தாகூத்தை விட்டும் தூர விலகு!


மௌலானா சத்ருத்தீன் இஸ்லாஹி

இந்தியாவில் தோன்றிய குறிப்பிடத் தக்க இஸ்லாமிய அறிஞர்களில் முக்கிய மானவர். ஜமாஅத்தே இஸ்லாமி என்ற இஸ்லாமிய இயக்கத்தின் ஆரம்ப கால ஆணிவேர்களில் ஒருவர்! நவீனகால சிந்தனையில் தோன்றுகின்ற சிக்கலான கேள்விகளையும் லாவகமாக எதிர்கொண்டு இஸ்லாமை தத்ரூபமாகப் புரிய வைக்கும் வல்லமை படைத்தவர்! அவ்வகையில் குறிப்பிடத்தகுந்த நூற்கள் பலவற்றை இயற்றியுள்ளார்! அவற்றுள் மூன்று நூற்கள் ஏற்கனவே தமிழ் மொழி யில் வெளியாகியுள்ளன.

தீனில் (இறைநெறியை மேற்கொள்வதில்) யாதொரு கட்டாயமோ- நிர்ப்பந்தமோ இல்லை. தவறான வழியிலிருந்து நேரானவழி தெளிவாக பிரிக்கப்பட்டுவிட்டது! இனி எவர் தா:கூத் தை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் திட்டமாக, மிகப்பலமான பிடிமானத்தைப் பற்றிக் கொண்ட வராவார். அது என்றுமே அறுந்துவிடாது! (அவர் தன்னுடைய ஆதரவாளனாகத் தேர்ந்தெடுத்துக்கொண்ட) அல்லாஹ் (யாவற் றையும்) செவியுறுவோனும் நன்கறிவோனுமாய் இருக்கிறான்.

(அல்குர்ஆன் 2 ˜ 256)

 

 

இறைநம்பிக்கை கொண்டோருக்குப் பாதுகாப்பளித்து உதவுபவன் அல்லாஹ்தான். அவன், அவர்களை இருள்களில் இருந்து வெளியேற்றி ஒளியின் பக்கம் கொண்டு வருகிறான். மேலும், இறைநிராகரிப்பை மேற்கொண்டவர்களுக்கு உதவுவோர், தா:கூத்களேயாவர்! அவர்கள் இவர்களை ஒளியிலிருந்து வெளி யேற்றி இருள்களின் பக்கம் கொண்டு செல்கின்றனர். அத்தகைய வர்கள் நரகவாசிகளேயாவர்! அவர்கள் என்றென்றும் நரக நெருப்பில் வீழ்ந்து கிடப்பார்கள்.

(அல்குர்ஆன் 2 ˜ 257)

 

 

இறைநம்பிக்கையுடைய நடத்தையை மேற்கொண்டவர் கள் அல்லாஹ்வின் வழியில் போர்புரிவார்கள். நிராகரிப்புப் போக்கினை மேற்கொண்டவர்கள் தா:கூத்தின் வழியில் போர்புரி வார்கள். எனவே, ஷைத்தானின் தோழர்களுடன் போர்புரியுங்கள்! திண்ணமாக அறிந்து கொள்ளுங்கள்: ஷைத்தானுடைய சூழ்ச்சி மிகவும் பலவீனமானதாகும்.

(அல்குர்ஆன் 4 ˜ 76)

 

 

(குறிப்பு˜ தாகூத் என்ற சொல்லை Thaghoot என்று வாசிக்கவும். அரபி மொழியில் உள்ள ghain என்ற சொல்லை சரிவர உச்சரிக்கவேண்டும்.)

 

முஆத் பின் ஜபல் ரழியல்லாஹு அன்ஹு அறிவிப்ப தாவது: அண்ணலெம் பெருமானார் சல்லல்லாஹு அலைஹி வசல்லிம் கூறினார்கள்: அன்பளிப்புகளை ஏற்றுக் கொள்ளுங் கள்! அன்பளிப்புகள் அன்பளிப்புகளாக இருக்கும்வரை!

அதே அன்பளிப்புகள் தீனுக்கான லஞ்சமாக மாறி விட்டால் அவற்றை விட்டுவிட நீங்கள் முன்வர மாட்டீர்கள். ஏனென்றால் வறுமையும், இல்லாமையையும் உங்களை வாங்கத் தூண்டும்!

கேட்டுக் கொள்ளுங்கள்: கூடியவிரைவில் குர்ஆனும் ஆட்சியதிகாரமும் தனித்தனியாய்ப் பிரிந்துவிடும். (எச்சரிக்கை:) குர்ஆனை ஒருபோதும் நீங்கள் வீட்டுவிடக் கூடாது. உங்கள் விஷயத்தில் தீர்மானித்து முடி வெடுக்கக் கூடிய ஆட்சியாளர்கள் தோன்றுவார்கள். அவர்களுக்கு நீங்கள் கீழ்படிந்தால், உங்களை அவர்கள் வழிகெடுத்து விடுவார்கள். அவர்களுக்கு நீங்கள் மாறுசெய்தாலோ, மரணப்படுகுழியில் உங்களைத் தள்ளி விடுவார்கள்!

அப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும்? என்று (அறிவிப்பாளர்) கேட்டார்.

அண்ணலார் கூறினார்கள்: ஈஸாவின் தோழர்கள் என்ன செய்தார்களோ, அதையே நீங்களும் செய்யுங்கள்!

அவர்கள் ரம்பங்களால் கிழித்தெறியப் பட்டார்கள்; தூக்கு மரங்களில் தொங்கவிடப்பட்டார்கள்; அல்லாஹ்வுக்கு மாறு செய்தவாறு உயிர்வாழ்வதைவிட, அல்லாஹ்வுடைய கட்டளை களைப் பின்பற்றியதற்காக சாவை முத்தமிடுவது மேலானதாகும்!

(அதாவது, என்னதான் பெரும்பெரும் சோதனைகள் வந்த போதும் முஃமின் சத்தியப்பாதையிலேயே நிலைத்து நிற்க வேண்டும்! ஹக்கை நோக்கி மக்களை அழைப்பதில் சோர்ந்து போகவே கூடாது!)

 

 

பொருளடக்கம்

1. இயல்பிலேயே முரணானவை இஸ்லாமும் ஜாஹிலியத்தும்

2. முரண் -என்பதன் எல்லைகள்

3. ஜாஹிலிய்யத்தோடான இஸ்லாமின் நடைமுறை

4. இந்நடைமுறைக்கான செயல்வடிவ உதாரணங்கள்

5. தேர்ந்தெடுக்கக் காரணம்

6. ஓர் அடிப்படை மையப்புள்ளி

7. ஜாஹிலிய்யா அமைப்பின் கீழ் முஸ்லிம்கள்

8. ஒத்துழைப்பின் பற்பல வடிவங்கள்

1) அரசியல் அமைப்பாக்கம், சட்ட உருவாக்கத்தில் பங்கு

2) தவிர்க்க வேண்டிய துறைகள்

3) பொதுவான பணிகள்

9. இயலாநிலை சலுகைகள்

10. உண்மையிலேயே நிர்ப்பந்தமான சூழ்நிலைகள்

1) அரசாங்கத்தின் நிர்ப்பந்தம்

2) பொருளாதார நெருக்கடி

11. நிர்ப்பந்த நிலைக்கான காலநிர்ணயம்

12. கற்பித வடிவங்கள்

13. சமுதாய நலன்

14. அடிப்படைத் தவறு

15. மார்க்க அறிஞர்களுக்கான பொறுப்புகள்

16. “எளிதான ஒன்றைத் தேர்வுசெய் ” என்ற சாக்கு

17. அண்ணல் யூஸுஃப் -தவறான விளக்கம்

18. ஆதாரங்களின் வெளிச்சத்தில்

 

 

தனிநபர் வாழ்க்கையைப் பொறுத்தவரை, முஸ்லிம் அல்லாத ஒருவரிடம் வேலை செய்து கூலியையோ சம்பளத்தையோ ஒரு முஸ்லிம் பெற்றுக்கொள்வதில் தவறு எதுவும் கிடையாது!. ஆனால், அந்த வேலை ஏதேனும்- ஹராமான விஷயம் சம்பந்தப் பட்டதாக இருக்கக் கூடாது.

இந்த அனுமதியைப் பயன்படுத்திக் கொண்டு உலமாக்களில் ஒரு பிரிவினர் – குஃப்ரான அரசாங்கத்தின் கீழ் பணியாற்றுவது கூடும் என்று சொல்வார்களே யானால், அது சரி அல்ல!

முஸ்லிம் அல்லாத தனிநபர் ஒருவரின் வியாபாரத்திற்கும், முஸ்லிம் அல்லாத அமைப்பொன்றின் கூட்டுப் பொருளியல்வியாபாரத்திற்கும் –இடையிலான அடிப்படை வேறுபாட்டையே இவர்கள் மறந்து விடுகிறனர்.

முஸ்லிம்அல்லாதஅமைப்பொன்றுஎதற்காகநிறுவப்படுகின்றது? அதனுடைய வியாபாரங்களில்எல்லாநிலைகளிலும், எல்லாவகை- கோணங்களிலும் மறைந்துள்ள உண்மை என்ன?

இஸ்லாமிற்குப் பதிலாக இஸ்லாம் அல்லாத கொள்கை!

இதாஅத்-இறைவனுக்குக் கீழ்படிவதற்குப் பதிலாக, மஃசியத் -இறைவனுக்கு மாறுசெய்வது!

இறைவனுடைய கிலாஃபத்துக்குப் பதிலாக இறைவனுக்கு எதிரான சதி!

இவை மனிதவாழ்வில் இடம்பெற வேண்டும் என்பதே அதன் நோக்கம்! இதுவோ ஹராம்!!

ஆக, இத்தகையதோர்அமைப்பைஇயக்கும் (அல்லது இத்தகைய அமைப்பின்கீழ்இயங்கும்)பல்வேறுதுறைகளில்இதுசரியானதுஎன்றோ, இந்தத்துறையில்வேலைபார்க்கலாம், இந்தத்துறையில் பணியாற்றக் கூடாதுஎன்றோ, எந்த ஒன்றையும் தரம் பிரிக்கவே இயலாது! ஏனென்றால், இவ்வனைத்து துறைகளும் ஒன்றுசேர்ந்துதான்ஒருமிகப்பெரிய மஃசியத் -தையே(இறைகட்டளைகளுக்குமாறுசெய்வதையே)தூக்கிநிறுத்துகின்றன!

ஓர்உதாரணத்தின்மூலம்இதனை நன்குஉணர்ந்து கொள்ளலாம். மக்களிடையேகுஃப்ரைப்பரப்பவேண்டும். முஸ்லிம்களை இஸ்லாமை விட்டும்வெளியேற்றவேண்டும்- என்பதையே நோக்கமாகக் கொண்டு ஓர் அமைப்புசெயல்படுகின்றது என்றுவைத்துக்கொள்வோம். இந்த நிறுவனத்தில்வேலைபார்க்கமுடியுமா? நான்செய்யும்வேலைக்கு, நான் படும் கஷ்டத்திற்கு ஊதியம் பெறுகிறேன் என்று கூறமுடியுமா? நீங்கள் பார்க்கும் வேலைஎத்தகையதாக இருந்தாலும் அது அந்நிறுவனத்தை வலிமைப்படுத்துவதாக, அதன் பணிகளில் உதவி செய்வதாகவே அமையும்! எந்தவொரு முஸ்லிமுக்கும் இது ஆகுமானதே அல்ல!!

தர்ஜுமானுல் குர்ஆன் மாதஇதழ் முஹர்ரம் 1398 ஹி செப்டம்பர் 1945

 

இயல்பிலேயே முரணானவை

இஸ்லாமும் ஜாஹிலிய்யாவும்

 

ஒவ்வொருபொருளும்தனக்குஒருஎதிர்ப்பொருளை, எதிரியைக் கொண்டுள்ளது. ஒருபொருள்இருக்கின்றதுஎன்றால், அதனுடைய எதிர்ப்பொருள்அங்கு இல்லை என்று அர்த்தம். இருள்இருக்கும் இடத்தில் வெளிச்சம் இருக்கின்றது என்றால், அந்த இடத்தில் இருள் அறவே இல்லை என்றுதான் பொருள்.

இஸ்லாம் என்பதொரு நேரிய உண்மை. அதுவும் தனக்கொரு எதிர்ப்பொருளைக் கொண்டுள்ளது. அந்த எதிர்ப்பொருளை, ஜாஹி லிய்யத் – தா:கூத், பாதில் என்றெல்லாம் இது அழைக்கின்றது. ஒவ்வொரு பொருளும் தன்னுடைய எதிர்ப்பொருளை எதிரியாகவே பாவித்து வெறுக்கின்றது எனும்போது இஸ்லாமும் தன்னுடைய எதிர்ப்பொருளை சகித்துக் கொள்ளவே செய்யாது என்றுதான் அறிவு தீர்மானிக்கின்றது.

உலகில் எந்தவொரு பொருளும் தன்னுடைய எதிர்ப்பொரு ளோடு ஒத்துப்போகாது. அரவணைத்தவாறு ஒன்றாக இருக்காது. இணைந்து இருக்காது எனும்போது, இந்தப் பொதுவிதி இஸ்லாமின் விஷயத்தில் மட்டும் எப்படி பொய்த்துப்போகும்? இஸ்லாம் இருக்கும் இடத்தில் கண்டிப்பாக ஜாஹிலிய்யத் இருக்காது. ஏதேனும் ஒரு மூலை யில் ஜாஹிலிய்யத் இருந்தால் அங்கு இஸ்லாம் இருக்காது.

ி கட்டாயம்ீ என்ற பேச்சை விட்டுவிடுங்கள், ிநிர்ப்பந்தம்ீ என்றபேச்சும்இப்போதுவேண்டாம். ிகடமைகளைச்ீ செய்யவேண்டி யுள்ளதே, என்பதனையும் இப்போதைக்கு தள்ளிவைத்து விடுவோம். கொள்கைக் கோணத்தை மட்டும் இப்போது பார்ப்போம். இஸ்லாம் அல்லாத (ஃகைருல்இஸ்லாம்) கொள்கைகள் இல்லாத இடத்தில் தான்குஃப்ருஇல்லாதஇடத்தில்தான், ஷிர்க் இல்லாத இடத்தில்தான், இஸ்லாம் இருக்கும்! இரண்டும் ஒருசேரக் காணப்படுவது என்பது அடிப்படையிலேயே தவறான, சாத்தியமே இல்லாத ஒன்றாகும். முரண்என்பதுஇவ்விரண்டுக்குமிடையில்இயற்கையாகவே காணப் பட்டேதீரும்! போராட்டம் என்பது அதன் விளைவாக எழுந்தே தீரும்!

 

முரண் -என்பதன் எல்லைகள்

 

இந்த முரண்பாட்டுக்குஎல்லைகள்ஏதேனும்உள்ளனவா?இந்த மோதலுக்குஏதேனும்வரம்புகள்உள்ளனவா?ஏதேனும்ஒருகுறிப்பிட்ட எல்லைக்குள்ளாகமட்டும்இவைஒன்றோடுஒன்றுமோதிக்கொள்கின்றன; ஒன்றையொன்று அடித்துக் கொள்கின்றன; தன் எதிரியைவெட்டவும் வீழ்த்தவும்முனைந்துஇயங்குகின்றன!அதற்குஅப்பாற்பட்டவெளியுலகிலோ ஒன்று, இன்னொன்றைப் பற்றி இருக்கின்றதா, இல்லையா என்றே சிந்திக்காமல்தொடர்பற்று செயல்படுகின்றன என்ற நிலை உள்ளதா? நம்முடைய வாழ்க்கையில்ஒருபகுதியில்மட்டும்இவ்விரண்டு எதிர் எதிர்ப்பொருள்களும், இவ்விரண்டும்கடும் பகைவர்களும் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்கின்றன. வாழ்க்கையின் மற்ற பகுதிகளிலோ இத்தகைய ஒரு முரண்-மோதல் இருப்பதாகவே தெரிவதில்லை என்ற நிலை நிலவுகின்றதா?மேலே முன்னேறும்முன்இக்கேள்விக்கான தெளிவான விடையைத் தெரிந்துகொள்ள வேண்டும். ஏனென் றால், இவ்விடையில் தான் விளைவுகளின் தன்மையே அடங்கியுள்ளது.

இக்கேள்விக்கான விடை ிஆம்ீ என்று இருந்தால் உண்டாகும் விளைவின்தன்மைதனியொருவகையாகும்.அதாவதுஇஸ்லாமுக்கும், ஜாஹிலிய்யாவிற்கும்இடையேஇணைந்துசெல்வதற்கான சாத்தியக் கூறுகள்ஏராளமாய்உள்ளன. வாழ்க்கையின் ஒன்றிரண்டு தளங்களில் இவைவேறுபட்டு நின்றால்தான் என்ன? வாழ்க்கையின் இன்னும் எத்தனைஎத்தனையோ துறைகளில் இவை இரண்டுக்குமிடையே மோதலோ, முரண்பாடோ, இணக்கமற்ற நிலைமையோ அறவே இல்லையே என்பதை நாம் ஆதாரம் எதுவும் கேட்காமல் அப்படியே ஒத்துக்கொள்ள வேண்டியிருக்கும்.

ஆனால், விடை ிஇல்லைீ என்றிருந்தால் ஏற்படும் விளைவின் தன்மை அடியோடு மாறிப்போயிருக்கும். இரண்டுக்கும் இடையிலானமோதல்குறிப்பிட்டதொருஎல்லைக்குள் முடங்கி விடுவதுஅல்ல.மாறாக, எல்லைகளேயற்றவிரிந்துபரவியபொதுத்தன்மை கொண்டது ஆகும்.

இன்னுமொருகேள்விக்கானவிடையைத்தெரிந்து கொள்வதன் மூலமும்மேற்கண்டகேள்விக்குஎன்ன விடையளிப்பது? ஆம் என்றா? இல்லைஎன்றா?என்பதைவிளங்கிக்கொள்ளலாம். அக்கேள்வி என்ன வெனில்இஸ்லாம்என்றால்தான்என்ன?அதுஎந்தஅளவுக்குதாக்கத்தை ஏற்படுத்துகிறது?வாழ்க்கையின்எத்தனைபகுதிகளோடுஅதுதொடர்பு கொண்டுள்ளது?எத்தனை பகுதிகளைப்பற்றி பேசுகின்றது?

நம்முடைய வாழ்க்கையின் ஒரு சில பகுதிகளைப் பற்றித்தான் இஸ்லாம்பேசுகின்றதுஎன்றால், புலன்களுக்குஅப்பாற்பட்டவிஷயங்களைப் பற்றிய சில கோட்பாடுகள், ஒரு சில சமயச் சடங்குகளோடு அது நின்று விடுகின்றது என்றால், மேற்கண்ட பிரச்சனைக்கு ிஆம்ீ என்ற பதிலை நாம் தீர்மானித்து விடலாம்.

இஸ்லாமுக்கும் ஜாஹிலிய்யாவிற்கும்இடையேபரஸ்பரம் ஒத்துழைப்புஇல்லாதஆட்சேபணையற்றஅமைதிநிலைநிலவுவதற்கான பெருமளவு வாய்ப்பு உள்ளது என்பதையும் நாம்மறுபேச்சின்றி ஒப்புக் கொண்டாகவேண்டும்.ஆனால், நம்முடையவாழ்க்கைக்கான முழுமை -யானவழிகாட்டியாக, கண்காணிப்பாளராகஇஸ்லாம்இருக்கின்றது. நிறைவானவாழ்வியல்கொள்கையொன்றை வகுத்தளித்து, அதை மட்டுமே பின்பற்றுமாறு நம்மை அது அழைக்கின்றது என்பது தான் உண்மையான நிலவரம் என்றால், ிஇல்லைீ என்பதுதான் நம்மு டைய தீர்மானமாகவும் இருந்தாக வேண்டும்!

இஸ்லாமிற்கும் ஜாஹிலிய்யாவிற்கும் இடையிலான போராட்டம் முடிவுக்கு வரக்கூடியதும் அல்ல, குறிப்பிட்டவொரு வரையறைக்குள் முடங்குவதும்அல்ல, என்பதையும்நாம் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.

இஸ்லாம் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகின்றது? என்ற கேள்வி இப்போதுஎஞ்சியுள்ளது. இஸ்லாமின்மூலதாரங்களான குர்ஆன்(வான்மறைகுர்ஆன்)ஸுன்னாவை(மாநபிமணி மொழிகளை) அணுகுபவர் ஒன்றை தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். ஏதோ கொள்கை கோட்பாடு, வணக்கங்களைப் பற்றி மட்டுமே இஸ்லாம் பேசுவதில்லை. முழுமனித வாழ்க்கையையும் இன்னும் சொல்லப் போனால் முழு அகிலத்தையும் அது சூழ்ந்து உள்ளது என்பதை அவர் கட்டாயம் ஏற்றுக் கொள்ளவே செய்வார். அது ஒரு நிறைவான நெறி, முழுமையான வாழ்வியல் கொள்கை ஆகும். மனித வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளையும் மனிதனுடைய கொள்கை, கோட்பாடுகள், மனிதன்பின்பற்றுகின்றசடங்குசம்பிரதாயங்கள், வணக்கவழிபாடுகள், மனிதனுடையசமூகபண்பாட்டுநடைமுறைகள், என்றிவ்வாறாக அனைத்து தனிநபர், சமூகக்கூட்டு வாழ்வின் பிரச்சனைகளையும் அது சூழ்ந்து உள்ளடக்கி உள்ளது!

தனக்கென்று ஒரு சமூக அமைப்பையும், ஓர் அரசியல் அமைப்பை யும் அது பெற்றுள்ளது. அதனுடைய நியதிகள், எல்லைக்கோடுகளுக்கு ஏற்ப மனிதனின் வாழ்வு அமைய வேண்டும். அது கற்றுக் கொடுக்கும் வழிமுறைகளின்படிமக்களின்இறைவனைவணங்குவதோடு, அவ்வழி முறைகளின்படியேதங்கள்முழுவாழ்க்கையையும் அமைத்துக் கொள்ள வேண்டும்என்பதற்காகத்தான்இஸ்லாம்இம்மண்ணுலகிற்கேவந்துள்ளது.

வீட்டுப்பிரச்சனைகள் அது காட்டித் தந்த விதிமுறைகளின்படி கையாளப்படவேண்டும்; கொடுக்கல்-வாங்கல், வியாபார வணிகம் அது வகுத்துத் தந்த முறைகளின்படி நடத்தப்படவேண்டும்; கிராமப் பஞ்சாயத்துகள், நாட்டுஅரசியல்அதனுடையசட்டசாசனத்தின்படியே இயங்கவேண்டும்;அதனுடையவழிகாட்டுதலின்படியேஆட்சிசெலுத்தப் படவேண்டும்;அதனுடையவேதநூலில்தெளிவாக்கப்பட்டுள்ள சட்டங்களின்அடிப்படையிலேயேசிக்கல்களும்பிரச்சனைகளும்தீர்க்கப் படவேண்டும்;அதுஎங்கேஉறவைஅறுத்துக்கொள்ளச்சொல்லுகின்றதோ அங்கே அறுத்தெறியவேண்டும்.எங்கேஉறவையும்தொடர்பையும் புதுப்பிக்க, இணைக்கஆணையிடுகின்றதோஅங்கேஇணைத்துக் கொள்ள வேண்டும்.

இஸ்லாம்தான் உண்மை, என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களோ, இல்லையோ-அதுவேறு விஷயம். ஆனால், இஸ்லாம் தன்னைக்குறித்து இவ்வாறெல்லாம் கூறவே செய்கின்றது என்பதெல்லாமே உண்மையே தான். வேறுயாருக்கும் அணுவளவும் ஆணையிடவோ அதிகாரஞ் செலுத்தவோ அனுமதிக்காது. மனிதவாழ்வினை தானே இயக்க வேண்டும் என்று அது விரும்புகின்றது. முழுமையாக சூழ்ந்துநிற்கும் அதனுடைய இப்பண்பினைப் பற்றி ஜனநாயகத்தின் மீது பற்றும் பிடிப்பும்கொண்டுள்ளயாரேனும்ஒருவர்ஆட்சேபணைதெரிவிக்கலாம். ஆனால், இதுதான்இஸ்லாம்என்பதை அவர் ஒருபோதும் மறுத்துக்கூட முடியாது.

இஸ்லாம் மட்டுமேஉண்மைஎன்றுநாம்எந்தளவு ஆணித்தரமாக நம்புகிறோமோ, அதேபோன்றுஅதுநிறைவுத்தன்மைகொண்டது என்றுவாதிடவும்செய்கிறோம். ஒவ்வொருமுஸ்லிமும் நம்மோடு இவ்வாதத்தில்பங்குபெற்றுநாம்சொல்வதைஏற்றுக்கொள்ளவே செய்வார்என்றும்நினைக்கிறோம்.ஆகையால், இக்கோட்பாட்டிற்கான -இக்கொள்கைக்கான ஆதாரம் எதையும் முன்வைக்காமல் நாம் பேச்சைத் தொடருகிறோம். ஏனென்றால், எங்களைப் பொறுத்தவரை எல்லா முஸ்லிம்களிடத்திலும் இது ஓர் ஏற்றுக்கொள்ளப்பட்ட பேருண்மை ஆகும். ஆதாரங்காட்டி இதனை மெய்ப்பிப்பது என்பது விளக்கு வெளிச்சத்தில் சூரியனைச் சுட்டிக்காட்டுவது போன்றதாகும். இதற்குமாற்றமானகருத்தையும்சிலர்கொண்டுள்ளார்களே என்றால் -மன்னிக்கவும்-அவர்களைப்பற்றி நாம் இங்கு கவலைப்படவில்லை; அவர்களைக் கண்டு கொள்ளவும் விரும்பவில்லை! மாறாக, இந்த விஷயத்தில் குறைந்த பட்சம் நம்முடைய கருத்தை ஏற்றுக் கொள்பவர்களையே நாம் இங்கு முன்னோக்குகிறோம்.

நம்முடைய முழுவாழ்வையும் இஸ்லாம் சூழ்ந்துள்ளது என்பது தெரிந்து போயிற்று! அப்படியென்றால், இஸ்லாமுக்கும் ஜாஹிலிய்யா விற்கும் இடையிலான மோதலும், முரணும் நாற்திசைகளிலும், எல்லா கோணங்களிலும் கண்டிப்பாக காணப்பட்டே தீரும்! அந்த மோதலின், போராட்டத்தின் விளைவுகள் தென்படாத பகுதி ஒன்றுகூட காணப்படாது. ஏதேனும் ஒரு பகுதியில் இவ்விரண்டில் ஒன்று காணப்படுகின் றது என்றால், கண்டிப்பாக அங்கே மற்றொன்று அறவே காணப்படாது, வாழ்க்கையின் எல்லைப் பகுதிகளிலும் இஸ்லாம் ஆட்சி புரிய விரும்புகின்றது என்பது தெளிவானதன் பிறகு ஏதேனும் ஒருபகுதியில் அதனுடைய செல்வாக்கு காணப்படவில்லை என்றால், அப்பகுதி குஃப்ருக்கு அடிமைப்பட்டுக் கிடக்கின்றது என்றுதான்அர்த்தம்!இவ்வாறு இருப்பது இஸ்லாமைப் பொறுத்தவரை சகித்துக் கொள்ளவே முடியாத விஷயமாகும்! என்றைக்குமே பொறுத்துக் கொள்ளமுடியாத விஷயம்!!

காலத்தின் கட்டாயத்தினால் எழுச்சி இழந்து பலவீனர்களாகிப் போனஅதன்பின்பற்றாளர்கள்தங்களுடையஉணர்வையும் ஊக்கத்தையும் தொலைத்து விட்டிருந்தாலும் சரியே, நாளடைவில் காலம் செல்லசெல்லபார்க்கவே சகிக்காத இப்பரிதாப நிலையை வேறுவழியின்றி ஏற்றுக் கொள்ளும் மனோநிலைக்கு அவர்கள் வந்து விட்டிருந்தாலும் சரியே!

 

ஜாஹிலிய்யத்தோடான இஸ்லாமின் வழிமுறை

 

இதன்காரணமாகத்தான் ஜாஹிலிய்யாவை முழுமையாககை கழுவிவிட்டுமுற்றிலும்விலகியபின்னர்தான்இஸ்லாமியகட்டுமானத் -திற்கானமுதல்செங்கல்லேவைக்கப்படுகின்றது.தவ்ஹீத்தான்இஸ்லாமின் அடிப்படை!ஆதாரம்!!தவ்ஹீத்எனும்இந்தஓரிறைக்கொள்கைஎவ்வாறு வெளிப்படுத்தப்படுகின்றது?லா இலாஹ என்று மொழிவதன் மூலம்!

நன்றாகத் கவனியுங்கள்: ிஇறைவன் ஒருவன்தான்ீ (அல்லாஹு அஹத்) என்றுசொல்லப்படவில்லை, மாறாக, ்வழிபடத் தகுதிவாய்ந்த கடவுளென்றுயாருமேகிடையாது, அல்லாஹ்வைத் தவிர! என்றேதான் கூறப்பட்டுள்ளது.இஸ்லாமியவிதையைஊன்றுவதற்குமுன் ஜாஹிலிய் -யத்தைமுழுமையாகப்பிடுங்கிஎறிந்துவிடவேகுர்ஆன்விரும்புகின்றது. அல்லாஹ்வே, வணங்கவும்வழிபடவும் தகுதியானவன்என்பதை நிலை நாட்டும்முன்அல்லாஹ்அல்லாதவற்றைஅடியோடுநிராகரித்து விடவேசெய்கின்றகீழ்வரும்இறைவசனம்இப்பொருளையேதருகின்றது.

ியார் தா:கூத்தை நிராகரித்து விட்டு அல்லாஹ்வை நம்பி ஈமான் கொள்கிறாரோ ………. (அல்குர்ஆன் 2 ˜ 256)

தவ்ஹீத் என்றால் என்ன? என்பதைப்பற்றிய தெளிவான இக்குர் ஆன் விளக்கங்களிலிருந்து இஸ்லாமிலும் ஈமானிலும் தா:கூத்தை முழு மையாக நிராகரிப்பது என்பது முக்கியத்துவம் பெறுகின்றது என்பதை நாம் புரிந்து கொள்கிறோம்.

ஒன்றை எதிர்த்து நிற்பதுதான் இன்னொன்றின் அடிப்படையாக அமையும்என்னும்போதுஇஸ்லாமியக்கட்டிடத்தைஎழுப்பநினைத்தால் ஜாஹிலிய்யாவையும் தா:கூத்தையும் அடியோடு நிராகரிப்பதைத்தான் முதல் செங்கல்லாக வைக்க வேண்டும்! என்பதை நாம் தைரியமாகச் சொல்லலாம்.ஏனென்றால், குஃப்ருபித் தா:கூத் (தா:கூத்தை நிராகரியுங் கள்)என்றுசொல்லியபிறகுதான் வான்மறை குர்ஆன் ஈமான் பில்லாஹ் (அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்) என்று சொல்கின்றது.

நாம் ஏற்கனவே விளக்கிய அதே அடிப்படை, பொது விதியைத் தான் -ஒரு பொருள் இருக்க வேண்டுமானால் அதனுடைய எதிர்ப் பொருள் இருக்கக்கூடாது- என்பதைத்தான் வான்மறை குர்ஆனும் சொல்கின்றது. எனவே, (அல்லாஹ் மீது நம்பிக்கை) ஈமான் பில்லாஹ் ஏற்பட வேண்டுமென் றால் (தா:கூத் மீதான நம்பிக்கை) ஈமான் பித் :தாகூத்என்ற அசுத்தத்திலிருந்து சிந்தனை முழுமையாகத் தூய்மைபெற வேண்டும்!

இஸ்லாமிற்கும் ஜாஹிலிய்யாவிற்கும் இடையிலான இயற்கை யான பொதுத்தன்மையே இது! மேலதிக விளக்கங்களை, சார்பு அம்சங் களை நீங்களே யூகித்துக் கொள்ளலாம்.

ீஇரண்டு பொருள்களுக்கு இடையே அடிப்படையிலேயே முரண்பாடும் இயற்கையான மோதலும் நிலவுகின்றது என்றால், அவற் றின் சார்பு அம்சங்கள், உதிரிப்பிரிவுகளிலும் இணக்கம் என்பது கண்டிப்பாக காணப்படாதுி! என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. அடிப்படையிலேயேநிலவும்வேறுபாடுஎந்தளவுக்கு ஆழமாகவும் அழுத்தமாகவும்காணப்படுகின்றதோஅந்தஅளவுக்குசார்புஅம்சங்களிலும் ஒருங்கிணைப்பு, இணக்கம் ஏற்படமால் போவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் நிலவும்!

இஸ்லாமிற்கும் ஜாஹிலிய்யாவிற்கும் இடையில் இயற்கை யாகவே நிலவும் கடுமையான முரண்பாட்டை நன்கு உணர்ந்து கொண்ட பிறகு ஜாஹிலிய்யாவின் பலப்பல வடிவங்களில் ஏதேனும் ஒரு வடிவத்தை இஸ்லாம் விட்டுவைக்கும் என்பதையோ, ஏதேனும் ஓர் அம்சத்திற்கு அங்கீகாரம் அளித்து உயிரோடு உலவுவதைக் ஏற்றுக்கொள்ளும் என்பதையோ எப்படி நம்மால் ஒப்புக்கொள்ள முடியும்? எனவேதான், தா:கூத்தின், ஜாஹிலிய்யாவின் பக்கத்தில் கூடப்போக வேண்டாம் என்று மட்டும் கூறியதோடு நின்றுவிடாமல் அதற்கு எவ்வகையான சிறு ஒத்துழைப்பையும் கூட தந்துவிடாதீர்கள். அப்படிச்செய்தால் அது உங்களுடைய ஈமானில் வெட்கக்கேடான அழுக்குக் கறையாக படிந்து போய் விடும் என்றும் இது எச்சரிக்கின்றது!

ிகுற்றத்திற்கோ, வரம்பு மீறலுக்கோ ஒரு போதும் துணை சென்று விடாதீர்கள்! (அல்குர்ஆன் 5 ˜ 2)

தீமை- அநீதி- வரம்புமீறல் செயல்கள்; ஜாஹிலிய்யாச் செயல்கள் இவையிரண்டும் ஒரே உண்மையின் இருவேறு வடிவங்கள்!

இமாம் புஃகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி குறிப்பிட்டுள்ளது போல (அல்மஆசி மின் அம்ரில் ஜாஹிலிய்யா) ்இறைவனுக்கு மாறு செய்வது (மஃசியத்) என்பது ஜாஹிலிய்யாவின் ஓர் அம்சம்! ஆகும். இதை மனதில் கொண்டு ீஜாஹிலிய்யாவின் செயல்களில் எந்த ஒன்றுக்கும் துணையாக நிற்காதீர்கள்ீ! என்று இந்த வசனத்துக்கு விளக்கம் அளித்தோமென்றால் அதில் தப்பே கிடையாது.

 

இந்நடைமுறைக்கான செயல் வடிவ உதாரணங்கள்

 

தீயசெயல்களில்வரம்புமீறியசெயல்களில்அல்லது ஜாஹிலிய்யா செயல்களில்ஒத்துழைப்புதராதீர்கள்என்றால்என்னபொருள்? அதனுடைய செயல்முறை விளக்கம் தான் என்ன? உதாரணங்களின் மூலமாகவும்அண்ணல்நபிசல்லல்லாஹுஅலைஹிவசல்லிம்அவர்களின் அருள்மொழிகளின் மூலமாகவும் இதை விளங்கிக் கொள்ளலாம்:

வட்டிவாங்கித்தின்பதுஒருமிகப்பெரியதீயகாரியம்!ஜாஹிலிய்யா அமைப்பில் என்றும் உள்ள ஓர் அம்சம்!! இதைப்பற்றி இஸ்லாமிய ஷரீஅத் என்ன கூறுகின்றது என்பதைக் காண்போம்:

ீவட்டி வாங்கித் தின்பவனையும், வட்டி கொடுப்பவனையும், வட்டிக்கணக்கை எழுதுபவனையும், வட்டி விஷயத்தில் சாட்சிகளாக நிற்பவர்களையும் அல்லாஹ்வின் தூதர் சல்லல்லாஹு அலைஹி வசல்லிம் சபித்துள்ளார்கள். அவர்கள் அனைவரும் ஒன்றே (பாவப் பங் கீட்டில் சமமானவர்களே) என்றும் கூறியுள்ளார்கள்ி

இன்னுமொருஹதீஸில்மதுஅருந்துபவனைப்பற்றிஅண்ணல் நபிகளார்சல்லல்லாஹுஅலைஹிவசல்லிம்கூறியுள்ளதாவது:ீமது வையும், மதுஅருந்துபவனையும், மதுஅருந்தவைப்பவனையும், அதனை வாங்குபவனையும், அதைசாறுபிழிபவனையும், சாறுபிழியவைப்பவனையும், அதைத்தூக்கிக்கொண்டுவருபவனையும், யாருக்காகத்தூக்கிக் கொண்டு வரப்படுகின்றதோ அவனையும்அல்லாஹ் சபிக்கிறான்!

குற்றம் ஒரு பக்கம் இருக்கட்டும்! குற்றம் புரிய துணைபுரிவது கூடஎவ்வளவுஅபாயகரமான காரியம் என்பதையே இவ்வார்த்தைகள் விளக்குகின்றன. அதுவும் எத்தகைய உதவி தெரியுமா? யாரேனும் ஒரு குடிகாரனுக்கு குடிபானத்திற்கான டம்ளரை தந்துவிடுவது; அல்லது கடைக்குப்போய் வாங்கிக்கொண்டுவந்து தந்துவிடுவது; அல்லது சாறு பிழிந்து கொண்டுவருவது; சப்ளை செய்துவது; அல்லது யாருக்கேனும் வட்டிக்கணக்கை எழுதிக் கொடுப்பது; அல்லது கையெழுத்துப் போடு வது; அல்லது வெறுமனே இடதுகைப்பெருவிரல்ரேகையை மட்டும் பதிப்பது…….

மதுவையும், வட்டியையும் எதிர்ப்பதற்காக நிகழ்த்திய உணர்ச்சி கரமான தீவிர சொற்பொழிவின் போது கடகடவென்று இத்தகைய வார்த்தைகளையெல்லாம் அண்ணலார், இறைத்தூதர் அண்ணலார்சல்லல்லாஹுஅலைஹிவசல்லிம் சொல்லிவிட்டார்களா, என்ன? மஆதுல்லாஹ் (அல்லாஹ் காப்பாற்றுவனாக) என்ன கொடுமை?! இத்தகைய ஓர்எண்ணம் எந்தஒருமுஸ்லிமுடைய உள்ளத்திலும் தோன்றி விடக் கூடாது.

மேற்கண்ட வசனத்தில் பொதுவாகக் குறிப்பிடப்பட்டுள்ள மார்க்கத்தின்பேருண்மைகளையே அண்ணலார் இவ்வார்த்தைகளைப் பயன்படுத்திவிளக்கமாகஉணர்த்தியுள்ளார்கள்.இவ்விரண்டுஹதீஸ்களும் வலாதஆவனூஅலல்இஸ்மிவல்உத்வான்என்றஇறைவசனத்தின் கருத்தையே விளக்குகின்றன.

மற்றமற்ற தீய காரியங்களையும் (மஃசிய்யத்) இவற்றோடு நாம் ஒப்பிட்டுப்பார்த்துக்கொள்ளவேண்டும்.மற்றதீமைகளைப்பற்றியெல்லாம் இந்தளவுக்குவிவரித்துகூறப்படவில்லையே, இவ்விரண்டுவிஷயங்களைப் பற்றித்தானேகண்டனம்வந்துள்ளதுஎன்றெல்லாம்நாம்நினைக்கக் கூடாது.

நன்மையையும் தீமையையும் தரம்பிரித்து தெளிவாக அடையாளங் காணவல்ல வழிகாட்டுதல் இறைமறை சட்டங்களிலும், இறைத்தூதர் வழிமுறைகளிலும் ஒருவேளை இல்லையென்றிருந்தால் கூட நாம் இவ்வாறு சந்தேகப்படலாம். ஆனால், அல்லாஹ்வைப் பற்றி யும் அவனுடைய தூதரைப் பற்றியும் இத்தகைய ஒரு சந்தேகம் எந்த முஸ்லிமுடைய உள்ளத்திலாவது ஏற்படுமா, என்ன? ஆகையால், இவ்விரண்டு செயல்கள் மட்டுமே கண்டிக்கப் பட்டு உள்ளன என்று கருதுவதோ, இவ்விரண்டில் மட்டுமே கண்டனத்திற்கான காரணங்கள் காணப்படுகின்றன என்று நினைப்பதோ முட்டாள்தனமாகும். உண்மை என்னவென்றால், வலாதஆவனூ அலல் இஸ்மி வல் உத்வான் என்கிற இறைவசனத்தின் கீழ்தான் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

வட்டி சம்பந்தப்பட்ட கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கணக்கு எழுதுவது, சாட்சி அளிப்பது போன்ற தீமை ஏதுமற்ற வெளிப் படையான சாதாரணமான காரியங்கள் கூட சபிக்கப்பட்டு கண்டிக்கப்பட்டதற்கு என்னதான் காரணம்?

அவை தம்மளவில் இறைமாறுபாடாக – மஃசியத்தாக – இல்லாத போதிலும், மஃசியத் நிகழ்வுகளுக்கு துணை புரியக்கூடிய வையாக உள்ளன. உண்மையான காரணம் இதுதான், என்பது வெளிப்படையாகத் தெரிந்துபோன பின்னால், எங்கெல்லாம் இந்தக் காரணம் காணப்படுமோ அங்கெல்லாம் வட்டியிலும் மதுவிலும் அமுலாக்கப்பட்ட இந்தச் சட்டமும் கண்டிப்பாக அமுலாகும். இது ஒன்றும் மறைவான விஷயம் கிடையாது. வெளிப்படையான தெளிவான விஷயமே!

 

இருப்பினும், அனைத்து குற்றங்களும் ஒரே தரமானவை அல்ல! ஏன், ஒரே தீமைக்கு செய்யப்படும் பல்வேறுவகை ஒத்துழைப்புகளும் பல்வேறு தரத்தில் அமைந்திருக்கும். அவற்றில் காணப்படும் தீமைத் தன்மையும் ஒரே தரமுடையது அல்ல!

 

மதுவைக் குடிப்பவன் சபிக்கப்படும் அளவிற்கு குடிக்க உதவி செய்பவன் சபிக்கப்படமாட்டான். வட்டி வாங்கித் தின்பவன் அளவுக்குசாட்சிஅளிப்பவன்இறைவனின்கோபத்திற்குஆளாகமாட்டான். அதே போன்று, மது அருந்துவதைவிட, வட்டியை விட குறைவான நிலையில்உள்ளசிறுகுற்றங்கதண்டஅவற்றுக்குஆகமாட்டா.குற்றங்களில் நேரடியாகஈடுபவர்கள்சபிக்கப்படும்அளவிற்கு, அச்சிறு குற்றங்களில் புரியப்படும்ஒத்துழைப்பு சபிக்கப் -பட்டதாக ஆகாது.

ஒன்று மட்டும் தெளிவாக விளங்கிவிடுகின்றது. ஒரு குற்றத்திற்கு செய்யப்படும் ஒத்துழைப்பு சிறிய அளவில் இருந்தாலும் சரி, பெரிய அளவில் இருந்தாலும் சரி அதுவும் ஒரு பாவமே ஆகும்! ஒரு ஜாஹிலிய்யத் தான காரியமே ஆகும்!! ஒரு குற்றம் ஆகும்! அதுவும் இஸ்லாமிற்கு எதிரான குற்றம் ஆகும்!!

 

தேர்ந்தெடுக்கக் காரணம்

இன்னும் ஒரு கேள்வியும் பாக்கியுள்ளது. தஆவனு அலல் இஸ்ம் (பாவகாரியத்திற்கு உதவிகரமாய் இருப்பது) என்பதை விளக்கிக்கூற அண்ணலெம் பெருமானார் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஏன் இவ்விரண்டு விஷயங்களையே தேர்ந்தெடுக்க வேண்டும்? என்ன காரணம்?

இவ்விரண்டுபெருந்தீமைகளில்தான்அரபுமக்கள் மூழ்கிப்போய் இருந்தார்கள். தலைமுறை தலைமுறையாக இவ்விரண்டும் அவர்களை பிடித்தாட்டிக்கொண்டிருந்தன.அரபுசமூகத்தின், அரபு பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவே இவை மாறிப்போய் விட்டிருந்தன. இவையிரண்டும் பாவம் (ஃபிஸ்கு), இறைமாறு (மஃசியத்)என்றஉணர்வேஅவர்கள்மனங்களைவிட்டு நீங்கிவிட்டிருந்தது. வட்டியைப்பற்றி அவர்கள் என்ன நினைத்துக் கொண்டிருந்தார்கள் என்பதை இன்றும் வான் மறை குர்ஆன் நமக்கு கூறிக் கொண்டுள்ளது.

“வியாபாரம் என்பது வட்டியைப் போன்றதே! (அல்குர்ஆன் 2 ˜ 275)

அடுத்து, மதுவைப் பற்றி கேட்கவே வேண்டாம். பாவங்களின் பிறப்பிடமானஇதைஅவர்கள்சிறந்தசெயலாகவும்சீரொழுக்கமாகவும் கருதி வந்தனர். வட்டியாவது பரவாயில்லை ஆகுமான செயல் என்று தான் கருதப்பட்டுவந்தது; தவிர்க்கயியலாதபொருளாதார, சமூகத் தேவைகளை நிறைவேற்றவே வட்டியின் பயன்பாடு ஏற்கப்பட்டு வந்தது. ஆனால், மதுவோ சமய ஆச்சாரங்களை விடவும் புனிதமாக கருதப்பட்டு வந்தது. அரபுக்களின் ஒழுக்கவியலில் ிஆகுமான செயல்ீ என்கிற நிலையையெல்லாம் தாண்டி ிசிறப்பான பழக்கம்ீ என்கிற நிலையை, இன்னும் சொல்லப்போனால் அதைவிடவும் சிறப்பான உயர்விடத்தை மது பெற்றிருந்தது.

அதாவது, அவர்களைப் பொறுத்தவரைக்கும் சிறப்பான ஒழுக்கப் பண்புகளின் பிறப்பிடமே அதுதான்! ஏழைகளுக்கு இரங்கும் ஈகைக் குணம் போன்ற வற்றாநதிகள் எல்லாம் அதிலிருந்துதான் ஊற்றெடுத்தன; உடலில் வீரத்தையும், உயிர்த்தியாகத்திற்கு துணியும் உள்ளத்தையும்மதுவேவளர்த்தெடுத்தது;வீரச்சிறப்பை வளர்ப்பதோடு, ஒழுக்க மாண்புக்கும் மூலகாரணமாக உள்ள ஒன்றை யாரேனும்வெறுத்துஒதுக்குவார்களா, என்ன?ஆகையால், ஆரம்பக் காலத்தில்அதனுடையதீமைகளைமெதுவாககுறியீடுகளின் மூலம் வான்மறை குர்ஆன் சுட்டிக் காட்டியபோது -ஜாஹிலிய்யாவின் பக்தர்களுக்கு அல்ல- இஸ்லாமைப் பின்பற்றியவர்களுக்கே இது அதிசயமான, ஆச்சரியமான விஷயமாகத் தோன்றியது! தாங்கிக் கொள்ள முடியாமல் அவர்கள்அண்ணலாரிடம் வந்து வாய்விட்டுக் கேட்டே விட்டார்கள்.

“சாராயத்தைப்பற்றி என்னதான் சொல்கின்றது ஷரீஅத்?

(அல்குர்ஆன் 2 ˜ 219)

கேள்விக்கான காரணம் வேறொன்றுமில்லை. எத்தனை எத்தனை உயர்பண்புகளுக்கெல்லாம் அடிப்படைக் காரணமாக மது திகழ்கின்றது! அசாதாரணமான பயன்கள் எல்லாம் அதனால்தானே விளைகின்றன! அப்படி இருக்கும்போது நெற்றியில் சுருக்கம்விழ, வஹீ (இறைச்செய்தி) அதைப்பற்றி பேச என்னதான் காரணம்?

பதிலும் அருளப்பட்டது: “அதில் நன்மை இருப்பதென்னவோ உண்மைதான்! உலகியல், பொருளியல் பயன்கள் மட்டுமல்ல, ஒழுக்க ரீதியிலும், சமயரீதியிலும்கூடஅதிலிருந்துபல பயன்கள் விளைகின்றன. ஆயினும், நன்மைக்கானவித்துகளைவிடஅதில்பொதிந்துள்ளதீமைக்கான வித்துகளேஅதிகம்! ஆகையால், அது ஒருநல்லசெயல், நற்பழக்கம் என்றெல்லாம் எண்ணி ஏமாந்து போகாதீர்கள். இன்றில்லா விட்டால் நாளை அதனை நீங்கள் விட்டொழித்தே தீர வேண்டும்!

நன்மையின் முகமுடி அணிந்து பதுங்கியவாறு காட்சியளிக்கும் தீமைகள், சமூகத்தில் எந்த அளவுக்கு சிறப்பானவையாக கருதப்படும்? அவற்றின் மீது மக்கள் எந்த அளவுக்கு வெறித்தனமான பிடிப்புடன் இருப் பார்கள்; மக்களின் நாடி நரம்புகளில் எல்லாம் எந்தளவுக்கு அது ஊடுருவிப் போயிருக்கும் என்பதெல்லாம் உங்களுக்கு நன்றாகவே தெரியும்!

இத்தகைய தீமையை ஒழிப்பது என்பது உண்மையில் மலையைப் புரட்டும் காரியமாகும். விவேகத்துடனும், சாமர்த்தியமாகவும் செயல்பட வேண்டியிருக்கும். ஆகையால், வட்டியையும், மதுவையும் ஒழித்துக் கட்டுவதில் இதே விவேக வழிமுறையையே சட்ட நெறியாளனாகிய அல்லாஹ் கையாண்டான். படிப்படியாக இதை அவன் ஹராமாக்கியதற்கு இதுவே காரணம்!

இவற்றினால் விளையும் தீமைகளைப் பற்றிய கட்டளையை இறக்கியருளி மக்கள் யாவரும் இதன் பக்கத்தில் கூடப்போகாதவாறு எல்லாக் கதவுகளையும், வாசல்களையும் ஒரேயடியாக அறைந்து சாத்தி விட்டான். இதில் ஒரு படித்தரமாகத்தான் ஹிக்மத்-விவேகத்தின் ஆசிரியரும், மீப்பெரும் மனப்பயிற்சியாளருமான (முரப்பியுந் நுஃபுஸ்) அண்ணலெம் பெருமானார் சல்லல்லாஹு அலைஹி வசல்லிம் கடுமையான கண்டனங்களைக் கொண்ட மேற்கண்ட எச்சரிக்கைகளை விடுத்துச் சென்றார்கள்.

ஓர் அடிப்படை மையப்புள்ளி

 

வட்டி, மது என்ற இவ்விரண்டை மட்டும் குறிப்பிட்டு சட்ட நெறியாளர்(அலைஹிஸ் ஸலாத்து வஸ்ஸலாம்) கடும் கண்டனங்களைத் தெரிவித்திருப்பது சட்ட நெறியாக்கத்தில் முக்கியமானதொரு மையப் புள்ளியை உணர்த்துகின்றது. என்ன அந்த மையப்புள்ளி?

ஒருசில பாவங்கள் -தம்மளவில் அவை மிகச் சாதாரணமான தீயதன்மையையேகொண்டிருந்தாலும்-பற்பல வெளிக்காரணங்களினால்அவை“இரட்டிப்புத்தீமை”களாக மாறிவிடுகின்றன. இந்த வெளிக்காரணங்களை தவிர்த்துவிட்டுப் பார்த்தோமென்றால் கொலை, விபச்சாரம் போன்றவற்றை விட்டும் குறைவான தீமையையே, கெடுதியையே வட்டியும் மதுவும் தம்மளவில்கொண்டுள்ளன.ஆயினும்ஏற்கனவேசொல் லப்பட்டதுபோல, வெளிக்காரணங்களினால் எந்தளவுக்கு இவற்றின் தீமை மிகைத்து விடுகின்றது என்றால், எந்தளவுக்கு இவை படுமோச மான தீயசெயல்களாக வர்ணிக்கப்படுகின்றன என்றால், ஒரு திர்ஹம் வட்டிப் பணத்தை தின்கிறவன் முப்பத்தியாறு முறை விபச்சாரம் செய்தவனை விடவும் கொடியவனாக ஆகிவிடுகிறான். (காண்க: முஸ்னது அஹ்மது, பா:5). மதுப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டவனின் மரணம் ஒரு சிலைவணங்கியின் மரணத்தோடு ஒப்பிடப்பட்டுள்ளது. (காண்க: முஸ்னது அஹ்மது).ஏன் இப்படி? என்ன காரணம்?

இவையெல்லாம் பாவமான காரியங்கள் என்கிற சிந்தனையே மக்களைவிட்டு நீங்கிவிட்டதுதான் காரணம்! நீண்ட நெடுங்காலமாக இவற்றைப் பற்றி எவ்வாறு கருதப்பட்டு வருகின்றது என்றால், சமூக வாழ்விற்கும், பொருளாதார வாழ்விற்கும் இவை கண்டிப்பாக தேவை, இவை இல்லையென்றால் ஒன்றுமே நடக்காது. இவ்வாறாக, சமயம், நேர்மை என்கிற வரையறைக்குள் இவற்றைப் பற்றி விவாதிப்பதெல்லாம் நின்று போய் சிறப்பான பண்புகளுக்கு மூலமாகவே இவை மாறிப் போய்விட்டன.

நாம் தெரிந்து கொள்ளும் முக்கிய விதி என்னவென்றால், ஒரு குற்றம் தன்னளவில் அது என்னதான் சிறியதாக இருந்தாலும் மக்களி டையே சமூகத்தில் பரவிப்போய் விட்டது என்றால், சமூகவாழ்விற்கும், பொருளாதார வாழ்விற்கும் மிகவும் தேவையான, அத்தியாவசியமான ஒன்றாக மக்கள் அதனைக் கருதுகிறார்கள் என்றால், ஒழுக்கச் சிறப்புகளுக்கு அதுவே காரணம் என்று எண்ணுகிறார்கள் என்றால், அதன் ிஎடைீ கூடிப்போய் விடுகின்றது. தன்னுடைய சொந்த ிஎடைீயை விடவும் இப்போது அதிக ிஎடைீ உடையதாக மாறி விடுகின்றது.

நன்மைகளுக்கும் இதே நிலைதான்! சின்னஞ்சிறிய நன்மை யொன்று சில சமயங்களில், அது ஒன்றும் நன்மையான காரியமே அல்ல என்று புறக்கணிக்கப்பட்டு விடும்போது, ஈமானின் சுழற்சி மையமாகவே மாறிவிடுகின்றது.

மறைந்துபோய்விட்ட அண்ணலாரின் சுன்னத் ஒன்றை ஹயாத் தாக்கினால் அவனுக்கு நூறு ஷஹீத்களின் நன்மை கிடைக்கும் என்று நாம்கேள்விப்பட்டிருக்கிறோம், இல்லையா? அதற்குக் காரணமும் இது தான்! சிலசமயங்களில் பார்த்தால் காலுறைகளின் மேலாக மஸஹ் செய்வதுகூட ஈமானின் வரையறைக்குள் இடம் பெற்றுவிடுகின்றது. அதற்குக் காரணமும் இதுதான்! இல்லாவிட்டால், இறைவனின் பாதை யில் உயிரை எடுத்து உள்ளங்கையில் வைத்துத் தருவது எங்கே? சின்னஞ் சிறுசுன்னத் ஒன்றை ஹயாத்தாக்குவது எங்கே? மஸஹ் செய்வது எங்கே? இறைநம்பிக்கை ஈமான் எங்கே?

 

ஜாஹிலிய்யா அமைப்பின் கீழ் முஸ்லிம்கள்

 

தாங்கள் செய்த காரியங்களின் பின்விளைவாக ஒரு முஸ்லிம் சமூகம்ஏதேனும்ஜாஹிலிய்யாஅமைப்பின்கீழ்ஆளப்படும் நிலைமைக்கு ஆளாகிவிட்டால் என்ன செய்வது? அந்த அமைப்பை எக்கண் கொண்டு பார்ப்பது? அந்த ஜாஹிலிய்யா அமைப்போடு எம்முறையில்நடந்துகொள்வது?ஒத்துழைப்பதா? ஒத்துழையாமையை கடைபிடிப்பதா?- இவற்றைப் பற்றியெல்லாம் நாம் இனி பார்த்தாக வேண்டும்.்

அதிமுக்கியமான இவ்விஷயத்தைப் பற்றி நாம் ஆராய்வதற்கு முன்னால், ஜாஹிலிய்யா அமைப்பு அல்லது இஸ்லாம் அல்லாத அமைப்பு என்றால் என்ன? என்பது பற்றிய சிலவிஷயங்களை மனதில் புதுப்பித்துக் கொள்வது நலம்! நாம் ஏதேனும் ஒருமுடிவுக்கு வருமுன் சில உண்மைகளை அவற்றின் முழு வடிவில் கவனத்தில் கொள்வதும் அவசியம்!

இஸ்லாம் அல்லாத அமைப்பு ஒன்றைச்சார்ந்து இயங்கும் அரசாங்கமும், அரசியலும்இஸ்லாம்நிர்ணயித்தவழிமுறைகளின் படி இயங்காது;ஆட்சியதிகாரம்அல்லாஹுத்தஆலாவினால் அங்கீகரீக்கப் பட்டதாகஇருக்காது;செயற்படுத்தப்படும்சட்டங்கள்குர்ஆன் -ஸுன்னாவிலிருந்து பெறப்பட்டிருக்காது; நீதித்துறையும், குற்றவியல் சட்டங்களும் இஸ்லாமின் சட்டங்களாக இருக்காது; (சில சட்டங்கள் இஸ்லாமிய வடிவைப் பெற்றிருந்தாலும் அவற்றுக்கு இஸ்லாம் அடிப்படையாக இருக்காது!) சட்ட அங்கீகாரம் பெற்றவை, பெறாதவை (அதாவது ஹலால், ஹராம்) என்பதைத் தீர்மானிக்கும் விஷயத்தில் ஷரீஅத்தே முஹம்மதியாவுக்கு எந்த விதமான பங்கும் இருக்காது;பலதரப்பட்டவாழ்க்கைப்பிரச்சனைகளிலும் ஆட்சியாளர்களின் தீர்மானமே இறுதித் தீர்மானமாக அமையும்; அவை குறித்து சாதாரண ஆலோசனைகளை வழங்கக்கூட அல்லாஹ்வுக்கோ, அவனுடைய தூதருக்கோ சிறுஉரிமை கூட இருக்காது! ஏன்? முஸ்லிம்களுடைய தனிநபர் வாழ்வில் (Personal Law) அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரம்கூட அவர்களுக்குரிய ிஉரிமைீ என்கிற அடிப்படையில் வழங்கப்பட்டிருக்காது; ஜாஹிலிய்யா அமைப்பு தன்னுடைய எதிரியான இஸ்லாமிடம் காட்டுகின்ற பெருந்தன்மை, பிழைத்துப்போ என்று அதற்கு அளிக்கப்படுகின்ற உயிர்பிச்சை என்கிற அடிப்படையில் தான் அது அமைந்திருக்கும்!

இப்படிப்பட்ட மையக்கருவைக் கொண்ட ஜாஹிலிய்யா அமைப்பு என்னதான் கவர்ச்சியான வடிவில் முன்னிலைப்படுத்தப் பட்டாலும் ஒரு முஃமினாக இருந்து கொண்டே – அதன்மீது நேசம் கொள்ளும்மாயையில் ஓர் இறைநம்பிக்கையாளன் தன்னை தாழ்த்திக் கொள்ள மாட்டான்!!

ஓர் அமைப்பில் அரசியல் சாசனம், நிர்வாகத்துறை, நீதித்துறை, மற்றும் அவ்வமைப்பை இயக்கவல்ல முக்கியமான துறைகள் அனைத் தும், இறைவனை மறந்து, மறுத்து நிராகரித்துவிட்ட மனிதர்கள் தன்னிச்சையாக இயற்றிய விதிகள், நெறிமுறைகளின் மீதே நிலைகொண்டு உள்ளன, எனும்போது -இஸ்லாமைப் பின்பற்றும் ஒருவர் அவ்வமைப்பை எக்கண் கொண்டுதான் பார்க்க இயலும்?

அதற்கான பதில் கேட்பதற்குக் கஷ்டமானது தான் என்றாலும் அதை விட்டால் வேறு பதிலேயில்லை!

தஆவனு அலல் இஸ்ம் (பாவகாரியங்களுக்கு உதவுதல்) என்பதை இஸ்லாம் எவ்வாறு அணுகுகின்றது? என்பதை மேலே சில ஜாஹிலிய்யா பண்புகள் பழக்கங்களைப் பற்றிய உதாரணங்களின் மூலம் தெரிந்து கொண்டோம். அப்படி இருக்கும்போது, முழுக்க முழுக்க ஜாஹிலிய்யத்தாகவே திகழும் ஓர் அமைப்புக்கு ஒத்துழைப்பது என்ற பேச்சைக் கூட அது எங்ஙனம் சகித்துக் கொள்ளும்?

ஒரு வேளை வாழ்க்கையின் இப்பகுதிகளில் இஸ்லாமுக்கென்று எவ்வித கருத்துக்களும் கோட்பாடுகளும் இல்லை, என்றொரு நிலை இருந்தால் வெறுப்புக்கோ, சகிக்க இயலாத்தன்மைக்கோ கண்டிப்பாக வழியிருக்காது.ஆனால், இஸ்லாம்கவனம்செலுத்தாதபகுதியே வாழ்க்கையில் இல்லை எனும்போது கண்டிப்பாக வெறுப்பு ஏற்படவே செய்யும்! ஆக, ஒரு ஜாஹிலிய்யா அமைப்புக்கு அமைதியான உள்ளத்துடன் ஒரு முஃமினால் ஒத்துழைப்போ, ஒத்தாசையோ செய்யவே முடியாது. ஒரே மூச்சில் அவன் இஸ்லாமையும் பின்பற்றுகிறான்; பிரதிநிதித் துவப்படுத்துகிறான்- அதனுடைய எதிரிக்கும் பல்லக்கு தூக்குகிறான்- என்பது சாத்தியமே அல்லாத விஷயம்! அல்லது குறைந்த பட்சம் பார்க்கவே சகிக்காத விஷயம்!

முன்கர் எனப்படும் தீயகாரியங்களை விட்டு தவிர்ந்து நில்லுங்கள் என்று மட்டும் நமக்கு அறிவுறுத்தப்படவில்லை. தடுத்து நிறுத்துங்கள் என்றும் ஆணையிடப்பட்டுள்ளது! (சூரத்துத் தவ்பா˜ 71). அதை இல்லா தொழிக்க வேண்டும் என்று துடிக்கும் நிலைகொள்ளா உணர்வைத் தொலைத்து விடுவது ஈமான் மரணப்படுக்கையில் கிடப்பதற்கான அறிகுறியாகும்! (சஹீஹ் முஸ்லிம்).அவற்றின்பக்கம் அழைப்பது முனாஃபிக்கீன்களின் பண்பு ஆகும்! (அத்தவ்பா˜ 67)

முன்கர் என்றால் என்ன? அதைப்பற்றி நம்முடைய உலமாக்கள் என்ன கூறுகிறார்கள்?

்ஷரீஅத் எவற்றையெல்லாம் நிராகரிக்கின்றதோ, பகுத்தறிவு எவற்றையெல்லாம் புறந்தள்ளுகின்றதோ அவை அனைத்தும் முன்கர் ஆகும்! (முஃப்ரதாத்து ராகிப் அஸ்ஃபஹானி)

ஏதேனும் ஒரு ஜாஹிலிய்யா அமைப்பின் கீழ் இயங்கும் அரசியல், பொருளியல், நிர்வாக, நீதி-நெறிமுறைகளை, சட்டதிட்டங்களை ஷரீஅத் நிராகரிக்கின்றதா, இல்லையா?

கொலை, விபச்சாரம், திருட்டு, பொய் போன்ற வெளிப்படையான குற்றங்கள் தாம் முன்கர் என்று யாருடைய சிந்தனையாவது அடம்பிடிக்கு மென்றால் -அவரை விட்டுவிடுவோம். ஆனால், யாரேனும் ஒருவர் முன்கர் என்றால் என்ன? என்பதை உணர்ந்து ஏற்றுக்கொண்டால் இவற்றை வெறுமனே முன்கர் என்று மட்டும் சொல்லமாட்டார். தெளிவான முன்கர் என்றும் கட்டாயம் சொல்லத்தான் செய்வார். வட்டிக் கணக்கு ஒன்றில் சாட்சி அளித்துவிடக்கூடாதே என்பதற்காக அவர் நூறு நூறு முறை அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோருகிறார்என்றால், ஜாஹிலிய்யா அமைப்பின் கீழான இவை போன்ற முன்கர்களைப்பரப்புவதிலும், இவற்றை நிலைநாட்டுவதிலும்உதவி ஒத்தாசைஎதுவும் புரியாமல் இருக்கவேண்டுமேஎன்பதற்காகஆயிரம்ஆயிரம்முறை பாவன்னிப்புகோருவார்.

 

ஒத்துழைப்பின் பற்பல வடிவங்கள்

 

ஆனால், இத்தகைய அமைப்பொன்றின் பிடியில் வசமாக சிக்கிக் கொண்டுவிட்ட ஒருவர் அதைவிட்டு முழுமையாக விலகி இருக்கவும் முடியாது! அத்தகைய நிலைமையில் அவர் மீது என்னென்ன கடமைகள் உள்ளன? அவர் என்னதான் செய்யவேண்டும்? -நிதானமாக யோசித்து சரியான பதில் கண்டே ஆகவேண்டிய மிக முக்கியமான கேள்வியாகும் இது!

இவ்வமைப்போடு நாம் இரண்டு வகைகளில் தொடர்பு கொள் கிறோம். (1) தேர்வுக்கு இடமளிக்கும் தொடர்பு (2) தேர்வுக்கு இடமளிக்காத தொடர்பு.

ஒருசில சமூக, நிர்வாக விஷயங்களில்- உங்களுக்குப் பிடிக்கின் றதோ, இல்லையோ – அமைப்புடன் தொடர்பு வைத்தே ஆகவேண்டும்!தேர்வுக்குஇடமளிக்காதஇத்தகைய தொடர்புகளைப்பற்றி நீங்கள் விசாரிக்கப்படமாட்டீர்கள்!

தேர்வுக்கு இடமளிக்கும் தொடர்புதான் பிரச்சனையே! அதைப் பற்றி ஷரீஆ என்ன சொல்கின்றது? என்பதைத்தான் நாம் தெரிந்து கொண்டாகவேண்டும்! முதலில்தேர்வுக்கு இடமளிக்கும் தொடர்பின் பலதரப்பட்ட வடிவங்களைப் பற்றியும் தெரிந்து கொண்டாக வேண்டும். முழுக்க முழுக்க ஜாஹிலிய்யத்தான (இஸ்லாம் அல்லாத ஓர்) அமைப்போடு நாம் கொள்ளும் தேர்வுக்கு இடமளிக்கும் தொடர்பின்வகைகள், வடிவங்கள்என்னென்ன?அவற்றில் ஒவ்வொன்றின் நிலையும், அந்தஸ்த்தும் என்ன? -என்பதைத் தெரிந்து கொள்ளாதவரை நம்மால் சரியான முடிவை எடுக்க முடியாது!

அடிப்படை நியதிகளுடனான தொடர்பைப் பொறுத்தவரை ஒத்துழைப்பு நடவடிக்கைகளை அதாவது தேர்வுக்கு இடமளிக்கும் தொடர்பை நாம் இருபெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்!

(1) அடிப்படை அம்சங்களோடு கொள்ளும் தொடர்பு

(2) சார்பு அம்சங்களோடு கொள்ளும் தொடர்பு

அவ்வமைப்பை நிலைகொள்ளச் செய்வதிலும் நீடித்து இருக்கச் செய்வதிலும் நேரடியாகப் பங்குபெறுவதையே ஆதாரப்பிரிவு என்கி றோம். அவ்வமைப்பின் ஆதாரத்தூண்கள், மூலவேர்கள் என்றும் நீங்கள் இதனை அழைக்கலாம். இப்பிரிவின்கீழ் அரசாங்க அமைப்பின் இரண்டு அம்சங்கள் வருகின்றன. (1) சாசன ஆக்கத்திலோ அல்லது அரசு அமைப்பிலோ பங்கு பெறுவது (2) சட்ட உருவாக்கத்தில் அங்கம் வகிப்பது.

சார்புப்பிரிவின்கீழ் பொதுத்துறைகள் அனைத்தும் வருகின்றன. இவை அமைப்பைப் பின் தொடர்பவையாக, அதன் உறுப்புகளாகத் திகழ்கின்றன. அதே சமயம், ஆதாரப்பிரிவு தலைமையாக, உந்து சக்தியாக விளங்குகின்றது.

அடுத்துஇந்தசார்புப்பிரிவையும் நாம் இரண்டாகப் பிரிக்கலாம்.

(1)ஷரீஅத்துக்குநேர்முரணான, இறைவனுக்கும் இறைகட்டளைகளுக்கும் மாற்றமான (மஃசியத்) காரியங்களையே இலக்காகக்கொண்டுசெயல்படுபவை.உதாரணமாகமது தயாரிப்பிலும் விநியோகிப்பதிலும் பணியாற்றுவது; பேங்க் போன்ற வட்டி அடிப்படையிலான நிறுவனங்களில் பணியாற்றுவது; நீதித்துறை – நடுவர்பணிகள்; கித்தால்ஃபீ கய்ரி சபிலில்லாஹ் பணிகள் போன்றவை!

(2) வெளிப்படையாகப் பார்க்கப்போனால் பாவமான காரியங்களாகவோஇறைகட்டளைகளுக்குமாற்றமான காரியங்களாகவோ இல்லாதவை இரண்டாவது பிரிவைச் சார்ந்தவை! ஆட்சேபணைக்கு இடம் தாரத பணிகளாகத்தான் வெளிப்பார்வைக்கு இவை காட்சியளிக்கின்றன என் றாலும், இஸ்லாம் அல்லாத ஓர் அமைப்பின் அங்கமாக இவை திகழ்வதாலும், ஜாஹிலிய்யாவின் நீண்ட சங்கிலித் தொடரில் இவையும் இணைந்துள்ளதாலும், இவையும் தவறான காரியங்களாக மாறிவிடுகின்றன. தம்மளவில் இவை பாவச்செயல்களாக இல்லை என்றாலும் சுற்றி வளைத்து பாவத்துக்கு இவை துணைபோகின்றன. உதாரணமாக தபால் துறைப் பணிகள், போக்குவரத்துப் பணிகள், கல்வித்துறைப் பணிகள் (சில நிபந்தனைகளுக்குட்பட்ட) மருத்துவத்துறைப் பணிகள்…….. முதலியன!

தேர்வுக்கு இடமளிக்கும் தொடர்பின் இப்பிரிவுகள் அனைத்தும் தீமைக்கு ஒத்துழைப்பு என்ற வகையின்கீழ் வந்தாலும் இவை அனைத் தும் ஒரே தரமுடையன அல்ல! செய்யலாமா, கூடாதா என்ற கேள்வி யோடு இவற்றை நாம் அணுகினால் முகத்தைச் சுழித்துக் கொள்கின்ற எதிர்மறை பதிலைத்தான் நமக்குநாமே கொடுத்துக்கொள்ள வேண்டும் என்றாலும், இவற்றிற்கிடையே பாகுபாடு, தராதரம் உள்ளது என்பதை நாம் ஒத்துக் கொண்டே ஆக வேண்டும்!

 

 

மூன்றின்நெற்றிகளிலும்அழுக்குக்கறை அப்பித்தான் கிடக்கின்றது என்றாலும் மூன்று கறைகளையும் ஒரே கணக்கில் நாம் கொள்ள முடியாது. இம்மூன்று பிரிவுகளையும் பற்றி நாம் தனித்தனியாகக் காணலாம்.

 

1. அரசியல் அமைப்பாக்கம், சட்ட உருவாக்கத்தில் பங்கு

அரசியல் சாசனத்தின் மீதும் இவ்வரசியல் சாசனத்தை அடிப் படையாகக் கொண்டு உருவாகிய சட்டங்களின் மீதும்தான் ஓர் அரசியல் அமைப்பு நிலை கொள்கின்றது. ஆகையினால், அரசியல் அமைப்பாக்கத்திலும், சட்டஉருவாக்கத்திலும் பங்கு பெறுவது என்பது முக்கியத்துவத்தைப் பெறுகின்றது!

குர்ஆன்- ஸுன்னாவினால் அங்கீகரிக்கப்படாத அரசியல் சாசன மாக அது இருந்தால், அவையிரண்டுக்கும் முற்றிலும் மாறுபட்ட வகை யில் அது அமைக்கப்பட்டிருந்தால், இஸ்லாம் முன்மொழிகின்ற அடிப் படைகளை, விழுமங்களை அது ஏற்றுக்கொள்ளவே மறுத்தால் -அவ்வர சியல் சாசனத்தை விட்டும்விலகி இருப்பதுதான் ஈமான்பில்லாஹ்வின் (அல்லாஹ்வின் மீதான ஈமானின்) முதல்கட்ட வெளிப்பாடாக அமையும்!

அதன் சபைகளில் போய் அமர்வது இஸ்லாமை சிறுகச்சிறுகச் சிதைப்பதாகவே அமையும்! முழுமையான ஆட்சியதிகாரம் அல்லாஹ் ஒருவனுக்கே, என்பது தான் இஸ்லாமிய அரசியல் அமைப்புக்கு அச்சாரமாக உள்ளது!! அப்படியிருக்கும்போது, மனிதனுக்கே ஆளும் அதிகாரம்; பெரும்பான்மையினருக்கே தீர்மானிக்கும் உரிமை -என்பதையேமுதல்செங்கல்லாகவைத்துஓர்அமைப்நிறுவப்பட்டஅல்லாஹுத் தஆலாவை எதிர்த்து கலகக்குரல் எழுப்பியவாறுதான் அது துவங்கப்படுகின்றது என்றுதானே அர்த்தம்?

அதன் பின்பும் இத்தகையதோர் அமைப்பின் சாசனத்தை வடிவ மைக்கும் விஷயங்களில் ஒரு முஸ்லிம் பங்கு பெறுகிறான் என்றால், ஆட்சேபணைக்கே இடமில்லாத அல்லாஹுத் தஆலாவுடைய முழுமையான அதிகார எல்லைக்குள் அத்துமீறி மூக்கை நுழைக்கிறான்; தலையிடுகிறான் என்றுதானே பொருள்?

முல்ஹிதுகள்(கடவுள்மறுப்புக்கொள்கையாளர்கள்முன்கிர்கள் (நிராகரிப்பாளர்கள்)முஷ்ரிக்குகள்(இணைவைப்பாளர்கள்) போன்றவர்களுக்குவேண்டுமானால்இதுநல்லவிஷயமாகத் தென்படலாம்!

பாவகாரியங்களுக்கு செய்யப்படும் ஒத்தாசைகளிலேயே இதுதான் எல்லாவற்றிலும் மிகப்பெரிய ஒத்தாசை ஆகும்! இத்தகைய பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் முஸ்லிம் பின்பு என்னவெல்லாம்செய்வான்?இந்தஜாஹிலிய்யாபூதத்தை சந்தோஷப்படுத்தும்எல்லாவிஷயங்களையும்செய்வான்! வாய்வார்த்தைகளில் அவன் அதை எதிர்த்துக் கொண்டிருந்தாலும் செயல்கள் என்னவோ அதற்கு நேர்மாற்றமாகத்தான் அமையும்!

பார்க்கப்போனால், ஒருமுஸ்லிம் என்ற அடிப்படையில் இவ் வமைப்பை வேரடிமண்ணோடு பிடுங்கி எறிவதுதான் அவன்மீது கடமையாக இருக்கின்றது! தீமைகளின் ஊற்றுக்கண்களாகத் திகழும் அதன்ஆதாரசுனைகளைஎதிர்த்துதொடர்முயற்சிகளை மேற்கொள்வது அவன் மீது கட்டாயக்கடமையாக இருக்கின்றது.

ஆனால், இவ்வமைப்புவேர்பிடித்து செழிப்பாக வளரவேண்டும் என்பதற்காக தன் இதயத்தைப் பிழிந்து இரத்தப்பாசனம் செய்து வளர்ப்பவனின் உள்ளத்தில் -அது மென்மேலும் வளர வேண்டும்; இந்த தீயமரம் தன் கிளைகளை வானளவில் பரப்ப வேண்டும்; எல்லா மனிதர்களும் அதன் நிழலில் இளைப்பாற வேண்டும் என்பதற்காக உயிர் கொடுத்துப் பாடுபடுபவனின் உள்ளத்தில் அதனை விட்டும் – அதனுடைய அனைத்து வகைப் பிரிவுகளை விட்டும் விலகி இருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவது சாத்தியமா, என்ன?

வாதக்கலை வேண்டுமானால் இக்கருத்தை ஒருவேளை ஒப்புக் கொள்ளக்கூடும்! செயலுலகில் ஒரு போதும் இது சாத்தியம் இல்லை! எந்தவொரு விஷயத்தைப் பற்றியும் தம்முடைய மனோஇச்சைகள், விருப்பங்களின் அடிப்படையில் தீர்மானங்களை எடுக்கும் இத்தகையவர்களைப் பற்றித் தான் – அவர்களின் இத்தகைய செயல்களைப் பற்றித்தான் -குஃப்ரு (இறைநிராகரிப்பு) ழுள்ம்(அநீதி) ஃபிஸ்கு (பாவம்) என்று அல்லாஹுத் தஆலா குறிப்பிடுகிறான்.

்எவர்கள் அல்லாஹ் இறக்கியருளிய சட்டங்களைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் காஃபிர்கள்! (அல்மாயிதா 44)

………. அநியாயக்காரர்கள்!*அல்மாயிதா : 45

………. பாவிகள் ஆவர்!* அல்மாயிதா : 47

இறைவன் அல்லாதவர்களால் வகுக்கப்பட்ட சட்டங்களைக் கொண்டு தீர்ப்பளிப்பதே அநீதி, பாவம், என்றால், இறைவனின் சட்டங்களுக்கு மாற்றமாக சட்டங்களை இயற்றுபவர்களின் நிலை என்ன? என்பதை நீங்கள் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். இத்தகையவர்களுக்குத்தானேதா:கூத்என்றசொல் பயன்படுத்தப்படுகின்றது!

வான்மறை குர்ஆன் கூறுவதைக் கேளுங்கள்:

்தாஃகூத்களிடம் சென்று தங்கள் வழக்குகளைத் தீர்த்துக் கொள்ளவேண்டும்என்றுமுனாஃபிக்குகள் ஆசைப்படுகிறார்கள்!

(அல்குர்ஆன் 4 ˜ 60)

இங்குதா:கூத் என்று குறிப்பிட்டுள்ளது இப்லீஸை அல்ல! என்பது வெட்ட வெளிச்சமான விஷயம்! யூதத் தலைவர்களே இவர்கள். (அதிலும் குறிப்பாக கஅப் இப்னு அஷ்ரஃப் மற்றும் குறி சொல்பவனான அபு பரஃஜா அஸ்லமி என்று குர்ஆன்விரிவுரை நூலான ரூஹுல்மஆனி குறிப் பிடுகின்றது)

தா:கூத் என்றால்என்ன?என்றுஇவ்விடத்தில்நாம் அறிந்துகொண்டால் இதனை விளங்கிக் கொள்வது எளிதாக இருக்கும். த:கா என்றால் வரம்பு மீறுவது, அத்துமீறுவது (to exceed proper bounds, overstep the bounds, to overflow, leave its banks) என்று பொருள்! த:கல் மாஉ என்றால் பொங்கி வழியும் வெள்ளம் என்று பொருள்.

தம்முடைய வரம்பை மீறி நடப்பவர்கள், பொய்யான கடவுளர்கள் அனைவரும் தா:கூத் ஆவர். இந்த விதியின் அடிப்படையில் தான் சூனியக்காரர்கள், குறிசொல்பவர்கள், தீய ஜின்கள், சத்தியப்பாதையை மறிப்பவர்கள் -என்று அவர்கள் அனைவரும் தாகூத்கள் என்று அழைக்கப்பட்டனர். அவ்வாறே அல்லாஹ்வுக்குப் பணிந்து வாழ்வதற்கான எல்லைகளை விட்டு வெளியேறி, தானே சுய அதிகாரம் கொண்டவன் எனப் பறைசாற்றி, இறைவனின் படைப்பினங்களைத் தனக்கு அடி பணிந்து வாழும்படி செய்பவன்குர்ஆனின்மொழிமரபுப்படிதா:கூத்என்று வர்ணிக்கப்படுகிறான்.

மேற்கண்ட வசனம் சுட்டிக்காட்டும் யூதர்கள், இறைவனால் இறக் கியருளப்பட்டசட்டங்கள்தங்களிடத்தில்இருந்தபோதும், தாங்களாகவேதங்களுடையஇஷ்டப்படிவகுத்துக்கொண்ட சட்டங்களைக் கொண்டே மக்களுடைய வழக்குகளை இவர்கள் தீர்த்து வந்தார்கள்!

இறைச்சட்டம்அல்லாதவேறுஒருசட்டத்தின்படிதீர்ப்பளிக்கும் ஆட்சியாளனையும்அல்லாஹ்வின்உயர் அதிகாரத்திற்கு அடிபணி யாத, அவனுடையதிருவேதத்தைஇறுதிஆதாரமாய் ஏற்றுக்கொள்ளாத நீதி அமைப்பையும் இவ்வசனம் தெளிவாகக் குறிப்பிடுகின்றது.

ஷரீஅத்துக்கு எதிரான சட்டங்களையும் ஜாஹிலிய்யா சட்டங்கள் என்று இன்னுமோர் இடத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

்ஜாஹிலிய்யாவின்தீர்ப்புகளையாஇவர்கள் விரும்புகிறார்கள்?

(அல்குர்ஆன் 5 ˜ 50)

இத்தகைய ஜாஹிலிய்யா சட்டங்களை இயற்றுபவர்களின் நிலை எப்படிப்பட்டது என்பதை நீங்களே ஆராய்ந்து கொள்ளலாம்! அரசியல் சாசனத்தை வகுப்பதும், அதனை அடிப்படையாகக் கொண்டு சட்டங் களை இயற்றுவதும்தான் ஜாஹிலிய்யா அமைப்பின் ஆணிவேர்களாகத்திகழ்கின்றன.அப்படியிருக்கும்போது, இப்பணியில் பங்கு பெறுபவன் பாவப்பணிகளில் செய்யப்படும் ஒத்தாசைகளில் மிகப்பெரியபணியிலேயேஈடுபடுகிறான். ஜாஹிலிய்யாவின் மற்றமற்ற துறைகளில் ஒத்துழைப்பவர்களோடு ஒப்பிடும்போது இவனுடைய நிலை முன்வரிசையில் எல்லோரையும் முந்திக்கொண்டு நிற்கின்றது. இவ்வொப்பீட்டின்படிஅவனுடையகுற்றத்தின்அளவும் படுபயங்கரமானதாக ஆகிவிடும்!

 

அன்னை ஆயிஷாவின் மீது அவதூறு சுமத்திய சம்பவம் பற்றி தெரியும் அல்லவா? அச்சம்பவத்தில் பலரும் ஈடுபட்டு தங்களை கறைபடுத்திக்கொண்டார்கள்.இருந்தபோதிலும், அதற்கு மூலகாரணமாய் இருந்த கேடுகெட்டவனுக்குத்தான் -தலைமை தாங்கியவனுக்குத்தான்- மாபெரும் வேதனை கிடைக்கும் என்று வான்மறை குர்ஆன் அறிவித்தது.

்இதில் ஈடுபட்ட ஒவ்வொருவருக்கும் அவர்கள் சம்பாதித்த அளவு பாவத்தின் கூலி கிடைக்கும். அவர்களில் யார் தலைமை தாங்கினானோஅவனுக்குமாபெரும்வேதனை காத்திருக்கின்றது!

(அல்குர்ஆன் 24 ˜ 11)

ஆழமானநரகல்சேறுபுதைந்துகிடப்பதினால்தான், ஷரீஅத்துக்கு எதிராகச் சட்டம் இயற்றுவதை, உலமாப் பெருமக்கள் ிஆபாசமான பாவகாரியம்ீ(அல்மஃசியத்துல்ஃபாயிஷா)என்றுவர்ணித்துள்ளார்கள்.

மௌலானாஅப்துல்ஹைமர்ஹும்அவர்களிடம்்சிலர்ஆங்கிலேய

அரசாங்கத்தில் கௌரவமான பதவிகளைப் பெற்றுள்ளார்கள். (அதாவதுசட்டமியற்றும்சபைகளுக்குபிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்) இவர்கள் ஷரீஅத்துக்கு எதிராக சட்டங்களை இயற்றுகிறார்கள். இத்தகைய சட்டங்களை இஸ்லாமியர்கள் ஏற்றுக்கொள்ளலாமா? கூடாதா? இத்தகைய சட்டங்களை இயற்றுவதால் இவர்கள் காஃபிர்களாக ஆகி விடுகிறார்களா? இல்லையா? என்று கேட்கப்பட்டது.

அவர்கள் அளித்த பதில்:

்இறைவன் இறக்கியருளியதைக் கொண்டு தீர்ப்பு அளிக்காத வர்கள் காஃபிர்கள்! என்று ஹக்குத்தஆலா தன்னுடைய தூயதிருமறை யில் அருளியுள்ளான். ஷரீஅத்துக்கு எதிராக உள்ள இத்தகைய சட்டங் களைப் பின்பற்றுவது முஸ்லிம்களுக்கு ஹராம் ஆகும். அப்படி யாரேனும் ஒருவர் பின்பற்றினால் அந்தப் பாவம் அச்சட்டங்களை இயற் றியவர்களுக்கே போய்ச்சேரும்! அவர்களின் தலையிலேயே விடியும்!……. அத்தகைய சட்டங்களை இயற்றுபவர்கள் ஷரீஅச் சட்டங்களை தவறாகக் கருதுபவர்களாக இருந்தால், அவற்றின் மீது அதிருப்தி கொண்டவர்களாக இருந்தால், ஷரீஅச் சட்டங்கள் காலம் கடந்தவை -நிகழ்காலத்தோடு ஒத்துப் போகாதவை -தற்காலத் தேவைகளை நிறைவு செய்யாதவை என்று எண்ணுபவர்களாக இருந்தால்- அவர்கள் காஃபிர்கள் ஆகிவிட்டார்கள்!!…..அவர்கள் ஷரீஅத் சட்டங்களை தவறாகக் கருதாதவர்களாக இருந்தால், காஃபிர்கள்ஆகமாட்டார்கள். எனினும், மிகப்பெரிய (ஃபாஸிக்) பாவிகள் ஆவார்கள்! (ஃபதாவா -பாகம் ˜ இரண்டு -யுஸுஃபி பதிப்பகம்.பக் 48, 49)

இந்தியாவை ஆங்கிலேய தா:கூத் ஆட்சி செய்து கொண்டிருந்த போது, சட்டம் இயற்றும் இத்தகைய கவுன்ஸில்களில் பங்கு பெறுவது ஹராம் என்று ஐநூறு உலமாக்கள் ஒன்று சேர்ந்து கையெழுத்திட்டு தீர்மானம் ஒன்றை வெளியிட்டார்கள்! பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி அவர்கள் அத்தீர்மானத்தை வெளியிட்டார்கள். அதில் கூறப்பட்ட காரணங்களில் கீழ்கண்ட காரணம் மிகமுக்கிய இடத்தைப் பெற்றிருந்தது.

்சட்டம் இயற்றும் கவுன்ஸில்களில் பெரும்பாலும் ஷரீஅத்துக்கு எதிரான சட்டங்களே இயற்றப்படுகின்றன!** அவற்றின் இயக்கத்தில் பங்குபெறுவதோ, ஆதரிப்பதோ, எதிர்க்கச் சக்தியிருந்தும் மௌனமாக இருப்பதோ எந்த ஒரு முஸ்லிமுக்கும் ஆகுமானது அல்ல!

ிஉங்களில் யாரேனும் ஒருவர் தீயகாரியம் ஒன்றைக் கண்டால் அதனைத் தமது வலிமையைப் பயன்படுத்தி தடுத்து நிறுத்த வேண்டும்; அவ்வாறு முடியவில்லை என்றால், தமது நாவைக் கொண்டு தடுத்து நிறுத்த வேண்டும்; அதுவும் முடியவில்லை என்றால், தம்முடைய உள் ளத்தால் அதனை வெறுத்து ஒதுக்க வேண்டும்!ீ என்று இறைத்தூதர் சல்லல்லாஹு அலைஹி வசல்லிம் கூறியுள்ளார்கள்.

ஆனால், கவுன்ஸிலில் உறுப்பினர்களாக உள்ள முஸ்லிம்கள் என்னசெய்துகொண்டுள்ளார்கள்என்பதற்குகடந்தகால சம்பவங்களும், தற்போதுநடைமுறைப்படுத்தப்படுகின்ற சட்டங்களுமே சாட்சியாக உள்ளன!

ஃபத்வாக்களின் வரலாற்றில் ஐநூறு உலமாக்கள் ஒன்று சேர்ந்து ஒருமித்த குரலில் கையெழுத்திட்டுள்ள ஃபத்வா ஒன்றைக்கூட நம்மால் பார்க்க முடியாது! மேற்கண்ட ஃபத்வாவில் ஐநூறு உலமாக்கள் ஒன்றாக கையெழுத்து போட்டுள்ளார்கள் என்றால் எந்தளவுக்கு முக்கியமான பிரச்சனையாக அவர்கள் இதனைக் கருதியுள்ளார்கள் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

உண்மையில், இந்தப் பிரச்சனையும் அந்த அளவுக்கு அதிமுக் கியத்துவம் வாய்ந்த பிரச்சனையாகவே இருந்தது. தீனைப்பற்றி அவ்வளவாகத் தெரிந்து வைத்திராத, மேலை நாகரீக மயக்கத்துக்குப் பலியாகிப்போன முஸ்லிம்கள் தா:கூத்திய பார்லிமெண்ட்டுகளில் இடம் பெறுவதை வெறுப்புக்குரிய ஒரு விஷயமாகவே கருதவில்லை!

ஒரு சாதாரண குற்றத்தை, மக்கள் குற்றம் என்றே கருதாமல் சர்வ சாதாரணமாக -இன்னும் சொல்லப்போனால் நல்ல காரியம் என்று நினைத்துக்கொண்டு- செய்துவந்தார்கள் என்றால், சாதாரணமானஅந்தப்பாவம், பெரும்பாவமாகஇல்லை, மிகப்பெரும்பாவமாகமாறிவிடுகின்றது! என்பதை இப்போதுதான் நாம் பார்த்து வந்தோம்.

சாதாரண குற்றத்திற்கே இந்தநிலை என்றால், ஷரீஅத்துக்கு எதிராக சட்டங்களை இயற்றுவது போன்ற பயங்கர பாவத்தின் நிலையை என்னவென்று சொல்வது?

ஜாஹிலிய்யா அமைப்புக்கு உதவி ஒத்தாசை புரியும் மற்ற இரண்டுபிரிவுகளைக்காட்டிலும்இந்தப்பிரிவுஏன் படுபயங்கரமானதாக, முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது என்றால் மனிதனின் செயல்களோடு அல்ல, மாறாக, மனிதன் நம்பி ஏற்றுக்கொள்கின்ற கொள்கையோடு, கோட்பாடுகளோடு இது சம்பந்தப்பட்டுள்ளது. செயல்களில் ஏற்படுகின்ற குளறுபடிகளை விடவும்கொள்கைக்கோணல்படுமோசமானதுஎன்பதை ஒவ்வொருவரும் தெரிந்தே வைத்துள்ளார்கள்!

 

2. தவிர்க்க வேண்டிய துறைகள்

 

ஜாஹிலிய்யா அமைப்போடு ஒத்துழைப்பு என்பதன் கீழ்வரும் இரண்டாவது பிரிவு (மஃசியத்) பாவமானது; ஹராமானது என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. ஒருசெயலோ ஹராமானது! ஹராமான அந்தச் செயலை ஜாஹிலிய்யாவின் கௌரவஅலுவலர்களாக செய்தால் அதை என்னவென்று சொல்வது?

குற்றங்கள் என்ற பட்டியலில் இதுநாள் வரை இருந்து வந்தது, இப்போது ஆபாசமான குற்றங்கள் என்ற பட்டியலில் இடம் பெற்று விடும். அதாவது, பாவம் இரட்டிப்பு ஆகிவிடுகின்றது!

ஒருவன் வட்டிக்கடையில் உட்கார்ந்து வட்டிக் கணக்குவழக்கு களை எழுதுகின்ற வேலை பார்க்கிறான். ஷரீஅத்தே முஹம்மதிய்யா ிஅவன் சபிக்கப்பட்டவன்!ீ என்று தீர்மானிக்கின்றது. இப்போது அதே வேலையை ஜாஹிலிய்யா அரசொன்றின்கீழ் வங்கியில் ஊழியனாக வேலை பார்க்கிறான். வட்டி வியாபாரத்தை இயக்கும் பணியில் ஒத்துழைக்கிறான் என்றால், ஒருபக்கம் அவன் வட்டி உண்ணும், உண்ண வைக்கும் சபிக்கப்பட்ட வியாபாரத்தில் பங்கு வகித்துக் கொண்டுள்ளான். இன்னொரு பக்கமோ, ஜாஹிலிய்யா அமைப்புக்குமுட்டுக்கொடுக்கும்பணியொன்றில்தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளான் – வட்டிக் கடையில் வேலை பார்ப்பவன் பெறும் சாபமும், வங்கியில் வேலை பார்க்கும் இவன் பெறும் சாபமும் ஒரே அளவுடையதாக இருக்குமா , என்ன? இவனுக்குக் கிடைக்கும் இந்த ிமுன்னேற்றத்தைீ மறுப்பவர் யாராவது உண்டா? இந்த ஓர் உதாரணத்தோடு இதே போன்ற மற்ற துறைகளில் செய்யப்படும் வேலைகளையும் ஒப்பிட்டுப்பார்த்துக் கொள்ளுங்கள்!

மது விஷயத்தில் ஒரு சாதாரண கூலிக்காரன் கூட அல்லாஹ் ரப்புல் ஆலமீனுடையகோபப்பார்வைக்குஆளாகிறான்எனும்போது, மதுத்துறையில் வேலைபார்க்கும் ஓர் ஊழியர் இறைவனின் கோபத்திற்கு ஏன் ஆளாகமாட்டார்? அவன் ஏற்கனவே செய்யும் பாவத்தோடு , ஜாஹிலிய்யா அமைப்பு ஒன்றுக்கு வலுசேர்க்கும் பணியையும் அல்லவா சேர்த்து செய்து கொண்டுள்ளான்?

இறைவன் இறக்கியருளிய சட்டங்களை விட்டுவிட்டு மற்ற சட்டங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்குபவன் குஃப்ரோடு, அநீதி யோடு, பாவத்தோடுதன்னைஇணைத்துக் கொள்கிறான் எனும்போது, தா:கூத்திய நீதிமன்றங்களில் உட்கார்ந்து கொண்டு தீர்ப்புகளை வழங்கிக் கொண்டிருப்பவர் தனக்கு இஸ்லாமின் மீது பற்று உள்ளது என்று கூறத் தான் முடியுமா? அசத்திய அமைப்பொன்றுக்கு முக்கிய தூணாக அல்லவா அவர் இயங்கிக் கொண்டுள்ளார்?

இஸ்லாமியப் படையில் இணைந்து போரிடுகிற ஒருவன் சத்திய கலிமா மேலோங்க வேண்டும் என்பதற்காக போரிடாமல், சமுதாயப் பற்றிக்காக, இனநலன்களுக்காகப் போரிடுகிறான் என்றால் அவன் நரகத்திற்குத்தான் செல்வான்! அப்படி இருக்கும்போது சத்திய கலிமாவின் மேலாண்மைக்காகவும் இல்லாமல், இனத்துக்காகவும் இல்லாமல், ஒரு தா:கூத்திய அரசு மேலாண்மை பெறவேண்டும் என்ற நோக்கத்திற்காகப் போரிடுகின்ற ஒருவனுக்காக எந்த சொர்க்கத்தின் வாசற்கதவுகள் அகலமாகத் திறந்து வைக்கப்பட்டிருக்கும்?

ஒருசாதாரண பாமரமனிதன் கூட அசத்திய அமைப்புக்கு செய்யப்படும்இத்தகையஒத்துழைப்புகளைசரிஎன்று சொல்லமாட்டான்.இந்தவிஷயத்தில்உலமாக்களின், ஃபுகஹாக்களின் ஃபத்வாக்கள் உங்களுக்குத்தேவை என்றால் கீழ்வருவனவற்றைப் பார்வையிடுங்கள்:

(அ) அல்லாஹ்வுடைய பாதைக்காக இல்லாமல் வேறு நோக்கத் திற்காக போரிடுபவர்களைப் பற்றி ஷம்ஸுல் அயிம்மா அல்லாமா ஸர்ஃகஸி (ரஹ்) எழுதுகிறார்:

்ஒரு காஃபிர் மன்னனின் மீது இன்னொரு காஃபிர் மன்னன் போர் தொடுத்தால், அக்காஃபிர் மன்னனுக்காக ஒரு முஸ்லிம் கித்தால் செய்யக்கூடாது! ஏனென்றால் அவ்வாறு செய்வது ஷிர்க் மற்றும் குஃப்ரைப் புகழ்வதாக, அவற்றை மேன்மைப்படுத்துவதாக ஆகிவிடும். இத்தகைய ஒத்துழைப்பு ஹராம் ஆகும்!

(கிதாபுல் மப்ஸுத், ஷம்ஸூத்தீன் அஸ்ஸர்ஃகஸி, பத்தாம் பாகம், பாபு நிகாஹி அஹ்லில் ஹர்ப் வ துஃகூலுத் துஜ்ஜாரி இலைஹிம் பி அமான். பக்கம் 97, 98 எகிப்து 1324ஹி)

இந்தளவு விளக்கதோடு அவர் நின்றுவிடவில்லை. இன்னும் தெளிவாக விளக்கவும் செய்கிறார். ்முஸ்லிம் அல்லாத ஒருவரின் கீழ் இஸ்லாமிய எதிரிகளை எதிர்த்து ஒரு முஸ்லிம் போரிடுவதுகூட கூடாது! என்றுசொல்கிறார். ்ஏதேனும்ஒருமுஷ்ரிக்கிற்கு உதவும் முஸ்லிமுக்கும் எனக்கும் எந்தவொரு சம்பந்தமுமில்லை! (பதிவு ˜ நஸாயி) என்ற அண்ணலாரின் திருவாக்கை அதற்கு ஆதாரமாகக் காட்டுகிறார்.

்இறைத்தூதர், ்முஷ்ரிக்கோடு உள்ள ஒரு முஸ்லிமை விட்டும் நான் விலகியே உள்ளேன்! என்று கூறியுள்ளார்கள். அதாவது அந்த முஸ்லிம் முஷ்ரிக்குகளின் கொடியின் கீழ் போரிடும்போது!

(மேற்கூறிய அதே நூல், கிதாபுஸ்ஸியர், பக்கம் 24)

ஆ) காஃபிர்களோடு வைத்துக் கொள்ளும் நட்பு குறித்து ஷாஹ் அப்துல் அஜீஸ்?முஹத்திஸ் (ரஹ்) எழுதுவதாவது:

்பரஸ்பர உதவி ஒத்துழைப்பு என்பதற்கான சில வரையறைகள் உள்ளன. இறைவனை நிராகரிக்கும் விஷயத்திலும் இறைவனுக்கு மாற்றமான காரியங்களிலும் உதவி செய்வதுகூட குற்றம்தான்! என்று ஒத்தகருத்துஉள்ளது.தீமைகளிலும்வரம்புமீறுதலிலும் ஒருவருக்கொருவர் ஒத்துழைத்துக் கொள்ளாதீர்கள்! என்று படைத்த இறைவன் கூறியுள்ளான்.

இந்த ஒத்துழைப்பு சில சமயங்களில் காசுக்குப் பகரமாக செய்யப்படுகின்றது. வேலை, ஊழியம், பணி என்று அதை நாம் சொல்லுகிறோம். இன்னும் சில சமயங்களில் எவ்வித பகரமும் இன்றி செய்யப்படுகின்றது. உதவி, உபகாரம் என்று அதை சொல்லுகிறோம். (உதவிப்படைகளைஅனுப்புவதும்இதில்அடங்கும்). இவ்விரண்டுக்குமான ஷரீஅத் சட்டம் ஒரே விதமாகத்தான் உள்ளது. அதாவது, காஃபிர்கள் முஸ்லிம்களோடு போரிடச் செல்கிறார்கள் என்றால், முஸ்லிம்களிடமிருந்து ஒரு நாட்டைக் கைப்பற்ற செல்கிறார்கள் என்றால் அத்தகைய நிலைமைகளில் அந்த காஃபிர்களிடம் பணியாற்றுவது ஹராம் ஆகும்! கூலியை எதிர்பார்க்காது உதவி செய்வது ஹராம் ஆகும். ஹராம் மட்டுமல்ல, பெரும்பாவமும் ஆகும்! ஆனால், காஃபிர்கள் தங்களுக்குள் போரிட்டுக்கொள்கிறார்கள்என்றால், அல்லதுஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்ட நாடொன்றை நிர்வாகம் பண்ணவும், வரிகளை வசூலிக்கவும் செல்கிறார்கள் என்றால் -அத்தகைய சூழ்நிலையில் முஸ்லிம்கள் பணியாற்றலாமா? என்ற கேள்விக்கு, ஷரீஅத்தை மேலோட்டமாக பார்த்தோமென்றால் ிகூடும்ீ என்ற பதிலே கிடைக்கின்றது.

தையல், வியாபாரம் போன்ற பொதுவான பணிகளுக்கு முஸ்லிம்களை வேலைக்கு அமர்த்த நினைத்தால் ஷரீஅத்தில் இதற்கு அனுமதிஉள்ளது.நமக்குமுன்சென்றசான்றோர்பலரும் முஷ்ரிக்கீன்களிடம் பணியாற்றியுள்ளனர் என்னும்போது, ஏன் நமக்கும் கூடாமல் போகும்?

ஆயினும், ஆய்வுக்கண் கொண்டு பார்த்தோமென்றால் இத்த கைய பணிகளும் ஹராமே என்ற முடிவுக்குத்தான் வரமுடியும்! குறிப் பாக, இந்தக் காலத்தில் காஃபிர்களிடம் பணியாற்றினால், அதிலும் குறிப்பாக சமூகத்தின் நன்மதிப்பைப் பெற்றவர்கள் பணியாற்றினால் எத்தனை எத்தனையோ மார்க்கச் சீரழிவுகள் தோன்ற அதுவே காரணமாகிப் போய்விடுகின்றது. அவையனைத்திலும் குறைவான இழிவு, சீர்கேடு என்னவென்றால், அவன் (பணியாற்றுபவன்) காஃபிர் ஆட்சியாளர்கள் செய்துவரும் தீயசெயல்களைக் கண்டு கொள்ளமால் விட்டுவிடுவான்; அவற்றை இலேசாகக் கருதத் தொடங்கிவிடுவான்; அவர்களுக்கு அறிவுரை சொல்லவோ, உபதேசம் செய்யவோ முன்வரமாட்டான்; அவர்களுடைய கூட்டு வலிமை அதிகரிக்கவும் காரணமாக இருப்பான்; அவர்களை மிகவும் அதிகமாக எல்லைமீறி புகழத் தொடங்கிவிடுவான்; முதலாளி, இதயதெய்வம், இரட்சகன் என்றெல்லாம்புகழ்மாலைபாடத்துவங்கிவிடுவான்! (ஃபதாவா அஜீஸிய்யா பக்கம் 14)

இந்த ஃபத்வாவை நாம் கவனமாக ஆராய்ந்து பார்க்க வேண்டும்! ஷாஹ்சாஹிப் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தைப்பது, பொருட்களை வாங்கும், விற்கும் பணியைப் புரிவது போன்ற தனிப்பட்ட வேலைகளைப் பற்றிக் குறிப்பிடும்போது கூட ஷரீஅத்தின்படி இவை கூடும் என்றாலும், ஆய்வுக்கண் கொண்டு பார்த்தால் ஹராமே! என்ற முடிவினைத்தான் முன் வைக்கிறார்.

தனிப்பட்ட அளவில் இல்லாமல் பொதுமட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் பணிகள்; அரசமைப்பின் பெயரால் இஸ்லாமியர்கள் மீதாகக்கட்டப்பட்டிருக்கும்பெரும்பாவம், உயர்தீமை போன்றவற்றை மேலும் இறுக்கமானதாக ஆக்கும் பணிகள்; இவை மட்டுமல்லாமல் வெளிப்படையாக ஷரிஆ ஹராமாக்கியுள்ள தீமையான காரியங்களையும் செய்தே ஆகவேண்டும் என்ற நிலையில் உள்ள பணிகள் – இவற்றைப் பற்றி அவர் என்னதான் கருத்து தெரிவிப்பார்?

இ) ஒரு ஃபத்வா கோரிக்கைக்கு பதில் அளிக்கும்போது மௌலானா அப்துல்ஹை (ரஹ்) கூறுகிறார்:

ஷரீஅத்துக்கு மாற்றமான சட்டங்களைப் பின்பற்றியே ஆகவேண்டும் என்கிறநிலையில் இல்லாத பணிகள், அநீதியான சட்டதிட்டங்களைப் பின்பற்றியே ஆகவேண்டும் என்ற நிலையில் இல்லாதபணிகள் கூடும்! மற்றபடி இத்தகைய பணிகள் ஹராமானவை ஆகும்! (பாகம் இரண்டு பக் 162)

தற்காலத்து உலமாக்களில் ஒரு சிலரது கருத்துகளையும் நீங்கள் தெரிந்து கொள்வது நலம். மௌாலானா அஷ்ரஃப்அலி தானவி (ரஹ்மத் துல்லாஹி அலைஹி) அவர்களுடைய கருத்துகளையும், சிந்தனைகளையும் தொகுத்து விளக்கமளித்துள்ள மௌலானா அப்துல் பாரி நத்வி (ரஹ்) இப்பிரச்சனையில் மௌலானாவின் கருத்து என்ன? என்பதை விளக்கும் போது கீழ்வரும் ஃபத்வாவைப் பதிவு செய்துள்ளார்:

்அரசாங்கப் பணிகள் விஷயமாக நாம் வழங்கக்கூடிய குறைந்த பட்ச வழிகாட்டுதல் என்னவென்றால், வருமானத்தை ஈட்ட வேறு வழியே இல்லை என்ற நிலையிருந்தால் கல்வித்துறையின் பணிகளில் சேருங்கள்! நீதித்துறைப் பணிகளைப் போன்று ஷரீஅத்தின் சட்டங் களுக்குவெளிப்படையாகமாறுசெய்யவேண்டியநிலை அங்கிருக்காது! …….. அதே போன்று சொத்தையோ பொருளையோ பாதுகாத்தே ஆக வேண்டியநிலை உள்ளது, அல்லது வரக்கூடிய ஆபத்தை தவிர்க்க வேண்டியாக உள்ளது என்ற நிலைமையில் நீதிமன்றங்களுக்குச் சென்று முறையிடுவதில் தவறு ஏதும் இல்லை.ஃபுகஹாக்கள் இத்தகைய சூழ்நிலைகளில் -அநீதியை அகற்றவும், உரிமையை -நியாயத்தைப் பெறவும்- லஞ்சம் கூடக் கொடுக்கலாம் என்று அனுமதி அளித்துள்ளார்கள்!

(மஆரிஃப் மாத இதழ், ஜனவரி 1947, பாகம் 9 இதழ் 1 பக்கம் 47, 48)

இதேபோன்று, ஒரு முறை மௌலானா ஹுஸைன் அஹ்மது மதனி (ரஹ்) அவர்களிடம் ஆங்கிலேயே அரசாங்கத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த ஓர் உதவி தாசில்தார் வந்திருந்தார்.மௌலானா மௌதூதி(ரஹ்)அவர்களுடைய“ஒருமுக்கியஃபத்வா கோரிக்கை”(Eak aham istiftah) என்ற பெயரில் சிற்றேடு ஒன்று அப்போதுதான் வெளியாகியிருந்தது. அதனை படித்துப் பார்த்த அவர் தன்னுடைய வேலையைராஜினாமாசெய்துவிடுவதுஎன்றமுடிவுக்கு வந்துவிட்டிருந்தார். ஆனால், ஒருசில உலமாக்கள் வேலையை ராஜினாமா செய்யக்கூடாது! வேலையில் நீடித்து இருந்தால்தான் சமுதாயத்திற்கு நன்மைகள் பல ஆற்ற முடியும் என்று வலியுறுத்திக் கொண்டிருந்தனர். ஆகையால், அவர் மௌலானாவை அணுகி விளக்கம் பெற நாடினார். அவருக்கு மௌலானா ஹுஸைன் அஹ்மது மதனீ (ரஹ்) அளித்த பதிலாவது:

“எனக்குத் தெரிந்தவரை, வருமானம் ஈட்ட உங்களுக்கு வேறு வாய்ப்புகள் இருக்கும் பட்சத்தில் உங்களுடைய வேலையை நீங்கள் விட்டுவிடுவதே நல்லது! “ஒரு முக்கிய ஃபத்வாகோரிக்கை” என்ற அந்த நூலை நான் இதுவரை படிக்கவில்லை என்றாலும், அதிலுள்ள கருத்து களாக நீங்கள் சொல்பவையாவும் முழுக்க உண்மையே! வேலையை விடவேண்டாம்என்றுஉங்களுக்குஆலோசனைவழங்கியவர்களுடைய கருத்து -அவர்களும் உலமாக்கள்தான் என்றாலும்- என்னால் சரிகாண இயலவில்லை”!

இஸ்லாமல்லாத அரசாங்கத்தில் பணியாற்றுவது ஒன்றும் குற்றம் அல்ல என்றிருந்தால் அதனைவிட்டு விடுமாறு ஃபத்வா கொடுக்கப்பட் டிருக்காது. வேலையைவிட்டுவிடுங்கள்என்றுமௌலானா கூறியிருப்பது எதை உணர்த்துகின்றது? வேலையில் இருப்பது கூடாது என்பதைத்தானே!

முன்சென்ற உலமாக்கள், தற்காலத்து உலமாக்கள் ஆகியோரின் இந்த விளக்கங்களைகவனமோடு ஆராயுங்கள்! பல்வேறு வகைப்பட்ட பணிகளைப் பற்றியதாக இவை இருந்தாலும் அனைத்துப் பணிகளைப் பற்றியும் ஹராம் என்றே இவை கூறுகின்றன. இந்த ஃபத்வாக்களில் பிரச்சனையின் எல்லாக் கோணங்களும் ஏறக்குறைய அலசப்பட்டு விட்டன. இவ்வனைத்தையும் நீங்கள் ஒன்று தொகுத்தால் ஒரு விஷயம்தெள்ளத்தெளிவாகவிளங்கிவிடும்!ஜாஹிலிய்யாஅமைப்பின்கீழ், ஷரீ ஆவினால்ஹராமாக்கப்பட்ட பணிகளைச் செய்தே ஆகவேண்டும் என்ற வகைப்பட்ட வேலைகள் அனைத்தும் ஹராமாகும்- என்பதே அது!

3. பொதுவான பணிகள்

 

மேற்கண்ட குறிப்பிடத்தகுந்த துறை வேலைகளாக இல்லாமல், ஷரீஅத்தில் அனுமதியில்லாத செயல் எதையும் செய்தாக வேண்டிய நிர்ப்பந்தம் எதுவும் இல்லாத வேலைகள் -சாதாரண பொது வேலைகள்- மூன்றாவது பிரிவின் கீழ்வருகின்றன! ஒரு தீய அரசமைப்பின் கீழ் இவை வருகின்றன என்பதைத் தவிர வேறு எந்தக்கேடும் இவற்றில் காணப்படுவதில்லை! தம்மளவில் அவை தீமை எதுவுமற்றவை.

இருப்பினும், ஒரு ஜாஹிலிய்யா அமைப்பின் அங்கங்களாக விளங்குவதால் ிபாவகாரியத்துக்கு ஒத்தாசைீ என்ற வகையின் கீழ் அவை வரவே வராது என்று முற்றிலுமாய் விலக்கு அளிக்கவெல்லாம் முடியாது! தீனை நன்கு உணர்ந்தவர்கள் யாரும் அவ்வாறு சொல்லவும் இல்லை, அல்லாமா ஸர்ஃகஸி(ரஹ்) ்இவ்வாறு செய்வது ஷிர்க் மற்றும் குஃப்ரைப் புகழ்வதாக, அவற்றை மேன்மைப்படுத்துவதாக ஆகிவிடும். இத்தகைய ஒத்துழைப்பு ஹராம் ஆகும்! என்று கூறியுள்ளதை முன்பே கண்டோம். ஷரீஆவின் இந்த நெறிமுறையைத்தான் அவர் விளக்கிக் கூறியுள்ளார். முஹத்திஸ் திஹ்லவி (ரஹ்)யும் இவ்விதியையே உள்ளது உள்ளபடிக்குஉணர்த்தியுள்ளார்.மௌலானாதானவி(ரஹ்) கல்வித்துறையில் பணியாற்றலாம் என்று அனுமதி அளிக்கும்போது கூட வருமானத்திற்கு வேறு வாய்ப்பு ஏதும் அறவே இல்லை என்ற நிலையிருந்தால்மட்டுமே என்ற நிபந்தனையையும்விதிக்கிறார் என்றால்அதன் காரணம்அவருடைய பார்வை ்குற்றத்திற்கோ, வரம்பு மீறலுக்கோ ஒரு போதும் துணை சென்று விடாதீர்கள்! (அல்குர்ஆன் 5 ˜ 2) என்ற வசனத்தின் மீது பட்டுவிட்டுச் செல்கின்றதனால்தான்!!

தா:கூத்திய அமைப்பின்கீழான இப்பணிகள் அனைத்தும் பாவத் துக்கு ஒத்தாசை என்ற வகையின் கீழ்வரவில்லை என்றால், செயலுலகில் எம்மாற்றத்தையும் ஏற்படுத்தாத வெறும் வார்த்தையளவில் உள்ள ஒரு கோட்பாட்டையே அல்குர்ஆன் கூறிக்கொண்டுள்ளது என்றுதான் பொருள்!

வெளிப்படையாக பார்க்கையில் குற்றம் எதுவுமில்லை என்பத னால்தானே இப்பணிகள் அங்கீகரிக்கப்பட்டன என்று அப்போது எண்ணத்தோன்றாது. ்குற்றத்திற்கோ, வரம்பு மீறலுக்கோ ஒரு போதும் துணை சென்று விடாதீர்கள்! என்ற வசனத்தை அழகாகவும், கிராஅத் தோடும் ஓதிக்கொண்டுள்ளோம்; ஆனால், அதன் செயற்களம் எங்கே என்று மட்டும் தெரியமாட்டேன் என்கின்றதே என்றுதான் எண்ணத் தோன்றும்! ஆச்சரியப்படத் தோன்றும். இவ்வசனம் இருக்க இருக்க குஃப்ரான அமைப்பின் வண்டியும் ஓடிக்கொண்டேயுள்ளதே!!

ஆனாலும், இவ்வளவு எல்லாம் இருந்த போதிலும் ஒத்துழைப் பின் பிரிவுகளுள் இதுவே மிகவும் இலேசான பிரிவு ஆகும். மற்ற இரு பிரிவுகளோடு ஒப்பிடுகையில் இதற்குண்டான பாவப்பங்கும் மிகவும் குறைவு; கண்டனம் பெறுவதற்கான வாய்ப்பும் குறைவு!

 

இயலா நிலைச் சலுகைகள்

 

ிஒத்துழைப்புீ என்ற பிரச்சனையின் உண்மைநிலை, அது குறித்த அறிவார்ந்த ஆய்வு, அவற்றின் ஒவ்வொரு பிரிவினைப் பற்றிய ஷரீஆ வின் சட்டநிலை – என்பன இவையே!

ஜாஹிலிய்யா அமைப்புக்கு உதவிபுரியும், ஒத்துழைக்கும் சின்னஞ் சிறு வடிவத்தையும் ஒரு முஸ்லிம் கைக்கொள்ளக் கூடாது என்பதுதான்உண்மைநிலையாகும்!ஏனெனில், இத்தகைய அமைப்பொன்றுக்குஒத்தாசைசெய்வதென்பதுஅதனை நிறுவுவதற்கும், நிலைநாட்டுவதற்கும் ஒப்பான செயல் ஆகும்!

ஜாஹிலிய்யத்தோடு பின்னிப் பிணைந்துள்ள எந்தவொரு துறை யோடும் ஒத்துழைக்கவே செய்யாதீர்கள்! என்பது தான் ஷரீஅத்தின் நிலைப்பாடாகும். அல்லாமா ஸர்ஃகஸி (ரஹ்) சொல்வது போல ஷிர்க் குக்கும், குஃப்ருக்கும் உதவி- ஒத்தாசை புரிவது ஹராம் ஆகும். இருந்த போதிலும், நிர்ப்பந்தமான இயலாச் சூழ்நிலைகளில் ஹராமைக் கைக் கொள்வதும் ஆகுமானதாக ஆகிவிடும் என்பது ஷரீஆவின் ஒரு நியதி!

தற்போது நாம் வாழும் சூழ்நிலை நிர்ப்பந்தமோ, குழப்பமோ இல்லாத நிம்மதியான சூழ்நிலை என்று நம்மால் நிச்சயமாக சொல்ல முடியாது. நிர்ப்பந்தமான சூழ்நிலை உண்மையிலேயே நிலவினாலும் அங்கும் இவ்விதிமுறைகள் வளைந்து கொடுக்காமலேயே இருக்கும் என்றெல்லாம் சொல்ல முடியாது.

மேலோட்டமாகப்பார்க்கும்போதுஇதுநியாயபூர்வமானதாகவும்

ஒருமித்தகருத்தாகவும் தென்படத்தான்செய்கின்றது.மாற்றுக்கருத்துக்கே

இதில் இடமில்லை. ஆனால், இந்த சலுகைகளை எங்கு, எப்போது பயன்படுத்துவது என்பது ஒரு நுணுக்கமான விஷயம் ஆகும். அதுவும் நுண்ணிய தளத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும்போது! குறிப்பாக, ஈமானே பெருமூச்சு விட்டு, விக்கிக் கொண்டுள்ளபோது! தாழ்வு மனப்பான்மையும், ஊக்கமிழந்த தன்மையும், எளிய வழிகளை

நாடும்இயல்பும்மக்களின்நாடிநரம்புகளில் கலந்துவிட்டிருக்கும்போது! மனிதமனம் இயல்பாக எளியதையே நாடுகின்றது. சலுகைகள் கிடைத்தால் கொள்ளை கொள்ளையாக சேர்த்துக் கொள்ளவே நினைக்கின்றது. சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளும், தீர்மானித்துக் கொள்ளும் உரிமையை மனதிடமே கொடுத்துவிட்டால் எல்லாவற்றையும் அள்ளிமுடித்துக் கொண்டாலும் அதற்குக் குறைவாகவே தோன்றும். ஆகையால், மிகவும் நுணுக்கமாக சூழ்நிலைகளை ஆராய வேண்டியுள்ளது.

 

இஸ்லாம் அல்லாத தேசத்தில் வாழும் முஸ்லிம்களுக்கு உண்மை யிலேயே என்னென்ன நிர்ப்பந்த சூழல்கள் ஏற்படுகின்றன? அப்படிப் பட்ட சூழ்நிலைகளில் மேற்கண்ட மூன்று பிரிவுகளில் (அவை அனைத் துமே ிபாவத்தில் ஒத்தாசைீ வகைகளே என்பதில் சந்தேகமே வேண்டாம்) எப்பிரிவை அவர்கள் கைக்கொள்ளலாம்? அதுவும் எத்தகைய உணர்வுகளோடு அதை நடைமுறைப்படுத்த வேண்டும்? – என்பதைப் பற்றி பார்ப்போம்.

உண்மையிலேயே நிர்ப்பந்தமான சூழ்நிலை

ஜாஹிலிய்யா அமைப்புக்கு ஒத்துழைத்தாக வேண்டிய நிர்ப்பந்தமான சூழ்நிலைகள் இரண்டு வகைப்படும்.

1) கவுன்ஸில்களில் பங்கு பெற்றே ஆகவேண்டும் என்றும், அரசாங்கப் பணிகளில் வேலை பார்த்தே ஆகவேண்டும் என்றும் ஆளுமையின் கீழுள்ள முஸ்லிம்கள் நிர்ப்பந்திக்கப்பட்டால் …..

2) முஸ்லிம்கள் பயங்கரமான பொருளாதார நெருக்கடியில் மாட்டிக் கொண்டிருந்தால் … அன்றாடம் வயிற்றுப்பாட்டைக் கழுவு வதற்கே அரசாங்கப் பணிகளை செய்தாக வேண்டும் என்கிற நிலை நிலவும்போது ….

1) அரசாங்கத்தின் நிர்ப்பந்தம்

நிர்ப்பந்தத்தின்முதலாம்வகை நடைமுறையில் சாத்தியப்படுமா என்பது சந்தேகமே! ஒருவேளை, வாதத்திற்காக, அரிதிலும்அரிதான இந்நிர்ப்பந்தநிலை நடைமுறைப்படுத்தப்பட்டால், குர்ஆன்- ஸுன்னாவை விட்டு முற்றிலுமாய் விலகி அவற்றுக்கு நேர்எதிரான சட்டங்களை இயற்றக்கூட அனுமதி இருக்கின்றது! அப்படி இருக்கும்போது ஒத்துழைப்பின் எந்தவொரு பிரிவும் கண்டிப்பாக இதைவிடவும் குறைந்ததாகத்தான் இருந்தாக வேண்டும். ஏனென்றால் கட்டாயப்படுத்தப் படும்போது குஃப்ரான கலிமாவைச் சொல்லவும் அனுமதி உள்ளது. அப்படி இருக்கும்போது, அதைவிடவும் படித்தரத்தில் குறைந்த பிற குற்றங்களை செய்ய ஏன் அனுமதி இருக்காது?

2. பொருளாதார நெருக்கடி

அடுத்து, நிர்ப்பந்தத்தின் இரண்டாம் வகை -எந்த நேரமும் இத்தகைய நிலை ஏற்படக்கூடும் என்பது சாத்தியமே. அன்றாடம் கஞ்சிகாய்ச்சக் கூட வழியில்லாமல் போகும்போது, இந்த ஒத்துழைப்பு (அரசாங்க வேலைகளைச் செய்வது) செய்தால்தான் சோற்றுக்கே வழி என்ற நிலைமையில் -ஜாஹிலிய்யா அமைப்பின் கீழ் பணியாற்ற ஒரு மனிதனுக்கு கண்டிப்பாக அனுமதி கொடுக்கப்பட்டே ஆகவேண்டும். ஆயினும், இந்த விஷயத்திலும் இரண்டு முக்கியமான நியதிகளை மனதில் கொண்டாக வேண்டும்.

1. இது பொதுவாழ்க்கையைப் பொறுத்த விஷயம் அல்ல! பொது வான பாலிஸியும் அல்ல! மாறாக, தனிநபர் தொடர்பான விஷயம். அதாவது, தனிநபர்களுக்குத்தான் இத்தகைய இக்கட்டான நிர்ப்பந்தம் ஏற்படுமேயொழிய, சமூகத்திற்கு ஏற்படாது! அரசாங்க வேலைக்குப் போய் சம்பாதிக்காவிட்டால் உடலில் உயிரைத் தக்கவைப்பது கூட கஷ்டம்என்கிறஅளவுக்முற்றிப்போனகஷ்டம் தனிநபர்களுக்குத் தான்ஏற்படுமேயொழியசமூகத்திற்குஏற்படாது !நிர்ப்பந்தமான சூழ்நிலையில்வேறுவழியேஇல்லாதபோதுபன்றிக்கறியை சாப்பிடுவது போல-இத்தகைய வேலைகளும் அதைப் போன்றவையே, அதற்கு மாறுபட்டவை அல்ல! ஆகையால், சமூகம் முழுவதற்குமான பொதுவான பாலிஸியாக இது ஆகாது.

பொதுவான பாலிஸி என்பதோ இதற்கு நேர்எதிரானதாக இருக்கவேண்டும். அதனுடைய பொதுமனப்பான்மை இதனை புறந்தள்ளும் முயற்சிகளிலேயே தொடர்ந்து ஈடுபடும். எப்படி இருப்பினும், ஏதேனும் ஒரு தவிர்க்கஇயலாத நிர்ப்பந்தத்தின் காரணமாக ஒரு தீய செயலைச் செய்வதற்கான அனுமதி ஒருவனுக்கு கிடைத்துவிட்டால் அவன் அதை பொன்னான வாய்ப்பாக, லக்கி பிரைஸாக நினைத்துக்கொள்ளக் கூடாது; அவனுக்கு இந்த சான்ஸ் கிடைத்துவிட்டதே என்று சமூகத்தின் பாராட்டு அவனுக்குக் கிடைக்கக்கூடாது; இத்தகைய நிலை ஏற்பட்டுவிட்டதே என்று அவனை யாரும் சபித்துவிடக் கூடாது என்றாலும், அவனுடைய இந்த நிலையை விருப்பக்கண்களோடு யாரும் பார்க்கவும் கூடாது!

ஒருவேளை சமூகத்தின் பொதுமனப்பான்மையே இதை சகித்துக் கொள்ளும் அளவுக்கு, சர்வசாதாரணமாகக் கருதும் அளவுக்கு தாழ்ந்து விட்டால், பாதில் (அசத்திய)அரசமைப்புக்கு தொண்டூழியம் புரிந்து தன்னுடைய பொருளாதார முன்னேற்றத்தை உயர்த்திக் கொள்வதே சமூகக்கொள்கையாக ஆகிப்போனால், அதனால் ஒரே ஒரு விளைவுதான் ஏற்படும்! பொருளாதார நிர்ப்பந்தம் காலத்தின் தேவை என்று யாரைப் பார்த்தாலும் சாக்கு போக்குகளை சொல்ல ஆரம்பித்தும் விடுவார்கள்!

எந்தக் கேடுகெட்ட நச்சு மரத்தை ஆணிவேரோடு பிடுங்கி எறிவதை தன்னுடையவாழ்வியல்நோக்கமாகக்கொண்டுள்ளதோ, அதே நச்சுமரத்துக்பாசனம்செய்வதற்காகவும்நீரூற்றிசெழிப்பாக்குவதற்காகவும், அதற்கு ஊழியம் புரிவதற்கும் அதனைப் பாரமரிப்பதற்காகவுமே தன்னு -டையவாரிசுகளைதயார்படுத்துவதையும் அந்த சமூகம் செய்யத் தொடங்கி விடும்! அப்புறம், இஸ்லாமியஅமைப்பை ஏற்படுத்துவது என்பதெல்லாம் வெறும் வாய்ப்பந்தலாக, வார்த்தைக்கனவுகளாகவே நின்றுவிடும்.

2) இந்த நிர்ப்பந்தத்திலும் பல நிலைகள் உள்ளன! தம்முடைய பொருளாதார நெருக்கடியைத் தீர்த்துக் கொள்வதற்காக, வேண்டா வெறுப்பாகஜாஹிலிய்யஅமைப்பில்பணிபுரியும்கட்டாயசூழ்நிலைக்கு ஆளானவர்கள்இந்த நிலைகளைக் கவனத்தில் கொண்டு வேறுபடுத்திப் பார்த்தாகவேண்டும். நிர்ப்பந்தம் என்பதால் அவ்வமைப்போடு எப்படி வேண்டுமானாலும் இரண்டறக் கலந்து விடுவதற்கு அனுமதி உள்ளது, என்றெல்லாம் நினைத்துக் கொள்ளக் கூடாது! எத்தகைய தொடர்பை வேண்டுமானாலும் ஏற்படுத்திக் கொள்வதற்கு திறந்த அனுமதி உண்டு என்றும் நினைத்துக் கொள்ளக் கூடாது! ரயில், தபால், தந்தி, மருத்துவத்துறைஎன்றுதாம்விரும்பும்எத்துறையில் வேண்டு -மானாலும் பணியாற்றிக்கொள்ளலாம்என்பதும்கிடையாது!* இவ்வாறேஇறைவன் தமக்கு வழங்கியுள்ள திறமைகளை வங்கித்துறை, மதுத்துறை, நீதித்துறைஎன்றுஎங்குவேண்டுமானாலும்விற்று காசாக்கிக் கொள்ளலாம் என்றும் அர்த்தம் கிடையாது. சட்டசபைகள் தங்கள் அவலத்தைத் தீர்க்கும் என்றால் அங்கும் சென்று முறையிடுவதில் தடை கிடையாது என்றும் நினைக்கலாகாது!

சரியான கோணம் என்னவென்றால், அரசாங்க வேலைக்குப் போனால் தவிர தம்முடைய கஷ்டநிலை தீராது என்கிற நிலையில், நேரிடையாக ஹராமான காரியங்களைச் செய்யத் தேவையில்லாத இரண்டாம்பிரிவு வேலைகளையே தேர்ந்தெடுக்க வேண்டும்! அதிலும்கூடஇரட்டிப்புபாவச்சுமையைமுதுகில்ஏற்றும் வேலை -களையல்ல, ஒருபாவத்தைக்கொண்டுள்ளவேலைகளையே தேர்ந் -தெடுக்க வேண்டும்.அப்போதுதான்கோட்பாடுகொள்கை அளவிலும் தான்தவறாகக்கருதும்இந்தபாதில்அமைப்புக்கு வலு சேர்ப்பதிலிருந்து, நிலைநாட்டுவதிலிருந்து மனிதன் முடிந்தவரைக்கும் விலகி இருக்க முடியும்! அதற்காக பகிரங்கமாக ிபாவப்பணியில் ஒத்தாசைீ செய்ய வேண்டிய நிலை ஏற்படாது! கவுன்ஸில்களில் அமர்ந்து தன்னுடைய அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிரான நிலையை மேற்கொள்ள வேண்டியஅவசியம்நேராது.கிதால்ஃபீகய்ரிசபீலில்லாஹ், நீதித்துறை, மதுத்துறைமற்றும்வங்கித்துறைபோன்றநேரிடையாகவும் , மறை -முகமாகவும்அதாவது இரட்டிப்பு தீமைகளைச் செய்தாக வேண்டிய நிலை ஏற்படாது!

ஏனென்றால், நிர்ப்பந்த நிலைகளுக்கான சலுகைகளை அறிவிக் கும் வான்மறை குர்ஆன் -ஹராமான பொருட்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அனுமதிக்கும் வான்மறை ்தேவை எல்லையைத் தாண்டாதவரை என்று அதற்கான நிபந்தனைகளையும் நிர்ணயித்தே உள்ளது!

்எவரேனும் (இறைவனுக்கு) மாறுசெய்யவேண்டும் என்ற எண்ணமின்றி, வரம்புமீற வேண்டும் என்ற நோக்கமின்றி, நிர்ப்பந்திக்கப்பட்டால்……… அவன் மீது குற்றமில்லை! அல்லாஹ்மன்னிப்பவனாககருணையாளனாக உள்ளான்

(அல்குர்ஆன் 2 ˜ 173)

தேவைக்கு அதிகமான பொருளை பயன்படுத்தக் கூடாது என்பது எவ்வாறு தேவை எல்லையில் அடங்கியுள்ளதோ, அவ்வாறு முடிந்தவரைக்கும்குறைந்ததரத்திலுள்ள ஹராமான பொருட்களையே பயன்படுத்த வேண்டும் என்பதும் அடங்கியே உள்ளது. குறைந்த தரத்திலுள்ள ஹராமான பொருளைப் பயன்படுத்தியே சிக்கலைத் தீர்த்துவிடலாம் என்கின்ற நிலையில், அதைவிட ஒருபடி மேலான ஹராமை பயன்படுத்திக்கொள்ள ஒருபோதும் முயற்சிக்கக் கூடாது. சந்தேகமான தண்ணீர், வெறுப்புக்குரிய (மக்ரூஹ்) தண்ணீர் இருக்கும் பட்சத்தில் அசுத்தமான தண்ணீரைப் பயன்படுத்திக்கொள்ள ஒருபோதும் அனுமதி அளிக்கப்பட மாட்டாது. அசுத்தமான தண்ணீர் இருக்கின்றபோது, மதுவைக்குடித்துதாகத்தைக்தணித்துக் கொள்ளலாம்என்றுஅனுமதி வழங்கப்படமாட்டாது. வருமானத்தை ஈட்ட வேறு வழியே இல்லை என்ற நிலையிருந் தால் கல்வித்துறையின் பணிகளில் சேருங்கள். நீதித்துறைப் பணிகளைப் போன்று ஷரீஅத்தின் சட்டங்களுக்கு வெளிப்படையாக மாறுசெய்ய வேண்டிய நிலை அங்கிருக்காது என்று மௌலானா தானவி (ரஹ்) கூறி உள்ளதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்! அதே போன்று முஹத்திஸ் ஷாஹ் அப்துல் அஜீஜ் திஹ்லவி (ரஹ்)யின் வார்த்தைகளையும் நினைவு கூறுங்கள்“தொலைதூரம்பார்வையைச்செலுத்திஆழமாக உற்றுநோக்கினால்” என்றுதான் அவர் பேச்சையே தொடங்குகிறார்.

இவ்விரண்டு நியதிகளும் முழுமையாக கவனத்தில் கொள் ளப்படும் போதுதான், நிர்ப்பந்தமான நிலைகளில் ஜாஹிலிய்யா அமைப்புகளின் கீழ் பணியாற்றுவது கூடும். அடுத்து, அத்தகைய நிலைமைகளில் இரண்டாம் பிரிவு வேலைகளை மட்டுமல்ல, முதலாம் பிரிவுவேலைகளைக்கூடகைக்கொள்ளலாம்.ஆயினும், நடைமுறையில்இதற்கானவாய்ப்பும், சாத்தியமும் மிகவும் அரிதாகவே ஏற்படும், ஏனெனில், அடிப்படையில், இரண்டாம்பிரிவு வேலை எதுவுமே கிடைக்கவில்லை எனும் போதுதான் முதலாம் பிரிவு வேலைகளுக்காக முயற்சி செய்யவேண்டும். இரண்டாவதாக யதார்த்தத்தில், இரண்டாம் பிரிவு வேலைகளைவிட முதலாம் பிரிவு வேலைகள் கிடைப்பது மிகவும் கஷ்டம் ஆகும். அவற்றுக்கு பற்பல தகுதிகள், திறமைகள் தேவைப்படுகின்றன. இத்தகைய திறமைகள் கைவரப் பெற்றவர்கள்- வங்கிகளை இயக்கும் அளவு திறமை யானவர்கள், நீதித்துறையில் பொறுப்பு வகிக்கும் அளவு தகுதியானவர்கள், சட்டநுணுக்கங்களைஅலசிஆராய்ந்து வழக்காடும்அளவு திறன்மிகு வல்லுநர்கள் இரண்டாம்பிரிவு வேலைகளைப் பொறுத்தவரை மிகவும் உயர்தகுதி கொண்டவர்களே! அவர்களுக்கு இரண்டாம்பிரிவு வேலைகள் மிகமிக எளிதாக கிடைக்கவும் செய்யும்! அவர்கள் அவற்றை விரும்பி ஏற்கவேண்டும்; அவற்றையே போதுமாக்கிக் கொள்ள வேண்டும், அவ்வளவுதான்!

இதைத்தவிர இத்தகைய முதலாம்பிரிவு வேலைகள் அப்படி யொன்றும் சட்டென்று கிடைத்தும்விடாது. அதற்காக பல தயாரிப்பு களைச்செய்யவேண்டியுள்ளது.ஆண்டாண்டுகாலம் குறிப்பிட்டதொரு கல்வியைக் கற்க வேண்டியுள்ளது. அப்போதுதான் இத்தகைய பணிகளில் சென்று உட்கார முடியும்! இன்றைக்கு உங்களுடைய பொருளாதார சூழ்நிலை சீர்கெட்டு அதோகதியாகி விட்டது. இத்தகைய வேலைகளைத் தவிர வேறுவழி வாய்ப்புகளே கிடையாது என்று முடிவு செய்து கொண்டு அரசாங்கத்தை அணுகி, ிஎனக்கு இம்முதலாம் பிரிவு வேலைகளில் ஒன்றை ஒதுக்கித் தாருங்கள்!ீ என்று விண்ணப்பம் கொடுக்கிறீர்கள். உடனே, உங்களுடைய கோரிக்கையை ஏற்றுக் கொண்டு அரசாங்கம் உங் களுக்கு வேலையைக் கொடுத்துவிடாது. இப்படி ஒருபோதும் கனவில் கூட நடைபெறாது! ஆகையால், இத்தகைய வேலைகளுக்கான நிர்ப்பந்தநிலைஏற்படுவதுஎன்பதுமிகவும்கடினம்! மனஈடுபாட்டுடன் ஆண்டாண்டுகாலம், முயற்சிசெய்து தயாரிப்பு வேலைகளில் இறங்கினால் தான், இவ்வேலைகளுக்கே போக வேண்டும் என்று மனதார ஆசைப்பட்டால்தான் இத்தகைய பணிகளில் போய் உட்கார முடியும். இத்தகைய மனிதனை நிர்ப்பந்த நிலையில் உள்ளவனாக கூற முடியாது!!

ஆனாலும், அரிதினும் அரிதான நிர்ப்பந்தத்தினால் இத்தகைய வேலைகளுக்கும் முயற்சி செய்ய நேரிடும் என்பதையும் நாம் மறுக்க வில்லை. ஒன்றிரண்டு மனிதர்கள் உண்மையிலேயே நிர்ப்பந்த நிலையில் உள்ளார்கள். இத்தகைய பணிகளில் சேர்வதற்கான அனைத்து நிபந்தனைகளும் தமக்கு பொருந்துவதாக அவர்கள் இஃக்ளாசுடன் உணர்கிறார்கள், என்றால் கண்டிப்பாக அவர்கள் இதற்கான முயற்சியில் இறங்கலாம். விரும்பத்தகாத இப்பணிகளில் சென்று சேரலாம். ஒன்றே ஒன்றை மட்டும் கட்டாயம் கவனத்தில் கொள்ள வேண்டும். இத்தகைய பணிகள் எந்தளவுக்கு படுபாவமான குற்றங்களோ, அதைவிடவும் நிர்க்கதியான நிர்ப்பந்த நிலைமை அவர்களுக்கு ஏற்பட்டிருக்க வேண்டும்! செய்யக் கூடாத செயல் ஒன்றை நான் செய்யப்போகிறேன், என்று மனதார எண்ண வேண்டும். அல்லாஹ் என்னை மன்னித்தருள வேண்டும். மிக விரைவில் இதிலிருந்து வெளியேறிவிடும் வாய்ப்பை எனக்கு வழங்கவேண்டும் என்று துஆ செய்து கொண்டே இருக்கவேண்டும். துஆ செய்வதோடு மட்டும் நின்றுவிடாமல் மாற்றுவழிகளைத் தேடும் முயற்சிகளிலும் தீவிரமாக இறங்கவேண்டும். அசுத்தத்தில் முக்கியெடுக்கப்பட்ட ஆடையை கழற்றி எறிய முடிந்த அளவு விரைவாக செயல்பட்டாக வேண்டும்!

குஃபர் அமைப்போடு ஒத்துழைக்கும் முதல்வகை (ஆதாரப் பிரிவு) வேலைகளைப் பொறுத்தவரை நிர்ப்பந்த நிலைமைகளினால் அவற்றை ஏற்றுக்கொள்வது என்பது கற்பனைக்கே எட்டாத விஷயம்!! ஆகையினால், சட்டமியற்றும் சபைகளில் இடம் பெறுவது என்ற கேள்வி எழுவதற்கே வாய்ப்பு இல்லை!

 

நிர்ப்பந்த நிலைக்கான கால நிர்ணயம்

 

அடுத்து, நாம் தெரிந்து கொள்ள வேண்டியது, ஒரு மனிதன் நிர்ப் பந்த நிலையை எப்போது அடைகிறான்? நிர்ப்பந்த சூழ்நிலையில் எப் போது இருக்கிறான்? ஜாஹிலிய்யாவுக்கு வேறு வழியில்லாமல் இந்த ஒத்தாசையை புரிய எத்தகைய நிலைமைகளில் தயாராகிறான்? எத்தகையநிலைமைவரைக்கும்இவ்வொத்துழைப்பை செய்துகொண்டிருப்பான்?

இவற்றையெல்லாம் மற்றவர்களிடம் கேட்பதைவிட தானே தீர் மானித்துக் கொள்ள வேண்டும். ஒரு மனிதனிடம் எந்த அளவுக்கு ஈமா னிய விழிப்புணர்வு உயிரோட்டத்துடன் இருக்கின்றதோ அந்த அளவுக்கு அவன் இந்த சலுகைகளைப் பயன்படுத்துவதிலிருந்து தன்னை விலக்கிக் கொள்வான். ஒருவனுக்கு ஏற்பட்டிருக்கின்ற நிர்ப்பந்த பிரச்சனையைப் பற்றி பேசுவதாக இருந்தால் நீண்டு கொண்டே போகும். ஆகையினால், நாம் இங்கு இஸ்லாமியப் பேரறிஞர் மௌலானா அஷ்ரஃப் அலி தானவி (ரஹ்) மர்ஹும் வ ம:க்ஃபூர் உடைய கருத்தை முன்வைப்பதோடு நிறுத்திக் கொள்கிறோம். மௌலானா அப்துல் பாரி நத்வி மௌலானா வின் கருத்தை கீழ் வருமாறு விளக்கிக் கூறுகிறார்:

்வேறு வழியில்லாமல், எதேச்சையாக ஒரு பணியில் சேர்ந்துவிட்டீர்கள். ஊக்கமின்மையும், உத்வேகமின்மையும் காணப்படுகின்றது. அப்பணியை விட்டுவிட்டால் அதைவிடவும் பெரிய அபாயம்- பெரிய மஃசியத்தில் மாட்டிக் கொள்வோம் என்கிற பயமும் இருக்கின்றது. உதாரணமாக, பொருளாதார நெருக்கடிகளைத் தாங்கிக்கொள்ளும் அளவுக்கு சகிப்புத் தன்மை இல்லை; பொருளாதார நெருக்கடி குழப்பத்தினால் அல்லாஹ்வின் மீதே அவநம்பிக்கை தோன்றிவிடும்; தொழுகை, நோன்பு போன்றவற்றிலும் மனம் ஈடுபடாது என்கிற பயம் இருந்தால் -வேறு ஒரு நல்ல வேலை கிடைக்கும் வரை- அவ்வேலையிலேயே தொடரலாம்! தற்போதைய வேலையை ஒரு பாவம் (மஃசியத்) என்று நினைத்தவாறு, இஸ்திக்ஃபார் செய்து கொண்டே இருக்க வேண்டும்! முடிந்த அளவுக்கு வெகு விரைவில் அதிலிருந்து விடுபடுவதற்கான முயற்சிகளை செய்து கொண்டே இருக்க வேண்டும். வாழ்நாள் முடியும் வரைக்கும் முயற்சி செய்து கொண்டேயிருந்து அதில் வெற்றியே பெறாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால், தீவிர முயற்சியை தொடர்ந்து செய்யவேண்டும். முயற்சிசெய்கிறேன் பேர்வழி என்று பெயரளவுக்கு எதையாவது செய்யக்கூடாது!

நம்மைப் பொறுத்தவரை நிர்ப்பந்த நிலைக்கான நிர்ணயம் பற்றிய மிகவும் கீழ்நிலையிலான மிகமிக எளிமையான அளவுகோல் ஆகும் இது!

தன்னுடைய காலத்தில் இருந்த மனோதிடம்அற்ற மக்களை மனதில்கொண்டு ஒருவேளை மௌலானா இந்த அளவுக்கு எளிமை யான, அசாதாரணமான அளவு கோலை நிர்ணயித்துள்ளார்கள் போலும்! ஆயினும், அடிப்படையில் இது மிகவும் சரியானதே! அவருடையகருத்துகட்டாயம்கவனத்தில்குறித்துக் கொள்ளவேண்டிய ஒன்று! வேறு ஒரு நல்ல வேலை கிடைக்கும்வரை தற்போதைய வேலையை ஒருமஃசியத் (பாவம்) என்று நினைத்தவாறு தொடரலாம்.

 

கற்பித வடிவங்கள்

 

நிர்ப்பந்தம் என்பதன் உண்மையான வடிவம், அதன் நிலை, அதன் விரிந்ததன்மை இதுவே! ஆனால், அடிமைத்தனம் என்பது வெறுமனே ஒரேஒரு வியாதி அல்ல! எண்ணற்ற பற்பல வியாதிகளின் ஊற்றுக்கண்ணாக அது உள்ளது. ஒரு நீண்ட நெடியகாலம் உடல்கள் மீதானஅடிமைத்தனம்தொடரும்போது, ஆட்சியாளர்கள் பலதரப்பட்டகருவிகளைப்பயன்படுத்திசிந்தனையையும் அடிமைப்படுத்தும் முயற்சியில் இறங்குகிறார்கள். நாளடைவில் உடலோடு, உணர்வும்சிந்தனையும்அடிமைப்படத் தொடங்கிவிடுகின்றன. அத்தகைய நிலைமையில் சிந்தனைப்போக்கு மாறிவிடுகின்றது!விஷயங்களைப்பார்க்கும், அணுகும் கண்ணோட்டமும் தீயவர்ணத்தைப் பெற்று விடுகின்றன! நன்று-தீது என்பதற்கான அளவுகோலும் அடியோடு மாறிப்போய் விடுகின்றது.

இது ஓர் இயற்கை நியதி! முஸ்லிம்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல. இதனை அடுத்து, நிர்ப்பந்தம் தோன்றும் தளமும், காலமும் வெகு விரைவில் மாறிப்போய் விடலாம்! இயற்கைக்கு மாற்றமான நிர்ப்பந்த நிலைகள் கற்பிதம் செய்து உருவாக்கப்படலாம்! குஃப்ரான அமைப்புக்கு ஒத்துழைப்பு என்பதற்கான எல்லா வாசற்கதவுகளும் அகலமாக திறந்து வைக்கப்படலாம்!- இவை வெறும் யூகங்கள் அல்ல, கண்களால் கண்ட உண்மை!

 

சமுதாய நலன்

 

யதார்த்தத்தில் காணப்படாத நிர்ப்பந்தநிலை ஒன்று கற்பனையாக உருவாக்கப்படலாம் என்று பார்த்தோம். அவ்வாறு கற்பனையாக உருவாக்கப்படும் நிர்ப்பந்த நிலைகளில் மிகவும் முக்கியமானது சமுதாய நலன்கள் அல்லது சமுதாய உரிமைகள் என்ற கோஷமாகும்!

ஓர் அடிமைச்சமூகத்தின் மிகப்பெரிய குற்றம், அது அடிமையாக இருப்பதுதான்! இந்த குற்றத்தின் பின்விளைவாக அச்சமூகம், தன் மானம், தன்னுடைய ரோஷம், தன்னுடைய செல்வம், தன்னுடைய மேன்மை, தன்னுடைய பண்பாடு, தன்னுடைய வாழ்வியல் அமைப்பு போன்றவை சிதைந்த நிலையில் ஊனமுற்று இருப்பதைக் காண்பது தவிர்க்க முடியாதது!

வாயில் சொல்லமுடியாத இந்த இழிநிலையை விட்டு மீள வேண்டுமானால் ஆதிக்க சக்திகளின் கொடூரப்பிடியிலிருந்து விடுதலை பெற்றாக வேண்டும். அதுவோ, ஒரு பயங்கரமான கஷ்டமான காரியம்! அதிலும், அடிமைப்பட்டுக் கிடக்கும் சிந்தனை பொதுவாக எளிதான வழியையே தேடிக் கண்டுபிடிக்க விழைகின்றது.

இன்னொரு புறமோ, அவர்கள்மீது ஆதிக்கம் செலுத்தும் சக்திகள்தம்முடையசுயலாபங்களுக்காகஅவர்களுடைய திறமைகளைப் பயன்படுத்திக் கொள்வது எப்படி என்பதற்கான வழிமுறைகளை யோசித்துக் கொண்டேயுள்ளன. அதற்குப் பகரமாக ஒருசிலசமுதாய நலன்களை அவர்களுக்கு முன்னால் வீசியெறிகின்றன. யாசிப்பது, போடுவது, கோரிக்கை கிடைப்பு என்கிற ஓர் அற்புதமான விளையாட்டு தொடங்கி விடுகின்றது. சமுதாய நலன்கள் என்ற பெயரில் தமக்குக் கிடைக்கும் ஒரு சில எலும்புத் துண்டுகளுக்காக அடிமைச்சமூகம், ஆதிக்க சக்தியின் அஸ்திவாரத்தை மேலும் வலிமைப்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுகின்றது.

நீண்டதொருகாலம் அடிமை வாழ்வில் உழன்று போயுள்ள முஸ் லிம்களின் நிலையும் இதுவேதான்! தங்களுக்கு எங்கிருந்தெல்லாம் ரிஜ்க் கிடைக்குமோ, அந்த வாசல்களிளெல்லாம் “அரசங்கத்தோடு ஒத்துழைப்பு”என்கிறநிபந்தனைஅட்டைதொங்கிக் கொண்டிருப்பதை அவர்கள் காண்கிறார்கள்.

அப்படி என்றால் என்னதான் செய்வது?

மார்க்கத்தின் நியதிகளை விடாப்பிடியாக அவர்கள் பற்றிக் கொண்டிருந்தால் அவர்களுடைய பொருளாதாரம் அடியோடு சீரழிந்து விடும் அபாயம் உள்ளது! சமுதாய முன்னேற்றம் என்பது பொருளாதார வளர்ச்சியைச் சார்ந்தே உள்ளது என்பதால் (ஆனால், வான்மறை குர்ஆனோ வேறேதோ ஒன்றை சார்ந்துள்ளதாகக் குறிப்பிடுகின்றது) முழு சமுதாயமும் முடிந்த அளவு அரசாங்கப் பணிகளைப் பெற்று பலனடைய வேண்டும்! இதன் காரணமாக பாகுபாடே இல்லாமல் எல்லா துறைகளிலும் வேலை வாய்ப்புகளைப் பெறுவது சமுதாயத்தின் பொதுப் பாலிஸியாக ஆகிவிட்டது.

இப்போதுள்ள நிலைமை எவ்வளவோ பரவாயில்லை. ஒத்து ழைப்பு வேகம் இந்த அளவோடு நின்றுகொண்டால் எப்படியாவது பொறுத்துக்கொள்ளலாம்.ஆனால், சமுதாய நலன்களை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று முஸ்லிம்களிடம் காணப்படும் ஆர்வத் துடிப்பானது அவர்களை தலைதெறிக்க ஓடச்செய்து ஷரீஅத்துக்கள் இயற்றப்படுகின்ற இடங்களுக்கும் கொண்டுபோய் சேர்த்துவிடும்! அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரசூலுக்கும் மட்டுமே சொந்தமான சட்டம் இயற்றும் உரிமையை தங்களுடைய சொந்தச் சொத்தாக ஆக்கிக் கொள்ள நினைக்கும் தா:கூத்கள் நிரம்பியுள்ள சபைகளில்! ரப்புல் ஆலமீனுடைய ஆளுமைக்கு பகிரங்கமாக சவால்விடுக்கும் சபைகளில்!!

ஜாஹிலிய்யா அமைப்புக்கு ஒத்துழைப்பதன் பரிணாமம் இது தான். ஓர் இறைநம்பிக்கையாளரின் அடிப்படை ஈமானிய கோட்பாடு களுக்கு முற்றிலும் முரணானது இது! ஆனால், இத்தகைய வழிமுறை களைக் கையாள்பவர்கள் சமயங்களில் மனதின் அடியாழம் வரைக்கும் தூய எண்ணம் -இஃக்ளாஸ் – கொண்டே செயல்படுகிறார்கள். சமுதாயக் கவலையினால் நிம்மதியின்றித் தவிக்கிறார்கள், முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டுமென்றால் இது ஒன்றுதான் வழி என்று மனப் பூர்வமாய் நம்புகிறார்கள் -என்பதை நாம் நன்றாக அறிந்தே உள்ளோம்.

நம்முடைய தீன்வழிகாட்டும் அரசியல் கொள்கைகளை தியாகம் செய்ய நாம் முன்வராவிட்டால் நம்முடைய வாழ்க்கையை அந்நியர்கள்முழுமையாகஆக்கிரமித்துக் கொள்வார்கள்; தினந்தோறும் அவர்கள்புதிதுபுதிதாகசட்டங்களைஇயற்றிக்கொண்டேயிருப்பார்கள்; நம்மைப்பற்றியும்நம்நலன்களைப்பற்றியும்கொஞ்சம்கூடகவலைப்பட மாட்டார்கள்என்றெல்லாம்இந்தத்தலைவர்களின்சிந்தனையில் எண்ணங்கள்சுழல்கின்றன.அதாவது, இவர்கள்தம்மைத்தாமேநிர்ப் பந்தத்துக்குஉட்பட்டவர்களக்கருதுகிறார்கள், நிர்ப்பந்த நிலைக்கான சலுகைகளைப்பயன்படுத்தியேதங்கள்காரியங்களைசெய்து வருகிறார்கள்…….

உண்மையில் இப்படியெல்லாம் செய்வது நிர்ப்பந்தநிலைச் சலு கைகளை முற்றிலும் முறையற்ற வழிகளில் பயன்படுத்துதாகும்! பொரு ளாதாரத்தில் முன்னேற்றம் அடைவதற்காக எல்லாத் துறைகளிலும் வேலைவாய்ப்புகளைக் கோருவது என்பது முழுக்கமுழுக்க முதலாளித் துவ சிந்தனையே ஆகும்! முஸ்லிம்கள் முன்னேற்றம் அடைவதும், நிலைத்துநிற்பதும் பொருளாதார வளர்ச்சியை அல்ல, ஒழுக்க மேம்பாட்டையே, தீனில் நிலைத்திருப்பதையே சார்ந்து உள்ளது என்பதை இத்தகைய பெருமக்கள் உணர்ந்து கொள்ள மறுக்கிறார்கள். தங்களுடைய பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகதங்களுடையஒழுக்கச்சிறப்பையும், மார்க்கக் கோட் பாடுகளையும்குழிதோண்டிப்புதைத்துவிடுகின்றமுஸ்லிம்கள் என்ன முன்னேற்றத்தைஅடைந்துவிடப்போகிறார்கள்?

சமுதாயநலன்களைக்காப்பாற்றியாகவேண்டுமேஎன்ற கட்டா -யத்தில்சட்டமியற்றும்சபைகளில்பங்குபெறுவதற்கும்முயற்சிக்கிறவர்கள் இருக்கிறார்கள்.இத்தகையபெருமக்கள்முழுக்கமுழுக்க இஃக்ளாசுடன் தான்செயல்படுவதாககருதுகிறார்கள்.உண்மையில், இவர்கள்பயங் -கரமானசிந்தனைச்சீரழிவில்இருக்கிறார்கள்.நுரையீரல்காய்ச்சலால் பாதிக்கப்பட்டகுழந்தையின்தாயைநாம்உதாரணமாகக்கூறலாம். தன்னுடையகுழந்தைஆசைப்படுகிறதுஎன்பதற்காககேட்பதை யெல்லாம்சாப்பிடக்கொடுத்துவிடுகிறாள்.நாளைமறுநாளோ சாகப் போகின்றகுழந்தையைஇன்றேசாகடித்துக்கொண்டிருக்கிறோம் என்பதுஅவளுக்குத்தெரிவதில்லை.அவளுடையஇந்தசெயலைவிட்டும் தடுப்பவர்களைஅவள்பொருட்படுத்துவதேஇல்லை!மாறாக, சமயங்களில் தன்னுடையகுழந்தையின்பகைவர்களாகஇத்தகையோரை அவள் நினைக்கிறாள்.என்னுடையமனம்எந்தளவுகவலைப்படுகின்றது என்று இவர்களுக்குஎன்னதெரியும்?என்னுடையகண்மணியின்விருப்பங்கள், ஆசைகளைப்பற்றிஇவர்களுக்குஎன்னஅக்கறை?என்றுஅவள்நினைக்கிறாள். -அவளுக்குதன்னுடையகுழந்தையின்மீதுஅளவுகடந்தபாசம்இருக்கும் என்பதையார்மறுத்தார்கள்

ஆனால்தாயின்பாசத்துக்கண்ணியம்அளித்து இயற்கை விதி செயல்படாதுநின்றுவிடுமா, என்ன?உயிர்க்கொல்லி நோய்க்கான பத்தியத்தைமுறையாக கடைபிடிக்காதநோயாளிகளுக்கு நேர்வது நேர்ந்துதானேதீரும்?

தாய்மைஉள்ளத்தோடுசமுதாய நலன்களைப் பற்றி கவலைப் படும் பெருமக்களுடைய நிலையும் இதேதான். உலகியல் பயன்களுக் காக மார்க்கத்தின் உயிர்நரம்பின் மீதே அவர்கள் கத்தியைச் செலுத்திவிடு கிறார்கள். எந்தப் பொருளை இழக்கின்றோம்? அதற்குப் பதிலாக எந்தளவு சாதாரணத்திலும் சாதாரணமானப் பொருளைப் பெற்றுக் கொள்கிறோம்? – என்பதை அவர்கள் எடைபோட்டுப் பார்ப்பதே இல்லை. தீனை ஷஹீ தாக்குவதையே தம்முடைய வாழ்க்கை இலக்காகக் கொண்டுள்ளோம் என்பதை அவர்கள் மறந்து போய்விடுகிறார்கள். மற்ற சமூகங்களுக்கு வழிகாட்டுவதற்காகவே தாம் படைக்கப்பட்டுள்ளோம் என்பதை அவர்கள் நினைத்துப் பார்ப்பதே இல்லை!

இஸ்லாம் என்ற பெயரிலான, இறைவனால் அருளப்பட்ட வாழ்வியல் கொள்கையை பின்பற்ற வேண்டும்; முழு உலகத்தையும் அதன்பால் அழைக்க வேண்டும்; அதனை நிலைநாட்டும் முயற்சியில் கூட்டாக ஈடுபடவேண்டும், என்பதற்காகத்தான் அவர்கள் இந்த உலகிற்கு அனுப்பப்பட்டுள்ளார்கள். ஆனால் , தங்களது செயல்களால் வேறுமாதிரியானஒருதோற்றத்தைவெளிப்படுத்திக்கொண்டுள்ளார்கள். வாழ்க்கைக்களத்தில்பொருளாதார வளர்ச்சியை மட்டுமே இலக்காகக் கொண்டுமுன்னேறப்போட்டிப்போடும்சமூகங்களில்முஸ்லிம்சமூகமும் ஒன்று!தனிப்பட்டவாழ்வியல்கொள்கைஎதுவும்அவர்களுக்குக்கிடையாது! எந்தவொருவாழ்க்கைக்குறிக்கோளும்அவர்களிடம்இல்லை!தனிப்பட்ட அரசியல்கொள்கைஎதுவும்இல்லை- என்பதைத்தானேஅவர்கள் வெளிப்படுத்துகிறார்கள்.

கொஞ்சம்யோசித்துத்தான்பாருங்களேன்!ஒருமனிதர் அரசியல் சாசனநிர்ணயக்குழுவில்பங்கேற்கிறார்;அரசியல்சாசனத்தை ஆதரித்தோ, மௌனமாகஅங்கீகரித்தோவெற்றிபெறச்செய்கிறார்; ஆதிக்கமேலாண்மைஇறைவனுக்குஅல்ல, பெரும்பான்மைமக்களுக்கே என்றுஒப்புக்கொள்கிறார்;இவ்வடிப்படையில் அரசியல் சாசன அமைப்புக் கட்டுமானத்தில் அரசனுக்கும் ஆண்டிக்கும் சரிசமமாய் உள்ள உரிமையைப் பயன்படுத்துகிறார்; பின்பு, அரசியல் சாசனம் உருவாக்கப்பட்ட பிறகு அதற்கு தனது முழுஒப்புதலை அளிக்கிறார்;

அது அமுல்படுத்தப்படும்போது அதிலுள்ள வழிமுறைகளின்படி நடத்தப்படும்தேர்தல்களில்போட்டியிடுகிறார்;தேர்தல்பிரச்சாரத்தின் போது ஒவ்வொரு நிமிடத்திலும் இஸ்லாமிய தேர்தல் நியதிகளுக்கும் தனக்கும் எந்தவொரு சம்பந்தமுமில்லை என்பதை வெளிப்படுத்திக் கொண்டே உள்ளார்; அதன் பின்பு சட்டங்களை இயற்றவல்ல சபைகளில் இடம் பெறுகிறார்; அரசியல் சாசனத்துக்கும், நாட்டுக்கும் சட்டத்திற்கும்விசுவாசமாய்நடந்துகொள்வேன்என்றுஉறுதிப்பிரமாணம் எடுத்துக் கொள்கிறார்; அதுவும் இறைவனின் பெயரால்!! எத்தகைய இறைவன்தெரியுமா?எந்தஇறைவனுக்கு மட்டுமே நன்றி விசுவாசமாக இருக்க வேண்டுமோ, எந்த இறைவனைத் தவிர்த்து வேறு யாருக்கும் நிபந்தனையற்ற நன்றி விசுவாசம் காட்டுவதை அவனுடைய மார்க்கம் ஹராமாக்கியுள்ளதோ, அந்த இறைவனின் பெயரால்!! பிறகு, குர்ஆன் ஸுன்னாவோடுகடுகளவும்தொடர்பில்லாதவகையில்வாழ்க்கைக்கான சட்டங்களை இயற்றுகிறார்……

இதேமனிதர், முஸ்லிம் பெயரை வைத்திருக்கும் இதே மனிதர் மஸ்ஜிதுக்குள் வரும்போதோ இனில்ஹுக்மு இல்லா லில்லாஹ் (ஆட்சி யதிகாரம் அல்லாஹ்வுக்கே! 12˜40) என்ற பேருண்மையை ஏற்கிறார். இறைவன் இறக்கியருளிய சட்டங்களின் அடிப்படையில் யார் தீர்ப்பளிக் கவில்லையோ அத்தகையவர்கள் காஃபிர்களே (5˜44) என்ற வசனத்தைப் பற்றி அனல் தெறிக்க உரையாற்றுகிறார். அத்தோடு தீனை நிலைநாட்ட வேண்டும் (42 ˜ 13) என்ற மேன்மையான செய்தியினைஉலகமக்களுக்குவிடுக்கிறார்.உங்களுக்கு இறக்கியருளப் பட்டுள்ளதைப் பின்பற்றுங்கள்! (7˜3) நன்மையை ஏவி தீமையைத் தடுக்கும்ஒருகூட்டம்உங்களில் கண்டிப்பாக இருக்கவேண்டும் (3˜104) என்றெல்லாம் உம்மத்தே முஸ்லிமாவின் அரும்பெருமைகளைப் பற்றியும், சிறப்புகளைப் பற்றியும் மனதை அள்ளும் சொற்பொழிவை நிகழ்த்துகிறார்.

சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தமே இல்லாத அவருடைய இந்த இரட்டைநிலை ஒரு நாளல்ல, இரண்டு நாளல்ல, ஆண்டாண்டு காலம், வாழ்வுமுழுக்க தொடருகின்றது. அவருடைய இந்த நடத்தை யைப்பார்த்து உலகம் என்னதான் புரிந்து கொள்ளும்? மாற்று சமூகங் களுக்கு முன்னால்அவர்எந்தஉம்மத்தைபிரதிநிதித்துவப்படுத்துகிறார்? அவருடைய முயற்சிகளால்தீனின் வேர்கள்வலுப்பெறுமா, இல்லை வலுவிழக்குமா? இன்று வரைக்கும் உலகில் யாரேனும் தாம் நம்பி ஏற்ற கொள்கையை, அதற்குநேர்முரணானநடவடிக்கைகள்மூலம்பரப்பியுள்ளார்கள், நிலைநாட்டி உள்ளார்கள் என்றால், அதேஆர்வத்தில் முஸ்லிம்களும் இவ்வாறுசெய்கிறார்கள்என்றுசொல்லலாம்.ஆனால்இப்படிஒருபோதும்நடந்ததில்லையே- அதுதானே உண்மை- முஸ்லிம்கள் ஒன்றை நன்றாக நினைவில் கொள்ள வேண்டும். அவர்களுக்காக இயற்கை விதிகள் ஒருபோதும் மாறாது

 

 

அடிப்படைத் தவறு

தனிமனிதனுக்காக வழங்கப்பட்டுள்ள நிர்ப்பந்தநிலைச் சலுகை களை சமூகம் தனக்கும் உரியதாக எண்ணிக் கொண்டு, அதன் அடிப் படையில் பொதுப் பாலிஸியை உருவாக்கிக் கொள்கின்றது என்றும் அந்த சலுகையைக் கூட தனிப்பட்ட சிறப்புப்பாலிஸியாக வகுத்துக் கொண்டு நிதானமாகவும், நிம்மதியோடும் ஏதோ இதுதான் மில்லத்தைப் பின்பற்றுபவர்களுக்கான இராஜபாட்டை என்று எண்ணிக்கொண்டு வீரநடை பயில்கின்றது என்றும் பார்த்து வந்தோம். இந்த விஷயத்தில் நாம் செய்கின்ற மிகப்பெரிய அடிப்படைத் தவறே இதுதான்!

இவ்விரண்டு எண்ணங்களுமே தவறானவை ஆகும்.

மாறுசெய்யவேண்டும் என்ற நோக்கமோ வரம்பு மீற வேண்டும் என்ற எண்ணமோ இருக்கக் கூடாது; உள்ளம் முழுக்க ஈமான் நிரம்பி வழியவேண்டும்; வேறுவழியின்றி இத்தகு காரியத்தைச் செய்யும் நிலைக்குத்தள்ளப்பட்டிருக்கவேண்டும்என்ற நிபந்தனைகளோடுதான் வான் மறை குர்ஆன் சலுகையை வழங்கியுள்ளதே தவிர, ஏதோ கிடைத்தற்கரிய பேறு கிடைத்துவிட்டது என்று கொண்டாடுமாறு வழங்கவில்லை!

இஸ்லாமின் கொள்கைகளுக்கு எதிரான வார்த்தைகளை உச்சரிக்கும் அனுமதி தனி மனிதனுக்கு வழங்கப்பட்டுள்ளதே தவிர, சமுதாயத்துக்கு அல்ல! ஒருவேளை சமுதாயத்திற்கும் அது பொருந்தும் என்பதை ஒரு வாதத்திற்கு ஒப்புக் கொண்டாலும் கூட – அதிலும் தனி மனிதனுக்குஎன்னென்ன நிபந்தனைகள், உணர்வுகள் விதிக்கப்பட்டுள் ளனவோ, அவற்றை அப்படியே கடைப்பிடிக்க வேண்டுமே தவிர, ஜாஹிலிய்யா அமைப்புக்கு, நிம்மதியானமனோநிலையில்நீடித்த, நிரந்தரஒத்துழைப்பைஅளிக்கஒருவாய்ப்பாகஅதைப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது.

என்னென்னநிபந்தனைகள், உணர்வுகள்தனிமனிதனுக்குவிதிக்கப் பட்டுள்ளன?

(1) மனதில் உச்சக்கட்ட வெறுப்புணர்வு இருக்க வேண்டும்.

(2) ஆகக்குறைந்தபட்சஅளவேசலுகையிலிருந்துபயன்பெற வேண்டும்.

(3) இந்நிலையிலிருந்துவிரைவில்மீளவேண்டுமேஎன்றுநிகைொள் ளாதஉள்ளத்துடன்கடும்தொடர்முயற்சிகளைமேற்கொள்ள வேண்டும்.

(4)இந்நிர்ப்பந்த நிலையிலும் ஹலாலான, தூய்மையான நிலைமையை அடைய திட்டங்களை வகுத்துக் கொண்டேயிருக்க வேண்டும். நிலை கொள்ளாது தவிக்கவேண்டும். வாய்வார்த்தைகளில் அதனை வெளிப் படுத்திக்கொண்டே இருக்கவேண்டும். சதாசர்வகாலமும் அதே சிந்தனை யிலேயே மூழ்கியிருக்க வேண்டும். ஒருவேளை, இவையெல்லாம் கடை பிடிக்கப்படாவிட்டால் நிர்ப்பந்தநிலை சலுகை தவறாகப் பயன்படுத்தப் படுகின்றது என்றுதான் பொருள். தம்முடைய எண்ணங்களை, விருப்பங் களை நிறைவேற்றிக்கொள்ள குர்ஆன் வசனங்களை கருவிகளாகப் பயன் படுத்திக் கொள்வதாகத்தான் அர்த்தம்!

 

மார்க்கத் அறிஞர்களுக்கான பொறுப்புகள்

 

இப்பிரச்சனையில் மார்க்க அறிஞர்கள் மிகவும் தலையாய இடத்தை வகிக்கிறார்கள். தீனை நிலைநாட்டும் பணி, மற்றவர்களின் தவறுகளினால் பாதிக்கப்படுவதைக் காட்டிலும் இவர்களுடைய தவறுகளினால் அதிகமாக பாதிக்கப்படும்! ஒரு சமூகம் ஜாஹிலிய்யா படு குழியில் சென்றுவிழும்போது, அதனுடைய இடுப்புக் கயிற்றை இழுத்துப் பிடித்து தடுத்து நிறுத்த வேண்டியவர்களே, கூடச்சேர்ந்து கொண்டு தவறான திசையில் விரட்டினால் – அதைவிடவும் கொடுமை வேறு இருக்காது!

இஸ்லாமிடம் தனக்கென்று சொந்தமாக எந்த வாழ்க்கைத் திட்ட மும் கிடையாது. முஸ்லிம்கள் தங்கள் இஷ்டம் போல, தாங்கள் விரும் பியவாறு தங்கள் அரசியல் நியதிகளை, பண்பாட்டு நியதிகளை நிர்ண யித்துக் கொள்ளலாம்- என்று வெளியில் உள்ளவர்கள் நினைப்பதைப் போலவே உம்மத்துக்குள்ளும் இக்கருத்து வேர்பிடித்து பரவிவிட்டது என்றுதானே இதற்குப் பெ

இத்தகைய தெளிவற்ற சூழ்நிலையில் அரசியல் சாசனக் குழுவில் இடம்பெறுவது, சட்டம் இயற்றுவது, அவைகளில் அங்கம் வகிப்பது போன்றவை ஏதோ ிபாவப்பணியில் செய்யப்படும் ஒத்தாசைீ என்ற வகையில் சாதாரண குற்றங்களாகக் கருதப்படாது. மேற்கண்ட காரணங் களால் அவற்றின் குற்றத்தன்மை பெருமளவு அதிகரித்துவிடும்.

 

வட்டியும் மதுவும் தவறான செயல்கள். அவை தீயவிளைவு களையே ஏற்படுத்தும். ஆனால், அவற்றை குற்றங்களாக எண்ணாமல் நற்பண்புகளாக நினைத்து கைக்கொள்வதால் அவை உதாரணக்குற்றங் களாக மாறிவிட்டன!

அதேபோன்றுதான் மேற்கண்டவை பாவப்பணியில் ஒத்தாசை என்ற நிலையிலிருந்து முன்னேறி கொள்கைக் கருங்காலிகளாகவும் பயங் கரப் பாவங்களாகவும் மாறிவிடுகின்றன!

முஸ்லிம்களின் நலம் என்றால் என்ன? இஸ்லாமின் நலன் என் றால் என்ன? என்பதை வேறுபடுத்திப் பார்ப்பதில் இவர்கள் தவறிழைத்து விடுகிறார்கள். இது மிகவும் வருத்தத்துக்குரிய விஷயம். முஸ்லிம் களின் நலன்களுக்காக இஸ்லாமின் நலன்களை இவர்கள் குர்பான் கொடுத்து விடுகிறார்கள். உண்மை என்னவென்றால், இவர்கள் இஸ்லாமின் நலன்களுக்குத்தான் பொறுப்பாளர்களே தவிர, முஸ்லிம்களின் நலன்களுக்கு அல்ல! இங்கே இன்னொன்றையும் இவர்கள் புரிந்து கொள்ளவேண்டும். முஸ்லிம்களின் நலன் என்பதே இஸ்லாமின் நல னில்தான் பொதிந்துள்ளது. ஆரம்ப கட்டத்தில் வெளிப்படுகின்ற ஒரு சில விளைவுகள் வேண்டுமென்றால் இதற்கு நேர்மாறாய் இருக்கலாம்.

ஆனால், உணர்வுத் துடிப்புள்ளஇவர்களுடைய உள்ளங்கள் சமுதாயநலன்விஷயத்தில்இந்தளவுக்குக்கூடபொறுத்துக்கொள்ள தயாராக இல்லை என்றால், அப்போதைக்கு அப்போது பாதுகாப்பு ஏற் பாடுகள்செய்யப்பட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்று இவர் களுடைய உள்ளங்கள் விரும்பினால் -இவர்கள் ஒன்றை யோசித்துப் பார்க்க வேண்டும். இத்தகைய சமுதாயச் சேவையை செய்வதற்கு மாஷா அல்லாஹ் உம்மத்தில்ஆட்களுக்கொன்றும்பஞ்சம் இல்லையே! இவர்கள்உட்காரஆசைப்படும்ிநாற்காலிீயில்இவர்கள் உட்காரா விட்டாலும், மற்றமற்றசமுதாயக்காவலர்கள்நாற்காலிகளை நிரப்ப எந்நேரமும்ஆஜராகஉள்ளார்களே!அதுவும்ஒன்றல்ல, இரண்டல்ல, எண்ணற்றோர்அப்படிஇருக்கும்போதுஇவர்களுக்கு என்ன கொடுமை வந்தது?மார்க்கஅறியாமைஎன்றகொடியைப்பிடித்துக்கொண்டு முன்னால்ஓட இவர்கள்ஏன் துடிக்கவேண்டும்?மற்றவர்கள்இந்தக் கிரகத்தைபார்த்துக்கொள்ளட்டும்என்று விட்டுவிட்டு, உண்மையான வாழ்வியல்குறிக்கோள்களுக்குவிளக்கேற்றும்முயற்சிகளில்ஏன்இவர்கள் இறங்கக்கூடாது?இஸ்லாம், குர்ஆன், அல்லாஹ், மற்றும்ரசூல்போன்றோர்க்கு நிறைவேற்றவேண்டியகுறைந்தபட்ச(நன்றிக்)கடமைகூட இவர்கள் மீதுஇல்லையா?இறைவனைப் புறக்கணித்தல்என்றசூறாவளியிலிருந்து தோன்றும்இந்தகேடுகெட்ட செயல்களுக்குஇவர்கள்ஏன்புண்ணிய அந்தஸ்த்தைவழங்கவேண்டும்?காரணங்களால்இயங்கும்இப்பூவுலகில் இஸ்லாமுக்கென்றுஉள்ளகடைசிப்புகலிடமேஇவர்கள்தான்!இவர் களின்வாசலிலும்ஏழைக்குஇல்லைஎன்றுசொல்லிவிட்டால்அவன் தன்னுடையஇயலாநிலையைஎங்கேசென்றுமுறையிடுவான்?

இந்த பெருந்தகைகள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். மனிதவாழ்வின்சிக்கல்கள்எங்கேமுடிவடைகின்றனவோ, அங்கேதான்அரசாங்கத்தின், அரசியலின்வரம்புகளும்நிறைவுபெறும்! மனிதச்சிக்கல்கள்தொடர்ந்துகொண்டேயிருக்கும்வரைஇவையும் தொடர்ந்து சென்று கொண்டே இருக்கும். ஆகையால், ஏதேனுமொரு ஜாஹிலிய்யா அமைப் புக்கு ஒத்துழைப்பது, செயல்வடிவில் நன்றியை வெளிப்படுத்துவது போன்றவை எந்தஒரு புள்ளியிலும் இவர்களை நின்றுவிடஅனுமதிக்காது.இந்தஒத்துழைப்புஅவர்களைப் பொறுத்த வரைஒருபுதைசேறுஆகவேஇருக்கும்.காலைவைத்துவிட்டால் அவ்வளவுதான்! உள்ளே உள்ளே இழுத்துக் கொண்டே செல்லும்! தங்கள் நாட்டில் மதசார்பின்மைக்கானபாடல்களைபாடுவதோடு இவர்கள் நின்றுவிட மாட்டார்கள். மாறாக, வேறு ஏதேனும் ஒரு பகுதியில் இஸ்லாமிய அமைப்பு என்ற பெயர் அடிபட்டாலும் இவர்களுடைய நெற்றிப் புருவங்கள் உயர்ந்து விடும். அனிச்சையாக அவர்களுடையஉதடுகவார்த்தைகளைஉதிர்க்கும். ீஇன்ஷாஅல்லாஹ் அங்கும் ஒரு ஜனநாயக ஆட்சி கண்டிப் பாகமலரும்ி!

இதுவும்போதாதுஎன்றுஉணரப்பட்டால்இவர்களுடைய வாயிலிருந்துீநம்முடையநாட்டுஅமைப்பும்இஸ்லாமிய அமைப்பாகவேஉள்ளதுி!என்றுசான்றுசர்ட்டிஃபிகேட்வரவழைக்கப்படும்! நாட்டின்சாசனத்திலும்சட்டத்திலும்அல்லாஹ், ரசூல், குர்ஆன், ஸுன்ன என்றவார்த்தைகள்கூடஇடம்பெற்றிருக்காதிருந்தபோதிலும், ீஇந்தஅமைப்பைப்போய்ஜாஹிலிய்யாஅமைப்பு, இஸ்லாம் அல்லாதஅமைப்புஎன்றுகூறுபவன்முட்டாள்பைத்தியக்காரன்ி!என்றும்சொல்ல வைக்கப்படும்!

இவ்வாறு அடிப்படையிலேயே சமரசம் ஆகிவிட்ட பின்பு – பல் வேறு வாழ்க்கைப் பிரச்சனைகளைக் குறித்து இவர்களுடைய அவை களில் எத்தகைய முட்டாள்தனமான, ஜாஹிலானா தீர்வுகள் எல்லாம் சமர்ப்பிக்கப்பட்டு, அவற்றின் மீது முத்திரை – நற்சான்று குத்துமாறு வேண்டப்படுவார்கள். ீஇஸ்லாமிய அடிப்படையிலானதுதான்ி! என்றமுத்திரைஇவர்களிடமிருந்துபெறப்படும்.அல்லதுகுறைந்தபட்சம் சமூக இணக்கத்திற்காக மௌனத்தைக் கடைபிடித்து (ஒன்றும் தவறு கிடையாது) என்பதாவது உணர்த்தப்படும்

“எளிதான ஒன்றைத் தேர்வு செய்”! என்ற சாக்கு

 

மிகப்பெரிய இரண்டு தீமைகளை எதிர்கொண்டாக வேண்டிய நிலையிருந்தால் அவ்விரண்டில் எளிதானதையே தேர்வு செய்ய வேண் டும் என்று ஷரீஅத்தில் ஒரு நியதி உள்ளது. இப்பிரச்சனையில் அதைச் சுட்டிக்காட்டி தங்களுடைய கருத்துக்கு ஒருசிலர் பலம் சேர்க்கிறார்கள். இதைச் சாக்காக வைத்து, தீன் மற்றும் ஷரீஅத் தொடர்பான எத்தனை எத்தனையோ அடிப்படை விஷயங்கள் நிராகரிக்கப்பட்டு விடுகின்றன!

உண்மையில், நாம் விவாதிக்கும் பிரச்சனை இரண்டு ஆபத்து களில் எளிதானதைத் தேர்ந்தெடுப்பது என்ற வகையிலிலேயே சேராது. பார்க்கப்போனால், தற்போது நடைமுறையில் உள்ள ஆபத்துகளை விடவும் பேராபத்து ஒன்றை இது தோற்றுவிக்கக்கூடியது ஆகும்.

முஸ்லிம்களைச் சுற்றிலும் ஒரே ஆபத்துகளாகவே, முசீபத்து களாகவே உள்ளன என்று வைத்துக் கொள்வோம். இப்போது இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட ஆபத்துகளில் ஏதேனும் ஒன்றை அவர் கள் தேர்ந்தெடுக்க வேண்டும். ஏனென்றால், அவர்களுக்கு பிரியமான பாதைகள் அனைத்தும் அடைபட்டுவிட்டன- ஜாஹிலிய்யா அமைப் புக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பதுதான், அவர்கள் தேர்ந்தெடுக்கும் எளிதான ஆபத்தா? மதச்சார்பின்மைக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வது, குர்ஆனையும் ஸுன்னாவையும் மஸ்ஜிதுகளில் மூடி வைத்துவிட்டு ிமனிதனுக்கே மேலாதிக்கம்!ீ என்ற அடிப்படையில் சட்டங்களை இயற் றத் தொடங்குவது, பிறகு இவற்றோடு தொடர்புடைய எல்லாவற்றையும் செய்து முடிப்பது! இதுதானா எளிய ஆபத்து? இஸ்லாமின் பிரதிநிதிகள், சத்தியத்துக்கு சாட்சியாளர்கள், நம்மையை ஏவுபவர்கள், இகாமத்துத் தீனுக்கான பொறுப்பாளர்களைப் பொறுத்தவரைக்கும் இவைதாம் எளிய முசீபத்தா? இதுதான் எளியமுசீபத் என்றால், ஐயா, இதைவிட பெரிய முசீபத் என்னவாகத்தான் இருக்கும்? தன்னுடைய அடிப்படைக் கோட்பாடுகளைக் கூட இப்படிப்பட்ட சாக்குகளைச் சொல்லி தட்டிக்கழித்து விடும் மார்க்கம் எத்தகைய விநோதாமான மார்க்கமாக இருக்கும்?

நல்ல பாதைகள் எத்தனையோ இருக்க, இதைப்போய் தேர்ந் தெடுத்து உள்ளதுதான் கொடுமையிலும் கொடுமை! மற்றமற்ற சமயங் களின் பிரச்சாரகருக்கும், தேசியவாத அமைப்புகளின் தலைவருக்கும், சோஷலிச சங்கங்களின் முன்னோடிக்கும், எந்த கம்யூனிஸ்ட் தலைவருக்கும் வாய்ப்பூட்டு போடப்படவில்லை!

ஏதேனும் ஒரு ிபலாீவைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் இவர்களில் யாருக்குமே ஏற்படவில்லை. இவர்கள் அனைவரும் கடிவா ளமோ, கட்டுப்பாடோ இன்றி தங்கள் தங்கள் கொள்கைகளைப் பரப்பு கிறார்கள். அவற்றை நிலைநாட்ட இரவு பகலாகப் பாடுபடுகிறார்கள். ஆனால், சத்தியமார்க்கம் ஒன்றின் சொந்தக்காரர்களிடமிருந்து மட்டும் தான் எல்லா உரிமைகளும் பறிக்கப்பட்டுவிட்டன. தங்களுடைய வாழ்வியல் கொள்கையின் பெயரை உச்சரிக்கக்கூட அவர்களுக்கு அனுமதி இல்லை!

முசீபத்துகள் பலாக்கள் எல்லாம் அவர்களுக்காகவே விதிக்கப்பட் டுள்ளன. தங்கள் கொள்கையை அவர்கள் வெளிப்படுத்துவதுமில்லை; அதற்காக அயராது பாடுபடுவதும் இல்லை; எந்தளவுக்கு தவறாக சூழ்நிலை எடை போடப்பட்டுள்ளது?!

தங்களுடைய குறிக்கோளுக்கு எதிரான திசையில் இயங்குமாறு முஸ் லிம்கள் கட்டாயப் படுத்தப்படுகிறார்கள் என்பதை அறிவுள்ளவன் எவனாவது ஏற்றுக் கொள்வானா? சரியான திசைக்கான பாதை திறந்தே உள்ளதே!

முசீபத்துகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்தே ஆகவேண்டும் என்ற இக்கட்டான நிலைமை ஏற்படும் அளவுக்கு, நேர்வழிப் பாதைகள் என்றுமே அடைபட்டுப் போவதில்லை.

்இந்த தீன் என்றும் நிலைத்திருக்கும்! முஸ்லிம்களின் ஒரு ஜமா அத் கியாமத்நாள் வரும்வரைக்கும் இப்பாதையில் நின்று போரிட்டுக் கொண்டே இருக்கும்! என்று இறைத்தூதர் சல்லல்லாஹு அலைஹி வசல்லிம் அருள்வாக்கு அளித்துச் சென்றுள்ளார்கள். (முஸ்லிம் மிஷ்காத், கிதாபுல் ஜிஹாத்)

நம்முடைய பார்வையே சீர்கெட்டு ஃபாஸிதாகிப் போய்விட்டது. பல்வேறு முசீபத்துகளில் எந்த ஒன்றைத் தேர்ந்தெடுப்பது என்பதைப் பற்றியே நாம் சிந்தித்துக் கொண்டுள்ளோம் என்றால் அதுவேறு விஷயம்! நாம் இப்படி எல்லாம் யோசிப்பதற்கு என்ன காரணமாக இருக்க முடியும்? அல்லாஹு டைய தீனின் பெயரை உச்சரித்தாலே போதும், வீடுகளிலிருந்து நம்மைக் கவ்விக் கொள்வார்கள்; பூமி நம்மைப் பொறுத்தவரை இறுக்கமானதாக ஆகிவிடும்; வானம் இடிந்து நம் தலைமேல் விழுந்துவிடும், என்றெல்லாம் அல்லாஹ்வைப் பற்றிய தவறானஎண்ணங்கள்நம்மனதின்அடியாழத்தில் குடிகொண்டிருக்கின்றனவோ, என்னவோ?- அப்படியென் றால், அந்தோ பரிதாபம்! ஏனெனில், அவன் நம்மோடு வேறெதோ ஒப்பந்தத்தை அல்லவா போட்டு வைத்துள்ளான்!

்எளிதான ஒன்றைத் தேர்வுசெய்! என்ற கோட்பாடு மிகவும் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றது என்பதுதான் உண்மை! இதைப் பயன்படுத்த வேண்டிய இடமும், சூழலும் வேறு!

முஸ்லிம்களின் ஒரு கூட்டம் கப்பலில் பிரயாணம் செய்து கொண்டிருப்பதாக எண்ணிக் கொள்ளுங்கள். எதிரிகள் அக்கப்பலின் மீது குண்டுமழை பொழிந்து விட்டார்கள் அல்லது தீப்பந்தங்களை வீசி தீக்கு இரையாக்கி விட்டார்கள். இப்போது முஸ்லிம்களுக்கு முன்னால் இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று, அவர்கள் கப்பலிலேயே உட்கார்ந்து கொண்டு குண்டுகளுக்கு இரையாக வேண்டும்; அல்லது தீயில் எரிந்து சாகவேண்டும். இரண்டாவது, கடலில் மூழ்கிவிடும் அபாயம் இருந்தா லும் பரவாயில்லை என்று குதித்துவிடவேண்டும். இத்தகைய சூழ்நிலை யில், எது குறைவான ஆபத்தோ, எதை முடிந்தளவு சகித்துக் கொள்ள முடியுமோ அதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் என்று ஷரீஅத் கட்டளையிடுகின்றது.

அடிமைப்பட்ட முஸ்லிம்களை இப்போது ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். கப்பல் பயணிகள், கடலில் குதித்துச் சாவதா? தீயில் வெந்து சாவதா? என்று இரண்டு முசீபத்துகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத் தாக வேண்டிய கட்டாய நிலையில் இருந்ததைப் போலவே, இன்று முஸ் லிம்கள் தம்மீது ஆதிக்கம் செலுத்தும் ஜாஹிலிய்யா அமைப்போடு மனப் பூர்வமாக ஒத்துழைப்பதா? இஸ்லாமின் தெளிவான கோட்பாடுகளை, சட்டங்களை பகிரங்கமாக எதிர்த்துச் செயல்படுவதா? இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுத்தே ஆகவேண்டிய கட்டாய நிலையில் உள்ளார்களா?

 

அண்ணல் யூஸுஃப் அலைஹிஸ்ஸலாம்

பற்றிய தவறான விளக்கம்

 

ஜாஹிலிய்யா -இஸ்லாம் அல்லாத- அமைப்போடு ஒத்தாசை செய்வதைப்பற்றி பேசும்போது அண்ணல் யூஸுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய எகிப்து வாழ்க்கை ஆதாரமாக காட்டப்படுகின்றது. உண்மையில், இது ஆதாரம் அல்ல, ஆதாயம் ஆகும். தங்களுடைய சிந்தனை செயல்பாடுகளுக்கு ஆதாயமாக இதைப் பயன்படுத்திக் கொள் கிறார்கள். இந்தப்பிரச்சனையைக் கொண்டுபோய் போற்றுதலுக்குரிய இறைத்தூதரின் நிகழ்ச்சியோடு இனணப்பது அறியாமையின் வெளிப் பாடு ஆகும்! தங்களுடைய நிலைப்பாட்டுக்கு ஆதாரமாக அண்ணல் யூஸுஃப்பின் வரலாற்றை சுட்டிக்காட்ட அவர்கள் நினைத்தால், மூன்று விஷயங்கள் நிரூபிக்கப்பட வேண்டும்.

1) அண்ணல் யூஸுஃப் முழுமையான ஆட்சியதிகாரத்தைப் பெற வில்லை, பகுதி அதிகாரத்தையே பெற்றிருந்தார்.

2) அதிகாரத்தில் அமரும்போது அவர் இறைத்தூதராக ஆக்கப் பட்டுவிட்டிருந்தார்.

3) அந்நிகழ்வின்போது எகிப்திய அரசன், முஸ்லிமாக இல்லை.

இம்மூன்றையும் நிரூபிக்க முடியாது என்பது ஒரு பக்கமிருக்க, நடந்த உண்மை இதற்கு நேர்மாறாகத்தான் உள்ளது. மேலே இதுபற்றிய விளக்கத்தைக் காண்போம். இங்கு இன்னொரு முக்கியமான விதியைப் பற்றி முதலில் தெரிந்து கொள்வோம்.

ஷரீஆ பிரச்சனையில் அலசி ஆராய்வதெற்கென்று ஒரு நியதி நெறி முறை உள்ளது. எப்போதும்

1) மூலத்திலிருந்து சார்பையும் (Branch from Root)

2) நிர்ணயிக்கப்பட்டதிலிருந்து புரிந்துகொண்டதையும்

(Understood from Fixed and determined)

3)தெளிவாக வரையறுக்கப்பட்டதிலிருந்து பொதுமையையும்

(General Concept from Described)

4) விளக்கமானதிலிருந்து விளங்காததையும்

(Obscure from Clear)

5) துல்லியமானவற்றிலிருந்து சந்தேகத்திற்கிடமானதையும்

(Obscure from Firmed)அடையவேண்டும்.அதாவது முதலாவதாக கூறப்பட்டவைகளிலிருந்துதான்இரண்டாவதாககூறப்பட்டவைகளை புரிந்து கொள்ளவேண்டும்.

ஒரு விஷயத்தைப் பற்றி துல்லியமான, விளக்கமான சட்டங்கள் இருக்கும்போது, போதுமான விளக்கமற்ற, பொதுமைப் பண்புடைய வசனங்களிலிருந்து அல்லது நபிமொழிகளிலிருந்து கிடைக்கும் குறியீடு கள் மூலமாக அவ்விஷயத்தைப் பற்றிய கண்ணோட்டத்தை வகுக்க நினைப்பது அறிவுக்கு அப்பாற்பட்ட, மார்க்கத்தன்மை அற்ற, தவறான நடைமுறையாகும்!

உம்மத்தின் வரலாற்றில் தலையெடுத்த, பாரதூரமான விளைவு களை ஏற்படுத்திய கருத்துவேறுபாடுகள், முரண்பாடுகளை நீங்கள் அலசி ஆராய்ந்து பார்த்தீர்கள் என்றால், அபாயகரமான அந்த ஃபித்னாக் களுக்கு எல்லாம் அடிப்படைக் காரணமாக தவறான இந்த சிந்தனையே விளங்கி வந்துள்ளதைக் காணலாம்.

இறைவனின் திருமறை யாவற்றையும் தெளிவாக விளக்கவந்த கையேடு என தன்னைப்பற்றி அறிவித்துக்கொண்டே உள்ளது. ஆனா லும், நிலை தடுமாறிய உள்ளங்கள் அதன் பக்கம் கவனம் செலுத்துவதே இல்லை! தெளிவான, துல்லியமான கட்டளைகள் இருந்தபோதும், தெளிவற்ற, பொதுமைப்பண்புடைய வசனங்கள், நபிமொழிகளையே இவர் கள் நாடிச் சென்றனர். புதுப்புது கருத்துகளை, சிந்தனைகளை தீனின் பெயரால் கண்டுபிடிக்கத் தொடங்கினர். வான்மறை குர்ஆனின் சில வசனங்களிலிருந்து தமக்குத் தேவையான விருப்பமான ஒருகருத்துீகிடைத்துவிட்டால், அதன்பின்பு அப்பிரச்சனையைப்பற்றி தெளிவான துல்லியமான கருத்தைத் தெரிவிக்கும் வசனங்களின் பக்கம் திரும்பி வந்தனர். (சொல்லப் போனால் இத்தகைய வசனங்களை ஆராய்ந்து தான் அப்பிரச்சனையைப் பற்றிய முடிவையே எடுக்க வேண்டும்) அதன்பின்பு, அத்தெளிவான வசனங்களைப் பார்த்த பின்பாவது தாங்கள் கண்டெடுத்த முடிவுகள் தவறானவை என்று விளங்கி திருத்திக் கொண்டார்களா? என்றால் அதுதான் இல்லை! தங்கள் முடிவுகளையே சரி என வாதிட்டு அத்தெளிவான வசனங்களில் கைவைத்து திரிக்கும் கைங்கரியத்தைச் செய்யலாயினர். உருக்குக் கத்தியினால் வெட்டிச் செதுக்கி தமக்குத் தோதான வகையில், தம்முடைய வாதத்திற்கு ஏற்ப அவ்வசனங்களை வார்த்தெடுத்தனர் -பரிதாபத்துக்குரிய, மிகவும் வருந்தத்தக்க விஷயம் தான் இது! ஆனால், என்ன செய்ய? இது தானே நடந்து வந்திருக்கின்றது.

தெளிவான, திட்டவட்டமான மார்க்கச் சட்டங்களை பின்னுக்குத் தள்ளி, குறியீடுகள், சைகைகளை மக்கள் தமக்குமுன்னால் பரப்பி வைத்துக்கொண்டனர்.பிறகு, தமதுவிருப்பங்களுக்கு ஏற்றவாறு தோதான தத்துவங்களை, கருத்துகளை கண்டுபிடிக்கலாயினர். பின்பு, அவற்றைகுர்ஆனோடுஇணைக்கத்தொடங்கினர்! இப்பரிதாபகரமான நிலையின், இக்கோணல் சிந்தனையின் விளைவே இது! ஆனால், அமைதி -சமாதானத்திற்கானபாதையோ இதற்கு நேர்எதிர்த் திசையில் செல்கின்றது!

இந்நெறிமுறையை மனதில் கொண்டு இனி, அண்ணல் யூஸுஃப் அலைஹிஸ் ஸலாம் எகிப்தில் பணியாற்றிய பிரச்சனையை ஆராயுங்கள்.

(அ) இஸ்லாம் அல்லாத, இஸ்லாமிற்குப் புறம்பான குஃப்ரு மற்றும் ஜாஹிலிய்யத் அமைப்புக்கு ஒத்துழைக்கலாமா? கூடாதா? ஒத்தாசை செய்யலாமா? கூடாதா?என்பது குறித்த தெளிவான, துல்லிய மான, விளக்கமான சட்டங்கள் உள்ளன! எடுத்துக்காட்டாக,

ீகுற்றத்திற்கோ, வரம்பு மீறலுக்கோ ஒரு போதும் துணை சென்று விடாதீர்கள்! (அல்குர்ஆன்5˜2)

ீநன்மையை ஏவு! தீமையைத் தடுத்து நிறுத்து!(அல்குர்ஆன் 31 ˜18)

ீ(தா:கூத்தை) முற்றிலும் நிராகரிக்கவேண்டும் என்றுதான் அவர் களுக்குகட்டளைஇடப்பட்டிருந்தது! (அல்குர்ஆன்4˜60)

ீஆட்சி, அதிகாரம் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே!

(அல்குர்ஆன் 12 ˜ 40)

ீஅல்லாஹ்இறக்கிஅருளாத சட்டங்களைக் கொண்டு தீர்ப்பளிப் பவர்கள் நிச்சயமாக நிராகரிப்பவர்களே! (அல்குர்ஆன் 55˜44)

ீஉங்கள்இறைவனிடமிருந்துஉங்களுக்குஇறக்கிஅருளப்பட்டதையே பின்பற்றுங்கள்;அவனைவிட்டுவிட்டுமற்றவர்களைப்பின்பற்றாதீர்கள்! (அல்குர்ஆன் 7 ˜ 3)

ீநேர்வழியைக்கொண்டும்சத்தியமார்க்கத்தைக்கொண்டும்அவனே தன்தூதரைஅனுப்பிவைத்தான்.மற்றெல்லாமார்க்கங்களைவிடவும் அதுவேமேலோங்கவேண்டும்என்பதற்காக!

(அல்குர்ஆன் 9 ˜ 33) (48 ˜ 28) (61 ˜ 9)

ீயூதர்களையும்கிறிஸ்துவர்களையும்உங்களதுஉற்றதோழர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்! (அல்குர்ஆன் 5 ˜ 51)

ிஇறைநம்பிக்கையாளர்களைவிட்டுவிட்டுஇறைநிராகரிப்பாளர்களான காஃபிர்களைஉங்களதுஉற்றதோழர்களாகஆக்கிக்கொள்ளாதீர்கள்! (அல்குர்ஆன் 4 ˜ 144)

ிஉற்றதோழர்கள்என்றால்உங்களுக்குஅல்லாஹ்வும்அவனுடைய தூதரும்இறைநம்பிக்கையாளர்களும்தான்! (அல்குர்ஆன் 5 ˜ 2)

ிஉங்களில் யாரேனும் ஒருவர் தீயகாரியம் ஒன்றைக் கண்டால் அதனைத் தமது வலிமையைப் பயன்படுத்தி தடுத்து நிறுத்த வேண்டும்; அவ்வாறு முடியவில்லை என்றால், தமது நாவைக் கொண்டு தடுத்து நிறுத்த வேண்டும்; அதுவும் முடியவில்லை என்றால், தம்முடைய உள்ளத்தால் அதனை வெறுத்து ஒதுக்க வேண்டும்! என்று இறைத்தூதர் சல்லல்லாஹு அலைஹி வசல்லிம் கூறியுள்ளார்கள்.

ிஇறைவனுக்கு இணைவைக்கும் முஷ்ரிக்கீன்களின் நெருப்பி லிருந்துவெளிச்சத்தைப்பெற்றுக்கொள்ளமுயற்சிக்காதீர்கள்! என்றுஇறைத்தூதர்சல்லல்லாஹுஅலைஹிவசல்லிம்கூறியுள்ளார்கள். (பதிவு ˜ நஸாயி, அஹ்மத்)

ிஇறைவனுக்கு இணைவைக்கும் முஷ்ரிக்கீன்களிடையே தென் படுகின்றமுஸ்லிமிற்கும்எனக்கும்எந்தவொருசம்பந்தமும் இல்லை! என்றுஇறைத்தூதர்சல்லல்லாஹுஅலைஹிவசல்லிம்கூறியுள்ளார்கள். (பதிவு ˜ அபுதாவூது)

(ஆ) ஓரேஓர்இறைவனை வழிபடுமாறு (வணக்கவும் வேண்டும்; கீழ்படியவும்வேண்டும்! இபாதத்தும்செய்யவேண்டும்;இதாஅத்தும் செய்யவேண்டும்!)மக்களைஅழைக்கவேண்டும்; அல்லாஹ்வினால் இறக்கியருளப்பட்டதீனை(கொள்கை, கோட்பாடுகள், வாழ்க்கைக் செயல்கள் என்று யாவற்றையும்) அல்லாஹ்வுடைய இந்தப்பூமியில் நிலைநாட்டவேண்டும்!என்றநோக்கத்திற்காகத்தான் விதிவிலக்கே இல்லாமல்எல்லாநபிமார்களும்அனுப்பிவைக்கப்பட்டார்கள்.

 

ீஅல்லாஹ்வைவணங்கிவழிபட்டு வருமாறும் தா:கூத்தை விட்டு முற்றிலும்விலகிஇருக்குமாறும்(மக்களிடம் போதிப்பதற்காகத் தான்)ஒவ்வொருசமூகத்திற்கும் நாம் இறைத்தூதர்களை அனுப்பி வைத்தோம்! (அல்குர்ஆன் 16˜36)

ீதீனை நிலைநாட்டுங்கள்! (அல்குர்ஆன் 42 ˜13)

(இ) அனைத்துத்தரப்புமக்களும் பின்பற்றியே ஆகவேண்டியவர் என்பதுதான்அனைத்துஇறைத்தூதர்களின் நிலையாக இருந்தது.

ீஅல்லாஹ்வின்அனுமதி-கட்டளையோடுதூதரைப்பின்பற்றியேஆகவேண்டும் என்பதற்காக அன்றி வேறு எதற்காகவும் நாம் எந்தத் தூதரையும் அனுப்பவில்லை! (அல்குர்ஆன் 4 ˜ 64)

அவரைத்தான் மற்றவர்கள் பின்பற்ற வேண்டுமே தவிர, அவர் யாரையும்குறிப்பாக குஃப்ரின் தலைவர்களை பின்பற்றமாட்டார்!

இவ்விஷயங்களையெல்லாம்கருத்தில்கொண்டுஅண்ணல் யூஸுஃப்பின் வரலாற்றை விளக்கும் வான்மறைகுர்ஆன் வசனங்களை பார்வையிடலாம்.ீஎன்னைநாட்டின்களஞ்சியங்களுக்குபொறுப்பாளராக ஆக்குக! (அல்குர்ஆன் 12 ˜ 55) என்று அவர் (வேண்டுகோள் விடுக்க வில்லை) கேட்டுப் பெற்றார். இந்த நிகழ்ச்சியிலிருந்து குஃப்ரான அமைப்புக்கு ஒத்துழைப்பதற்கான சான்றிதழ் எங்ஙனம் கிடைக்கும்? -என்று சிந்தித்துப் பாருங்கள்.

ஒருபக்கம், இப்பிரச்சனைதொடர்பானதெளிவான வழிகாட்டுதல்கள், துல்லியமானகருத்துகள்விளக்கப்பட்டுள்ளன. இன்னொருபக்கம் ீஎன்னைப் பொறுப்பாளராக நியமியுங்கள்! என்று அண்ணல்யூஸுஃப்எகிப்துமன்னனிடம்கூறியதாககுர்ஆன் பொதுப்படையாகஅறிவிக்கின்றது. இவ்விரண்டு சொற்களைத் தவிர வேறெந்த விளக்கத் தையும் வான்மறை குர்ஆன் அளிக்கவில்லை. அண்ணல் யூஸுஃபுடைய அப்போதைய மார்க்கநிலை என்ன? அவர் அப்போது இறைத்தூதராக ஆக்கப்பட்டிருந்தாரா, இல்லையா? இந்த நியமனத்தின் போது எகிப்து மன்னருடைய நிலைதான் எவ்வாறு இருந்தது? அவருக்கு முன்பாக தவ் ஹீத்-ஓரிறைக் கொள்கைக்கான அழைப்பு வைக்கப்பட்டிருந்ததா, இல்லையா? வைக்கப்பட்டிருந்தது என்றால், மன்னர் அதற்கு என்ன பதில் அளித்தார்? அழைப்பை ஏற்றுக் கொண்டாரா, இல்லை நிராகரித்தாரா?

முழுமைபெறா இப்பொதுமைக் கருத்துக்கு நிறைவான விளக்கத்தைப்பெறநாம்முயற்சிசெய்தேதீரவேண்டும்.இல்லாவிட்டால் ஒத்துழைப்புப் பிரச்சனைக்கு இதைக் கொண்டு நம்மால்ஆதாரம் காட்டமுடி யாது. இதற்கான முழுமையான விளக்கம்தான் என்ன? ஏற்கனவே தெளிவாக விளக்கப்பட்டுள்ள குர்ஆன் வசனங்களுக்கு நேர்எதிரான விளக்கமா? இல்லை, அவற்றோடு ஒத்துப்போகின்ற விளக்கமா?………

தீன் உடைய தெளிவான சட்டங்கள், குர்ஆனுடைய அடிப்படைப்பேருண்மைகள்-இவற்றைப்பற்றியெல்லாம் கவலையே படமாட்டேன்என்றுகூறுபவர்களுக்குஎல்லாப்பாதைகளும்திறந்தேதான் உள்ளன.சர்வசுதந்திரமாகஅவர்கள்எதில்வேண்டுமானாலும் பயணிக்கலாம்.இறைத்தூதர்ஒருவரைப்பற்றிஎந்தமுடிவுக்கு வேண்டுமானாலும் அவர் கள் வரலாம். எகிப்து மன்னருக்கு முன்னால் வேலைக்கான விண்ணப்ப மனுவோடு அண்ணல் யூஸுஃபை அவர்கள் நிற்க வைக்கலாம்; ஃகஸாயினுல் அர்ழ்என்பதற்கு வருவாய்த்துறை அமைச்சகம்என்றுவிளக்கம்தரலாம்;இந்தப்பணியில் நியமிக்கப்பட்ட போது அண்ணல் யூஸுஃப் நபியாக ஆக்கப்பட்டுவிட்டார்கள் என்று அவர்கள்கூறலாம்;அச்சமயம்எகிப்துமன்னர்காஃபிராகவும், முஷ்ரிக்காகவும் தான்இருந்தார்என்றுகூறலாம்;வேலைக்கானகோரிக்கையை வைத்த போது கனிவோடு அதற்கு அவர் ஒப்புதல் அளித்தார் என்று கூறலாம்; கண்ணியத்துக்குரிய ஒரு நபியாக இருந்தவாறே அண்ணல் யூஸுஃப் எகிப்திய காஃபிர் -முஷ்ரிக் மன்னரின் ஆட்சியின்கீழ் விசுவாசமிக்க, பொறுப்புள்ள ஆளுன ராகப் பணியாற்றினார் என்று அவர்கள் கூறலாம் ………

ஆனால், யாருடைய உள்ளத்தில் இந்த அளவுக்கு தைரியம் இல்லையோ, அவர்கள் இத்தகைய ஆராய்ச்சிகளையெல்லாம் செய்யவே தயங்குவார்கள். இதைப்பற்றி அவர்கள் யோசிக்கத் தொடங்கினாலேயே -மேற்கண்டதெள்ளந்தெளிவானகுர்ஆன் வசனங்கள் எல்லாம் அவர்களுக்கு முன்னால் வந்து நின்றுகொண்டு கேள்விகளைத் தொடுக்கும்.

பின்பற்றப்படுவதற்காகத்தான் இறைத்தூதர்கள் என்றால், இவ் விதிக்கு யாரும் விதிவிலக்கேகிடையாது என்றால், அண்ணல் யூஸுஃப் ஒருகாஃபிர் +முஷ்ரிக்மன்னரைப் ன்பற்றினார் என்று கூற உங்களுக்கு எங்கிருந்து தைரியம் வந்தது? -என்று கேட்கும்!

இவ்வுலகத்தில் இறைவனின் தீனை நிலைநாட்டுவதுதான் ஒவ்வொரு நபியின் பணியுமாகும். அப்படி இருக்கையில் அண்ணல் யூஸுஃப் எகிப்திய மன்னனின் தீனுக்காக பாடுபடுபவராக, அந்தத் தீனின் காவலராகச் சித்தரிக்க உங்களுக்கு எப்படி மனம் வந்தது? -என்று அவை கேட்கும்!

இறைவனை மட்டுமேவழிபட வேண்டும்; தா:கூத்தை எதிர்த்து நிற்கவேண்டும்!என்றுதான்எல்லாநபிமார்களும்பணிக்கப் பட்டுள்ளார்கள். அப்படி இருக்கும்போது யூஸுஃப்மட்டும் எப்படி எகிப்தியமன்னன் போன்ற ஒரு தா:கூத்துக்கு கீழ்படிபவராக, இதாஅத் பண்ணுபவராக இருந்தார்?- என்று அவை கேட்கும்!

— இத்தகைய கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்வது மிகவும் கஷ்டம்!! ஆகையால், ஆரோக்கியமான சிந்தனை என்பது கண்டிப்பாக வேறொன்றாகத்தான் இருந்தாக வேண்டும். மேற்கண்ட தெளிவான கட்டளைகளுக்குமுரண்பட்டதாகஇல்லாமல்அவற்றோடு ஒத்திசைந்துபோகக் கூடியதாகவே அது இருக்கும். இதுவரைக்கும் நீங்கள்விளங்கிக்கொண்டேநியதிகளோடுபொருந்திப்போககூடியதாகஅது இருக்கும்.இந்தஆரோக்கியமானசிந்தனைபிரச்சனையின் வேறொரு கோணத்தையேநாடிநிற்கும்.அதன்படி, உண்மைநிலவரம் எப்படி இருந்தாகவேண்டுமென்றால்.

1) அண்ணல் யூஸுஃப் ஆட்சிப்பொறுப்புக்காகவிண்ணப்பித் திருக்கமாட்டார். கேட்டுப்பெற்றிருப்பார்.

2) அதிகாரத்தின் ஏதேனும் ஒரு பகுதியை பெற்றிருக்கமாட்டார். முழுஅதிகாரத்தையுமேபெற்றிருப்பார்.

3) இந்நிகழ்வின்போது அண்ணல் யூஸுஃபுக்கு நபிப்பட்டம் அருளப்பட்டிருந்தது என்று கருதத் தேவையில்லை.

4) அதிகாரமாற்றத்தின்போதுஎகிப்தின்மன்னர்இஸ்லாமை தழுவியிருக்கவும்பெருமளவுவாய்ப்புண்டு.

இப்படித்தான்நிகழ்ந்திருக்கவேண்டும் என்று எவ்வாறு நாம் கருதுகிறோம்? அப்போதுதான் இறைத்தூதர்களுடைய இலக்கணமாக குர்ஆன் கூறுகின்றவை மிகச்சரியாக இதனோடு பொருந்திப்போகும்!

 

ஆதாரங்களின் வெளிச்சத்தில்

 

இப்படித்தான் நிகழ்ந்திருக்க வேண்டும் என்று வெறுமனே நியதி களின் அடிப்படையில் மட்டும் நீங்கள் ஏற்றுக்கொள்ளத் தேவை யில்லை. நாம் அதை விரும்பவும் இல்லை. ஆகையால், உங்களுடைய உள்ளம் மேலும் அமைதி பெறுவதற்காக வான்மறை குர்ஆனுடைய சில குறியீடுகள், தவ்ராத் வேதத்தின் சில விளக்கங்கள் போன்றவற்றை உங்கள் பார்வைக்கு வைக்கிறோம். நிகழ்ச்சி எப்படி நடந்திருக்க வேண்டுமோ, அப்படியேநடந்துள்ளதுஎன்பதைப்புரிந்துகொள்வீர்கள். ஏனென்றால், இறைவேதத்தின்கருத்துகளில்அணுஅளவுகூடமுரண்பாடு காணப்படாது! அதனுடைய சிறப்பம்சங்களில் இதுவும் ஒன்று!

ஒரு விஷயத்தைப் பற்றி வான்மறை எக்கருத்தையும் தெரிவிக்கா மல் இருக்கவும் -அதைப்பற்றிய குறியீடுகளைக்கூட எங்கும் வெளிப் படுத்தாமல்இருக்கவும்-கூடவாய்ப்புண்டு! ஆனால், ஒரு விஷயத்தைப் பற்றிய கருத்தை அது தெரிவிக்கின்றது என்றால், அதே விஷயத்தைப் பற்றிஅதுவேறுஇடங்களில்தெரிவித்துள்ள கருத்துகள், செய்திகளோடு முரண்படுவதற்குகொஞ்சமும்கூடவாய்ப்பே இல்லை!!

வான்மறை குர்ஆன், நுபுவ்வத் (தூதுத்துவம்) என்றால் என்ன? நுபுவ்வத்தின்அளவுகோல் என்ன? என்பதை நிறுவியபின்பு, அந்த அளவுகோலோடு மாறுபடுமாறு, அந்த இலக்கணத்தோடு பொருந்திப் போகாதவாறு ஒரு நபியின் நிகழ்ச்சியை விவரிப்பதற்கு சாத்தியமே கிடை யாது! அண்ணல் யூஸுஃப்பும்ஓர் இறைத்தூதரே! இந்த நியதி அவருக்கும் கண்டிப்பாகப் பொருந்தியே தீரும்.

ஆகையால்எப்படிநடந்திருக்கவேண்டும்என்றுநாம் நியதிகளை முன்வைத்துகணித்துள்ளோமோ, வான்மறைகுர்ஆன்மற்றும்தவ்ராத்தின் வார்த்தைகளும், வரிகளின்இடைவெளிகளில்விளக்கப்படும்விஷயங்களும் அதையே உணர்த்துகின்றன. அவற்றைப் பற்றிய சிறு விளக்கம்.

1) அண்ணல் யூஸுஃப் ஆட்சிப் பொறுப்பை வேண்டி விண்ணப் பிக்கவில்லை; கேட்டுப்பெற்றார்கள்! அதற்கான ஆதாரம் வான்மறை குர்ஆனின் வார்த்தைகளில் உள்ளது.

ீஅரசர்ிஅவரைஎன்னிடம்அழைத்துவாருங்கள்.அவரைஎனக்கே உரியவராய்வைத்துக்கொள்கிறேன்!ீஎன்றார்.யூஸுஃப்அவரிடம் உரையாடினார்.அப்போதுஅரசர்கூறினார்: ிஇன்று முதல் நீர் நம்மிடம்பெரும்அந்தஸ்த்துக்குஉரியவராகவும், முழுநம்பிக்கைக்கு உரியவராகவும்ஆகிவிட்டீர்!ீஅதற்குயூஸுஃப், ிநாட்டின் கருவூலங்களுக்குஎன்னைப்பொறுப்பாளராக்குங்கள்……!ீ என்றுகூறினார்! (அல்குர்ஆன் 12 ˜ 55)

மிகவும் தெளிவான விஷயம்! நெருங்கிய உதவியாளராக, முழு நம்பிக்கைக்கு உரியவராக ஆக்கிக் கொண்டார்; தன்னுடைய பார்வையில் அவர் மிகவும் கண்ணியம் வாய்ந்தவர்; மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரியவர் என்பதையும் மன்னர் அறிவித்துவிட்டார்! அதன் பின்னேதான் ிநாட்டின் கருவூலங்களுக்கு என்னைப் பொறுப்பாளராக்குங்கள்!ீஎன்று யூஸுஃப் அலைஹிஸ்ஸலாம் கூறுகிறார்கள்.

ிஇன்று முதல் நீர் நம்மிடம் பெரும் அந்தஸ்த்துக்கு உரியவராக வும், முழு நம்பிக்கைக்கு உரியவராகவும் ஆகிவிட்டீர்!ீ என்று யூஸுஃப் அவர்களைப் பற்றி தன்னுடைய அபிப்பிராயத்தை மன்னர் வெளியிடு கிறார் என்றால் அவரை அரச வையை அலங்கரிக்கும் இரத்தினக்கல்லாக சூட்டிக்கொள்ள மட்டும் மன்னர் விரும்பவில்லை, மாறாக, ஆட்சிப் பொறுப்பில் நம்பிக்கைக்கு உரியவராக அவரை ஆக்கி அதிகார ஆளுமை கொண்ட பொறுப்பளாராக ஆக்க விரும்பியே அவ்வாறு கூறினார்!

இதனைத் தொடர்ந்து ிநாட்டின் கருவூலங்களுக்கு என்னைப் பொறுப்பாளராக்குங்கள்!ீ என்று அண்ணல் யூஸுஃப் கூறியதை வேண்டுகோளாக, விண்ணப்பமாக எப்படி கருதமுடியயும்? வெளிப் படையான கேட்பு இது! அண்ணலுடைய ஈமானியப் பேரொளியின் அசாதாரணமான வெளிப்பாடு இது!! **

இதே இருபதாம் நூற்றாண்டின் வீரப்போராளியாக இருந்திருந்தால் சிறைக் கொட்டடியிலிருந்து வெளிவந்த உடன் இப்படியொரு பொன் னான வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் மன்னனுக்கு முன்னால் நெடுஞ் சாண்கிடையாக விழுந்திருப்பார்! கம்யூனிச காம்ரேடாக இருந்திருந்தால் நன்றிப் பெருக்கில் கண்ணீர் மல்க மௌனமாக நின்றிருப்பார்! இப்படி யெல்லாம் மன்னர் புகழ்வதன் பொருள்தான் என்னவோ, பார்க்கலாம் என்று எதிர்ப்பார்த்திருப்பார். ஆனால் அண்ணல் யூஸுஃப்பிடம் குடி கொண்டிருந்த ஈமானியப் பேரொளி – நுபுவ்வத்தின் பிரகாசமும் அதன் பின்னணியில் இருந்தது- காலம் கனிந்து வந்துள்ளதைப் புரிந்து கொண்டது.அவர்நன்றியைவெளிப்படுத்தவோ, மன்னரின் பெருந் தன்மையைப்புகழவோசெய்யவில்லை.அதிகாரத் தோரணையுடன் கேட்கலானார்:ீநீங்கள்வழங்குகின்றஇந்தஅந்தஸ்த்தை ஒப்புக்கொள்ள வேண்டுமென்றால் புவிக்களஞ்சியம் முழுவதையும் எ பொறுப்பில்ஒப்படைத்து விடுங்கள். மற்றபடி, உங்களுடைய அரசு இயந்திரத்தை இயக்க வெல்லாம் நான் தயாராக இல்லை; அந்தப் பணிக்காக நான் உலகிற்கு அனுப்பப்படவும் இல்லை!

2) ஏதோ பகுதி அதிகாரத்தையும் அவர் கேட்கவில்லை! அதாவது வருவாய்த்துறை அமைச்சுப் பணியை அவர் கேட்கவில்லை, மாறாகமுழுமுற்றுஅதிகாரத்தையும்தான்கேட்டார்.ஆட்சி அதிகாரத்தைஇஷ்டப்படிநடத்தும்அளவுக்குமுழுமையான அதிகாரம்!

மன்னர், ராஜாதிராஜன், ஃபிர்அவ்ன்என்றபட்டப் பெயர்களோ, நவரத்தினங்கள்பதிக்கப்பட்டபொற்கிரீடங்களோ, அலங்கரிக்கப்பட்ட ஆட்சிக்கட்டிலோ -மக்கள் மத்தியில் இவை என்னதான் மதிப்பைப் பெற் றிருந்தாலும் சரியே- ஆட்சி அதிகாரத்திலோ, நாட்டு நிர்வாகத்திலோ எந்தப்பங்கையும் ஆற்றிடப் போவதில்லை. இவை அனைத்தும் எகிப்து மன்னரிடமே இருக்கட்டும், மற்றபடி ஆட்சிக் கடிவாளத்தை என்வசமே முழுமையாக ஒப்படைத்துவிடுங்கள்! வான்மறை குர்ஆனில் இம்முழு அதிகாரத்தைச் சுட்டிக் காட்டும் குறியீடுகளும், தவ்ராத்தில் தெளிவான விளக்கங்களும் உள்ளன!

குர்ஆனிய கூற்றின்படி …

ிபுவியின் களஞ்சியங்கள்ீ (Khazayinul Arzh) முழுமையாகத் தம் வசம் ஒப்படைக்கப் படவேண்டும் என்று அண்ணல் யூஸுஃப் கேட்டி ருந்தார்கள்.** ்அதிகாரத்திற்கான ஆளுமைக்கான மூலவளங்கள்! என்பதே இதன் பொருள்! ஃக:ஜாயின் என்கிற குர்ஆனிய கலைச்சொல் பொதுவாக நினைக்கப்படுவதைப்போல தானியங்கள் நிரம்பிய உணவுக் களஞ் சியங்களையோ, பொற்குவியல், பணக்குவியல் நிறைந்த கஜானாக் களையோ குறிக்காது. அவற்றைக் குறிக்க ிகன்:ஜ்ீ, ிமால்ீ, ிஸமராத்ீ என்ற சொற்களையே குர்ஆன் பயன்படுத்துகிறது.

உள்துறை முழுக்க அண்ணலின் கரங்களில் ஒப்படைக்கப்பட் டிருந்தது! இறைவனுடைய ஒரு சிறப்பான திட்டத்தின் மூலம் அண்ண லின் சகோதரர் பின்யாமீன் அண்ணலோடு வந்து சேர்ந்து கொண்டார். அதைப் பற்றி விவரிக்கையில் குர்ஆன் குறிப்பிடுகின்றது:

ீமன்னனின்சட்டத்தின்படி தம்சகோதரரைப் பிடித்து வைத்துக் கொள்வது அவருக்கு ஏற்புடையதாய் இருக்கவில்லை!

குற்றவாளியைப் பிடித்து வைத்துக்கொள்ள வேண்டுமென்றால் காவல்துறையின் அதிகாரங்களும் அவர் கைவசம் இருந்தன. அதுமட்டு மல்ல, நீதிவழங்கும்நீதித்துறையும்அவரிடமேஇருந்தது. அரசாங்கத்தின் ிநீதிஎன்பதேஅவராகத்தான் இருந்தார்!அவர்வெறுமனேவருவாய்த் துறைஅமைச்சராக மட்டும் இருந்திருந்தால், வழக்கு விசாரணை அவரி டம் வந்திருக்காது! தங்களுடைய தம்பி பின்யாமீனை விட்டுவிடுமாறு சகோதரர்கள் அவரிடம் முறையிட்டிருக்க மாட்டார்கள்.

ஆட்சிக் கடலில் அமர்ந்திருப்பவராகவும் அவரே இருந்தார். அவருடையபெற்றோர்கள்தங்களுடையநாடானகன்ஆனை விட்டுவிட்டு எகிப்துக்குக் குடி பெயர்ந்தபோது:

ிஅவர் தம்முடைய தாய்தந்தையரை சிம்மாசனத்தில் அமர வைத்தார்!

நன்றியுணர்வோடு தன்னுடைய ஆட்சியதிகாரத்தின் நிலையை அவர்களுக்கு முன்னால் வெளிப்படுத்தினார்.

:ிஎன் இறைவா! நீ எனக்கு ஆட்சியதிகாரத்தை வழங்கினாய்!

அண்ணல் யூஸுஃப் இவ்வார்த்தைகளை சொல்லும்போது எகிப்துமன்னர்உயிரோடுதான்இருந்தார்என்பதைமறந்துவிடக்கூடாது. (தொடக்க நூல் அத் ˜ 47)

இந்தச்சொற்கள், இந்தச்சாதனைகள்ஏதேனும்ஓர்உணவுஅமைச்சர், வருவாய்த்துறைஅதிகாரிஉடையதா?இல்லை, சர்வவல்லமை படைத்த ஓர் ஆட்சியாளருடையதா?

தவ்ராத்தின் கூற்றின்படி …..

எகிப்து மன்னர் முதன்முறையாக அண்ணல் யூஸுஃப்பைச் சந்திக் கும்போதே அண்ணலுடைய ஈர்ப்பு விசையால் கவரப்பட்டு விடுகிறார். அப்போதே தம்முடைய பணியாளர்களைப் பார்த்து அவர் கூறுகிறார்.

ீபார்வோன் தன் அலுவலர்களை நோக்கி, ிஇறையாவி பெற் றுள்ள இவரைப்போல் வேறொருவரையும் நாம் காணமுடியுமோ?ீ என்றான்.பின்பு, பார்வோன் யோசேப்பை நோக்கி, ிஇவற்றையெல்லாம் கடவுள் உம் ஒருவருக்கே அறிவித்துள்ளார். உம்மைவிட மதிநுட்பமும் ஞானமும் செறிந்தவர் யாருமிலர்! எனவே, நீரே என் அரண்மனையின் பொறுப்பை ஏற்பீர்! உம் வார்த்தைக்கு என் மக்கள் எல்லோரும் பணியட்டும்! அரி யணையில் மட்டும் நான் உமக்கு மேற்பட்டவனாய் இருப்பேன்ீ என்றான். பின்பு, பார்வோன் யோசேப்பை நோக்கி, ிஇதோஎகிப்துநாடுமுழுவதற்கும்உம்மைஅதிகாரியாகநியமிக்கிறேன்!ீ என்று சொன்னான். உடனே, பார்வோன் தன் கையில் அணிந்திருந்த அரச கணையாழியைக் கழற்றி அதை யோசேப்பு கையில் அணிவித்து, அவருக்குப்பட்டாடை உடுத்தி, பொன் கழுத்தணியை அவருக்கு அணிவித்தான். மேலும், அவரைத் தன் இரண்டாம் தேரில் வலம்வரச் செய்து இவருக்கு முழந்தாளி டுங்கள் என்று ஏவலர் கட்டியம் கூறச்செய்தான். இவ்வாறு எகிப்து நாடு முழுவதற்கும் அவரை அதிகாரியாக்கினான்.மேலும், அவன்யோசேப்பைநோக்கி, ி பார்வோனாகிய நான் கூறுகிறேன், உமது ஒப்புதலின்றி எகிப்து நாடெங்கும் எவனும் கையையோ, காலையோ உயர்த்தக் கூடாது!ீ என்றான். பின் பார்வோன் யோசோப்புக்கு ிசாபனாந்து பனேகாீ என்ற புதிய பெயர் சூட்டினான்.(தொடக்கநூல் அத்˜ 41 வச 37-45)

 

திருவிவிலியம் பொதுமொழிபெயர்பட்டப்பகலைவிடவும் வெட்டவெளிச்சமாகஇருக்கும்இவ்விளக்கங்களைப்படித்துப்பாருங்கள். எகிப்துமன்னரிடத்தில்அண்ணல் யூஸுஃப் ஒருவருவாய்அதிகாரியாக மட்டுமேஇருந்தார்என்றுகூறுபவர்களைப்பார்த்து, அண்ணலிடம்

ஆளுமைஅதிகாரங்கள்அனைத்தும்குவிந்திருந்தனஎன்று ஏற்றுக்கொள்ளத்தயாராகஇல்லாதவர்களைப்பார்த்துபரிதாபப்படுங்கள்!!

3)எகிப்தின்னரிடமிருந்துமுழுஅதிகாரங்களையும் கைவரப்பெற்றசமயத்தில்அண்ணல்யூஸுஃப்நபியாகஆக்கப்படவில்லை என்று கருதுவதற்குத்தான் அதிக வாய்ப்பு உள்ளது. ஆதாரங்கள் இதோ

(அ)தவ்ராத்தின்அறிவிப்பின்படி அப்போது அண்ணல் யூஸுஃப் உடைய வயது முப்பது (தொடக்க நூல் 41˜46) வான்மறை குர்ஆனில் வய தைப் பற்றி தெளிவாக ஒன்றும் கூறப்படவில்லை என்றாலும், தவ்ராத் தின் அறிவிப்பை ஊர்ஜிதப்படுத்தும் விஷயங்கள் உள்ளன. குர்ஆனின் அறிவிப்பின்படி எகிப்தில் விற்கப்படும்போது வாலிபப்பருவத்தை அவர் அடைந்து விட்டிருக்கவில்லை. அமைச்சர் வீட்டில்சிலகாலம்கழித்தபின்பேஅவர்வாலிபப்பருவத்தை அடைகிறார்.அதைத்தொடர்ந்துஉடனேயேசிறை செல்ல நேர்கின்றது. ஒருசில ஆண்டுகளை சிறையில் கழித்த பின்னர் விடுதலையாகி வெளியே வருகிறார். இவற்றைகணக்கிட்டுப்பார்த்தால், இந்நிகழ்வின் போதுகுர்ஆனின்படியும்30, 32வயதுதான் இருந்திருக்கும். ஆகையால், இதுகுறித்ததவ்ராத்தின்அறிவிப்புசரியல்லஎன்றுஒதுக்கித்தள்ள வழியில்லை.

அறிவும் மனமும்பக்குவமடைகின்ற வயது என்ன? என்று இப்போது யோசிக்கவேண்டும்!பொதுவாகநுபுவ்வத்திற்கு எந்தவயதை இறைவன் நிர்ணயித்துவைத்துள்ளான்?-நம்முடையகணிப்பின்படி நாற்பது வயதில்தான்நபிமார்கள்பொதுவாகரிஸாலத்பொறுப்பில் நியமிக்கப் பட்டுஉள்ளார்கள்.இதன்படி, ஆட்சிக்கட்டிலில்அமரும்போதுஅண்ணல் யூஸுஃப் நபியாக ஆக்கப்பட்டிருக்கவில்லை! என்று கூறுவதில் தப்பே கிடையாது! அதுவரைக்கும் உம்மத்தே யஃகூப் -பைச் சேர்ந்தவர் என்கிற அடிப்படையில்தான் அவர் ஓரிறைக் கொள்கையை பிரச்சாரம் செய்துவந்துள்ளார். சத்திய அழைப்பிற்கான இப்பயிற்சியை சிறுவயதி லேயேகண்ணியம்பொருந்திய தன்தந்தையிடமிருந்து அவர் பெற்றிருந் தார்.அறிவும், உணர்வும்பக்குவமடையபக்குவமடையஇந்த பயிற்சியும்பரிணாமவளர்ச்சிகண்டுவிட்டது.

(ஆ) ஆட்சிப் பொறுப்புக்கு வந்து ஏழெட்டு ஆண்டுகள் சென்ற பிறகு, தானியவாங்கஅவரிடம்வரும்சகோதரர்கள் ஒருமுறைஇவ்வாறு கூறுகிறார்கள்:

்அரசாதிபதியே! இவருடைய தந்தை மிகவும் வயது முதிர்ந்த வராய் இருக்கிறார்!

ஓர் இறைத்தூதரை ிநபிீ என்று அழைக்காமல் அது அல்லாத வேறு எந்த வார்த்தையில் அழைத்தாலும், நுபுவ்வத் எனும் தனித்தன்மைக்கு இழுக்கானதாகும்! அந்தச்சமயத்தில் அண்ணல் யூஸுஃப் நபியாக இருந் திருந்தால், அவருடைய சகோதரர்கள் அவரை ிஅஜீ:ஜ்ீ என்று அழைத் திருக்கவே மாட்டார்கள். கண்டிப்பாக ிஅல்லாஹ்வின் தூதரே!ீ என்று தான் அழைத்திருப்பார்கள். தூதர் என்ற சொல், அரசாதிபதி என்ற சொல் லைவிட கண்ணியம் வாய்ந்தது என்பதற்காக அல்ல, மாறாக எந்த நோக் கத்திற்காக முன்னால் நிற்கிறார்களோ அது நிறைவேற வேண்டுமென் றால் நபி என்று அழைப் பதுதான் சாலச் சிறந்தது. தங்களுடைய சகோதரர் பின்யாமீனை விட்டு விடுமாறு அவர்கள் முறையிட்டுக் கொண்டிருந்தார் கள். இறைத்தூதர் யூஸுஃப் இருக்கும்போது அரசாதிபதி யூஸுஃப்பிடம் போய் கருணை மனு கொடுப்பது முட்டாள்தனம் என்று கூடத்தெரியாத அளவுக்கு அவர்கள் அறிவற்றவர்கள் அல்லர். அதிகாரம், ஆளுமை, வல் லமை இவற்றின் மறுபெயர் தாம் அஜீ:ஜ்! அங்கு கருணையையோ, கனி வையோ எதிர் பார்க்க முடியாது. அதே சமயம் கருணை, கிருபை, அன்பு இவற்றின் மறுபெயர்தான் நுபுவ்வத். கேட்பவர்களுக்கு இல்லை என்று சொல்வது நுபுவ்வத்தின் இலக்கணத்திலேயே கிடையாது!

4) எகிப்தின் மன்னர், அண்ணல் யூஸுஃப்பின் கரங்களால் இஸ்லாமை தழுவிவிட்டிருந்தார். ஆதாரங்கள் இதோ:

(அ) தவ்ராத்தின் விளக்கத்தை ஏற்கனவே கண்டு வந்துள்ளோம். மீண்டும் நினைவுப்படுத்திக் கொள்வோம்.

ீஇறையாவி பெற்றுள்ள இவரைப்போல் வேறொருவரையும் நாம் காண முடியுமா? ………

ீபார்வோன்யோசப்பைநோக்கிகூறினான், ிஇவற்றையெல்லாம்கடவுள்உம்ஒருவருக்கே அறிவித்துள்ளார்!

ஒருகாஃபிரோ, முஷ்ரிக்கோ, இறைவனுக்குஎதிரானசதிகாரனோ இவ்வார்த்தைகளைச்சொல்வானா?தவ்ஹீதின் குறியீடுகளை உணர்ந் தவனைப்போல்அல்லவா, எகிப்து மன்னர் ிஇறையாவிீ, ிகடவுள் அறி வித்துள்ளார்ீ போன்றசொற்களைபயன்படுத்தியுள்ளார்?

(ஆ) குஃப்ரையும், ஷிர்க்கையும் பின்பற்றுகின்ற எகிப்து மன்னர் முழுஅதிகாரத்தையும்ஓர்இறைநம்பிக்கையாளரிடம் ஒப்படைத்து விட்டார் என்பது ஆச்சரியத்திலும்ஆச்சரியமானவிஷயம்! அதுவும் எப்படிப்பட்ட ஆளிடம் தெரியுமா? சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் அடைபட்டுக்கிடந்தபோதும்ஷிர்க்குக்கும், குஃப்ருக்கும்எதிராக வாளைஉருவியவரிடம்!சிறையிலேயேஇந்தப்பணி என்றால் வெளியே வந்தால் அவர் என்னவெல்லாம் செய்திட மாட்டார்?

இரண்டுஎதிர்எதிர்துருவங்கள், இயற்கையாகவேஒன்றையொன்று எதிர்த்துக்களம்காண்பவர்கள்இணக்கமாகப்பணியாற்றினர்என்பதற்கு தத்துவவரலாற்றில்ஒரேஒருஉதாரணத்தைக்கூடநம்மால்பார்க்க முடியாது! அது மட்டுமல்லாமல், அண்ணல் யூஸுஃப்கண்டிப்பாக எகிப்து மன்னருக்கு முன்னால் இஸ்லாமிய அழைப்பை வைத்திருப் பார். இறையாவி பெற்றமனிதராக தான் கருதும் மனிதர் ஒருவரின் அழைப்பை கண்டிப்பாக -கண்டிப்பினும் கண்டிப்பாக- எகிப்து மன்னர்ஏற்றிருப்பார்!இல்லாவிட்டால்ஒருகாஃபிர், ஒருமுஷ்ரிக், காஃபிர்மற்றும்முஷ்ரிக்காகஇருந்துகொண்டே, ஓர்இறை அழைப் பாளரிடம், ஒரு முஃமினிடம் -அதுவும் எப்பேற்பட்டமுஃமின்! உத்வேகமான இறைஅழைப்பாளன்! தன்னிடமுள்ள அனைத்தையும் நம்பி ஒப்படைத் திடும் அளவுக்கு திருப்தியை எங்ஙனம்பெற்றிருக்க முடியும்?-இவ்வாறுஎப்போதுநிகழுமென்றால்குஃப்ரும், ஈமானும் தத்தமதுநிலைகளிலிருந்துஒருசிறிதைவிட்டுக்கொடுத்துசமரசம் செய்து கொள்ளும்போது! அவற்றில் ஒன்று கூட விடாப்பிடியாக தனதுநிலையில்உறுதியாகநின்றாலும்இத்தகையஒற்றுமை சாத்தியப் படாது!இருபதாம்நூற்றாண்டின்குஃப்ரிடமும், ஈமானிடமும் வேண்டு மானால்இத்தகையீபரந்தமனப்பான்மையையும் மதநல்லிணக்கத் தையும்காணலாம்.ஆனால் கி.மு. இருபதாம் நூற்றாண்டில் இந்த நிலை நிலவியதுஎன்பதைகற்பனைகூடசெய்துபார்க்கமுடியாது.சரி, குஃப்ராவது ஒருவேளைவிட்டுக்கொடுத்திருக்கலாம். ஆனால், ஈமான்!(அதுவும் சாதாரணஈமானஅல்ல, யூஸுஃபின்ஈமான்)ஐப்பற்றிஇவ்வாறுயோசிப்பது கூட பெருந்தவறு!!

எனவேதான், இஸ்லாமிய உலமாக்களில் பலரும் எகிப்து மன் னரைப்பற்றி இதே எண்ணத்தையே கொண்டுள்ளார்கள். புகழ்பெற்ற அல்குர்ஆன்விரிவுரையாளராகியமுஜாஹித்அவர்களும்எகிப்திய மன்னர்முஸ்லிமாகிவிட்டிருந்தார்என்றுதான்கூறுகிறார் (காண்க : இப்னு ஜரீர், கஷ்ஷாஃப்)

இந்த பேருண்மைகள், சாத்தியக் கூறுகள் இவற்றையெல்லாம் நிதானமாக ஆராய்ந்து பாருங்கள். அண்ணல் யூஸுஃப்புடைய வாழ்க்கை யின் மிகச்சரியான கோணம் எதுவாக இருக்க முடியும்? என்று சிந்தித்துப் பாருங்கள்! தெளிவான ஆதாரங்கள், பேருண்மைகள் உள்ளபோதுஇப்பிரச்சனைக்குமுறையற்றவடிவம்ஒன்றைக் கொடுத்து, அதுதான்மிகச்சரிஎன்றுஅடம்பிடிப்பதுசரிதானா?கண்ணியம்பொருந்திய இறைத்தூதர்ஒருவருடையநடைமுறையைபயங்கரமாகத்தரம் தாழ்த்திதம்முடையகருத்துக்குஆதாரமாகமுன்வைப்பது முறைதானா? தம்முடையநிலைப்பாட்டுக்குஅவர்களிடம்எந்தஆதாரமும்இல்லையே மிஞ்சிமிஞ்சிஇருப்பதெல்லாம்ிகஸாயின்ீஎன்றசொல்!பணம், —செல்வம் என்று அதை நாம் தவறாக மொழிபெயர்த்து வைத்துள்ளோம். அடுத்து எகிப்து மன்னர்! எகிப்து மன்னர் என்றால் அவன் ஃபிஅவ்னாகத்தான் இருப்பான். ஃபிர்அவ்ன் என்ற பெயர்கொண்டவர் இஸ்லாமின் கொடிய எதிரி என்றுதான் விளங்கி வைத்துள்ளோம். அதனை அடுத்து வான்மறை குர்ஆன் அண்ணல் யூஸுஃப் ஓர் இறைத்தூதர் என்று கூறுகின்றது. ஆகை யால், அவரைப்பற்றி என்ன கூறப்பட்டாலும் அது அவர் இறைத்தூதராக ஆனதற்குப்பிறகு நடைபெற்றதுதான் என்றே விளங்கி வைத்துள்ளோம்! அப்படியே வைத்துக் கொண்டாலும் அப்போதும் நம்முடைய கருத்தே சரியானதாக இருக்கும்- இத்தகைய தூய சான்றோர், தூதர்களை தெரிந்தோ தெரியாமலோ இந்த மாதிரியெல்லாம் பயன்படுத்திக் கொள்வது ஈமானுக்கே விரோதமான செயல்என்பதில்இரண்டுவிதமான கருத்துக்கே இடமில்லை!!

 

 

*இந்த வசனத்துக்கு என்னென்னமோ விளக்கங்கள் எல்லாம் அளிக்கப் படுகின்றன. இந்தவசனம் யூதர்களைக் குறித்தே அருளப்பட்டது – என்று ஏதோ புதியதொரு விஷயத்தைக் கண்டுபிடித்துவிட்டது போலக் கூறுகிறார்கள். யூதர்களுக்காக மட்டுமே இது இறக்கியருளப் பட்டது என்பதே அனைவரும் ஒப்புக்கொள்ளாத ஒரு கருத்து! அப்படியே ஒருவேளை யூதர்களுக்காகத்தான் இது இறக்கியருளப்பட்டது என்பதை ஏற்றுக்கொண்டாலும் அதனால் பெரிதாக என்ன மாற்றம் வந்துவிடப் போகின்றது? ஒளுவைப்பற்றியோ, அல்லது தொழுகைக்கான தூய்மையைப் பற்றியோ இந்தவசனத்தில் குறிப்பிடப்பட்டிருந்தால் இது ‘யூதர்களுடைய ஷரீஅத்தோடு சம்பந்தமுடையது. இப்போது அந்த ஷரீஅத் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. நமக்கு இதுபொருந்தாது!’ என்று கூறுவதற்கு வாய்ப்புண்டு! ஆனால் நிலைமையோ முற்றிலும் அதற்கு நேர்மாறாக அல்லவா உள்ளது?

எத்தனை ஷரீஅத்துகள் மாறினாலும் என்றுமே மாற்றமடையாத அல்லாஹுத் தஆலாவின் அடிப்படை நியதிகளுள் ஒன்றுதான் இங்கு விளக்கப்பட்டுள்ளது. இந்தளவுக்கு வெளிப்படையான பேருண்மை ஒன்றைக்கூட சரியாகப் புரிந்து கொள்ளா மல், இப்படியெல்லாம் கூறப்படுகின்றது என்றால், என்னதான் அர்த்தம்?

அல்லாஹுத்தஆலாவின் அடிப்படைச் சட்டங்கள், நியதிகள் கூட சமூகத்துக் குச்சமூகம் மாறுபடுகின்றன; பிரதிபலன், பின்விளைவுக்கான அவனுடைய நெறிமுறை கள் சமூகத்துக்குச் சமூகம் வேறுபடுகின்றன; யூதர்கள் செய்தால் கழுத்தைச் சீவிவிட வேண்டிய ஒரு செயலை முஸ்லிம்கள் செய்தால் கண்டுகொள்ளப்படவே மாட்டார்கள் என்று பொருளா?

இந்த வசனத்தைக் கொண்டுபோய் யூதர்களோடு ஒட்டவைத்து திருப்தி அடைந்து கொள்பவர்கள், அண்ணல் யூஸுஃப் அலைஹிஸ் ஸலாம் எகிப்திய அரசனின் அவையில் பணியாற்றியதை மட்டும் விடாப் பிடியாகப் பிடித்துக்கொண்டு குதிக் கிறார்கள். முன்சென்றோர், பின்வரு வோர் அனைவரும் பின்பற்றியாக வேண்டிய வான் மறை குர்ஆனின் அழ கியமுன்மாதிரி (உஸ்வத்துல் ஹஸனா) இதுவேதான் என்று சாதிக் கிறார்கள். தள்ளுபடி செய்யப்பட்டுவிட்ட ஒரு ஷரீஅத்தின் அம்சமாகும் இது! என்பது அப்போது மட்டும் அவர்களுக்கு வசதியாக மறந்துபோய் விடுகின்றது!

**இந்தக் காரணத்தினால்தான் முஹத்திஸ் திஹ்லவி (ரஹ்) இந்த நாட்டையும் தாருல்ஹர்ப்!! என்று வகைப்படுத்தியுள்ளார். இஸ்லாமியச் சின்னங்கள் அனுமதிக்கப் பட்டாலும், இஸ்லாமியமேலாண்மையின்காரணமாகஅவைசெயற் படுத்தப்படவில்லை. மாறாக, ஆட்சியாளர்கள் சமயவெறிஅற்று இருப்பதாலேயே அனுமதிக்கப்படுகின்றன. (ஃபதாவா அஜீஸிய்யா. பாகம் ஒன்று)

* உண்மையில் ஷிர்க்கையும் குஃப்ரையும் பேரோடும் புகழோடும் இயக்குகின்ற அடிப்படைத் துறைகளாக இவை இன்று மாறிவிட்டிருக்கின்றன. தன்னுடைய கோர முகத்தை மறைத்துக் கொள்ளவும், தன்னுடைய பிடியை மக்களின் மீது மேலும் இறுக்கவும் பொது நலனுக்கான துறைகளான இவற்றையே தா:கூத்திய அமைப்பு பயன் படுத்தி வருகின்றது. ஆங்கிலேயர்கள் இந்நாட்டில் கால் பதித்தவுடன் முதன் முதலாக ரயில்வே, தபால் தந்தித்துறை போன்றவற்றிற்கே வித்திட்டனர் என்பதை நாம் இங்கே சிந்தித்துப்பார்க்க வேண்டும். ஏனென்றால் தங்களுடைய மேலாதிக்கத்தை இறுக்கமாக நிலைப்படுத்த இத்துறைகள் அவர்களுக்கு கட்டாயத் தேவைகளாக இருந்தன. இன்றைக்கும் ஆட்சியில் உள்ள தா:கூத்திய அமைப்பு அதற்காகவே இவற்றைப் பயன்படுத்தி வருகின்றது. வெளிப்படையாகப் பார்க்கப் போனால் தீமைகள் ஏதும் இல்லாதாதனவாகத் தென்படும் சுகாதாரத்துறை, மருத்துவத்துறை, கல்வித்துறை போன்றவற்றின் நிலையும் இதுதான்! குஃப்ருடைய கூர் தீட்டப்பட்ட ஆயுதங்களாக இன்று அவை மாறிவிட்டிருக்கின்றன. பாதில் உடைய- ஷரீஅத்துக்கு மாற்றமான பல்வேறு திட்டங்களை மக்களிடையே அறிமுகப்படுத்துவதிலும், அவற்றைப்பற்றிய பொதுக்கருத்தை உண்டுபண்ணுவதிலும் முக்கியமான பாகத்தை இவை ஆற்றுகின்றன. தேர்தல் சீட்டுகளைத் தயாரிப்பதிலிருந்து தேர்தல்களை நடத்தி முடிக்கும் வரையிலும், செக்ஸ் கல்வி முதல் எய்ட்ஸைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது வரையிலும் (சமுதாயத்தின் வெட்க, நாண உணர்வுகளை முழுமையாகத் துடைத்தெறிவது தவிர வேறொன்றுமே அதில் கிடையாது) எண்ணற்ற பற்பல திட்டங்கள் இத்துறைகளைப் பயன்படுத்தியே நிறைவேற்றப்படுகின்றன. ஒரு டாக்டரையோ, ஓர் ஆசிரியரையோ சமூகம் கண்ணியத்தோடு பார்க்கின்றது. அவரே இச்செயலைச் செய்யும் போது அதனால் ஏற்படும் தாக்கமும் வீரியம் பொருந்தியதாக மாறிவிடுகின்றது. முஸ்லிம் சமூகம் உற்று கவனிக்க வேண்டிய அபாயகாரமான பகுதி இது!

எல்லா திசைகளிலும் பாதில் முழுமையாகச் சூழ்ந்து கொண்டுவிட்ட இத்தகைய சூழ்நிலையில் -குறைந்த அளவு முப்பதாண்டுகளுக்கு முன்பிருந்த அளவிலாவது தீமை யற்றதாக ஒரு துறையாவது தென்படுகின்றதா என்பது சந்தேகமே! (வெளியீட்டாளர்)

** ‘புவியின் களஞ்சியங்கள்’ (Khazayinul Arzh) என்ற குர்ஆனிய கலைச்சொல்லுக்கு “அல்லாஹ்வுடைய தனிப்பட்ட வலிமைக்கென்றே உரிய பொருட்கள், பேச்சுக்கள்!” என்றே மொழியியல் வல்லுனர்களும், வான்மறை குர்ஆன் விரிவுரையாளர்களும் விளக்கம் தருகின்றனர்.

 

 

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: