இறைவனின் பக்கம் அழைப்போம்!
அன்பின்மிக்க சகோதரர்களே!
நாம் வாழும் இப்பூவுலகில் உள்ள அனைத்து படைப்பினங்களும் ஒரு நோக்கத்திற்காகவே படைக்கப்பட்டுள்ளன.
உயர்ந்த படைப்பான மனிதனோ தான் படைக் கப்பட்ட நோக்கம் என்ன? இறைவன் தன்னை எந்த குறிக்கோளுக்காக படைத்திருக்கிறான்? தன் வாழ்வின் இலட்சியம் என்ன? என்பதை சிறிதும் விளங்கிக் கொள்ளாமல் அதற்கு அணு வளவும் முயற்சி செய்யாமல் வாழ்ந்து வருகி றான்.
மனிதர்களும் ஜின்களும் தனக்கு அடி மைகளாக வாழ்வதற்காக தவிர வேறு எதற்காக வும் படைக்கவில்லை என குர்ஆன் மனிதப் படைப்பின் நோக்கம் பற்றி எடுத்துரைக்கின்றது (காண்க: 51: 56)
இந்த உயர்ந்த இலட்சியத்தை உன்னத குறிக் கோளை மறந்து வாழுகின்ற மனித சமூகத்திற்கு அக்குறிக்கோளை நினைவூட்டுவதும், ஏக இறைவனின் பக்கம் அழைத்து அவனுடைய தூய்மையான வழிகாட்டுதலின்படி வாழ்ந்து பிறரையும் வாழுமாறு ஏவுவதும் குர்ஆன் கூறும் சிறந்த சமூகமான முஸ்லிம் உம்மத்தின் மீது கடமையாகும்.
(மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர் களாக வும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும், தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் – இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். (அல்குர்ஆன் 3: 104).
ஒரு விஷயம் நல்லது என்றால் நாம் என்ன செய் வோம்? நாமும் அதனைப் பின்பற்றுவோம். நமக்கு தெரிந்த மற்றவர்களையும் பின்பற்றச் சொல்வோம். சொந்தக்காரர்கள், நண்பர்கள் அனைவரிடமும் அதைப்பற்றிச் சொல்வோம்.
இதுபோலவே, ஓரிறைவன் அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்று பின்பற்றி நடப்பதால் நமக்கு விளைகின்ற நன்மைகளைப் பற்றியும் இறைவனுக்கு அடிபணிந்து வாழுவதன் அவசி யத்தைப் பற்றியும் அதனால் மறுமையில் கிடைக்க இருக்கின்ற அளப்பற்ற இன்பங்களை பற்றியும் நம்முடைய நெருங்கிய உறவினர் களுக்கும் நண்பர்களுக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும். அவ்வாறே இஸ்லாமைப் புறக் கணித்தால் ஏற்படும் விளைவுகளைப் பற்றியும், நரக நெருப்பைப் பற்றியும் எச்சரிக்க வேண்டும்!
முதலில் நம்மை நாமே சீர்தூக்கி பார்த்து நம்முடைய செயல்களை அல்லாஹ்வும் அவன் தூதரும் இட்ட கட்டளைகளுக்கிணங்க அமைத் துக்கொள்ள வேண்டும்.
அடுத்து நம்மைச் சார்ந்திருக்கின்ற நம் குடும் பத்தார்களை தூய இஸ்லாமின் பால் அழைக்க வேண்டும். அடுத்து நம் உறவினர்களுக்கும், நம் அன்பிற்கு உகந்தவர்களுக்கும், நண்பர்களுக் கும், நம்மோடு வேலை பார்ப்பவர்களுக்கும் மற்றும் நாம் அடிக்கடி சந்திப்பவர்களுக்கும் இஸ்லாமை எடுத்துரைக்க வேண்டும்.
மக்கள் நன்மைகளை விட்டும் வெகு வேகமாக வெருண்டோடிக் கொண்டிருக்கின்றனர். தீமை களில் கிடைக்கும் அற்ப சுகம், உலகாதாயம் என்பவற்றில் கவரப்பட்டு விளக்கை நோக்கிச் செல்லும் விட்டில்களாக தீமைகளை நோக்கி மக்கள் சென்று கொண்டிருக்கின்றனர்.
வட்டி, விபச்சாரம், முறைகேடாக உறவுகள், ஊழல், லஞ்சம், களவு, மோசடி, ஹராமான வருமானம், வரதட்சணை, ஏமாற்று, நேர்மை யின்மை, பொய், வாக்குமீறல், நம்பிக்கைத் துரோகம் என எத்தனை எத்தனையோ குற்றங் களில் மனித குலம் சிக்கித் தவிக்கின்றது.
இவை அனைத்திற்கும் மூல காரணமாக ஷிர்க் கும் குஃப்ரும் திகழுகின்றன. ஓரிறைவனை ஏற்றுக் கொள்ளாமல் மறுமையை அஞ்சாமல் மனம்போன போக்கில் வாழுவதுதான் இவை அனைத்திற்கும் அடிப்படைக் காரணமாக விளங்குகின்றது.
இறைத்தூதர் ஸுலைமான் அலைஹிஸ் ஸலாம் அவைளியல் இருந்த ஒரு பறவை சபா நாட்டிற்குப் போய் வருகின்றது அந்நாட்டு மக்கள் சூரியனை வணங்கி வழிபட்டு வருகிறார்கள். அதை வருத்தத்தோபடு இறைவனின் தூதரிடம் வந்து சொல்கின்றது. அதன்பிறகு, அந்நாட்டு அரசிக்கு ஸுலைமான் அலைஹிஸ் ஸலாம் கடிதம் எழுதுகிறார்கள். இறைவேதம்கர்ஆன் இந்நிகழ்வை எடுத்துச் சொல்கின்றது.
ஒரு நாட்டு மக்கள் சூரியனை வணங்குவதை கண்டு ஒரு பறவை கவலை கொண்டுள்ளது. நமது சகோர சகோதரிகள் பலர் ஓரிறைவனை வணங்காமல் சிலைகளையும் மரங்களையும் மனிதர்களையும் வண்ங்குகிறார்கள். கப்ரு வழி பாட்டிலும் ஷிர்க்கான சடங்குகளிலும் மூழ்கியுள்ளனர். இறைவனுக்கு மட்டுமே உரித்தான உரிமைகளை இறைவனல்லாத பிறவற்றுக்கு தந்து வருகிறார்கள். இதனை கண்டு நமக்கு கொஞ்சங்கூட கவலை வரவில்லையென்றால் இந்தப் பறவையை விட கீழானவர்களாக அல்லவா மாறிவிடுவோம்?
ஒருவன் தனது அரசியல் தலைவன் அவமதிக் கப்படுவதை தாங்கிக் கொள்வதில்லை. இவன் சீறுகிறான், தாக்குகிறான் சாதாரண தலைவனையே இப்படி வெறிகொண்டு மதிக்கும் போது ஷிர்க் செய்வதன் மூலம் அல்லாஹ்விற்கு அநீதி இழைக் கப்படுகிறது அல்லாஹ்வின் கட்டளைகள் பகிரகங்மாக மீறப் படுகின்றன, அப்போது அவன் சீறாமல் சிணுங்காமல் சின்ன தொரு எதிர்ப்பையும் காட்டாது குறைந்த பட்சம், முகச் சுழிப் பையாவது காட்டாது கல்லுப்போல் நிற்கிறதெனில் இவனது இறைவிசுவாசத்திற்கு அது ஒரு களங்கமாகிறது.
இறைவனை மறந்து வாழ்வோர் யாராக இருந்தாலும் அவர்களை இறைவனை நோக்கியும் இஸ்லாமைநோக்கியும் கூப்பிட வேண்டும். முஸ்லிம்களையும் அழைக்க வேண்டும். முஸ்லிமல்லாதோரையும் அழைக்க வேண்டும்.
முஸ்லிம்களை மட்டும்தான் அழைப்போம் என்பதோ முஸ்லிம் அல்லாதோரை மட்டும்தான் கூப்பிடுவோம் என்பதோ தவறாகும். இறைவனை நோக்கி அழைக்க வேண்டும், இறைவனை விட்டு, இறைப்பாதையை விட்டு வழிதவறிச் செல்வோர் யாராக இருப்பினும் அழைத்தாக வேண்டும்.
செவி இழந்தவனுக்கு கவி பாடலாமா என்பது போல்தான், ஷிர்க் செய்பவர்களுக்கு மத்தியில் ஷிர்க்கை பற்றி பேசாமல், தொழுகை பற்றி பேசுவதும்.
ஷிர்க்கில் மூழ்கிக் கிடக்கும் ஒரு சமூக மக்களிடம் போய் மதுவருந்தாதே எனச் சொல்வதால் எப்பயனும் இல்லை என உணர வேண்டும். எந்த இடத்தில் எதற்கு முதன் மையும் முக்கியத்துவமும் அளிக்க வேண்டும் என்பதை சரியாக தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.
இறைவனை நோக்கி மக்களை அழைக்கும் பணியை இஸ்லாஹ் என்றும் தஅவா என்றும் பிரித்துப் பார்க்க தேவையில்லை.
அப்படி நாம் பிரித்து பிரித்து பார்ப்பதால்தான் முஸ்லிம்களிடையே செய்யும் பணியை இஸ்லாஹ் எனவும் முஸ்லிம் அல்லாதோரிடையே செய்யும் பணியை தஅவா எனவும் வழங்குகிறோம்.
இதனால், ஒருசிலர் இஸ்லாஹ் பணிதான் சிறந்தது அதற்குத்தான் முக்கியத்துவம் அளித்தாக வேண்டும் என்கிறார்கள். இன்னும ஒருசிலர் தஅவாதான் அதிமுக்கியமானது, அதனையே செய்ய வேண்டும் என்கிறார்கள்.
இவ்விரு கருத்துகளும் சரியல்ல, என்பதை குர்ஆனை ஆழமாக வாசித்தால் உணரலாம்.
அல்லாஹ்வும் அவனுடைய நன்னெறியான இஸ்லாமும் தான் மையப்புள்ளிகள். அந்த மையப்புள்ளியை விட்டு விலகிச் செல்வோர் யாராக இருப்பினும் அவர்களை மையத்தை நோக்கி அழைக்க வேண்டும். அதுதான் இஸ்லாமியப் பணி.
பெரும்பாலான இறைத்தூதர்கள் முஸ்லிம் அல்லாத மக்களிடமே அனுப்பப் பட்டிருக்கிறாதர்கள். அதேசமயம் மூஸா அலைஹிஸ் ஸலாம் போன்றோர் முஸ்லிம் மக்களிடமும் அனுப்பப் பட்டுள்ளார்கள்.
இஸ்லாமை பிறரிடம் எடுத்துச் சொல்லும் பணியை இரண்டு விதங்களில் செய்தாக வேண்டும். ஒன்று சொல்லால். இன்னொன்று செயலால்.
அதாவது வாயால் இஸ்லாமைச் சொல்வதோடு இஸ்லாமின் படி வாழ்ந்தும் காட்ட வேண்டும். எங்களைப் பாருங்கள், ஓரிறைவனை ஏற்றுக் கொண்டதால் எங்களுடைய வாழ்க்கை எப்படி மாறிவிட்டது எனப் பாருங்கள் என செயல் வடிவத்தில் நம்மை நாமே உலக மக்களுக்கு முன்னால் நிறுத்திக் காட்டவேண்டும்.
சொல்லாலும் செயலாலும் உலக மக்களுக்கு இஸ்லாமை எடுத்துச் சொல்ல வருமாறு அழைக்கிறோம்.
முஸ்லிம்களையும் முஸ்லிம் அல்லாதோரையும் ஒரேநேரத்தில் இஸ்லாமைய நோக்கியும் ஏக இறைவனை நோக்கியும் அழைக்கிறோம்.
எங்களோடு சேர்ந்து பணியாற்ற வாருங்கள். வாருங்கள், கைகோர்த்துக் கொள்வோம். மனிதராகப் பிறந்த எல்லோரையும் அல்லாஹ்வின் பக்கம் அழைப்போம்.
இஸ்லாமை ஏற்றோருக்காகவும் இஸ்லாமைப் பற்றி அறவே ஒன்றும் தெரியாத முஸ்லிம்களுக்காகவும் பாடசாலை ஒன்று தொடங்கப் பட்டுள்ளது. ஆறுமாத கால பயிற்சி பாடத்திட்டம் ஒன்று வகுக்கப் பட்டுள்ளது.
இஸ்லாமை ஏற்றோருக்கான இஸ்லாமிய தொடக்க பாடசாலை கோயமுத்தூரில் இதுவரை இல்லாதிருந்தது. தற்போது அந்நிலை இறையருளால் நீங்கவிட்டது.
நிகழும் ஹிஜ்ரி 1432 ஆமாண்டு ரபீஉல் அவ்வல் மாதத்தில் இருந்து இப்பாடசாலை இயங்கத் தொடங்கி உள்ளது. இன்ஷா அல்லாஹ் நாள்தோறும் மாலை மக்ரிப் தொழுகைக்குப் பிறகு, 7 மணி முதல் 9.30 மணி முடிய வகுப்புகள் நடைபெற உள்ளன. முறையான ஆறு மாத கால பயிற்சித் திட்டம் வகுக்கப் பட்டு அதன் அடிப் படையில் பாடங்கள் நடத்தப்பட உள்ளன.
ஒன்றுமறியா முஸ்லிம்களையும் இஸ்லாமை தனது வாழ்வியல் நெறியான ஏற்றுக் கொண்டுள்ள புதிய சகோ தரர்களையும் இதில் சேர்த்து பயனடையச் செய்யுமாறு கோருகிறோம்.
இப்பாடசாலையை வெற்றிபெற வைக்குமாறு வல்ல இறைவனிடம் இருகரமேந்திப் பிரார்த்திக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
Centre for Islamic Studies
இஸ்லாமிய கல்வி மய்யம்
96, வின்செண்ட் சாலை, கோட்டைமேடு,
கோயமுத்தூர். 91 97865 84494
http://www.ciscoimbatore.wordpress.com
Filed under: இஸ்லாம் |
மறுமொழியொன்றை இடுங்கள்