அஸ்ஸலாமு அலைக்கும்.
உலக மாந்தர் அனைவருக்குமான நன்னெறியை உரத்துச் சொல்லவேண்டும் என்பதை இலட்சியமாகக் கொண்டு கோயமுத்தூரில் ‘இஸ்லாமியக் கல்வி மய்யம்’ செயற்பட்டு வருகின்றது. இஸ்லாமை சொல்வதற்கான அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளல், புதிய வாய்ப்புகளை உருவாக்கல் என தனது பணிக்கான தளங்களை ஆயத்தப்படுத்தி வருகின்றது. விரிவான நூலகம் ஒன்றை நிறுவியுள்ளது. பொது வகுப்புகளோடு இஸ்லாமை புதிதாக ஏற்ற சகோதரர்களுக்கான ஆறுமாத கால பாடத்திட்டம் ஒன்றையும் நடத்தி வருகின்றது. இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கத்தின் முன்னால் தலைவரான
சையத் அப்துர் ரஹ்மான் உமரி அவர்கள் எமது இயக்குனர் பொறுப்பில் உள்ளார்கள். பல நூற்களை தமிழில் எழுதியுள்ளார்கள். ஏறத்தாழ சிறிதும் பெரிதுமாய் 60 நூற்கள் வெளிவந்துள்ளன. தற்போது ததப்புருல் குர்ஆன் என்னும் மீச்சிறந்த குர்ஆன் விரிவுரையை தமிழாக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.
அதனையடுத்து சகோதரர் ஜாகிர் ஹுஸைன். பன்னெடுங்காலம் ஜம்இய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் அமைப்பைச் சார்ந்த உலமாக்களிடம் பயிற்சி பெற்றவர். கோயமுத்தூர் மற்றும் நகரின் சுற்றுப் பகுதிகளிலுள்ள பல்வேறு பள்ளிவாயில்களில் தொடர்ந்து ஜும்ஆ உரைகளை நிகழ்த்தி வருகிறார்.
அஸ்ஸலாம்.
இடைநிறுத்தாமல் தொடர்ந்து எழுதவும்,
இஸ்லாம் குறிதத நல்ல எழுத்துகள் அரிதினும் அரிதாகி விட்டன,
உமர் ஷாஹ்
assalamu alaikum
i am very happy with your blogspot.
அன்பிற்குரிய இஸ்லாமிய சஹோதரரே !
தங்களுடைய வலைத்தளம் பார்த்தேன். அதில் பல பயனுள்ள தகவல்களை தந்தமைக்கும் ஏகன் அல்லாஹுவிற்கு நன்றி கூறுகிறேன்…
மேலும் தங்களுடைய பணி சிறக்க அல்லாஹுவிடம் பிராத்திக்கிறேன்…
தாங்கள் தொய்வின்றி வலை தளத்தை புதுப்பிப்பு செய்யவேண்டுகிறேன்…
மேலும் பல இஸ்லாமிய கட்டுரைகளை எழுதி வலைத்தளத்தில் வெளியிடுங்கள்…
அல்லாஹ் யாவற்றுக்கும் போதுமானவனாக இருக்கின்றான்…