிருக்கும் போது உண்மையான இறைவனைப் பற்றி சிந்திக்க நேரம் எங்கிருக்கின்றது?  அப்படியே கொஞ்சம் சிந்திக்க முற்பட்டாலும் ஷைத்தான் இவ்விரு வழிமுறைகளையும் பயன்படுத்தி அவனை வழிகேட்டிலேயே நிலைக்கச் செய்து விடுகிறான்.நாம் அவனுக்கு எடுத்துச் சொல்லும் போது மறந்து கிடக்கும் அவனை எழுப்புகிறோம். நமது நினைவூட்டலும், அவனது மனசாட்சியும் ஒரு கட்டத்தில் ஒன்று சேர்ந்து இஸ்லாமைத் தழுவி விடுகிறான்.  இது கலிமா தய்யிபாவை சொல்லும் போது தான் ஏற்படும்.  மற்ற மற்ற சிறப்பம்சங்களை காட்டிலும் இஸ்லாமின் இந்த அடிப்படையை மையப்படுத்தி இஸ்லாமை நாம் அறிமுகப்படுத்துவோம் இன்ஷா அல்லாஹ்!!

 

இஸ்லாமியப் பரவலுக்கான காரணங்கள்

மௌலானா சையத் அபுல்அஃலா மௌதூதி (ரஹ்)

வரலாற்று சம்பவங்களை முன்வைத்துப் பார்க்கும் போது மூன்று விஷயங்கள் இஸ்லாமியப் பரவலுக்கு முக்கியமான காரணங்களாக அமைந்துள்ளதைத் தெரிந்து கொள்ளலாம்.

1.  எளிமையான கோட்பாடுகள்; ஈர்க்கவல்ல இபாதத்துகள்

2.  முஸ்லிம்களுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட வியப்படைய வைக்கும் மாற்றங்கள்

3.  முஸ்லிம்களிடம் காணப்பட்ட அழைப்பு ஆர்வம்.

முதலாவது விஷயம் அறிவைத் தூண்டுகின்றது.  இரண்டாவது விஷயம் உணர்வுகளைத் தட்டி எழுப்புகின்றது.  மூன்றாவது, அன்பு கனிந்த வழிகாட்டியைப் போல, வழி தவறிச் சென்றவர்களுக்கு நேர்வழி காட்டுகின்றது.

சந்தையில் ஒரு பொருளை விற்க வேண்டுமென்றால் அந்தப் பொருள் பயனுள்ள பொருளாக, பல சிறப்பம்சங்களை கொண்டதாக இருந்தால் மட்டும் போதாது.  அதை விற்பனை செய்யக் கூடிய நபர்களும் தேவை.  அந்தப் பொருளின் பயன்களை மக்களிடம் தெளிவாக விளக்கி அவர்கள் கூற வேண்டும்.  அதே போல அந்தப் பொருளை ஏற்கனவே வாங்கி பயன்படுத்தியவர்களின் பரிந்துரையும் தேவை.

இந்தப் பொருள் சிறப்பானது தான் என்று அவர்கள் சாட்சி அளிக்க வேண்டும்.  அதே போலத்தான் இந்த உலகில் இஸ்லாம் பரவ வேண்டும் என்றால் மேற்கண்ட மூன்று அம்சங்களும், சரிசமமான அளவில் பங்கு வகிக்க வேண்டும்.  இந்த மூன்றில் ஏதேனும் ஒன்று குறைந்து போய்விட்டாலும் கூட இந்த உலகில் இஸ்லாமியப் பரவல் தடைபட்டு விடும்.  இஸ்லாத்தின் பரவும் வேகம் குன்றி விடும்.  இந்த மூன்று அம்சங்களும் எப்படி செயல்படுகின்றன?  இந்த மூன்றும் ஒருங்கிணைந்து செயல்படுவதால் எத்தகைய விளைவுகள் ஏற்படுகின்றன? என்பனவற்றை நாம் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்!

இயற்கையான, வெகு எளிமையான இஸ்லாமியக் கோட்பாடுகள்

ஒரு சாதாரண பாமர மனிதனின் அறிவும் ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு, இஸ்லாமியக் கோட்பாடுகள் மிகவும் எளிமையானதாகவும், மனதை ஈர்க்கக் கூடியதாகவும் இருக்கின்றன.  சிக்கலான  தத்துவங்கள் அவற்றில் காணப்படுவது இல்லை.  அனுமானங்கள், யூகங்களுக்கு அங்கு வேலையில்லை.  தொலைதூரப் பார்வையினால் மட்டுமே தெரிந்து கொள்ளக் கூடிய விஷயங்கள், அங்கே காணப்படுவதில்லை.  எடுத்தவுடனேயே அறிவி ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு மிகவும் தெளிவானதாகவும், எளிமையானதாகவும் அவை இருக்கின்றன.  அவற்றை ஏற்றுக் கொண்டதற்குப் பிறகு மனிதனுக்குள், ஆச்சரியப்படத்தக்க, புரட்சிகரமான மாற்றம் ஏற்பட்டு விடுகின்றது.  எந்தளவுக்கு அவை எளிமையானதாகவும் அதே சமயம் திடமானதாகவும் இருக்கின்றன என்றால், எத்தகைய அனுமானங்களுக்கும் அங்கே தேவையே இல்லை.  இறைவனைப் பற்றி மிக மிகத் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

‘உங்களுடைய இறைவன் ஒரே இறைவனே ஆவான்’  (இரண்டு கடவுளர்கள் என்ற நினைப்பிற்கே இடமில்லை)  (21-108)

‘இரண்டு கடவுளர்களை ஏற்றுக் கொள்ளாதீர்கள்’ (16-51)

அது மட்டுமல்ல எந்த ஒரு உதவியாளரும் தேவையில்லை ஏனென்றால் –

‘அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றல் உடையவனாக இருக்கின்றான்; அவன் நாடுவதையெல்லாம் செய்யக் கூடியவன்’  (14-27)

‘தான் எதையெல்லாம் நாடுகின்றானோ அதை அவன் கட்டளையிடுகிறான்.’  (5-1)

‘அவனை யாரும் பெறவுமில்லை.  யாரையும் அவன் பெறவில்லை.  அவனுக்கு இணையாக யாரொருவரும் இல்லை.’  (112-3-5)

மனிதனிடம் காணப்படுகின்றதைப் போல எந்த வித குறைபாடுகளோ மனிதனுடைய பலவீன அம்சங்களோ அவனிடம் காணப்படுவது இல்லை.

‘என்றென்றும் நிரந்தரமாக இருக்கக் கூடியவன், தூக்கமோ, சிறு துயிலோ, அவனை அணுகுவது இல்லை.’  (2-255)

வானத்திலும் சரி, வையகத்திலும் சரி அவனைத் தவிர வேறு ஒருவரிடத்தில் மனிதன் உதவி கோரும் அளவிற்கு வேறு எவனும் தகுதி படைத்தவராக இல்லை.

‘வானங்கள், பூமியின் ஆட்சி அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டும் தான் உரியது என்பது உனக்குத் தெரியவில்லையா?  அல்லாஹ்வை விட்டு விட்டால் உங்களுக்கு உதவி செய்யக் கூடியவர்கள், உங்களுக்கு ஆணை நிற்கக் கூடியவர்கள் யார் இருக்கின்றார்கள்?’

வணங்கி, வழிபடுவதற்குரிய தகுதி அவனிடம் மட்டுமே காணப்படுகின்றது.

‘வழிபடுவதை அல்லாஹ்வுக்கு மட்டும் உரித்தாக்கியவராக அவனை மட்டும் வணங்கி வருவீராக!’  (39-2)

இறைத்தூதுத்துவம் என்கின்ற கோட்பாட்டைப் பற்றியும் மிகத் தெளிவான விதிமுறைகளை  இஸ்லாம் கொண்டுள்ளது.  இறைத் தூதர் என்பவரும் ஒரு மனிதரே ஆவார்.

தனது அடியாரிடத்தில் தன்னுடைய செய்தியை சமர்ப்பிப்பதந்காக அவரை இறைவன் அனுப்பி வைத்துள்ளான்.  ஆகையால் மனிதத் தன்மைகளை விட உயர்ந்தவராகவோ, இறை தன்மையைக் கொண்டவராகவோ அவரைக் கருதக் கூடாது.

‘உங்களைப் போன்றே நானும் ஒரு மனிதனாவேன்’ இறைச் செய்தி (வஹீ) என் மீது அருளப்படுகின்றது’  (12-110)

‘ஒவ்வொரு சமூகத்திற்கும் இறைவன் வழிகாட்டியை அனுப்பி வைக்கிறான்.’  (13-7)

நாம் செய்கின்ற செயல்களைப் பற்றியும் அதன் விளைவாக ஏற்படுகின்ற பயன்களைப் பற்றியும் மிகத் தெளிவான வார்த்தைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.  அமல்களுக்கு மாற்றோ, ஈடோ கிடையவே கிடையாது.

‘ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய செயல்களுக்குத் தானே பொறுப்பாவான்.  எவன் ஒருவன் கடுகளவு நன்மையை செய்திருந்தாலும் அதைக் கண்டு கொள்வான்.  கடுகளவு தீமையான காரியத்தை செய்திருந்தாலும் அதை அவன் கண்டு கொள்வான்.’  (ஜில் ஜால் – அத்தியாயம்)

‘மஆத்’ எனப்படுகின்ற ஆஃகிரத் எனப்படுகின்ற மறுமைக் கோட்பாடும் மிக எளிமையாக விளக்கப்பட்டுள்ளது.  வேறு எந்த சமயத்திலும் காணப்படாத அளவிற்கு தெளிவானதாகவும் இருக்கின்றது.  புத்த மதத்தில் காணப்படுவதும் வெற்றிக்கான தத்துவம் என்பதைப் போல அறிவு ஏற்றுக் கொள்ளாத வகையிலோ, வேத தர்மத்தில் காணப்படுகின்ற சிக்கலான மறுபிறவிக் கொள்ளையைப் போன்றோ, ஊழ்வினைக் கோட்பாடு போன்றோ இது இல்லை.  கடவுள் மறுப்புக் கொள்கையினர் வாதிடுவது போல உலகத்தோடு எல்லாம் முடிவடைந்து விடும் என்பதைப் போன்றும்  இது இல்லை.

இஸ்லாத்தின் மறுமைக் கோட்பாடு வெகு தெளிவானது.  இந்த உலகத்தில் மனிதன் எத்தகைய செயல்களையெல்லாம் செய்கின்றானோ மரணத்திற்குப் பிறகு வருகின்ற மறுமை வாழ்க்கையில் அவற்றிற்கான விளைவுகளை அவன் அனுபவிப்பான்.  மரணத்திற்கு பிறகு வருகின்ற வாழ்க்கையே உண்மையான வாழ்க்கை ஆகும்!  மனித அறிவு நிறைவாக ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு தெளிவானதாகவும், எளிமையானதாகவும் இந்தக் கோட்பாடுகள் காணப்படுகின்றன.  சிக்கலான விஷயங்கள் எதுவும் இல்லை.  மனித அறிவு ஏற்றுக் கொள்ள தயங்குகின்ற விஷயங்கள் எதுவும் இல்லை என்ற காரணத்தினால் மட்டுமே இஸ்லாமியப் பிரச்சாரங்கள் தொடர்ந்து வெற்றியை ஈட்டி  வந்திருக்கிறார்கள்.  புகழ்பெற்ற பிரெஞ்ச் அறி’ர் பேராசியர் மான்ட்ரேட் இந்த கொள்கையைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார்.  ‘இந்த அளவிற்கு தெளிவான, தத்துவச் சிக்கல்கள் எதுவும் இல்லாத,  சாதாரண மனிதனும் ஏற்றுக் கொள்ளக் கூடிய கோட்பாடுகள் கண்டிப்பாக மனித மனங்களை கொள்ளை கொண்டு விடும்!’  உண்மையும் அது தான்!  இந்த கோட்பாட்டுக்கு அத்தகைய ஆற்றல் இருக்கின்றது.  எளிமையான இந்த கோட்பாடுகள் மனித அறிவை எந்த அளவிற்கு கொள்ளை கொண்டு விடுகின்றன என்பதை ஓர் உதாரணத்தின் மூலம் நாம் அறியலாம்.

ஆப்பிரிக்காவின் காலா இனத்தைச் சேர்ந்த ஒரு மனிதன் சிறு வயதிலேயே அடிமையாக்கப்பட்டு, ஜித்தாவில் விற்கப்பட்டிருந்தாள்.  ஓர் ஐரோப்பிய மாலுமி அவனை ஒரு முறை சந்தித்தார்.  ‘சிறு வயதிலேயே உன்னை அநியாயமாக பிடித்து அடிமையாகி விற்று விட்ட அந்த மனிதர்கள் மீது உனக்கு கோபம் வரவில்லையா?  மனிதர்களை மிருகங்களைப் போல விற்று வருகின்றார்களே!’ என்று அவனிடம் அவர் கேட்டார்.  அதற்கு அவன் பதில் கூறினான் – ‘அதை பற்றி யோசிக்கும் போது என்னுடைய உள்ளத்தில் வருத்தம் மேலோங்குகிறது.  இருந்த போதிலும், ஒரு விஷயத்தை எண்ணி நான் மனதைத் தேற்றிக் கொள்கிறேன்.  நான் அடிமையாக இங்கு விற்கப்ட்டதினால் தானே குஃபர் என்ற அறியாமையிலிருந்து என்னால் வெளி வர முடிந்தது.  இறைவன், என் மீது செய்த கிருபையாக நான் இதை நினைக்கிறேன் இந்த நாட்டிற்கு கொண்டு வரப்பட்டேன்.  இஸ்லாத்தை நான் ஏற்றுக் கொண்டிருக்கிறேன்.  ஈமானிய சந்தோஷத்தை விட வேறு எதுவும் உயர்ந்த சந்தோஷம் கிடையாது.  எந்த அளவிற்கு ஈமான் சுவையானது என்றால் மனதால் மட்டுமே அதை உணர முடியும் வார்த்தைகளால் அதை என்னால் விளக்க முடியாது!’

மனதை ஈர்க்கின்ற இஸ்லாமிய வழிபாடுகள்

இதே நிலை தான் இஸ்லாமிய வழிபாடுகளிலும் காணப்படுகின்றது.  மனதை ஈர்க்கின்ற அம்சம், கவர்ந்திழுக்கின்ற தன்மையை இஸ்லாமிய வழிபாடுகளில் நாம் பார்க்கலாம்.  இஸ்கந்திரியா நகரைச் சேர்ந்த ஸயீத் இப்து ஹஸன் என்கின்ற யூதர் எழுதுகிறார்.  ‘முஸ்லீம்களுடைய இபாதத்தைப் பார்த்ததினால் தான் நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறேன்.  ஒரு முறை (ஜாமிஆ) பெரிய பள்ளிவாசலில் முஸ்லீம்கள் தொழுவதைப் பார்க்கின்ற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.  அங்கே நிகழ்த்தப்பட்ட குத்பா உரை என்னுடைய மனதை மிகவும் ஈர்த்து விட்டது.  அதனுடைய ஒவ்வொரு வார்த்தைகளும் என்னுடைய உள்ளத்தில் ஆழமாக பதிந்து போய் விட்டன.  உரையாற்றுகின்ற ஃகதீப் இந்த இறை வசனத்தை ஓதிக் கொண்டிருந்தார்.

‘நீதியைக் கடைபிடிக்குமாறும், பெருந்தன்மையோடு நடந்து கொள்ளுமாறும், உற்றார்களுக்கு ஈயுமாறும் அல்லாஹ் ஆணையிடுகிறான்.  ஆபாசமான தடுக்கப்பட்ட காரியங்களை விட்டும் வரம்பு மீறுவதை விட்டும்.  அல்லாஹ் தடுக்கிறான்.’  (16-90)

இந்த வசனத்தை கேட்டதுமே என்னுடைய உள்ளத்தில் ஙஇவ்வளவு அற்புதமான போதனையை கொண்டுள்ள சமயம் கண்டிப்பாக உயர்வானது தான் என்கின்ற எண்ணம்ங தோன்றி விட்டது!  பிறகு அவர்கள் தொழுகும் முறையையும் நான் கவனித்துப் பார்த்தேன்.  அணி, அணியாக வரிசை வரிசையாக முஸ்லீம்கள் நின்று கொண்டிருந்தார்கள்.  வானவர்களைப் போல எனக்கு அவர்கள் காட்சி அளித்தார்கள்.  இறைவனே அவர்களுக்கு முன்னால் தரிசனம் தருவதைப் போல எனக்குத் தோன்றியது.  இஸ்ரவேலர்களோடு கடவுள் இரண்டு முறை உரையாடி இருக்கின்றார் என்றால் இந்த முஸ்லீம்களோடு அவர் தினசரி ஐந்து முறை உரையாற்றுகின்றார் என்று நான் நினைக்கலானேன்!’  எந்த அளவிற்கு மாண்பு மிக்கதொரு தொழுகை திகழ்கின்றது!  எந்த புரோகிதரும், பாதிரியாரும் வந்தாக வேண்டிய அவசியமில்லை.  ஆலயத்திற்கோ கோவிலுக்கோ, போக வேண்டிய நிபந்தனையில்லை.  எந்த ஒரு முஸ்லீமும் தொழுவைப்பவராக  இமாமாக மாறி விடலாம்.  எந்த இடத்தையும் அவன் பள்ளிவாசலாக ஆக்கிக் கொள்ளலாம்.  சமூகத்தில் யாருக்கு எந்த மதிப்பு இருக்கிறதோ அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அவன் எந்த இனத்தைச் சேர்ந்தவன் என்பதைப் பற்றியெல்லாம் அக்கறை கொள்ளாமல் தொழுகையில், கலந்து கொள்ளலாம், தொழ வைப்பதில் ஈடுபடலாம்.  எந்த அளவிற்கு தொழுகை தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக திகழ்கின்றது என்றால் இஸ்லாத்தைக் கடுமையாக எதிர்த்து வருகின்ற இஸ்லாமிய விரோதிகள், எதிர்ப்பாளர்களும் தொழுகையை பாராட்டி இருக்கின்றார்கள்.  தொழுகையை புகழ்ந்திருக்கின்றார்கள்.  கண்களால் பார்க்காத ஓர் இறைவனை வெறுமனே கருத்து உருவகத்தின் மூலம் மனதில் கொண்டு பயபக்தியோடு உள்ளச்சத்தோடு இந்த அளவிற்கு ஈடுபாட்டோடு தொழுகின்ற அம்சம், அமைதியாக, பணிவாக தங்களுடைய ஒவ்வொரு செயல்களிலும் இறையச்சத்தை வெளிப்படுத்துகின்ற இந்த வழிபாட்டைக் கண்ட பிறகு கல்லை விடக் கடுமையான உள்ளங்கள் கூட மென்மையாக இளகி விடுகின்றன.  லெப்ஃராய் பாதிரியாரைப் பற்றி நன்றாக நமக்குத் தெரியும்.  இந்து மத அறி’ர்களோடு அவர் நிகழ்த்திய வழக்காடு மன்றங்கள் மிகவும் புகழ் பெற்றவை.  ஆணமேமைே யனே ஊாரசஉா என்கின்ற தன்னுடைய நூலில் அவர் எழுதுகிறார்.  ‘முஸ்லீம்களுடைய இந்த வழிபாட்டைப் பார்த்த பிறகு எந்த மனிதனாலும் மௌனமாக இருக்க முடியாது.  அதனால் அவன் ஈர்க்கப்பட்டே தீருவான்.  முஸ்லீம்  எங்கிருந்தாலும் சரி, வழியில் ரூபாய் கொண்டிருக்கலாம், ரயில் நிலையத்தில் தங்கியிருக்கலாம்.  கடைகளில் உட்கார்ந்து கொண்டு இருக்கலாம்.  மைதானத்தில் உலாத்திக் கொண்டிருக்கலாம் பாங்கொலி கேட்ட உடனேயே எல்லா வேலைகளையும் விட்டு விட்டு ஒரே இறைவனுக்கு முன்னால் தலைகுனிந்து நின்று விடுகின்றான்.  அதிலும் குறிப்பாக டில்லியில் இருக்கின்ற ஜாமிஆ பள்ளிவாசலில் நடைபெறும் பண்டிகை நாள் தொழுகையை ஒரு மனிதன் பார்க்க வேண்டும்.  ஏறத்தாழ பதினைந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் அடக்க ஒழுக்கமாக மௌனமாக நின்று கொண்டு ஒவ்வொரு செயல்களிலும் இறையச்சத்தை பயபக்தியை வெளிப்படுத்துகின்ற அந்த கண்கொள்ளாக் காட்சியைக் காண வேண்டும்.  அதைப் பார்க்கின்ற எந்த மனிதனும் ஈர்க்கப்படாமல் இருக்க மாட்டான்.  இந்த சமயத்தை கட்டுக் கோப்பாக வைத்திருக்கும் மறைவான அந்த ஆற்றலின் மீதான மதிப்பச்சம் உள்ளத்திலும் தோன்றிவிடும்.  அது மட்டும் கிைடயாது, முஸ்லீம்கள் தினந்தோறும் கட்டுக்கோப்பாக ஐவேளைத் தொழுகைகளிலும், குறிப்பிட்ட நேரங்களில் தொழுது நிதானமாகவும், நிம்மதியாகவும் தங்கள் மீதான கடமையை நிறைவேற்றுகின்றார்களே அதுவும் குறிப்பிட்ட ஒரு செய்தியை நமக்கு சொல்லிக் கொண்டிருக்கிறது.

முஸ்லீம்களின் வாழ்க்கையில் வெளிப்படும் இஸ்லாமிய போதனைகள்

கோட்பாடுகள், வழிபாடுகள், இவற்றை அடுத்து செயலளவில் தாக்கத்தை ஏற்படுத்துகின்ற ஓர் அம்சமாக முஸ்லீம்களுடைய இஸ்லாமிய வாழ்க்கை திகழ்கின்றது.  இஸ்லாத்தைப் பரப்புவதில் அனைத்தையும் விட இது தான் வீரியமான விஷயமாகத் திகழ்கின்றது.  வெறுமனே தன்னுடைய கோட்பாடுகளை மட்டுமே இஸ்லாம் முன்வைத்திருந்தால் அந்த கோட்பாடுகளை பின்பற்றுவதால் ஏற்படுகின்ற தாக்கங்களை அது நிகழ்த்தாமல் இருந்திருந்தால் குறைவான உள்ளங்கள் தான் அதன் பால் ஈர்க்கப்பட்டிருக்கும்.  ஆனால், அதற்குப் பதிலாக கொள்கைகளை மட்டுமே பிரச்சாரம் பண்ணாமல் செயல் உலகிலும் அது சாதித்துக் காட்டியது.  காட்டுமிராண்டிகளாக திகழ்ந்த சமூகங்களை எல்லாம் நாகரீகப் பண்பாட்டில் தலைசிறந்தவர்களாக மாற்றிக் காட்டியது.  இந்தப் பண்பு தான் உள்ளங்களை எல்லாம் ஈர்க்கக் கூடியகாந்தப் பண்பாக மாறி விட்டது எனலாம்.

ஓரிறைக் கொள்கை, இறைவன் ஒருவன் தான் என்கின்ற கொள்கை, அவனுடைய ஆற்றல், உதவி தேடுவது என்றால் அவனிடம் மட்டும் தான் தேட வேண்டும் என்கிற நம்பிக்கை முஸ்லீம்களிடம் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது.  தன்னம்பிக்கை கொண்டவர்களாக சுய மரியாதை உடையவர்களாக அவர்களை மாற்றி விட்டது.  பொறுமைசாலிகளாகவும், நன்றி உடையவர்களாகவும் அவர்கள் மாறி விட்டார்கள்.  உலகத்தில் யாருக்கும் அவர்கள் பயப்படுவது கிடையாது.  யாருக்கு முன்னாலும் கைகட்டிக் கொண்டு கரங்களை ஏந்திக் கொண்டு நிற்பது கிடையாது.  எத்தகைய பெரிய, பெரிய, கவலைகள் வந்தாலும், பெரிய பெரிய துன்பங்கள் வந்தாலும் வருத்தம் மேலிட்டு மூலையில் முடங்கி விடுவதும் கிடையாது.

நன்மையோ, தீமையோ நாளை மறுமை நாளில் அதற்கான பிரதிபலனை பின்விளைவுகளை சந்தித்தே ஆக வேண்டும் என்கின்ற இஸ்லாமியக் கோட்பாடு அவர்களுடைய உள்ளங்களை பெருமளவு மாற்றி விட்டது.  அவர்கள் வீரமிக்கவர்களாக தைரியமுடையவர்களாக மாறி விட்டார்கள்.  தங்களுடைய இந்த உலக வாழ்க்கை அழியக் கூடிய நான்கு நாள் வாழ்க்கை தான் என்பதை ஆணித்தரமாக நம்புகின்றார்கள்.  இறைவனுக்காக எத்தகைய தியாகத்தை செய்யவும், எந்தவொரு பொருளை அர்ப்பணிக்கவும் தயாராகி விடுகின்றார்கள்.

அவர்களுடைய தியாகத்திற்கு இணையாக இந்த உலகத்தில் வேறு எதையுமே நீங்கள் பார்க்க முடியாது.  தக்வா இறையச்சம் இறைவனிடத்தில் உயரிடத்தை அடைதல் என்பவற்றைப் பற்றிய இஸ்லாமிய போதனையானது அவர்களிடத்தில் அசாதராரணமான பண்புகளை எல்லாம் தோன்ற வைத்து விட்டது. தக்வாவின் அடிப்படையிலான வாழ்க்கை, உலகப்பற்றற்ற தன்மை அவர்களிடம் தோன்றி விட்டது.

மது, சாராயம், திருட்டு, களவு போன்ற ஒழுக்கச் சீர்கேடுகளை விட்டு முஸ்லீம்கள் விலகி இருக்கும் அளவிற்கு மற்ற எந்த சமயத்தினர்களும் விலகி இருப்பது கிடையாது!  மனித உரிமைகள், மனித சகோதரத்துவம் இஸ்லாமியச் சகோதரத்துவம் போன்றவற்றைப் பற்றி இஸ்லாம் எந்த அளவிற்கு  அவர்களுக்கு கற்பித்திருக்கின்றது என்றால் அவர்களிடையே ஜனநாயக உயிரோட்டம் தோன்றிவிட்டது.  அங்கே இனப்பாகுபாடு, மொழி வேறுபாடு, நிற பாகுபாடு போன்றவற்றை காணவே முடியாது.  ஏழை, பணக்காரன் என்கிற பாகுபாட்டையும் காண முடியாது.  இன வெறியோ, மொழி வெறியோ, நிற வெறியோ அங்கே காணப்படாது.  ஒரு மனிதன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறான் என்றால் இஸ்லாமிய சகோதரத்துவத்தின் ஒரு தூணாக அவன் மாறிவிடுகின்றான்.  அவன் மாறிவிடுகின்றான்.  அவன் கருப்பனாக இருக்கலாம் அல்லது வெள்ளையனாக இருக்கலாம், பணக்காரனாக இருக்கலாம்.  பரம ஏழையாக இருக்கலாம், எஜமானனாக இருக்கலாம்.  அடங்கிப் போகும் வேலைக்காரனாக இருக்கலாம்.  ஆனால் எல்லா முஸ்லீம்களும் அவனை தங்களுடைய சகோதரனாகவே எண்ணி ஆக வேண்டும்.  தொழுகை போன்ற வழிபாடுகளில் எல்லா முஸ்லீம்களுக்குப் பக்கத்திலும் சரி சமமாக நிற்கக் கூடிய நிறைவேற்றக் கூடிய உரிமை அவனுக்குக் கிடைத்து விடும்.

இது மட்டும் கிடையாது.  இஸ்லாத்தின் மற்ற போதனைகளும் முஸ்லீம்களின் வாழ்க்கையில் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தவே செய்கின்றன.  இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஒரு சமூகம் என்னதான் காட்டுமிராண்டித் தனமான சமூகமாக அது இருந்தாலும் சரியே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பிறகு அவர்களிடையே கல்வி, நாகரீகம், கலாச்சரம், பண்பாடு போன்றவை தோன்றி விடுகின்றன.  ஐரோப்பாவைச் சேர்ந்த கிருஸ்துவ பிரச்சாரகர்கள் இந்த நிலைமையைப் பார்த்து வெகுவாக ஆச்சரியப்படுகின்றார்கள்.  ஆப்பிரிக்காவைச் சேர்ந்த படுபயங்கர காட்டுமிராண்டித்தனமான சமூகங்களைக் கூட இஸ்லாமியப் பிரச்சாரம் எந்த அளவிற்கு நாகரீகமுடையவர்களாக பண்பாடுடையவர்களாக மாற்றி விட்டது, என்பதை யோசித்துப் பார்த்து அவர்கள் மூக்கின் மேல் விரலை வைக்கின்றார்கள்.

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதற்குப் பிறகு அவர்கள் பள்ளிவாசலைக் கட்டுகின்றார்கள்.  மதரஸாக்களை நிறுவுகின்றார்கள்.  சமூக வாழ்க்கையில் இஸ்லாமிய ஒழுக்கத்தை கடைபிடிக்கிறார்கள்.  வியாபார வணிகங்களில் தீவிரமாக ஈடுபடுகின்றார்கள்.  பொருளாதாரத் துறைகளில் வெகுவாக முன்னேறி விடுகின்றார்கள்.  இது போன்ற விஷயங்களை செய்து வந்ததால் இஸ்லாமியப் பிரச்சாரம் ஆப்பிரிக்காவில் தோன்றிய சிறிது காலத்திற்குள்ளாகவே ஆப்பிரிக்காவின் காட்டுமிராண்டித் தனமான சமூக வாழ்க்கை அடியோடு ஒழிந்து போய் நாகரீக பண்பாடு உள்ள சமூகங்களாக அவர்கள் மாறி விட்டார்கள்.  ஒரு சமூகம் இவ்வாறு மாறிவிட்டதைப் பார்த்து அவர்களுக்கு அருகில் உள்ள மற்ற சமூக மக்களும் இதே மாறுபாடுகளை தங்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் அந்த சமயத்தை – அந்த அற்புத மாற்றங்களுக்குக் காரணமாக இருந்த சமயத்தை – உடனடியாக ஏற்றுக் கொள்கின்றார்கள்.

வரலாற்றில் புகழ்பெற்ற ஒரு சம்பவத்தை நாம் பார்க்க முடியும்.  ஹிஜ்ரி ஆறாம் நூற்றாண்டில் மேற்கு நைஜீரியாவில் காணப்பட்ட வலிமை வாய்ந்த அரசாங்கமான ஜின்னி (Jenne) மாகாணத்தில் மேற்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பர்பரியர்கள் இஸ்லாமியப் பிரச்சாரத்தை தொடங்கினார்கள்.  என்ன ஆனது ஏராளமான அறி’ர்கள் உலமாக்கள் உருவாகி விட்டார்கள்.  சிறிது காலம் கழித்து அந்த நாட்டின் மன்னர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு ஒரு கமிட்டியை ஏற்படுத்தினார்.

அந்த கமிட்டியில் 2400 உலாமாக்கள் பங்கு பெற்றார்கள் என்றால் எவ்வளவு ஆச்சரியமான விஷயம்!  இஸ்லாமிய நாகரீகம் இஸ்லாமிய பண்பாட்டின் காரணமாகத்தான் அரபுலகம், இந்தியா, எகிப்து மற்றும் ஸ்பெயின் (உந்துதலிஸ்) போன்ற நாடுகளில் வியக்கத்தக்க மாறுபாடுகள் ஏற்பட்டன!  அவை அனைத்தையும் நம்மால் இங்கே விளக்க முடியாது.  வரலாற்றின் பக்கங்களில் பொன் எழுத்துக்களில் அவை பொறிக்கப்பட்டுள்ளன.

இஸ்லாமிய சமத்துவத்தினால் ஏற்பட்ட தாக்கங்கள்

இஸ்லாமிய வாழ்க்கையில் எடுப்பாக காணப்படுகின்ற ஒரு விஷயம் இஸ்லாமிய சமத்துவம், எந்த எந்த சமூகங்கள் மரபுக்கும், சமூக நெறிமுறைகளுக்கும் ஆட்பட்டு அதிகாரத்திற்கும், வலிமைக்கும் பலியாகி மனிதத்துவம் என்கின்ற பொதுவான தளத்திலிருந்தே வெகு கீழாக ஒடுக்கப்பட்டு வெகு கீழாக இறக்கப்பட்டு அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களாக திகழ்ந்து கொண்டிருந்தார்களோ அவர்களைப் பொறுத்த வரை விண்ணிலிருந்து வந்த கருணை மழையாக இஸ்லாம் விளங்கியது.  அவர்கள் வெற்றி பெறுவதற்கான செய்தியை அது தாங்கி வந்தது.  இஸ்லாத்தை தழுவிக் கொண்டதால் ஆயிரக்கணக்கான சமூகங்கள் இழிவு என்கின்ற சேற்றிலிருந்து வெளிவந்து புகழின் உச்சியை மரியாதையின் சிகரத்தை தொட்டு விட்ட சம்பவங்களை நாம் வரலாற்றில் பார்க்கலாம்.

இஸ்லாத்தை வெகுவாகப் பரவச் செய்ததில் சமத்துவம் என்கின்ற இந்த மாபெரும் அம்சம் தான் பெரும் பங்கினை வகித்தது.  அடக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் எங்கெல்லாம் அதிகமாக வசித்து வந்தார்களோ அங்கெல்லாம் அதி வேகமாக இஸ்லாம் பரவுவதற்கு இந்த சமத்துவம் மட்டும் தான் காரணமாக அமைந்தது.

சர் வில்லியம் ஹன்டர் (Sir. william hunter) வங்காளத்தில் எப்படி இஸ்லாம் பரவியது, அங்குள்ள அடக்கப்பட்ட மக்களிடம் அது எப்படி செல்வாக்கைப் பெற்றது என்பதைப் பற்றி குறிப்பிடுகிறார்.  ஆதரவற்ற இந்த ஏழை மீனவர்கள், செம்படவர்கள் வேட்டைக்காரர்கள், பாமரத்தனமான விவசாயிகள் போன்றோர் வானிலிருந்து தங்கள் மீது பொழிந்த கருணை மழையாகவே இஸ்லாத்தைக் கண்டார்கள்.  ஆட்சியாளர்களின் மதமாக மட்டும் அது திகழவில்லை.  மாபெரும் சமத்துவத்தை அது தனக்குள் கொண்டிருந்தது.  யார் யாரெல்லாம் இத்தகைய மக்களை இழிவானவர்களாக கருதிக் கொண்டிருந்தார்களோ அவர்களை விடவும் முன்னேறிய மக்களாக இவர்களை அதுவே மாற்றியது.  இதன் காரணமாக நாட்டின் வளமான பகுதிகளில் எல்லாம் இஸ்லாம் பரவிவிட்டது.

வற்புறுத்தி இஸ்லாத்தை ஏற்கச் செய்த சம்பவங்களையும் நாம் வரலாற்றில் பார்க்கலாம்.  ஆனால், இஸ்லாம் வெகு வேகமாகப் பரவுவதற்கு வலிமை என்றுமே காரணமாக இருந்தது கிடையாது.  மாறாக, இஸ்லாத்தின் சிறப்பம்சங்களே அதற்குரிய காரணமாக இருந்தன.  வங்காளியர்களின் அறிவை  அது தூண்டியது.  மனிதத் தன்மை என்றால் என்ன? என்கிற செய்தியை அவர்களுக்கு எடுத்துரைத்தது.  இதுவரைக்கும் வங்காளர்கள் அறிந்திராத மனித சகோதரத்துவத்தை அவர்களுக்கு அறிமுகப்படுத்தியது.  அவர்களிடையே காணப்பட்ட இன வேறுபாடுகளை சாதி வேறுபாடுகளை அது முறித்துப் போட்டது.  தென்னிந்தியாவில் இஸ்லாம் வெகுவேகமாக பரவுவதற்கும் இதுவே காரணமாக திகழ்ந்தது.  கல்வியிலும் பொருளாதாரத்திலும் நிறைவு பெற்றுவிட்ட எத்தனையோ தாழ்த்தப்பட்ட மக்கள் இந்து மதத்தில் தொடர்ந்து அவமானப்படுத்தப்படுவதின் காரணமாக குடும்பம் குடும்பங்களாக கிராமம், கிராமங்களாக இஸ்லாத்தைத் தழுவுகின்ற காட்சியை நாம் பார்க்க முடிகின்றது.  பத்திரிக்கைகளிலும், செய்திகளிலும் தொடர்ந்து நாம் அதை வாசித்து வருகிறோம்.  ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சமூகங்களிலும் இஸ்லாம் வெகுவாகப் பரவுவதற்கு இந்த மனித நேயமும் மனித சமத்துவமும் இஸ்லாமிய சகோதரத்துவமும் தான் முக்கிய காரணங்களாக திகழ்ந்திருக்கின்றன.

ஆச. பிலாய்டன் (chirstianity islam and ngro race) என்கிற தன்னுடைய நூலில்  தெளிவாக இதை குறிப்பிட்டிருக்கிறார்.  ‘ஏதேனும் ஒரு நாகரீகமற்ற ஆப்பிரிக்கனைப் பற்றி அவன் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கின்றான் என்கின்ற தகவல் முஹம்மதுவைப் பின்பற்றுபவர்களுக்கு தெரிந்து விடுமேயானால் உடனே அவர்கள் அவனை அணுகுகின்றார்கள்.  அவன் என்ன தான் நாகரீகமற்றவனாக, கீழ்த்தரத்து மக்களைச் சேர்ந்தவனாக இருந்தாலும் சரி அவனைத் தம்மோடு அழைத்துச் செல்கிறார்கள்.  தங்களுக்கு இணையானவனாக அவனைக் கருதுகிறார்கள்.  தங்களுடைய சகோதரத்துவத்தில் அவனையும் இணைத்துக் கொள்கிறார்கள்.  அவனுடைய உள்ளத்தை மாற்ற வேண்டும் என்ற காரணத்திற்காக அவர்கள் இத்தகைய செயல்களைச் செய்வது கிடையாது.  மாறாக, உண்மையிலேயே அவனை தங்களுடைய ஒரு சகோதரனாக நினைத்துத் தான் இத்தகைய பணிவிடைகளை, இத்தகைய பாசத்தை பொழிகின்றார்கள்.  இஸ்லாத்தின் காரணமாக தனக்குக் கிடைத்த அசாதாரணமான இந்த அருட்கொடைகளை அவன் ஒரு போதும் மறப்பதே கிடையாது!

ஆப்பிரிக்காவில் கிருஸ்துவ மதம் பரவியதை விடவும் வேகமாக, வலிமையாக இஸ்லாம் பரவுவதற்கு மிக முக்கியமான காரணமாக இந்தத் தன்மையே அமைந்திருக்கின்றது!’